Tuesday, July 23, 2013

புளியம் பூ தொக்கு..ஆகா என்ன ருசி..!!??

அன்றைய  சில்லுகோடு ஆட்டம் கலைந்தவுடன் நாளைக்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்க ஒன்று கூடினார்கள்.  நாலைந்து சிறுவர்களும் சிறுமிகளும்…

என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே அந்த குழுவை வழிநடத்தும் பையன் அண்ணாந்து பார்த்தான்  மேலே சாரை சாரையாய் பூ மொக்குமாய் புளியம்பூ தொங்கி கொண்டிருந்தது.



ஆ…டேய்…நாளைக்கு புளியம் பூ தொக்கு செய்யலாம்டா..என்று கேட்க

ஹய்…செய்யலாமே…

யார்…யார்..என்னென்ன கொண்டு வருவீங்க…சொல்லுங்கப்பா என்றது தலைமை டவுசர்.

நான் உப்பு

நான் பட்டமிளகாய்

நான் கொட்டாங்குச்சி

எல்லாம் கரெக்டா நாளைக்கு பதினோரு மணிக்கு வந்துடுங்க..

மறுநாள் சிறிது முன்னயும் பின்னயுமாய் ஒன்று கூடிய சிறுவர்கள்.

தாங்கள் எடுத்து வர ஒப்புகொண்டதை சொன்னப்படி எடுத்து வந்திருக்க தலைமை  டவுசர் வர காந்திருந்தார்கள்.

தலைமை டவுசர் வந்ததும் உப்பு பட்டமிளகாய் கொட்டாங்குச்சி கொடுக்கப்பட…

டேய் ..வாங்கப்பா…புளியம் பூ பறிக்க…

புளியம் மரங்கள் நிறைந்தப்பகுதிக்கு சென்று  அவர் அவர் உயரத்திற்கேற்றவாறு பறித்து ஒன்று சேர்த்தார்கள்.

எல்லோரும் வாங்க  தலைமை டவுசர் கூப்பிட…

எங்க போவோம்?  என்று எதிர் கேள்வி கூட்டத்திலிருந்து கேட்கப்பட…

அந்த கொட்டாய் தான்.

விவசாயபணிகளில் தேவையில்லாமல் பாரவண்டி அந்தகொட்டகையில் நிப்பாட்டியிருந்தார்கள்.

வாங்க போவோம் என்று பாரவண்டியில்  ஏறி எல்லோரும் உட்கார்ந்தார்கள்.

டேய் ..இந்த கொட்டாங்குச்சியில கொஞ்சமா தண்ணி…சப்பட்டையாய்  கருங்கல் ஒன்னு எடுத்து வா…

ஓடினான்..உடனே திரும்பினான் .

பாரவண்டியில உள்ள பலகை துடைக்கப்பட்டு புளியம் பூக்கள் மொட்டுகள் அத்தனையும் ஒன்று சிறிதாய் அரைத்தார்கள்.

நசுங்கிய பூக்கள் சக்கையாய் ஆனது .

போதும்..போதும்…

இந்தா உப்பு மிளகாய் ரெண்டையும் சேத்துக்கோ…

அவைகளையும் சேர்த்து இன்னும் அரைத்தார்கள்.

துவையல் பதத்துக்கு முன்னாடி நிலைமையில் மசிந்தும் மசியாமலும்….

நிப்பாட்டு..போதும்.

என்று சொல்லியப்படியே…தலைமை டவுசர்   கொட்டாங்குச்சியில்  அரைத்த  புளியம் பூ தொக்கை எடுத்து வைத்தது.

ரைட்…வாங்க …சாப்பிட…

என்று எல்லோரும் கையிலும்  உரப்பு புளிப்பு உப்பு ருசிகலந்த புளியம் பூ  தொக்கு  கொடுக்கப்பட்டது.


ஆனால் இன்று  சிறுவர்கள் இருக்கிறார்கள் புளியம் பூ தொக்கு தயாரிக்கபடவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails