Tuesday, February 02, 2016

அறுவடை அனுபவம்

கடுமையான சத்தத்துடன் நெற்கதிர்கள்  சாய்ந்து கிடந்த வயலில் இறங்கியது  அறுவடை இயந்திரம்.   நெற்கதிர்களை தூக்கி  அறுத்து உள்ளே வாங்கிக் கொள்ள மேல் உள்ள பெட்டியில் நெற்மணிகள் கொட்ட ஆரம்பிக்க வைக்கோல் சக்கையாக ஓரமாய்  விழ ஆரம்பித்தது.





ஒன்றிரண்டு நெற்கதிர்கள் ஒதுங்கின  அவ்வாறு ஒதுங்கிய நெற்கதிர்களை அறுத்தெடுக்க போட்டி போட்டு ஓடிய சிறுவர்கள் சிறுமியர்கள். நெற்கதிர்களை கசக்கி கிடைக்கும் நெற்மணிகளை கிலோ கணக்கில் கொடுத்து காசாக்கி தின்பண்டம் வாங்கி திங்கும்  ஆவலில்  அறுவடை முடிந்த வயல்வெளிகள் ஓடி ஓடி நெற்கதிர்களை சேகரிக்க நம்மைத்தான் தாக்க வருகிறார்களோ என்று பயந்து ஓடிய மாடுகள்.

அறுவடை இயந்திரத்தின் பின்புறம் விழும் நெற்மணிகளுக்காக  பறந்து பறந்து அமர்ந்த நார்ந்த குருவிகள் மற்றும் நீண்டவால் கருப்பு குருவிகள்  ஒரு சேர கூட்டம் கூட்டமாய்  பறப்பதும் அமர்வதுமாய்   வயல்வெளியை அழகை க்கூட்டியது.

அறுவடை  இயந்திரத்தின் பெட்டியை பார்த்து க்கொண்டு நின்ற வயல்காரர். பட்ட கஷ்டத்திற்கு கிடைக்கும் பலனை எதிர்பார்த்து  பெட்டி எப்பொழுது நிரம்பும் எத்துணை பெட்டி வரும் மனகணக்கில் கையை கட்டியபடியே வரப்பில் நின்று கொண்டிருக்க வேலையாள் முகமலர்ச்சியாய் பேசிக்கொண்டிருந்தார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails