Friday, May 26, 2017

உச்சிப்பொழுது

தலையில்
சும்மாடு
வட்டமாய்
வரிசையாய்
கருப்புகல்கள்
அடுக்கி வைத்து
சுமந்து செல்லும்
சிறுமி
“ பூரி கல்லு, பூாி கல்லோய்”
கத்தியப்படியே
நடக்கிறாள்.
ஏறி மிதிக்கிறான்
சிறுவன்
நகரவில்லை
திரும்பவும்
மிதிக்கிறான்
நகரும் மிதிவண்டி
சவாாி சந்தோசம்
வேகமாய்
மிதிக்க
வேகமாய்  மிதிவண்டி
பள்ளிவாசல்
மணி ஒலி
வெள்ளி கிழமை
தொழுகைக்கு
முகமதியர்களை
அழைக்கிறது.
மேகமூட்டம்
வீசும் காற்றின்
இரைச்சலின்
இடையே
காதுகளில் கேட்கும்
ஃப்யான்
விரைந்து செல்லும்
வாகனங்கள்
இன்மையால்
ஓய்வெடுக்கும் சாலை
காற்று வீசுகிறது
வெம்மை தணிக்கிறது.

Thursday, May 04, 2017

திருகாணி

ஏங்க....ஏங்க...

துண்டு விரித்து படுத்திருந்தவன் கருவிழிகள் இரண்டும்  மேல் நோக்கி விழித்து அவளின் முகம் பார்த்தது.

அவன் பார்வையின் அா்த்தம் கண்டு...

நான் தேடிக்கிட்டு இருக்கேன் நீங்க துாங்கிட்டு இருக்கீங்க..

என்ன ?

திரு..காணி...

எந்த திருகாணி...

தோட்டு  திருகாணி எங்கேயோ விழுந்திடுச்சி..அதான்...

கைலி சரி செய்து எழுந்து ...என்னடி  சொல்ற..

எங்க படுத்த...எங்க உட்காந்த...

நீங்க போன பிறகு கட்டில படுத்தேன்..மாடி வாசல் கூட்டுனேன்.

ஏற்கனவே  கட்டில் தேடல் மாடி படி தேடல் முடிவடைந்திருந்தது.

உங்க கண்ணுக்கு  மாட்டிடுங்க...

பொறுமையாய்  நடந்து தேடினான் உட்கார்ந்து பார்த்தான் டார்ச் லைட் அடித்து இடுக்குகளில் தேடினான்.

துாசி தெரிந்தது திருகாணி தெரியவில்லை.

தொலைந்த திருகாணியின் இடம் மட்டும்  தொியாமல் கண்களின் தேடல்கள் தொடர்ந்தன.

உச்...

காணாமல் கவலைபட்டாள்.

சாி உடு...படுக்கையிலிருந்து எழும்போது சரி பண்ணிப்பியே...

சரிபண்ணல ...அதான்  தண்டனை..

பரவாயில்ல..இனி கவனமா இருந்துக்க...

மணி பார்த்தான்..வேலைக்கு செல்லும் நேரம் தாண்டி மணி காட்டியது.

ஆகா..நான் கிளம்புறேன்.

கிளம்பினான்.

கவலையுடன் தேடல் தொடர்ந்தாள்.

ஆனால் திருகாணி...??!!

LinkWithin

Related Posts with Thumbnails