Monday, November 09, 2015

நாளை தீபாவளி

சூரியனை காணோம். கருமேகங்கள்  வானம் முழுவதும் வியாபித்திருக்க குளுமையான சாரலும் துாரலுமாய்  இன்றைய காலைப்பொழுது .


நாளை தீபாவளி..

சிறுவனாய் இருந்து  தீபாவளி கொண்டாடி  அடைந்த சந்தோசம் குடும்ப பொறுப்பேற்றவுடன் இல்லாமல் போனது ..

அதிக செலவின பண்டிகைகளில் இதுவும் ஒன்று .

சுற்றுபுற கிராம மக்கள் கூட்டமாய் வந்திறங்கி மழைத்தூரலில் நனைந்தப்படியே பொருட்கள் வாங்குவது தடைப்படவில்லை.

கருமேகங்கள் விலகவில்லை .

தீபாவளி திருநாளுக்கு மட்டும் புது துணிகள் எடுப்பவர்கள் உண்டு. நடுத்தர குடும்பங்களில் வருடாந்திர துணிமணி எடுப்பது என்றால்  தீபாவளி திருநாளுக்காக மட்டும் தான்.

அப்பொழுது  எடுத்த புது துணிகளை வைத்து கொண்டுதான் சொந்தகாரர்களின் விசேஷங்கள்  கோவில் திருவிழாக்களை சரிக்கட்ட வேண்டும்.

கிராம குடும்பங்கள்  கடைத்தெருவுக்குள்  சென்று கொண்டிருக்கிறார்கள்.

மழைத்தூரல் நிற்கவில்லை.

நடைப்பாதை வியாபாரிகளின் வியாபாரம்  விறுவிறுப்பாக நடைப்பெறுகிறது.

உழைக்க வெளிஊர் சென்றவர்கள் வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வரும் வைபவம் தீபாவளி.

கடைத்தெருவுக்குள் புதுமுகங்கள் அதிகமாய் தெரிகிறது.

கடைத்தெரு ஓய மணி 12  ஆகும்.

வருவார்கள்  ... வாங்குவார்கள்  ... செல்வார்கள்....

நாளை தீபாவளி.








No comments:

LinkWithin

Related Posts with Thumbnails