Tuesday, July 02, 2013

ஓர் இளைஞனின் மரணம்

நேற்று நடந்த அந்த ஒரு இளம்வயதுகாரனின் மரணம் கொடுமையானது.

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் மூன்றுகுழந்தைகளின் தந்தை தன் பொறுப்பு உணராத குடி  அவன் மனைவியை இளம் விதவையாக்கியது.

அவன் உயிர் போய் உடலை எரித்தும் விட்டார்கள்  சில எலும்புகள் மயானத்தில் எஞ்சி கிடக்கதந்தை இறந்தது தெரியா குழந்தைகள் வீட்டில் விளையாடுகின்றன.

வீட்டிற்கு ஒரு மகன் உட்கார்ந்து சாப்பிட வேண்டிய தந்தையின் முதுமை யில் பிள்ளை இவருக்கு கொள்ளி வைக்க இருக்கையில் பிள்ளைக்கு இவர்  கொள்ளி வைத்தார்.

தன் மகனின் சாம்பல் காற்றில் கரைவதை   கண்ணீர் இல்லாத அவருடைய கண்கள் பார்த்து கொண்டிருக்க வாழ்க்கை வெறுமையாய் தெரிகிறது.

அய்யோ… போறீங்களே…புள்ளங்கள விட்டுபுட்டு போறீங்களே….  அய்யோ…. 

இளம் விதவையின் குரல் காற்றில் கரைந்தது.

அய்யா….அய்யா… இன்னம நான் யார அய்யான்னு கூப்பிடுவேன்
இதுதாயின் குரல்.

குடி குடியை கெடுத்தது.

இச்சமுதாயத்தில் மூன்று சிறு குழந்தைகளை வளர்த்து  ஆளாக்க ஆண் துணையில்லா தன்னுடைய பெண்ணின்  துன்பங்களை நினைத்து பெண்ணின் தாயார் அரற்றினாள்.

பெண்ணின் தகப்பனார் பார்வையில் விரக்தி தெரிய மௌனமே துக்கமாய் அமர்ந்திருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை முறையில் விமர்சனங்கள் நிறைய இருந்தாலும் அவனுடைய மரணத்தில் அங்கிருந்தஎல்லோருடைய மனத்திலும் பெரிய துக்கம் நிகழ்ந்தது.

தொடர்குடியினால் நிகழ்ந்த விபத்தில் தலையின் பின்புறமாய் அடிப்பட்டு சிகிச்சை அளித்தும் பெரிய தொகை செலவழித்து  பயனில்லாமல் போனது.

நம்பிவந்த இளம்பெண்  நிலைமை?  இந்த வினாவிற்கு பின்னால் எத்தனையோ விசயங்கள் தொக்கி நிற்கிறது.

இளைஞனின் மரணம்  நம்பியவர்களின் எதிர்காலத்தை கலவரப்படுத்தியுள்ளது.

1 comment:

ராஜி said...

அந்த பெண் தான் பரிதாபத்துக்குரியவள். அவள் மீண்டு, பிள்ளைகளை கரை சேர்க்க கடவுள்தான் துணை நிற்க வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails