Friday, November 20, 2015

காய்கறி வேண்டாம் வற்றல் போதும்..!!

பருவமழை தமிழகம் முழுவதும் மிக தீவிரமாய் பெய்ய எங்கள் ஊரில் அதிகம் பெய்யவில்லை.

எங்கள் பக்கத்து ஊரில் உள்ள இயற்கை எரிவாயு ஊற்றில்  வெளிப்படும் இயற்கை எரிவாயு தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால்  பல கிலோமீட்டர் சுற்றளவுக்கு வரும் மழை மேகங்களை நீர்த்து போக செய்துவிடும்  என்று காரணமாய் சொன்னார்கள்.

எங்கள் ஊரில் மழையி்ன் பாதிப்பாக காய்கறி விலை ஏற்றத்தை சொல்லலாம்.


எப்பொழுதும் நான் வாங்கும் காய்கறியின் விலை ரூ 110  வரும் அதே அளவுள்ள காய்கறிகளை மழைக்குப் பின்பு மார்கெட்டில் வாங்கினேன் ரூ 170 வந்தது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

முன்பெல்லாம் மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே வற்றல் போடும் காய்கறிகள் விலை மலிவாக கிடைக்கும் காலங்களில்  மொத்தமாய் வாங்கி வற்றல் போட்டு வைத்து விடுவார்கள்.

வடகமும் சேர்த்து போட்டு விடுவார்கள்.

மழைக்காலம் ஆரம்பித்தவுடன் காய்கறிகளும் தரமில்லாதவையாக கிடைக்கும். எங்களை போன்ற வீடுகளில் மழைக்காலங்களி்ல் வற்றல் குழம்பு, கருவாட்டு குழம்பு , ரசம் இவை தான் அதிக இடம் பிடிக்கும்.

பழையன மறத்தலில் விரைவில் காய்கறி வற்றல், வடகம் இடம் பிடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மழையினால் காய்கறியின் விலை ஏற்றம் வற்றலை நினைக்க வைத்தது.



No comments:

LinkWithin

Related Posts with Thumbnails