Friday, December 25, 2015

பொன்வண்டு





இரண்டுநாட்கள் முன்பு நடந்துசெல்லும் கோவில்பாதையில் எந்த அசைவும் இல்லாதுமல்லாந்துபடியே கிடந்தது அந்தவண்டு.

பெரியவண்டுகள் மல்லாந்துவிட்டால் திரும்பவும் தன்உடல் திருப்பி நேராய் வருவது மிககடினம். நிறையவண்டுகளின் உயிர்போய்விடும்.

திருப்பினேன் ...வியந்துபோனேன்.

பார்த்து பலவருடங்கள் ஆகியதால் வியப்புமேலிட சிலநிமிடங்கள் பால்யகால நினைவுகளில் உள்ளிழுக்கப்பட்டேன்.

வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்க..இருக்கும் கொல்லைகளில் இலந்தைமரம் கட்டாயம் இருக்கும்.

இலந்தைபழ சேகரிப்பில் நண்பர்களுடன் அடித்த கொட்டம் ஞாபகத்துக்கு வந்தது.

விழும் பழங்களை தவிர க்கல் அடித்து ப்பொறுக்கும் பழங்கள் அதிகம்.

கல் எடுத்து க்கிளை தேடுகையில் இலைதின்று அமர்ந்திருக்கும் இந்தபெரியவண்டு. கிளை நோக்கி க்கல் பாயும்  பறக்க சந்தர்ப்பம் கிடைக்காது கீழேவிழும்.

நீ முந்தி நான் முந்தியாய் சிறகுகள் விரியாது எங்களில் ஒருவன் விரல்களுக்கிடையே சிறைப்பட்டு போய்விடும்.

இலந்தை பழம் பின்னுக்கு த்தள்ளப்பட்டு வண்டு  விளையாட்டு பொருளாகிவிடும்.

நிமிடங்கள் கரைந்தும்

அசைத்து க்கொண்டிருந்தேன் அசைவு தெரியவில்லை.

இறந்து போயிருந்தாலும் என்னுள் பறந்தது...திரும்பவும் பறந்து மரக்கிளைகளில் அமர்ந்தது.

உயிரோடு இந்த வண்டை நான் படம் பிடிக்க அலையவேண்டும் அதுவரை என் ஆவணக்காப்பகத்தின் பிரதிநிதியாய் இருக்கட்டுமே என்று ஸ்மார்ட்போனில் படம் பிடித்தேன்.




4 comments:

Nagendra Bharathi said...

அருமை

ராஜ நடராஜன் said...

3என்ன காமிரா லென்ஸ் உபயோகிக்கிறீர்கள். ரெஸல்யூசன் நன்றாக இருக்கிறது.

எங்க ஊர்ப் பக்கமெல்லாம் பொன் வண்டு உருண்டையா இருக்கும். கூகிளில் தேடியதில் சரியான பொன் வண்டு கிட்டவில்லை. இருந்த போதும் கீழ் கண்ட படத்தில் உங்க வண்டு கலரை ஒட்ட வைத்தால் ஓரளவுக்கு தேறும்.

http://www.flickriver.com/photos/csureshbabu/5160477095/


பழைய நினைவுகளுக்கான மண்,மரம்,காற்று என நிறைய இருக்கிறது.ஆனால் தேடுதலுக்கான நேரமில்லாமல் போய் விட்டோம்.

http://thavaru.blogspot.com/ said...

வாங்க பாரதி...

http://thavaru.blogspot.com/ said...

ராஜ நட..நான் சாம்சங் நோட் 2 மொபைல் வைத்துள்ளேன்.காசு..காசு...காசு...என்றாகி விட்ட வாழ்க்கைங்க..

LinkWithin

Related Posts with Thumbnails