Saturday, January 30, 2016

தினம் ஒரு வீரமொழி - சுவாமி விவேகானந்தா்


நான் உங்கள் அனைவரையும் இதயபூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்.
தேவி பேராற்றல் வடிவில் உங்கள் நெஞ்சில் எழுந்தருள்வாளாக,
பயமின்மையின் இருப்பிடம் அவள், உங்களைப் பயமில்லாதவர்கள் ஆக்குவாளாக..

Friday, January 29, 2016

நான்கு நாட்களை திரும்பிப்பார்கையில்...

மாலை வெயில் வயலில் விளைந்த பொன்நிறகதிர்களின் வழியே ஊடுருவியது மெல்லிய வசந்தகாற்றின் தாலாட்டில்  நெற்மணிகதிர்கள்  தலையாட்டல் மகிழ்ச்சியை க் கொடுத்தது.

அடுத்த வாரத்தில் அறுவடைக்குத் தயாராக நின்ற நெற்கதிர்கள் நிலையாமை அழகை க்கூட்டியது .

மஞ்சள் நிறத்தில் ரோட்டின் ஓரத்தில் சிதறிக்கிடந்த காய்கறி பிரியாணி  நாய்கள் சீண்டவில்லை பார்த்த காக்கை கூவி அழைத்தது பத்து காக்கை பறந்து வந்து  கரைந்தபடியே கொத்தி தின்ற அழகு  மனதை சந்தோசப்படுத்தியது.

எதிர்பாரா  வேலை விடுமுறை  ரொம்பநாள் நினைவில் நின்ற மாலைநேர ஏரி கரையோர நடை  இரண்டு நாட்களுக்கு முன் நிறைவேறியது. ஒரு பக்கம் மறையும் மாலை சூரியன் மறுபக்கம்  பரந்த தண்ணீர் பரப்பு அனுபவிக்க சுகம்.

காசை ச்சேகரித்து வீடு கட்டலாம் என்று சொல்ல கையில் வைத்துக்கொண்டு தொடங்க முடியாது தொடங்கு பார்த்துக்கொள்ளலாம்  என்று சுற்றமும் நட்பும் கொடுத்த தையரித்தில் போடப்பட்ட  பூமி பூசை ஒரு பக்கம் ஆழ்ந்த  சிந்தனைகளை உண்டுபண்ணினாலும் இன்னொரு பக்கம் செய்து விட  வேண்டிய கட்டாயத்தையும் உணர்த்த க்காலத்தின் கையில் வீடு.

மரங்களின் இலைகள் கொட்ட ஆரம்பிக்க புதிய இலைகளின் வரவிற்காக காத்துகிடக்கும் நெஞ்சம்.

நான்கு நாட்களாய் திரும்பி பார்க்கையில் எழுத த்தோன்றியது இவைதான்.
மாலை நேர நடக்கையில்  ஏரிக்கரையோரம் சுட்டது.





Tuesday, January 19, 2016

செவ்வாயும் வெள்ளியும்

பசி உணர்வுகளை அலைக்கழித்தது. மதியம் 2.30  பறக்கும் ஈக்களாய் பறந்து கொண்டிருந்த இருசக்கரவாகனங்களுக்கு மத்தியில் ஓடியது  இந்த இருசக்கரமும்.

ஒவ்வொரு இடமாய் தவிர்த்து  கடைசியில் நின்றது சரஸ்வதி கபே.

பசியாய்  போய் இடம் தேடி உட்கார்ந்தவனிடம்  சாம்பார் சாதம் மட்டுமே கிடைக்கும்  என்று சொல்லப்பட...

பசி தீர்ந்தால் போதும் ...

ஒரு சாம்பார் சாதம்...

சார்..போண்டா...

முகம் பார்த்த சர்வரிடம் ..ம்ம் ...சரி...

சாம்பார் சாதமும் போண்டாவும்  பசிக்கு காலியாக மற்றவர் பேச்சுக்கு காது கொடுக்கும்  உணர்வு வர..

சர்வருக்கு டிப்ஸ் கொடுக்காமல் சென்றவரை பற்றிய பேச்சு அது.

ஏம்பா..இன்னிக்கு செவ்வா..அதான் சில்லரை கொடுக்காம வாங்கிட்டு போராரு...

 நம்ம வீட்டுல போயி பாரு செவ்வா..வெள்ளி... ஒன்னும் கொடுக்கமாட்டாக..
அவசரமன்னு நகையை கேட்டுப்பாரு ...

இன்னிக்கு செவ்வா..வெள்ளில போயி..

அதே நீ குடு ஒன்னும் சொல்லாம வாங்கிப்பாங்க...அப்ப எங்க போச்சு செவ்வாய்...வெள்ளி...

என்னமோ..செவ்வா...வெள்ளி...கிழமங்கிறது போயி..லெட்சுமி வர்ற நாளும்...போற நாளும் ஆயிடுச்சு....

அட..நீ வேறப்பா..நம்ம ஊரு சவரக்கடைக்கு வாரவிடுமுறையே செவ்வா தாம்பா..

ஒரு பய சேவிங் பண்ண முடி வெட்ட வரமாட்டான் அதான் செவ்வா வாரவிடுமுறை.

அப்படியே நீண்ட விவாதம் நடந்து கடை மாலை டிபனுக்கு தயாராகி க்கொண்டிருந்தது.

யப்பா..பூரி...இடியாப்பம் ரெடி..உள்ளுக்குள்ளிருந்து குரல் கேட்டது.




Monday, January 18, 2016

புகைப்படதொகுப்பு

தஞ்சை குழுந்தையேசு கோவில்

வாரச்சந்தை

எழவு அறிவிப்பு

சுண்ணாம்பு நீரில் குவளை மிதத்தல்

சூரியன் மறைவு

எங்கவீட்டு கோலம்-1

எங்கவீட்டுகோலம்-2

Thursday, January 14, 2016

ஒரு புகைப்படமும் இருகருத்துகளும்


இறக்கும் தருவாயில் உள்ள பெண்கங்காருவை ஆண்கங்காரு தொட்டில் போல் தன்னுடையகரங்களால் தாங்கி ப்பிடிக்கும் நிகழ்வாக ஒரு கருத்தை புகைப்படம் முன்வைக்கிறது.

ஆராய்ச்சிளார்கள் ஆண்கங்காரு உறவுவைத்து கொள்ளுவதற்காக த்தான் பெண்கங்காருவை எழுப்புவதற்கான முயற்சி என மற்றொரு கருத்தை முன்வைக்கிறார்கள்.





Wednesday, January 13, 2016

நாளையும் தொடரும் இந்தப் பரபரப்பு



பொங்கல் பண்டிகையின்
பரபரப்பு
கடைத்தெருவில்

குருடர்
பிச்சையெடுக்க
சிறுவன் வழிகாட்டி
மகனா என்று
தெரியவில்லை
காசு விழும்வரை
நிற்காத
டப்பாவின் குலுக்கல்

குச்சி ஊனி
கடந்து செல்லும்
பாட்டி

கரும்பையும்
வாழைத் தாரையும்
சுமந்து செல்லும்
கிராமத்துத்தலைகளும்
தோள்களும்

துணைக்குப் பிள்ளைகள்
பையில் மஞ்சள்கொத்தும்
பலசரக்கும்

இடுப்பில் கைப்பிள்ளை
கையில் ஒருபிள்ளை
இலக்கு நோக்கி
நடக்கும் பெண்மணி

மதிய பள்ளிக்கு
சிரித்தபடியே
சீருடையில் செல்லும்
சிறுவர்கள்

தலைவரிசை
வைக்க கரும்புகட்டு
ஏற்றிசெல்லும்
ஆட்டோகளும்
கார்களும்

நாளையும் தொடரும்

இந்தப் பரபரப்பு....

LinkWithin

Related Posts with Thumbnails