Thursday, December 17, 2015

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஆளும்கட்சிக்கு அற்புதமான வாய்ப்பு

சென்னை மழை பலவிதமான விமர்சனங்களை ஆளும்கட்சிக்கு  ச்சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அவற்றையெல்லாம் துடைத்தெறிய  ஒரு வாய்ப்பைச் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.

கூவம், அடையாறு,பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவு.

செய்யவேண்டியது

பாராட்டுகள்

காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அரசு சென்னையிலும் எந்த ப்பாரபட்சமும் இல்லாமல் உடனடியாக செயலாற்ற தொடங்கினால்  எதிர்க்கட்சிகளுக்கு பலத்த பின்னடைவை கொடுக்கும் செயலாக அமைந்துவிடும்.

மக்களுக்கும் நம்பிக்கை வரவைக்கும் செயலாக அமைந்துவிடும்.

அஇஅதிமுக அரசின் மிகப்பெரிய பலவீனம் உள்ளாட்சி துறை.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளும்அரசை விமர்சித்து தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் வாய்ப்பாகச் சென்னை மழை வெள்ளத்தைப்பயன்படுத்தினாலும் தப்பிக்கும் வாய்ப்பாக ச்சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது.

ஆளம்அரசு பயன்படுத்தி கொள்ளுமா...!!??

11 comments:

balaamagi said...

அகற்றினால் நல்லது தான்,,,,,,

ராஜ நடராஜன் said...

எதிர்ப்புக்களை தாங்கும் சக்தி அரசுக்கு இருக்கிறதென ம.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருந்தார். பெரும்பாலும் அவரது குரலையே கேட்டுக்கொண்டிருந்த எனக்கு நேற்று அவருடைய பெரும் தொப்பை பெரும் ஆச்சரியம்.

செம்பரம்பாகக தியரிதான் சென்னையை மூழ்கடிச்சுடுச்சு. அப்ப காஞ்சிபுரம்,கடலூர் மழை? தமிழகத்தில் ஒவ்வொரு துறையும் குட்டி குட்டி ராஜ்யமே நடத்துகின்றன. எனவே ஒருங்கிணைப்பு இல்லையென்பதோடு ஆளும் கட்சி பேரிடரில் செயல்படவில்லையென்பதோடு ஸ்டிக்கர் மோகத்தில் சிக்கிக்கொண்டது.

மூன்றாவது அணி வலுப்பெறுமா என தெரியவில்லை.இரு கழக ஆட்சிதான் தமிழர்களுக்கு இன்னும் வாச்சிருக்கும்ன்னா ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிரான குடும்ப அரசியல் இளவரசன் பட்டமளிப்பை விட ஜெயலலிதாவின் ஒற்றை ஆணவ ஆட்சியே நல்லது.எரியறு கொள்ளியில் சின்ன கொள்ளி.

ராஜ நடராஜன் said...

உணவு,உதவிகளில் அரசு செயல்படா விட்டாலும் காவல்துறை,ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இப்போதைய செயல்,படங்கள் பாராட்டுக்குரியவை.

வேகநரி said...

//ஜெயலலிதாவின் ஒற்றை ஆணவ ஆட்சியே நல்லது//
ராஜ நடை அம்மாவின் வாட்ஸ்அப் பேச்சை நம்பியிருக்கலாம்,
அம்மாவின் வடைசுடுதல் தமிழகத்தை ஆசியாவின் குறு சிறு நடுத்தர நிறுவனங்கின் தலைநகராக மாற்றுவேன் என்பதயும் நம்பியிருக்கலாம்!

http://thavaru.blogspot.com/ said...

அகற்ற வேண்டும் என்பது தான் எல்லாருடைய எதிர்பார்ப்பும் பாலமகி...

http://thavaru.blogspot.com/ said...

வாங்க ராஜநட...ஒருங்கிணைத்தல் இல்லாததற்கு ஒற்றை ஆணவ ஆட்சி தான் காரணம். வரும் ஐந்தாண்டு ஏதோ ஒரு கழகத்தின் கைகளில் தான் ஆட்சி என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

தமிழக மக்களாகிய நாம் இன்னும் மாறவேண்டியுள்ளது.

குடும்ப ஆட்சிக்கு பதில் நீங்கள் சொல்லும் ஆட்சியே சிறந்தது. கடந்த குடும்ப ஆட்சியில் அவர்களின் அடங்கா திமிரை அனுபவித்தவர்கள் நாங்கள்.

http://thavaru.blogspot.com/ said...

வாங்க வேகநாி...ராஜ நட ”எரியறு கொள்ளியில் சின்ன கொள்ளி“ தான் சொல்லிட்டாரே..

ராஜ நடராஜன் said...

வேகநரி!ஜெயலலிதா எப்ப வாட்ஸ அப் லைக்கர் ஆனார்? நாந்தான் கிரி பதிவில் சொன்னேனே! ட்விட்டர்,முகநூல் பக்கமெல்லாம் போவதேயில்லையென்று. அதில் வாட்ஸ் அப் கூட அடக்கம். இருக்குற இத்துனூண்டு மூளையை வெச்சுகிட்டு எங்கேயெல்லாம் அலையறது:)

ராஜ நடராஜன் said...

வேகநரி! வடைசுடுதலை முந்தைய பின்னூடம் போட்ட பின் யோசித்தது. தொழில் நிருவனங்களை முதலீடு செய்ய ஓ.பி.எஸ் முதல்வராக இருந்த போதே நிகழவேண்டியதை தாமதமாகவே நடந்திருந்தாலும் அதனை தக்க வைத்துக்கொள்வது ஆளும் அரசுக்கு நல்லது.

அந்தந்த கட்சிக்கான அடிப்படை உறுப்பினர்கள் எனற கட்சி அடிமைகள் அவரவர் கட்சிகள் எந்த தவறை செய்தாலும் அதற்கெல்லாம் வக்காலத்து வாங்கவே செய்கிறார்கள்.மொத்த ஓட்டில் அவர்கள் சுவரில் ஒட்டிய பல்லிகள்:) நம்ம மாதிரி விவாதம் செய்பவர்கள் வேலை வெட்டியில்லாத மைனாரிட்டிகள்.ஸ்விங் ஓட்டு மட்டுமே கடைசி நேர தேர்தல் முடிவை நிர்ணயிக்கிறது.

இந்த மழையில் மதம், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொது நல தொண்டு மனப்பான்மையுடன் பலரும் இருப்பதை உணரமுடிந்தது. பூனைக்கு மணி கட்ட யாராவது ஒருங்கிணைத்தால் கூட மூன்றாம் அணியுடன் இணைந்து மாற்று இயக்கம் தமிழகத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது.

ராஜ நடராஜன் said...

பாராட்டுகள் படத்தை மறுபடியும் ஒரு முறை பார்க்கும் போது ராணுவ கட்டுப்பாடு மாதிரியான ஒரு ஒழுங்கு நம் மக்களிடம் இருப்பதை உணர முடிகிறது. அரசு இயந்திரத்திற்கான அத்தனை கட்டமைப்புகளும் நம்மிடம் இருக்கிறது. நாட்டு நலன்,மக்கள் நலனை மட்டுமே முன் வைத்து இவர்களை ஒருங்கிணைத்தால் போதும் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றி விடலாம்.

கனவு காணுங்கள்ன்னு அப்துல் கலாம் சொல்லி வச்சிட்டு அவர் பாட்டுக்கு தூங்க போய்ட்டார்.

ராஜ நடராஜன் said...

மாற்றம் தேவை இல்லை இருக்குறதுல சின்ன கொள்ளியே இருக்கட்டும்ன்னு நினைச்சா பிஜேபி இந்துத்வா,குழு கட்சி ப ம க வுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். மோடியெல்லாம் கறுப்பு பணத்தை கொண்டு வந்துடுவார்ன்னு நினைச்சா!!

ம.தி.முகவுக்கு பள்ளம் பறிப்பது எப்படியென்ற கலையை கற்றுத் தேர்ந்த தி.மு.க
பூனை எந்த பக்கம் பாயுமோ என்ற விஜயகாந்த்
மககள் போராட்டம்ன்னா கம்யூனிஸ்ட்டுகள் ஆனால் ஒரு இட்லி கூட தட்டில் விழாது
ஆளும் கட்சி தனியாவே நிற்பேனாக்கும் நினைப்புல மழையை அள்ளிப் போட்ட சென்னை.
குரங்கு தாவலில் புது தாவல் ப ம க
பேரம் எங்கே படியுமென்ற குட்டி அணிகள்

இந்த தேர்தல் கொஞ்சம் தலை சுத்த வைக்கும் குறைந்த பட்சம் 2016 பொங்கல் வரை.

LinkWithin

Related Posts with Thumbnails