Wednesday, August 07, 2013

வறுத்தெடுக்கும் பொருள் ஆதாரம்.

மேட்டூர் அணையில் தண்ணி  தொறக்க போறாங்கன்னு தான் தெரியும்.  விதை வாங்க காசு வேணும் என்ன செய்யுறது?  வாய்க்கால் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்யும் விவசாயின் கேள்வி.

குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர்கள் வேறு இருக்கையில் சந்தோஷத்துடன் தான் மேட்டூர் நீர் திறப்பை எதிர்பார்க்கிறார்கள்.

வேறு சம்பாத்தியத்திற்கு வழி இல்லாதவர்களின் நிலைமை அய்யோ மேட்டூர் திறக்க போறான்னே…என்கிற பதைபதைப்பு கட்டாயம் விவசாயம் பண்ண வேண்டிய நிலைமை.

கடந்த முறை விவசாயம் செய்து கடன் வாங்கியவர்களிடம் நாணயமாய் நடந்து கொண்டவர்கள் நாணயமாய் நடந்து கொள்ள வாய்பிருந்தவர்கள் தையரிமாய் இருக்க வாய்ப்பில்லாதவர்கள் தங்கள் வீட்டு பெண்டுகளின்காது கால்களில் கிடக்கும்நகைகளை நம்பவேண்டிய கட்டாயம்.

தங்க வெள்ளி நகையின் விலை ஏற்ற இறக்கங்களினால் அதை வைத்து பணம் புரட்டமுடியாத சூழல்.

தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்ய தயாராகும் விவசாயிகள். நட்டால் ஏதாவது கிடைக்கும் நம்பிக்கையில் ரூபாய்க்கு3 வட்டியோ 4 வட்டியோ பணம் கிடைத்தால் போதும்  வயல் நட வேண்டும்.

தவிர்க்க முடியா குடும்பசெலவுகள் மற்றும் நல்லது கெட்டது செலவுகளில் கைகளில் இருக்கும் கொஞ்ச இருப்பும் கரைந்து போக கடன் கேட்கும் நிலையில் விவசாயி.


கட்டாயம் விவசாயம் செய்தாக வேண்டும் பணம் வேண்டும். அதற்கான ஆதாரம்…..????

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails