Friday, December 18, 2015

தினக்காலண்டர் வேண்டுமா? தி.மு.க.வில் சேருங்கள்.




ஈரோடு மாவட்டம் கொல்லாங்கோயில் பேரூராட்சி முன்னாள் தலைவர்  கே.எம்.பாலசுப்ரமணியம்  தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக வருகின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தி.மு.க.தினசரி காலண்டர் இலவசமாகத் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.


காட்சியின் மானம் போகிறது என்று மற்ற தி்.மு.க.வினர் கோபம் காட்டினாலும் தம்பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். தலைமைக்கு புகார் தரப்பட்டு்ள்ளதாம்.

பாலசுப்ரமணியமோ என்னுடைய திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும்  உறுப்பினர் சேர்கையில் பொய் க்கணக்கு காட்டி  நான் சீட்டு வாங்க பிறர்மாதிரி முயற்சிக்க வில்லை என்றும் கூறுகிறார்.

மேலும் கட்சியின் மானம் மரியாதைப்பற்றி பேசுபவர்கள்  பொதுகூட்டம் மாநாடு போன்றவற்றிக்கு ஆள்சேர்க்க ரூபாய்200 ம் கோழி பிரியாணியும் கொடுப்பதை என்னவென்று செல்வது எதிர்க்கேள்வி கேட்கிறார்.

எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டதே! பாவம் தி.மு.க.




4 comments:

ராஜ நடராஜன் said...

கோழி பிரியாணியிலிருந்தே ஆரம்பிக்கலாம். கட்சி பாகுபாடு அற்ற சமத்துவம் என்றால் அது பிரியாணி போடறுதான். முன்பெல்லாம் திருவிழான்னா மோர்ப்பந்தல்தான். இப்ப பிரியாணிதான் ட்ரெண்டு. வாங்க கூச்சப்பட்டுட்டு வாங்கவில்லை என்பதோடு இணையத்துல மட்டும் பீத்தறான் பிரியாணி சாப்புடறான் பாருன்னு யாராவது வாட்ஸப்புல அப்பிட்டா என்ன பண்ற்துன்னு வேற பயம்.

ராஜ நடராஜன் said...

அதானே! பாலசுப்ரமணியம் எத்தனை காலண்டர் பிரிண்ட் போட்டார்ன்னு பிரிண்டிங் பிரஸ்ல கேட்டா சொல்லிடப் போறாங்க.இதுல மத்தவங்க மாதிரி பொய்க் கணக்கு காட்ட மாட்டேன்கிற அவரது வாதத்தில் நியாயமிருக்கிறது. ஆட்டுக்கல்லு இலவசம்ன்னா இட்லியை மட்டும்தான் சாப்பிடறோம்.தொலைக்காட்சி பெட்டின்னா கொடுத்தவங்களையா நினைக்கிறோம்.நிகழ்ச்சி குறிப்பா சீரியல் அல்லவா நினைவுக்கு. காலணடர் அப்படியில்லை. ஒரு காகிதம் கிழிக்கும் போதே கழக நினைப்பு வருமே! மோடிக்கு இணையம் மாதிரி கழகத்திற்கு காலண்டர் உதவினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இந்த தேர்தலில் சிறந்த வாக்கு சேகரிப்பு திட்டம்.

ராஜ நடராஜன் said...

கலைஞர் சிரிச்சுகிட்டிருப்பதையே கூட காலண்டரின் படமாக போடலாம்.நல்ல கலராவே இருக்கார்.
நமக்கு நாமே முருகனை விட உட்கார்ந்துகிட்டிருக்கும் பிள்ளையாருக்குத் தான் மாம்பழம்

http://thavaru.blogspot.com/ said...

ராஜ நட ..அஇஅதிமுக மாவட்ட செயலாளர் ஒன்றியம் நகரம் அதேபோல் திமுக மாவட்டம் ஒன்றியம் என அங்கு அங்கு தினசரி காலண்டர் வழங்குவது உண்டு. திட்டம் புதிது அதனால் இப்பதிவு.

தொலைக்காட்சி கொடுத்த திமுக கேபிள் ராஜ்ஜியம் வழியா தனக்குதானே 2ஜி வழக்கில் ஆப்பு வைத்து கொண்டது. மீண்டு வரவேயில்லை படாதப்பாடுகிறது.

நமக்கு நாமே மட்டும் திமுக- வை நிமிர்த்தி விடுமா தெரியவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails