Thursday, December 31, 2015

கப்பலுக்கு போன மச்சான்

நண்பரை   த்தொடர்புகொள்ள கைப்பேசியில் அழைத்தேன் அவர் எடுக்க நேரமாகியது பாடல் ஆரம்பமானது.

கப்பலுக்கு ப்போன மச்சான்
கன்னுரெண்டும் ஆச மச்சான்
எப்பதான் வருவிங்க எதிர்பார்க்கிறேன்.

நாலுவரிகளில் முடிந்து திரும்பவும் ஒலித்தது தொடர்பு துண்டித்து ப்போனது ஆனால் பாடல் மட்டும் மனதில் ஒலித்தபடியே இருக்கஅறியும் ஆவலில் இணையதேடலில் வந்துவிழுந்த காணொளி  திரும்பத் திரும்ப பார்த்தாலும் அலுக்கவில்லை .

காசுக்கான ஓட்டத்தில் சொந்தபந்தங்களை விட்டுகட்டிய மனைவியை விட்டு தூரத்தில் பணிபுரியும் யாவருக்கும் பொருந்தும் இப்பாடல்.


நாகூர் சலீம் இயற்றிய இப்பாடல்  எப்பொழுதும் கேட்கக்கூடிய எவர்கிரீன் பாடல்தான்.


Tuesday, December 29, 2015

இந்தோனிசியா கசையடி தண்டனை-புகைப்படசெய்தி

இந்தோனிசியா திருமணமாகாத ஆண் பெண் பல்கலைகழக மாணவர்கள் இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் நின்றததற்காக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட ஆண்களுக்கும்  முஸ்லீம் மத ஷரியா சட்டப்படி கசையடி தண்டனை மக்கள் முன்னே வழங்கப்பட்டது  .

தண்டனை வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.




















Monday, December 28, 2015

ஐஎஸ் ஐஎஸ் அமைப்பிடமிருந்து ராம்டி நகரை மீட்டெடுத்த ஈராக்கிய படைகள்- புகைப்பட செய்தி

ஈராக் கடந்த மே மாதம் இழந்த ராம்டி நகரை அமெரிக்க  வான்வெளி தாக்குதல் உதவியுடன்  ஈராக்கிய படை மீட்டுள்ளது.

நகரின் கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படும் புகைப்படங்கள்  கீழே...
















Saturday, December 26, 2015

ஒட்டகசிவிங்கி டைவ்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் டிவியாக்ஸ்  ஒன்றரைவருட உழைப்பில் உருவான இந்த அனிமேசன் படம் எப்படி உள்ளது என்று நீங்களும் பாருங்களேன்.


Friday, December 25, 2015

பொன்வண்டு





இரண்டுநாட்கள் முன்பு நடந்துசெல்லும் கோவில்பாதையில் எந்த அசைவும் இல்லாதுமல்லாந்துபடியே கிடந்தது அந்தவண்டு.

பெரியவண்டுகள் மல்லாந்துவிட்டால் திரும்பவும் தன்உடல் திருப்பி நேராய் வருவது மிககடினம். நிறையவண்டுகளின் உயிர்போய்விடும்.

திருப்பினேன் ...வியந்துபோனேன்.

பார்த்து பலவருடங்கள் ஆகியதால் வியப்புமேலிட சிலநிமிடங்கள் பால்யகால நினைவுகளில் உள்ளிழுக்கப்பட்டேன்.

வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்க..இருக்கும் கொல்லைகளில் இலந்தைமரம் கட்டாயம் இருக்கும்.

இலந்தைபழ சேகரிப்பில் நண்பர்களுடன் அடித்த கொட்டம் ஞாபகத்துக்கு வந்தது.

விழும் பழங்களை தவிர க்கல் அடித்து ப்பொறுக்கும் பழங்கள் அதிகம்.

கல் எடுத்து க்கிளை தேடுகையில் இலைதின்று அமர்ந்திருக்கும் இந்தபெரியவண்டு. கிளை நோக்கி க்கல் பாயும்  பறக்க சந்தர்ப்பம் கிடைக்காது கீழேவிழும்.

நீ முந்தி நான் முந்தியாய் சிறகுகள் விரியாது எங்களில் ஒருவன் விரல்களுக்கிடையே சிறைப்பட்டு போய்விடும்.

இலந்தை பழம் பின்னுக்கு த்தள்ளப்பட்டு வண்டு  விளையாட்டு பொருளாகிவிடும்.

நிமிடங்கள் கரைந்தும்

அசைத்து க்கொண்டிருந்தேன் அசைவு தெரியவில்லை.

இறந்து போயிருந்தாலும் என்னுள் பறந்தது...திரும்பவும் பறந்து மரக்கிளைகளில் அமர்ந்தது.

உயிரோடு இந்த வண்டை நான் படம் பிடிக்க அலையவேண்டும் அதுவரை என் ஆவணக்காப்பகத்தின் பிரதிநிதியாய் இருக்கட்டுமே என்று ஸ்மார்ட்போனில் படம் பிடித்தேன்.




Thursday, December 24, 2015

ஒரு நிமிடம் தேனீ குஞ்சியின் முதல் 21 நாட்கள்

தேனீ முட்டையிலிருந்து குஞ்சு வரை முதல் 21 நாட்களின் அதனுடைய வாழ்க்கைமுறையை ச்சிறப்பாக புரிந்துகொள்ள ஆனந்த் வர்மா என்ற புகைப்பட கலைஞா் அவருடைய குழுவும் இணைந்து  ஒரு நிமிட காணொளியை உருவாக்கியுள்ளார்கள்.

காணொளி உங்களுக்காக...




அவரின்  பேச்சு TED TALKS-ல்


Wednesday, December 23, 2015

சீனத் தத்துவ ஞாநி லாவோ ட்சு வார்தைகள்



இந்த உலகத்தில் கடினமான விசயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன.

இந்த உலகத்தில் பெரிய விசயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன.

ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது.

ஒன்பது மாடிக் கோபுரம்
சிறிய மண் குவியலிலிருந்து எழும்புகிறது.

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது.

எனவே  பெரிய விசயங்களை
ஞாநி  ஒருபோதும் செய்யமுயல்வதில்லை

அதனாலேயே,  பெரிய விசயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது.

Tuesday, December 22, 2015

நாட்குறிப்பு கவிதை 22.12.15


அறிவுறத்தலில்
தொடங்கிய நாள்
ரூபாய் ஆயிரம்
தவறவிட்டதில்
தொடர்ந்தது
வாடிய முகம்
எண்ணங்கள்
தாறுமாறாய்
மதியம் வரை
அல்லாடிய மனது
தவறுகள்
இயல்புதான்-பேச்சு
ஆயிரம்
போய்விட்டதே..
மனதின்
எண்ணங்கள்
அடங்காத நாள்.

நிலமும் இயற்கையும்- புகைப்படத்தொகுப்பு

நேற்றுமாலை வயலுக்கு சென்றேன் . சூரிய பகவான் தன்னை உள்ளிழுத்து கொண்டிருந்தார்.

அப்பொழுது ஸ்மாா்ட்போனில் சுட்டது.






LinkWithin

Related Posts with Thumbnails