Sunday, July 14, 2013

சரியான அளவில் சரியான ஆடைகள் என்பது..!!??


தினசரி வாழ்க்கையில் ஏற்படும்சில சங்கடங்களில் முக்கியமானது உடலுக்கு சரியான அளவில்லாத ஆடைகளை  அணிவது.

உடல் மெலிவது உடல் குண்டாவது இரண்டுமே முக்கிய காரணங்கள்.

உடல் மெலிந்துநமக்காக தைத்த ஆடைகளை   ஓரளவு சரிசெய்தாலும் ஆரம்பத்தில் இருந்த அந்த உடையின் ஒழுங்கு என்பது கேள்விகுறி தான்.

இப்பொழுதெல்லாம் ரெடிமேட் ஆடைகளை  மிகப்பெரிய இடத்தை நம் வாழ்வில் பிடிக்க  சரியான அளவில் ஆடைகள் இல்லாவிடில்பார்வைக்கு ஆடைகள் என்பது இல்லாமல் உடல் மறைக்க என்று மட்டுமே..

ஒருநாள்சரியான ஆடைகளை   அணிந்து  மறுநாள்அளவு சரியில்லாத ஆடைகளை   அணிந்தால்  தோற்றபொலிவு என்பது காட்சி பிழையே...

உடல் பெருத்து உடைகள் அளவு பற்றாகுறையாகி அணிந்தால் நாள் முழுதுதும் ஆடை இறுக்கமாய் மனஇறுக்கம் தவிர்க்க முடியாததது.

உடல் பெருத்தால் ரெடிமேட் ஆடைகள் ஜீன்ஸ்பேண்ட் காட்டன் பேண்ட் போன்ற ஆடைகளை  நினைக்க தேவையில்லை.

சரியான அளவுள்ள ஆடைகளுக்கு மாறும் போது உடைகளுக்காய்பெரும்தொகை செலவாகும் என்பது உண்மை.

ஆடைகளுக்கான காசு செலவினம் என்பது வளர்ந்து வரும் காசு சமுதாயத்தில் மிக அதிகம்.  புதிது புதிததாக என்பது தவிர்க்கமுடியாத மனோபாவமாக ஒரு சாரரிடம் உருவாகி வருகிறது.

குறைந்த எண்ணிக்கையி்ல் ஆடைகளை வைத்து கொண்டு வாழும்நடுத்தரவர்க்கத்தினன் உடைகளின் அளவு   சரியில்லாமல் போகும் போது அல்லது இக்காலத்திற்கே ஏற்ற டிசைன்களில் மாற   நினைக்கும் போதோ  தவிர்க்கமுடியாத பெரிய செலவினமாக உடை செலவினம் உருமாறி நிற்கும்.

சமுதாயத்தில் மனிதர்கள்  கௌரவம் உடைகளை வைத்தே  நிறைய இடங்களில் நிர்மாணிக்கப்படுகிறது. சில இடங்களில் விதி விலக்கும் உண்டு.


சரியான அளவில் சரியான ஆடைகளே சிறந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails