Friday, December 13, 2013

வீடு திரும்பல்

கருமேகங்கள் சூழ்ந்து கிடக்க பூமி குளிர்ந்து கிடந்தது . காற்றின் வீச்சில் விரைந்த கருமேகங்கள் அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து தன் இருப்பை வெளிப்படுத்தின.


ஆடுகள் சிறு தூறல் விழுந்ததுமே ஒதுங்க இடம் தேடின. அவைகள் நடக்கும் நடைபாதைகள் எல்லாம் கடைகள் தான் காடுகள் அல்ல.  மழைக்கு தப்பித்தால் போதும் என்று ஒதுங்கியது.

உஸ்…உஸ்…தே...த்தே… என்று கடைக்காரர்கள் கத்தியப்படியே  ஆடுகளை விரட்டியடிக்க.. .அவைகள் அடுத்த இடம் நோக்கி விரைந்தது.

மழை பெரிதாக பெய்யவில்லை என்றாலும் தூறலில் உடல் நனையதான் செய்தது. பள்ளி குழந்தைகளின் வீடு திரும்பலில் சாரலுடன் காற்று அடிக்க உடைகள் நனைய முகத்தில் வழியும் மழை நீரை துடைத்தவாறே ஓட்டமும் நடையுமாய்,  பள்ளி குழந்தைகள் செல்லும் மிதிவண்டிகளின் வேகம் கூட விரைவாக நனைந்தார்கள். மழையில் நனையாது ஒரு கையில் குடை மறு கையில் மிதிவண்டி காற்று வீசியது குடை பயணம் போகும் எதிர்பக்கம் தூக்க சைக்கிளா.. குடையா.. தடுமாறிய குழந்தைகள்.

பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் வாகனங்களின் நெரிசலில் சிக்கி தவித்த  மிதி வண்டி குழந்தைகளும் , நடக்கும் குழந்தைகளும்நின்று செல்கையில் நனைந்து போனார்கள்.

பள்ளிகளின் பக்கத்திலிருக்கம் பெற்றோர்கள் தான் ஒரு குடையுடன் தன் பிள்ளைக்கு ஒரு குடையுடன் அல்லது மழைக்கால உடுப்பு பள்ளிகள் இருக்கும் திசையில் விரைந்தார்கள்.

எதையுமே அலட்டிகொள்ளாமல் மழையில் நனைந்தப்படி சென்ற குழந்தைகளின் குதுக்கலம் வசீகரித்தது. குடைப்பிடித்தப்படி சென்ற குழந்தைகள் நினைத்திருக்கலாம் பாவம்...அவர்களிடம் குடை இல்லை என்று ஆனாலும்  அவர்கள் மழையில் நனைந்து அடையும் மகிழ்ச்சியை  இழந்து விட்டிருந்தார்கள்.

ஒரு மணி நேரம் அந்தபகுதியே அல்லோகலப்பட்டது.

மாலை கருமேகங்களின் உதவியால் விரைந்து இருள்சூழ்ந்தது கொண்டிருந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails