Tuesday, January 19, 2016

செவ்வாயும் வெள்ளியும்

பசி உணர்வுகளை அலைக்கழித்தது. மதியம் 2.30  பறக்கும் ஈக்களாய் பறந்து கொண்டிருந்த இருசக்கரவாகனங்களுக்கு மத்தியில் ஓடியது  இந்த இருசக்கரமும்.

ஒவ்வொரு இடமாய் தவிர்த்து  கடைசியில் நின்றது சரஸ்வதி கபே.

பசியாய்  போய் இடம் தேடி உட்கார்ந்தவனிடம்  சாம்பார் சாதம் மட்டுமே கிடைக்கும்  என்று சொல்லப்பட...

பசி தீர்ந்தால் போதும் ...

ஒரு சாம்பார் சாதம்...

சார்..போண்டா...

முகம் பார்த்த சர்வரிடம் ..ம்ம் ...சரி...

சாம்பார் சாதமும் போண்டாவும்  பசிக்கு காலியாக மற்றவர் பேச்சுக்கு காது கொடுக்கும்  உணர்வு வர..

சர்வருக்கு டிப்ஸ் கொடுக்காமல் சென்றவரை பற்றிய பேச்சு அது.

ஏம்பா..இன்னிக்கு செவ்வா..அதான் சில்லரை கொடுக்காம வாங்கிட்டு போராரு...

 நம்ம வீட்டுல போயி பாரு செவ்வா..வெள்ளி... ஒன்னும் கொடுக்கமாட்டாக..
அவசரமன்னு நகையை கேட்டுப்பாரு ...

இன்னிக்கு செவ்வா..வெள்ளில போயி..

அதே நீ குடு ஒன்னும் சொல்லாம வாங்கிப்பாங்க...அப்ப எங்க போச்சு செவ்வாய்...வெள்ளி...

என்னமோ..செவ்வா...வெள்ளி...கிழமங்கிறது போயி..லெட்சுமி வர்ற நாளும்...போற நாளும் ஆயிடுச்சு....

அட..நீ வேறப்பா..நம்ம ஊரு சவரக்கடைக்கு வாரவிடுமுறையே செவ்வா தாம்பா..

ஒரு பய சேவிங் பண்ண முடி வெட்ட வரமாட்டான் அதான் செவ்வா வாரவிடுமுறை.

அப்படியே நீண்ட விவாதம் நடந்து கடை மாலை டிபனுக்கு தயாராகி க்கொண்டிருந்தது.

யப்பா..பூரி...இடியாப்பம் ரெடி..உள்ளுக்குள்ளிருந்து குரல் கேட்டது.




No comments:

LinkWithin

Related Posts with Thumbnails