Thursday, February 25, 2016

காலை உணவும் தொட்டுக்கையும்

அட..என்னப்பா இது சக்கரபொங்கலா..வயிறு நிறையச் சாப்பிடமுடியாதே தெவட்டுமே..


என்ற அங்கலாய்ப்புடன் தொடங்கிய காலை உணவு.



ருசியாய் பாிமாறப்பட்ட சக்கரைப்பொங்கல்  சாப்பிடும்பொழுதே தெவிட்டியது.

கொத்தமல்லி துவையல் தொட்டுகிட்டு சாப்பிடுங்க தெவிட்டாது அன்பான வேண்டுகோளினால் முதல் முறையாகத் துவையலை தொட்டு க்கொண்டு சாப்பிட மீதமிருந்த சக்கரை பொங்கலும் உள்ளேபோனது.

அட..உன் யோசனை  நல்ல யோசனையாத்தான் இருக்கே... பாராட்டினேன்.

நீங்க வேற ..இன்னும் சில வீட்டுல கூட்டு இல்லாம சக்கரை பொங்கலே கிடையாதுங்க..

அப்படியா..

சாப்பாடு எவ்வளவோ முக்கியமோ அதேமுக்கியம் தொட்டுக்கைக்கு உண்டு.


நடுந்தர குடும்பம் எங்கள் வீடுகளில் கோடை ஆரம்பித்துவிட்டாலே பழைய சோறு தான் காலை உணவு அதற்கு தொட்டுக்கை சின்ன வெங்காயம் வறுத்த மோர்மிளகாய் கருவட துவையல் மிளகாய் துவையல் அச்சு வெல்லம் பாதி வருத்த கடலை என தினம் ஒன்றாய் பட்டியல் நீளும்.


வந்த தொட்டுக்கையே ஒரு நாள் விட்டு மறுநாளும் வந்தால் வம்பு நிச்சயம்.


குளிர்காலங்களில் காலை சாப்பாடு பெரும்பாலும்இட்லி தோசை   அவ்வப்பொழுது சப்பாத்தி பூரி சுடுசாதம்
இட்லி தோசை தொட்டுக்கை என்றாலே மிளகாய் துவையல்  தேங்காய் சட்னி  நல்லெண்ணெய் ஊற்றிய இட்லி ப்பொடி அரிதாக கடப்பா என்கிற சாம்பார் வெரைட்டி.

இப்படியாக  மதிய சாப்பாடு தொட்டுக்கை பற்றி எழுத நினைக்கிறேன் பார்க்கலாம்.


4 comments:

Nagendra Bharathi said...

அருமை

Ragavachari B said...

"கொத்தமல்லி துவையல் தொட்டுகிட்டு சாப்பிடுங்க தெவிட்டாது" சர்க்கரை பொங்கல் சாப்பிடறது ரொம்ப பிடிக்கும், அதே வேளை சீக்கிரம் தெகட்டிடும், அடுத்த முறை சாப்பிடும் போது நீங்க சொன்னதை முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி.

http://thavaru.blogspot.com/ said...

வாங்க ..பாரதி...நன்றி

http://thavaru.blogspot.com/ said...

அட..வாங்க நண்பரே நலமா...முயற்சி செய்யுங்க!!

LinkWithin

Related Posts with Thumbnails