Thursday, April 27, 2017

வசந்தமும் வறட்சியும்

கோடைக்கால காலை பயணங்கள்  5.30 மணிக்கு தொடங்கும் சில நாட்களில் 6 மணிக்கு தொடங்கும் சாலையோர மரங்களின் புதிய பூக்கள் என்னை வரவேற்கும் .

பக்கத்து கிராமங்களி்ன் ஆள் அரவமற்ற சாலைகள் அவ்வப்போது தென்படும் முதிர்ந்த முண்டாசுகள் அர்த்தபுஷ்டியின் கூடிய பார்வையில் யார் இந்த புதுமுகம்? என்ற கேள்விகள் தொக்கி நிற்க சிறிய புன்னகையுடன் கடந்து சென்றுவிடுவேன்.

காலைப்பனி குளிர்ந்த காற்றில் உடம்பும் மனமும் சில்லிட  அதிக சில்லிப்பாய் காற்று வீச சாலையின் இருமங்கிலும் பச்சை விரியும். போர்வெல் பாசன நடவில் குறிப்பிட்ட பகுதியின் பசுமை வறட்சியில் வசந்தம்.

இன்னும் சில கிலோ மீட்டர்கள் எனது இருசக்கர வாகனம் முன்னேறி செல்லும் பல்வேறு பறவைகளின் சத்தம் எப்போதாவது கடந்து பேருந்தின் இரைச்சல் இளைஞர்களின் காலைநேர இருசக்கர விரைவு பயணம் சிறுவர்களின் சைக்கிள் சவாரி எல்லாமே இசைதான்.

குளிர்நத காற்றில் உடலும் உள்ளமும் லேசாகும் வரை இலக்கு தெரியாத பயணமாய்  எனது வாகனம் பயணிக்க இயற்கையில் தான் எனைக் கரைக்கிறேன்.

செல்லிடைப்பேசியின் அழைப்பு மணி ஒலிக்க திரைப்பார்த்தால்  இல்லாள்  எனை அழைக்க ..

இருக்கும் மனநிலைக்கு தகுந்தவாறு  என்குரல் ஒலிக்கும் .

சொல்லும் சொல்லின் பதம் அறிந்து மனநிலையை படிக்கும் என் மனைவியின் குறிப்பறிந்து பயணம் முடியும் .

பயணம் தொடரும்....

3 comments:

வேகநரி said...

பயணம் தொடரட்டும். நீண்ட நாட்களுக்கு பின் காண்கிறேன். நலமா?

http://thavaru.blogspot.com/ said...

வாங்க வேகநாி...நலம்...நலமறிய ஆவல!! :)

வேகநரி said...

:) பதில் கண்டு மகிழ்ச்சி.

LinkWithin

Related Posts with Thumbnails