Friday, May 31, 2013

பல வியாதிகளைக் குணப்படுத்தும் தண்ணீரை பருகுவோம்! (பகிர்வு)

தினந்தோறும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது மக்களிடம் பிரபலமாகி வருகிறது. அதிலும் இப்போது ஜப்பானிய மக்களிடம் மிகவும் அதிகமாக பிரபலமாகி வருகிறது.
தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று ஜப்பானிய மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதாவது தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்ற மிகப் பழைய கடுமையான வியாதிகள் மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் நூறு சதவீதம் வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
மருத்துவ முறைகள்:
*  நீங்கள் காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
*  பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு எந்தவிதமான உணவும் உட்கொள்ளக் கூடாது.( உணவு, நீர் ஆகாரம்)
*  45 நிமிடங்களுக்குப் பின் உங்களின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
*  காலை உணவிற்கு பின் 15 நிமிஷங்களுக்கும், மதியம் மற்றும் இரவு உணவிற்கு பின் 2 மணி நேரங்களுக்கு எந்தவிதமான ஆகாரங்களும் உட்கொள்ளக் கூடாது. (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
*  ஒர் முறையில் 4 டம்ளர் தண்ணீரை அருந்த முடியாத முதியோர் அல்லது நோயாளிகள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தி நாளடைவில் 4 டம்ளர் அளவு தண்ணீர் அருந்த பழகிக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றுவதனால் நோயாளிகள் தமக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் நீங்கி சுகம் பெற்று ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்களும்
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்களும்
சர்க்கரை வியாதிக்கு - 30 நாட்களும்
மலச்சிக்கல் - 10 நாட்களும்
புற்றுநோய் - 180 நாட்களும்
காச நோய் - 90 நாட்களும்
ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமைகள் மட்டுப்படுத்தப்பட்டு வலிமைகள் உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றினால் மிகவும் நன்மை தரும் என்றே நம்ப வேண்டும். இதனைதான் "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?

நன்றி : தினமணி

Tuesday, May 28, 2013

கைவிடப்பட்ட ஹிட்லர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை

ஜெர்மன் 19 நூற்றாண்டில் கட்டப்பட்ட பீலிட்ஷ் என்ற இந்த மருத்துவமனையில் ஹிட்லர்  போரி்ல் ஏற்ப்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளார்.

மருத்துவமனையின் தற்போதைய நிலைமை













Monday, May 27, 2013

படித்தவுடன் சிரித்த கவிதை


"தாத்தா...
யானை தெரியலை'
திருவிழாக் கூட்டத்தில்
எக்கி எக்கிப்
பார்த்த குழந்தை சொன்னது.
"இரு தூக்கிக் காண்பிக்கிறேன்'
என்றார் தாத்தா.
"யானை
ரொம்பக் கனம்...
தூக்கிருவியா?'
என்றது குழந்தை.

மு. பழனி இராகுலதாசன்.

Friday, May 24, 2013

கொஞ்ச நாட்களாக ரொம்பவும் கவர்ந்தது



எதிர்பாரா திருப்பமான  கதக்களி டான்ஸ்ர் ஆடம் நடனம் ரொம்ப அழகு...



நம்பிக்கை

எல்லோரும் பார்த்த விளம்பரம்  தான்...பாத்துகிட்டிருக்கிற விளம்பரம்......பிடிக்கும்......!!!


Tuesday, May 21, 2013

தினகரன் தலையங்கம் முரண்பாடுகள்


21.05.2013 அன்று வெளியான தினகரன் தலையங்கத்திற்கு தீனியாக கிடைத்தது இரண்டு தனிமனிதர்களின் வாழ்க்கை.
ஒன்று தன்னுடைய 30 வருட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இழந்த ஒருவர்  . இரண்டாவது தந்தை இறந்தபிறகு குடும்பபொறுப்பை ஏற்று தன்னுடைய சுகதுக்கங்களை இழந்து தன்னுடன் உடன்பிறந்தவர்களை நல்லபடியாக வாழவைத்தவர்

எது நமக்கு சொந்தம் என்ற தலைப்பிட்டு இறுதியில்எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்; மறுநாள் வேறு ஒருவருடையதாகும் என்ற உலக நியதியை  புரிந்து கொண்டால் இழப்புகள் வலி தராது என்று பகவத்கீதையைமேற்கோள் காட்டியுள்ளார்கள்.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவடையதாகும் என்பது உண்மை தான். எல்லா மனிதர்களுமே மனபக்குவம் அவர்அவர்கள் வளர்ந்த சூழல் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் விதங்களை வைத்து தான் மாறுபடும்.

இழப்புகளை இழந்தவர்களின் வலி என்பது அவர்கள் அதை கஷ்டப்பட்டுஉருவாக்கி பாதுகாத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த வலிகளால் ஏற்ப்படும் எந்த ஒரு முடிவும் அவர்களை பொருத்தவரையில் மிகச்சரி.

அவர்களுடைய தற்பொழுதைய தேவை சரியான ஒன்றை சுட்டிகாட்டி நம்பிக்கையான ஆறுதலான வார்த்தைகள் அதை விடுத்து தத்துவவார்த்தைகள் தேவையில்லாத ஒன்றாகவே படுகிறது.

திரும்பவும் அவர்களால் அவர்களாகவே உருவாகமுடியும் போன்ற நம்பிக்கை வார்த்தைகள் தான்.

முதலாமவர் எதிர்பார்ப்பு அவருடைய 30 வருட சம்பாத்தியத்தில் உருவான சொத்து சுகம் அது ஒரே இரவில் ஏமாற்றம் ஆக  எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்; மறுநாள் வேறு ஒருவருடையதாகும் இதை அவரால் ஏற்றுகொள்ளமுடியுமா???

இரண்டாமவர் தன்னை இழந்து அவர்களுடைய தம்பி தங்கைகளின் நல்வாழ்க்கை தான் அவருடைய எதிர்பார்ப்பு இந்த எதிர்பார்ப்பில்நிகழ்ந்த ஏமாற்றம் கொலையில் முடிந்துள்ளது. அவர்களுக்காக தன் சொந்த இழப்புகளின் துயரம் தான் இவ்வளவு கோபம். மேற்சொன்ன மேற்கோள்களை இவரால் ஏற்றுகொள்ளமுடியுமா ???

அந்த தலையங்கம் இது தான்.

எது நமக்கு சொந்தம்?

பெரிய பின்னணி ஏதுமின்றி சுயமாக உழைத்து தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறியவர்களை பற்றி தெரிந்து கொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் உண்டு. நேற்று செய்தி தலைப்புகளை ஆக்கிரமித்த இருவர் அந்த ரகம். பெயர்களில்  திருச்செந்தூர் வட்டார வாசம் தெரிகிறது. சேர்மகனி(60), சபரிநாதன்(21). படிக்கவில்லை. முன்னவர் பிராட்வேயிலும், இளைஞன் பொன்னேரியிலும் கடை திறந்து வியாபாரம் செய்து வந்தவர்கள். சேர்மகனி வட மாநிலங்களில் பட்டாணி கடலை வாங்கி விற்று அமோகமாக சம்பாதித்தார். சபரிநாதன் மளிகை கடை வருமானத்தில் விதவை தாய், 3 தம்பி, 2 தங்கைகளை வசதியாக வாழவைத்தார்.

ஒரு தங்கை காதல் திருமணம் செய்து நாகர்கோயிலில் குடும்பம் நடத்த சென்றுவிட்டாள். நண்பர்கள் இருவருடன் அங்கு சென்ற சபரி, பாசமலர் சிவாஜியாக ஒருநாள் நடித்து தங்கையை கண்ணீரில் நனைய வைத்தார். மறுநாள் தங்கையையும் மாமனாரையும் வெட்டி கொன்றார். தங்கை கணவன் காயங்களுடன் பிழைத்துவிட்டார்.

குடும்பத்தோடு ஊட்டி சுற்றுலா சென்ற சேர்மகனி திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 275 சவரன் நகையும் 50 லட்சம் ரொக்கமும் காணாமல் போயிருந்தன. ‘பேங்க் பழக்க வழக்கமெல்லாம் நமக்கு கிடையாது. நகையோ பணமோ அவசரத்துக்கு வேண்டுமென்றால் கையோடு வைத்துக் கொள்வதுதான் நல்லது என நினைத்தேன். இத்தனை வருட உழைப்பின் பலனும் ஒரே நாளில் போய்விட்டதே’ என்று கண் கலங்குகிறார்.

‘எனக்கு ஜாதிகூட முக்கியமில்லை. ஆனால் ராணி போல வாழ வேண்டும் என நான் ஆசைப்பட்ட தங்கை, ஏழையின் வீட்டில் கஷ்டப்படுவதை தாங்க முடியவில்லை. நம்பிக்கை துரோகத்துக்கு இதுதான் விலை’ என்று அமைதியாக விளக்கம் சொல்கிறார் சபரி.

திருடனிடம் சொத்தை இழந்தவரையும் தங்கையை கொன்றவரையும் ஒப்பிட முடியாது. இருவரும் இழந்தது கொஞ்சமல்ல என்பது மட்டுமே பொதுவானது. பணம் நகை பத்திரமாக இருக்குமிடம் வீடல்ல என்பதை சேர்மகனி அறியவில்லை. சொந்த தங்கை என்றாலும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை சபரி உணரவில்லை.  எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்; மறுநாள் வேறு ஒருவருடையதாகும் என்ற உலக நியதியை  புரிந்து கொண்டால் இழப்புகள் வலி தராது.

LinkWithin

Related Posts with Thumbnails