Monday, September 16, 2013

முதல் பயிற்சியும் நோட்டு புத்தகமும்

முதல் நாள் பயிற்சி ஆரம்பமானது.



நோட்டு புத்தகம் அல்லது சின்ன குறிப்பேடு கையில் எடுக்க சொன்னார்கள்.

உண்மையாய் நீங்க என்னவா  ஆகப்போறீங்கன்னு ஒளிமறைவின்றி எழுதுங்கப்பான்னு  சொன்னாங்க...

நான் ஒரு நல்ல எழுத்தாளன் ஆகனும்.

நான் ஒரு நல்ல  சமூக சிந்தனையாளர் ஆக வேண்டும்.

நான் ஒரு நல்ல  விளையாட்டு வீரன்

நான் ஒரு நல்ல பாடகன்

நான்  ஒரு நல்ல கவிஞன்

நான் ஒரு நல்ல இசைஞன்

நான் ஒரு நல்ல கணித அறிஞர் ஆக வேண்டும்   என அந்த பயிற்சியில்  குறிப்பேட்டை  எழுதியவர்கள் ஒவ்வொரு ஒவ்வொரு குறிகோளாய் எழுதினார்கள்.

ஆனால் அவன் தடுமாறினான் எழுத தயங்கினான்.

எழுத தயங்கிய காரணம் நிகழ்கால வாழ்வின்  வலிகளால்  எதிர்காலத்தில் தான் யார் என்பதை நிர்மாணிக்கும் திரணியற்று.

ஆனாலும் அவனது ஆசை  

சமூக வாழ்வில்  நிலையான வாழ்வை அமைத்துகொண்டு உலகம் தழுவிய சமூக தொண்டுகள் செய்யவேண்டும்  என்று தன்னுடைய குறிப்பேட்டில் எழுதி வைத்தான்.

தொடரும்...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails