Thursday, January 31, 2013

யசகானம்




சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஆடப்பட்டு வரும் யஷ கானம் தென்னிந்தியாவின் தொன்மையான கிராமியக் கலைகளில் ஒன்று.

கர்நாடக மாநிலத்தின் பிரதான நாட்டியநாடக வடிவமாக இருந்தாலும் யஷகான நிகழ்ச்சிகள் வடகேரள மாநிலத்திலும்  ஆந்திராவிலும் கூட நடத்தப்படுகின்றன.

இந்து புராணங்களின்படி குபேரன் செல்வத்துக்குக் கடவுளாகக் கருதப்படுகிறார். அமரர் உலகில் வசிக்கும் குபேரனது ஊழியர்களான யஷர்கள் பாடும் பாடலே  யஷகானம் என்று சொல்லப்பட்டாலும் வேதங்கள்இதிகாசங்கள் மற்றும்புராணங்கள் போன்றவை சாமானிய மக்களை எளிதில் சென்று அடைவதற்காக பாடல் , ஆடல் மற்றும் வசனங்களுடன் உருவாக்கப்பட்ட கலையே யஷகானமாகும்.

தீயவை ஒழிந்து நல்லவை தெய்வ சக்தியால் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் என்றுமே நீங்காமல் நிறைந்துள்ளது. யஷகானம் ராமாயண மகாபாரத மற்றும் இந்து புராணக்கதைகளாகவும் அவற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளாகவும் அமைந்துள்ளது. ராவண சம்ஹாரம் கீசகவதம் மகாபாரத யுத்தம் பிரஹலாத சரித்திரம் சபரி பக்தி ஆகியவை பிரபலமான சில யஷகான கதைகள்.

யஷகானம் ஆலய மண்டங்களிலும் செல்வந்தர் வீடுகளிலும் ஆடப்படுகிறது. ரங்கஸ்தலா என்று அழைக்கப்படும் யஷகான மேடை மாவிலை மலர்கள் வாழைமரங்கள் தென்னை ஓலையின் குருத்துகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.

-காஷ்யபன்-

படம் சொல்லும் செய்தி


நாங்கெல்லாம்  ஒரு குடும்பம்


நாங்களும் தான்....


Wednesday, January 30, 2013

Monday, January 28, 2013

தோற்கும் கணவன்



வேண்டாத சொல்
முகம் தூக்கிவைத்து
கொள்ளும் கொல்லும்
மனைவி
சமாதானங்களில்
தோற்றுபோகும் கணவன்
முயற்சியில்
ஏமாற்றம் கோபமாய்
வந்து விழும்
வார்த்தைகள்
உற்று நோக்கிய
வார்த்தைகளில்
குற்றம் செய்தவன்
கணவன்
தன் நிம்மதி
தொலைத்துவிடும்
பயத்தில்
தொடரும் நிகழ்வாய்
சமாதானங்கள்...

Thursday, January 24, 2013

தஞ்சாவூரும் தண்ணீர்பஞ்சமும்


இயற்கை பொய்த்துவிட்டது. காவிரியும் வற்றிவிட்டது. கதிர்கள் பால் பிடிக்காமல்  காய தொடங்கிவிட்டது.
காய்ந்த வயல்களை பார்க்கவே சிரமம்.



போர்செட்காரர்களை அணுகி தண்ணீர் இறைப்பவர்கள் இறைத்து கொண்டிருக்க வாய்க்கால் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்தவர்களின் நிலைமை மோசம்

ஒரு பக்கம் அறுவடை ஆரம்பித்துவிட்டது.  சன்ன நெல்ரகங்கள் தனியார் வியாபாரிகளிடம் போட்டியில் நிற்க மோட்ட நெல்ரகங்கள் கேள்வியில்லாமல் இருக்கிறது.

விவசாயிகளின் மனதில் தமிழகஅரசு இழப்பீடு எப்பொழுது அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில் சாதாரண விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை செய்து நன்றாக லாபம் சம்பாதித்த விவசாயிகளும் அடக்கம்.

அரசு மௌனம் காக்க மக்களின் மனதில் எதிர்பார்ப்பும் கூடிகொண்டேயிருக்கிறது.

தமிழக அரசு காவிரியில் நீர் தர மறுத்த கர்நாடக அரசிடம் இழப்பீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக செய்தி.

இன்னும் சிலமாதங்கள் பொறுத்திருப்போம்.

முன்பதிவு

Sunday, January 20, 2013

ஊ னம் ஓர் பொருட்டல்ல…


சரியான வழிகாட்டுதலில் ஊ னம் ஓ ரு பொ ருட்டல்ல வாழும் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துகொள்ளமுடியும் .

அவர்களின் எண்ணங்களை சரியானமுறையில் மாற்றியமைக்க கூடிய ஓர் நபர் இருந்தாலே ஊ னம்முற்றேருடைய வாழ்க்கை மாறத்தொடங்கிவிடும்.


அப்துல்கலாம் உரை வருமாறு: நாம் மின் விளக்கைப் பார்க்கும்போது தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். விமானத்தைப் பார்க்கும்போது ரைட் சகோதரர்களும், தொலைபேசியைப் பார்த்தால் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லும் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் எப்போதோ வாழ்ந்து மறைந்தாலும் இப்போதும் அவர்களை நம் நினைவில் வைத்துப் போற்றுகிறோம். அவர்கள் அவ்வாறு போற்றப்பட அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த தனித்துவத் திறமைதான் காரணம்.
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்துவத் திறமை உள்ளது. நாம் அந்த தனித்துவத் திறமையைக் கண்டறிந்து நம்மில் அத்திறமையை வளர்த்துக் கொள்ளப் போகிறோமா அல்லது எல்லோரையும் போல நாமும் சாதாரண மனிதர்களாக ஆகப் போகிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது.
நாமும் வரலாற்றில் இடம்பெற வேண்டுமானால் நமக்கான தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் உயர்ந்த லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ச்சியான அறிவுத் தேடலும், கடின உழைப்பும் இருப்பது அவசியம். எவ்வளவு தடங்கல் ஏற்பட்டாலும் தளராத மனம் வேண்டும். இந்த நான்கு குணங்களும் நமது வெற்றிக்கு மிகவும் அடிப்படையானவை.
எல்லோராலும் வெற்றி பெற முடியும்: நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது குடியரசுத் தலைவர் மாளிகையில் தினமும் ஏராளமான மாணவர்களைச் சந்திப்பது வழக்கம். ஒருநாள் ஆந்திரத்திலிருந்து மலைவாழ் மாணவர்கள் குழுவாக வந்திருந்தனர். அவர்களிடம் உங்கள் லட்சியம் என்னவென்று கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு லட்சியத்தைக் கூறினர். அவர்களுடன் வந்திருந்த ஸ்ரீகாந்த் என்ற பார்வையற்ற மாணவர், இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வருவதே என் லட்சியம் என்று கூறினார். உயர்ந்த லட்சியம் இருந்தால் உனது இலக்கை அடையலாம் என்று அந்த மாணவனை நான் வாழ்த்தினேன்.

 10-ஆம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் 98 சதவீத மதிப்பெண்களும் பெற்ற அந்த மாணவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள எம்.ஐ.டி. நிறுவனத்தில் கணினி தொழில்நுட்ப படிப்பு பயின்று வருகிறார். அந்த நிறுவனத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கு இடம் கிடைப்பது மிகவும் கஷ்டம். ஆனால், சர்வதேச அளவில் நடந்த போட்டித் தேர்வில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதன் மூலமே அங்கு படிப்பில் சேர முடிந்தது.
அமெரிக்காவில் படிப்பு முடித்ததுமே இந்தியாவில் வேலை தயாராக இருப்பதாக அந்த மாணவரின் படிப்புக்கு உதவிய கம்பெனியின் மேலதிகாரி அந்த மாணவருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இந்தியாவின் பார்வையற்ற முதல் குடியரசுத் தலைவர் என்ற இடத்துக்கு வர இயலாவிட்டால் உங்கள் நிறுவனம் அளிக்கும் வேலைவாய்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று அந்த மாணவர் பதில் எழுதினார். 
ஆந்திர மாநிலத்தில் மலைவாழ் குடும்பத்தில் பிறந்த, அறவே பார்வையற்ற ஒரு மாணவரால் இத்தகைய உயர்ந்த நிலைக்கு உயர முடிகிறது என்றால் அந்த மாணவர் கொண்டிருக்கும் உயர்ந்த லட்சியமே அதற்குக் காரணம். ஆகவே, உயர்ந்த லட்சியமும், கடும் உழைப்பும் இருந்தால் நாம் யாராக இருந்தாலும் நம்மால் நிச்சயம் வெற்றி பெற இயலும். 

Saturday, January 19, 2013

காலம் கடந்த ஞானம்


காலம் கடந்த ஞானம்  என்பது தன்னுடைய தவறான செயல்களை திரும்பி பார்த்தலின் விளைவாகதான் போலும் கீழ்கண்ட செய்தியின் நாயகன் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் கதையும் இவ்வாறு தான் போலும்…



அமெரிக்காவின் பிரபல சைக்கிள் பந்தய வீரரான லான்ஸ் ஆம்ஸ்ட்ராங், தான் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
1999 முதல் 2005-ம் ஆண்டு வரையில் பிரபல சைக்கிள் பந்தயமான உலக டூர் டி பிரான்ஸ் போட்டியில் பட்டம் வென்று முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர், ஊக்கமருந்து உபயோகித்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் அவருடைய பதக்கங்கள் பறிக்கப்பட்டதோடு, சாதனைகளும் அழிக்கப்பட்டன.
நீண்ட நாள்களாக தன் மீதான புகாரை மறுத்து வந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவில் உள்ள ஓ.டபிள்யூ.என். டிவி நெட்வோர்க் உரிமையாளரான ஓப்ரா வின்பிரேவுக்கு அளித்த பேட்டியில் தனது தவறை ஒப்புக் கொண்டார்.  டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டில் வைத்து பதிவு செய்யப்பட்ட அவருடைய பேட்டியின் ஒரு பகுதி வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பு செய்யப்பட்டது. கேள்வி, பதில் வடிவில் அமைந்துள்ள அந்த பேட்டியில், ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டுள்ள அவர், "ஊக்கமருந்து இல்லாமல் டூர் டி பிரான்ஸ் போட்டியில் வெல்ல முடியும் என்று நினைக்கவில்லை. 2009-ம் ஆண்டு மீண்டும் போட்டியில் பங்கேற்க வராமல் இருந்திருந்தால், ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கியிருக்க மாட்டேன்.
எனது நீண்டகால நம்பிக்கைக்குரிய நண்பரும், என்னுடன் பயிற்சி பெற்று நான் வென்ற 7 போட்டிகளிலும் என்னுடன் ரேஸில் கலந்து கொண்டவருமான லெப்டினென்ட் ஜார்ஜ் ஹின்கேப்பியை ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிடம் புகார் சொல்லுமாறு நிர்பந்திக்கப்பட்டபோதே என்னுடைய தலைவிதி தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இந்த விஷயத்தில் வேறு யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை.
சாம்பியன் பட்டம் வென்ற 7 போட்டிகளின் போதும் ஊக்கமருந்து உட்கொண்டேன். ஊக்கமருந்து தடுப்பு அமைப்பினரிடம் இருந்து தப்பிப்பதற்காக எனது ரத்தத்தையும் மாற்றிக்கொண்டேன்.
நான் செய்தது மிகப்பெரிய தவறு. மன்னிக்க முடியாததும் கூட. மக்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Thursday, January 17, 2013

சொந்த புலம்பலில் ஓர் சிகிச்சை


சிகிச்சை காரணமாக ஆயுர்வேத மருந்து  எடுத்து கொண்டிருக்கிறேன். அன்று மதியம் தின்பதற்கு உகந்ததாக இருந்த பூவன் பழங்கள் 5 மேல் சாப்பிட மறுநாள் காலையில் இடது கண்ணின் இமைகளில் கட்டி ஏற்ப்பட்டது.
உடல் சூடு தனியாமல் கண் இமை வழியே பெரிய கட்டியாக உருவாகி இரண்டுநாட்கள் கண்ணை மூடிக் கொண்டது. கண்களில்இருந்து நீர் வழிந்து கொண்டே இருக்க நடைமுறை வாழ்வே துன்பகரமாக மாறியது.
கண்கட்டியின் பிரதி விளைவாக உடல் சூடு அதிகரிக்க அவ்வப்போது தலைவலி  சேர்ந்து கொள்ள  பொங்கல் விழா எனக்கு சிறப்பாக அமையவில்லை.
பொங்கல் விடுமுறையில் நண்பர்களுடன் சேர்ந்து செல்லும் சிறுபயணமும் ரத்தானது.
ஆயுர்வேத மருத்துவரிடம் தொலைப்பேசியில் கேட்க அவர் திரிபாலதி சூரணமும் வெள்ளை கல்கண்டு பொடி செய்து இரண்டையும்  பாலில் கலந்து குடிக்க சரியாகி விடும் என்று சொன்னார்.
இங்கு கண்கட்டியின் வேதனை உடனே குறைக்க ஆங்கில மருந்துக்காக நண்பரின் உதவியை நாடினேன்  அவர் சிப்ரோப்ளோவின் 3 மாத்திரை பரிந்துரைக்க மாற்று மருந்துகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு இதை எடுத்து கொண்டேன்.
கண்கட்டி பெரிதாய் கண்ணை மறைத்த இரவு நாட்டுவைத்தியம் ஒன்று சொன்னார்கள். ராமகட்டியை  நீரில் குழைத்து தடவ சொன்னார்கள் . அதையும் எங்கள்  
வீட்டில் செய்துவிட  பல முனை தாக்குதலில் மறுநாள் கண்கட்டி  சிதைந்து  சீழ் வெளியேற வழி குறைந்தது  வீக்கம் இன்னும் குறையவில்லை.
நாளை குறைந்துவிடும் நம்பிக்கையில்….

Monday, January 07, 2013

தமிழக அரசும் உள்ளாட்சி துறையும்

சமீபத்தில் சிகிச்சை காரணமாக ஆத்தூர் செல்ல நேர்ந்தது பேருந்து பயணத்தில் சில பஸ் நிறுத்தங்கள் இறங்கி செல்லவேண்டிய கட்டாயம்.

நின்று சென்ற பேருந்து நிறுத்தங்களில் பெரம்பலூர்  பேருந்து நிலையம் நன்றாக இருந்தது.

தஞ்சை திருச்சி பேருந்து நிலையங்கள் அனைத்து முகம் சுளிக்கவைக்கும் கழிப்பிட வசதிகள்.

ஏன் அங்கு செல்கிறோம் என்ற நிலைமைதான். ஆனாலும் என்ன செய்ய...

பயணங்கள் அவசியம்  இத்தகைய சூழல்களை தாண்டி என்பது மிகவும் வருந்தவேண்டிய விசயமாக சுகாதாரம் உள்ளது.

செய்யவேண்டியத செய்து சொல்லி கொடுக்குறப்படி சொல்லி கொடுத்த யார் தான் செய்ய மறுப்பாங்க.....

தமிழக தலைமை நிறையதான் நெனைக்க செயல்படும் அமைச்சர்களின் செயல்பாட்டை பொருத்தவிசயமாகதான் உள்ளது.

மக்கள்  இரும்பு பட்டை போல்தான் அடிக்கிறப்படி அடிச்சா தான் சுகாதார விசயங்களில் ஓர் ஒழுங்கை கொண்டுவர முடியும்.

தமிழக அரசும்  உள்ளாட்சி துறையும் கவனிக்குமா...

Wednesday, January 02, 2013

புது வருடம்








31.12.2012 போலவே மறுநாள் வந்து விழுந்த 01.01.2013 வழக்கமான கண் முழிப்புடன் வாழ்த்துகள் வாங்கி திரும்ப கொடுக்க  வாழ்த்துகள் சொல்லவில்லை.

வழமையாக வாழ பழகிவிட்டமனது  எண்களின் மாறுதல்களில் காலம் என
ஒவ்வொரு வருட துவக்கநாளையும் இயல்பாக எடுத்து கொள்ள தானாய் எழும்பும் வாழ்த்துகள் வருவதில்லை.

எங்கள் ஊரில் அன்றைக்கு கோவில் பிசியாக இருந்தது. மறுநாள் பறவைகளின் சத்தம் பெரியசத்தமாய் தெரிய நேற்றைய நாளின் இல்லாமை தெரிந்தது.

நிகழ்வுகள் மாற நேற்று போலவே காலத்தின் ஓட்டம்  ஒவ்வொரு நாளும் இதுபோலவே....வருட  தொடக்கநாளும்...

LinkWithin

Related Posts with Thumbnails