Friday, December 04, 2015

மீள முடியும் மீண்டுவாருங்கள் மக்களே..


சென்னை வெள்ளம் பெரும் பாதிப்பிற்கு  ச்சொல்லப்படும் ஒரே காரணம் ஆக்கிரமிப்பு . இந்த வெள்ளம் ஆக்கிரமிப்பு பகுதிகளை அடித்து ச்சென்றிருக்கும்
இனிமேலாவது  ஆக்கிரமிப்பு இல்லா வடிக்கால் வசதிகளை சரிப்படுத்தி வைக்குமா இந்த அரசாங்கமும் வருகிற அரசாங்கங்களும்?

தொலைக்காட்சி வாயிலாக ச்சென்னை மக்கள் செல்லும் பொியகுறை மின்சாரம் இல்லாதது. இந்தளவு வெள்ள பாதிப்பில் ஊர் இருக்க  மின்சாரம் துண்டிக்கப்படாமல் என்ன செய்வது என்று தெரியவில்லை. கஷ்டப்பட்டு த்தான் ஆகவேண்டும். அரசாங்கத்தை குறைசொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை.

வெள்ளப்பாதிப்பில் இருந்து மீள்பவர்களும் உண்டு கஷ்டப்படுவார்களும் ஒன்று அவரவர்களின் பொருளாதார சூழலை பொறுத்தது தான்  .

எதுவாயினும் இருக்கின்ற சூழலை அப்படியே ஏற்றுக்கொண்டு மீண்டுவர முயற்சிக்க வேண்டும். இதுதான் எங்கள் ஊர் வெள்ளம் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தப்பாடம்.

சென்னை வெள்ளமாகட்டும் எந்த ஊர் வெள்ளமாகட்டும் அதனுடைய பாதையில் நமக்கு நிறையப்பாடங்களை தந்துவிட்டுதான் சென்றுள்ளது.

எத்தனை நாகரீக வளர்ச்சி என்பது மனிதனுக்கு மட்டுமே இயற்கைக்கு அல்ல என்பதை மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

பொருள் ஆதாரத்தை வைத்துமட்டுமே நாம் வாழ்ந்துவிடலாம் என்றுஇருந்தவ்ர்களுக்கு இன்னொரு கையும்  இருந்தால் தான் நம் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்பதை வெள்ளத்தில் வெளியேற உதவிய கைகள் உணர்த்தியிருக்கும் குறிப்பாக சென்னைவாழ் மக்களுக்கு..

சுகாதார துறை முடுக்கிவிட்டு தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசு பெருமுயற்சியும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் மிகுந்த அவசியம்.

மீள முடியும் மீண்டுவாருங்கள் மக்களே..






2 comments:

ராஜ நடராஜன் said...

மின்சாரம் இல்லாததற்கு கம்பி இணைப்புக்கள் தவிர தரைவழி மின்சார இணைப்புக்ள் பல இடங்களில் பதிக்கப்பட்டுள்ளதால் அரசுத்துறையே மின்சார துண்டிப்பினை செய்திருக்கிறது என தந்தி விவாதத்தில் கேட்டேன்.

ஒரு புறம் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் இன்னொரு புறம் ஏரிகளையெல்லாம் ஆக்கிரமிப்பு என்ற நிலையில் வடிகால் அமைபுக்க்ள் மழை காலத்திற்கும்,குப்பை,மனிதக் கழிவுகளை அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது.இதில் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினை என்னவென்றால் மனிதக் கழிவுகள் அகற்ற என ஒரு ஜாதி முத்திரையை குத்தி வைத்திருக்கிறோம்.

கழிவு அகற்றல் என்பதுவும் ஒரு துறையென தனியார் துறைக்கு வாய்ப்பு பரிசோதனை செய்து பார்க்கலாம்.இங்கே அரசு பணம் மட்டும்தான் தருகிறது. குப்பை அகற்ற மனித வளம்,வாகனம்,இருப்பிடம்,உணவு,சம்பளம் என தனியார் நிறுவனமே பொறுப்பு. கழிவு என வெட்கப்படாமல் டென்மார்க் நிறுவனம் முதற்கொண்டு குறைந்த சம்பளத்தில் பெங்களாதேஷ் பணியாளர்களை காண்ட்ராக்ட் முறையில் சிறப்பாக செய்கிறார்கள். குறைந்த சம்பள பங்களாதேசிகள் வாகன சிக்னல்களில் சில்லறை காசுகள் வாங்கியும்,மேலும் பகுதி நேர வேலைகள் செய்தும் ஊதிய சமநிலை ஓரளவுக்கு முயற்சி செய்கிறார்கள்.

கட்டிட தொழிலில் இந்தியர்கள்,எகிப்தியர்களின் பங்கு முக்கியமானது.

http://thavaru.blogspot.com/ said...

தமிழகத்தின் தலையெழுத்து திராவிடகட்சிகளின் கைக்களுக்குள் தான் இதுவரையில் யாரை நாம் கேட்பது இத்தகைய வளர்ச்சி திட்டங்களைப்பற்றி ராஜநட..

LinkWithin

Related Posts with Thumbnails