Monday, September 30, 2013

கொஞ்சம் அரசியல்.

நாகை நகரம் பா.ஜ.க  என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்ட
வேன்கள் பா.ஜ.க. கொடி தாங்கி  நாகையிலிருந்து திருச்சி நோக்கி  விரைந்து சென்றுக்கொண்டிருந்தன.

மதியம் 12 மணியளவில் எனது இருசக்கர வாகனபயணம்  மிக கவனமுடன்  நிகழ்ந்தது.

இடையே இடையே மரநிழல்களில் ஒவ்வொரு வேனை நிப்பாட்டி தயாரித்த கொண்டு வந்திருந்த பட்டைசாதம் பாக்கு மட்டை தடடுகளில் விநோயிக்கப்பட்டது.

வருங்கால பிரதமர் … மோடி  குரொலிகளுக்கு குறைவில்லை.

அ.தி.மு.க.    , தி.மு.க. வண்டிகளின் அணிவகுப்பையே பார்த்த கொண்டிருந்த கண்களுக்கு  தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பொதுமக்கள் மக்கள் மத்தியில்   மோடி திருச்சிக்கு வருகை புரிந்த நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டு கொண்டிருந்தது.

மறுநாள் மறந்து போனார்கள் திருவாளர்கள் பொதுமக்கள்.

முந்தைய நாட்களில் பா.ஜ.க.   எங்கள் ஊரில் இருப்பதை அந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே தெரிந்து கொள்ளலாம் .


இத்தகைய சூழலில்  இக்கட்சியின் திடீர் எழுச்சி    மோடியை மையப்படுத்தி தான் என்று சொல்வதில் ஒன்றும் மோசமில்லை   தான்.

Friday, September 27, 2013

4 வது நாள் அன்பு

அட…நேத்து குறிகோள் உடும்பு பிடியா பிடிச்சுங்கப்பா சொன்னாங்க…சரின்னு ஞாபக படுத்திகிட்டாச்சு.




நான்காவது நாள்  என்ன சொல்லப்போறாங்கன்னா நம் சுற்றியிருக்கிறவங்க கிட்ட  அன்போட இருக்கறது.

இதுக்கு ரெண்டு விதிய கட்டயாம கடைப்பிடிக்க சொன்னாங்க...

  1. நாம்மோட சொல்லிலும் செயலிலும் நேர்மையா இருக்கனும். மத்தவங்க நம்மள பத்தி குறை சொல்ல கூடாது.
  2.  நாம செஞ்சுப்புட்டு எதிர்பார்க்காம இருக்கோனும்.

வீணாகிற குடிநீர் குடிநீர் குழாய நிப்பாட்டுதல் வழியில கிடக்கிற ஆனிய தூக்கி அந்தான்ட போடுறது
சுற்றியிருக்கிறவங்க கிட்ட  சிரிச்ச முகமா இருக்கறது  இது மாதிரி சின்ன சின்ன விசயங்கள் நிறைய பெரிய மாற்றங்கள கொண்டு வருமுன்னு  அன்னக்குதான் அவனுக்கு தெரிஞ்சுது.

இவ்வளோ நாளா தெரியாம போச்சப்பா...பரவாயில்ல இன்னிக்கு தெரிஞ்சுகிட்டோம்ல இனி அப்படியிருக்கலமா?!

கட்டாயம் மாறி தான் ஆகனும்.


தொடரும்.

Friday, September 20, 2013

3 வது நாள் உறுதி

ரெண்டு நாள் போயிடுச்சி… மூன்றாவது நாள்


என்ன சொல்ல  போறீங்கன்னு போயி கேட்டா..என்ன சோதனை  வந்தாலும் தான் கொண்ட குறிகோள விடாம உடும்பு புடியா நிக்கறது.



ம்ம்ம்… என்ன சோதனை … என்ன சோதனை …அடைய  வேண்டிய இலக்கு  அதாங்க.

சரியா போச்சி…அவனுக்கு தான் பெரியப்பா பையன் மாதிரி இன்னும் மத்தவங்க அரசாங்க தேர்வு எழுதி  பெரிய்யீய்ய உத்தியோகம் பாக்கனும் ஆசப்பட்டு தேர்வுக்காக படிக்க ஆரம்பிச்சான்.

அந்த தேர்வெல்லாம் எழுத குறைந்தபட்ச தகுதி ஒரு டிகிரியாம். பன்னிரென்டாவது பாஸ் பண்ணி காலேஜ்க்கு  அப்ளிகேசன் போட்டு  அப்பாகிட்ட காலேஜ்  சேர பண  கேட்ட யாருகிட்ட இருக்குடா படுவா…

இங்க சோத்துக்கே சிங்கி அடிக்கிது நீ வேற…

அப்படியே நொறுங்கி போனான்.

ஆனாலும் அத்தோட அவன் வாழ்க்கை முடிஞ்சாப்போச்சி…

இன்னொரு குறிகோளுன்னு உறுதியா நிக்கதான் வேண்டியிருக்கு..


தொடரும்.

Thursday, September 19, 2013

இப்படியும் வரைகிறார்களா ஓவியங்கள் !!

இத்தாலி நாட்டு ஓவியர் மார்சிலோ பெரன்கீ வரைந்த பென்சில் ஓவியங்கள் அப்படங்களுக்கு உயிரூட்ட வாட்டர்கலர் , கலர் பென்சில் பயன்படுத்தியுள்ளார்.


























Wednesday, September 18, 2013

இரண்டாவது நாளும் வாய்ப்பும்

வாழ்க்கையில ஜெயிக்க ஒரு குறிகோள குறிப்பேட்டுல எழுத சொன்னாங்க.

சரின்னு எழுதி வைச்சாச்சு…. நாம குறிகோள  சென்றடைய உள்ள வாய்ப்புகள் என்னென்னு பாக்க சொன்னாங்க…




ஆனா  அவனுக்கு அன்றைக்கு  கண் முன்னாடி இருந்த வேலை முக்கியமா பட்டுது.

சரி அவனோட   தனிமையில யோசிச்சா நிகழ்கால பிரச்சனைகள் பெரிசா தெரிய அதற்கான தீர்வு கள் எவை பாக்கதான் நேரம் சரியா இருந்திச்சு.

எதிர்கால குறிகோள் அதற்கான வாய்ப்புகள் பற்றி நிகழ்கால பிரச்சனைகளிலிருந்து விடுப்பட்டு யோசிக்க முடியல.

ஆனாலும் தன்னோட குறிகோளுக்கான வாய்ப்புகளை கிடைக்கும் வரை தேடிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கிறது.

வாழ்க்கையில நடந்து கொண்டேயிருந்ததான் சுவாராசியமா இருக்குமுன்னு சொன்னாங்க..

வாங்க நடப்போம்.


தொடரும்..


Tuesday, September 17, 2013

கொஞ்சம் அரசியல்.

காங்கிரஸ் கட்சி இருக்குவரைக்கும் நாம் உருப்புடமுடியாது.  தகவல் தொடர்பு விரிவாக இல்லாத காலங்களில் எந்த ஒரு திட்டத்துக்கும் மாநில  அரசை குறைசொல்வது வாடிக்கை.

மத்திய அரசின் மாநில அரசுக்குரிய பங்களிப்புகள் பற்றி ஊடகங்கள் வாயிலாக  மக்கள் தெரிந்து கொண்ட நிலைமையில் காங்கிரஸ் கட்சி பற்றி மக்களின் எண்ணம் தி்.மு.க.  வை தமிழகத்தில் பெருத்த அடி கொடுத்து  ஆட்சியை விட்டு இறக்கியது மாதிரி காங்கிரஸை    மக்கள்  மத்தியில் இருந்துஇறக்க வேண்டும்.


அதே நேரத்தில் பா.ஜ.கட்சியினரின்     ஒற்றுமையின்மை ஒரு பக்கம் பயத்தை விளைவித்து கொண்டிருக்க எப்படியோ நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி   பாரதீய ஜனதா கட்சி  தன்னை நிலைப்படுத்தி கொள்ள நினைக்கிறது.

