Friday, January 01, 2016

இதுதான் புத்தாண்டு கொண்டாட்டமாமே..?

பேக்கரி கடைகள் நிரம்பி வழிந்தது. ஒரு கிலோ இரு கிலோ கேக்குகள் தீர்ந்துபோயின.  உட்காரும் வசதிக்குத் தக்கப்படி மூவரோ நால்வரோ இருசக்கரவாகனங்கள் பறந்தப்படியே இருந்தது.

டாஸ்மாக் கடைகள் நிரம்பிவழிய ப்புல்லும் ஆப்பும் பீரும்  விற்பனை படுஜோர்.
எப்பொழுதாவது குடிப்பவர்கள்  குடித்து க்கொண்டாடும் புதுவருடநாள். மப்பில் அரங்கேறும் சபதங்களும் சண்டைகளும்  வேடிக்கைகளும் உட்கார்ந்து பார்க்கும் இனியநாள்.

முச்சந்தி நாற்சந்தி  தெருமுடுக்கு  தெருவோரம்  வாங்கிய கேக்குகள் பெட்டி பிரிக்கப்பட்டு  கத்தியுடன் தயாராக வெட்ட வைக்கப்படும்  கட்டிவைக்கப்பட்ட வெடிச்சரங்கள் வெடிக்க க்காத்திருக்கும்.

நேரம் நெருங்கும்
11.58
11.59
12.00
12.01
கோரஸாய்  புதுவருடவாழ்த்துகள் சொல்லி வெடிகள் வெடிக்கப்படும். தூங்குபவர்கள் தொலைந்தார்கள்.

என்னுடைய சூழலில்  சுற்றியுள்ளவர்களின் புத்தாண்டு வருகை இது.

டெய்லி மெயில் காட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் இது.





3 comments:

ராஜ நடராஜன் said...

ஹலால் புத்தாண்டு கொண்டாடுபவனுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ங்குது

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்படியே வேகநரியும்,நந்தவனமும் இந்தப் பக்கம் வந்தா சொல்லிடுங்க.

வேகநரி said...

ராஜநட, உங்க புத்தாண்டு வாழ்த்து தவறுவின் இந்தோனிசியா பதிவிலேயே கிடைச்சுது. நன்றி.
நானும் உங்களுக்கு, தவறுக்கு, சகோ நந்தவனத்தானுக்கு அங்கேயே வாழ்த்து சொல்லிவிட்டேன்.
நீங்க அங்கே சொன்னது, இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடுவது :)
உடனே வைகோ அரசியலில் இருந்து முழுமையான ஓய்வு எடுத்து கொள்ளுவார்.
தமிழக அரசியல் கட்சிகளுக்கும் -இப்போது தமிழக காங்கிரஸ்சும் ஈழம் என்று சொல்ல தொடங்கிவிட்டது- ஈழம் என்று அடித்து விடுவற்குபதிலாக வேறு எதாவது தேட வேண்டும்,அது ஆக்கபூர்வமானதாகவும் இருக்கலாம்.

http://thavaru.blogspot.com/ said...

வாங்க ராஜநட...இணையம் இருநாட்களாய் இணைப்பு கிடைக்கவி்ல்லை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கு வேகநரி மற்றும் நந்தவனத்தான் அவர்கட்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails