Tuesday, February 09, 2016

புதிய பயணமும் சிறிய பதைபதைப்பும்.

வேற்றுமொழி வழக்கம் உள்ள புதுஇடத்திற்கான முதல்பயணம் சிறிது பதைபதைப்பு உருவாக்கியது.

பயணம் பல வினாக்களை மனதில் உருவாக்கிப்படியே இருக்க இப்பொழுது இருக்கும் சமுதாய சூழலில் பெண்களுடனான பயணம் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

எப்படி ச்செல்வது?

பெரிய நகரம் சென்று அங்கிருந்து சின்ன ஊர்களுக்கு எப்படி செல்வது?

எங்குத் தங்குவது ?

நமக்கு த்தெரிந்த நபர்கள் யாரும் இருக்கின்றார்களா?

சாப்பாடு எப்படி இருக்கும்?

அங்குள்ள மனிதர்கள் அவர்களின் மொழி பழக்கவழக்கங்கள் பற்றிய மனதில் ஏற்படும் வினாக்கள் அதைப்பற்றிய விவர தேடுகையில் கிடைத்த விபரங்கள் அதைப்பற்றிய குழப்பங்கள் எல்லாம் சேர்த்து  பயணத்தைச் சுவாரசியம் ஆக்கியது.

பொதுவாக புது இடங்களுக்கு ச்செல்கையில் கடைப்பிடிக்கும் வழக்கங்கள் தெரியாதது கூடப் பதைபதைப்புக்கு காரணமாக இருக்கலாம்.

என்ன என்ன தேவை?  என்று சென்றவர்களிடம் விசாரித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி உடை மற்றும்  தேவைப்படும் பொருட்கள் சேகரித்து பயணத்திற்கு த்தயார்செய்தல் புதிய அனுபவம்.

விவர சேகரிக்கையில் அவர் அவர்களின் பார்வைக்கு தகுந்தமாதிரி அந்த இடங்களைப் பற்றிய பேச்சுகளை  , கிடைத்த இணைய த்தகவல்களுடன்  ஒப்பீடு செய்து ஒரு முன்முடிவுக்கு வருகையில் பயணநாள் வந்துவிட்டது.

பயணமும் ஆரம்பமாகியது புதியஅனுபங்களை நோக்கி...


4 comments:

வேகநரி said...

பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். படங்களுடன் பயண பதிவை தாருங்கள்.

நிஷா said...

பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.

http://thavaru.blogspot.com/ said...

வாங்க வேகநரி...பயணம் நல்லபடியாக முடிந்தது. நன்றிங்க..

http://thavaru.blogspot.com/ said...

வாழ்த்துகளுக்கு நன்றிங்க நிஷா.

LinkWithin

Related Posts with Thumbnails