மாநில அரசியலில் நிர்வாகத்தில் தன்னை முனனிலைப்படுத்தி கொண்ட மோடி  தேசிய அரசியலில்  ஜொலிப்பாரா என்ற வினாவினையும் ஆச்சரியங்களையும் ஊடகங்கள் பிரபலப்படுத்தாமல் இல்லை.

அதற்கு ஒரே தீர்வு மக்களாகிய நாம் ஒரு வாய்ப்பு வழங்குவதை பொறுத்தே அமையும்.

அதற்குள்ளாகவே தற்போதையதமிழக முதல்வரை  பிரதமர் நாற்காலிக்கு  அழைத்து செல்ல வாய்வழியே சில தலைவர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள்.


தமிழக அரசின் பல திட்டங்கள் இன்னமும் முழுமையாக  தமிழகத்தை            சென்றடையாமல் இருக்க அ.தி.மு. க. ஆட்சியின் முழுபலனை இன்னும்  தமிழகமக்கள் அனுபவிக்கவில்லை. மாநில அரசியலே இன்னும் சரிப்படுத்த படாத நிலையில் அவரை பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சொல்வது எந்த வகையில் நியாயமோ தெரியவில்லை.

தமிழக மக்களின் மனபோக்கு  அ.தி.மு.க. ஆட்சியில் ஓ.கே. சொல்லுமளவிற்கு சென்று கொண்டிருக்கதமிழக மக்களை  தன்பக்கம் திருப்ப தி்.மு.க. படாதபாடு  பட்டு கொண்டிருக்கிறது  என்பது உண்மை.


தி.மு.க. தலைவரின் வார்த்தை ஜாலங்கள் தமிழகத்தில் இனி எடுப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்விகள்.  ஏனென்றால் அவரது மயக்கும் வார்த்தை விளையாட்டுகளில்  மயங்க அவர் வயதுகேற்ற ஆட்கள் தமிழகத்தில் மிகவும் கம்மி.


வரவிருக்கும் லோக்சபா தேர்தல்களின் முடிவுகளில் தலைவர்களின் முகத்திரை கிழியும் வரை காத்திருப்பது மக்களாகிய நம் கடமை.

Monday, September 16, 2013

முதல் பயிற்சியும் நோட்டு புத்தகமும்

முதல் நாள் பயிற்சி ஆரம்பமானது.



நோட்டு புத்தகம் அல்லது சின்ன குறிப்பேடு கையில் எடுக்க சொன்னார்கள்.

உண்மையாய் நீங்க என்னவா  ஆகப்போறீங்கன்னு ஒளிமறைவின்றி எழுதுங்கப்பான்னு  சொன்னாங்க...

நான் ஒரு நல்ல எழுத்தாளன் ஆகனும்.

நான் ஒரு நல்ல  சமூக சிந்தனையாளர் ஆக வேண்டும்.

நான் ஒரு நல்ல  விளையாட்டு வீரன்

நான் ஒரு நல்ல பாடகன்

நான்  ஒரு நல்ல கவிஞன்

நான் ஒரு நல்ல இசைஞன்

நான் ஒரு நல்ல கணித அறிஞர் ஆக வேண்டும்   என அந்த பயிற்சியில்  குறிப்பேட்டை  எழுதியவர்கள் ஒவ்வொரு ஒவ்வொரு குறிகோளாய் எழுதினார்கள்.

ஆனால் அவன் தடுமாறினான் எழுத தயங்கினான்.

எழுத தயங்கிய காரணம் நிகழ்கால வாழ்வின்  வலிகளால்  எதிர்காலத்தில் தான் யார் என்பதை நிர்மாணிக்கும் திரணியற்று.

ஆனாலும் அவனது ஆசை  

சமூக வாழ்வில்  நிலையான வாழ்வை அமைத்துகொண்டு உலகம் தழுவிய சமூக தொண்டுகள் செய்யவேண்டும்  என்று தன்னுடைய குறிப்பேட்டில் எழுதி வைத்தான்.

தொடரும்...

LinkWithin

Related Posts with Thumbnails