Monday, March 29, 2010

உச்சிவெயில்
உச்சிவெயில்

தேவைபட்டபொருள் வாங்க

வெற்றுகாலோடு

கடை நோக்கிய பயணம்

பாதி தூரம் நடக்கையில்

சுட்ட புழுதி

நிழல் கண்டு ஒதுங்கிய

கால்கள் நிழலிலும்

சூடு குறைய நிமிடங்கள்ஆக

போட்டிருந்த தேய்ந்த காலணியை

திருடியவன் வார்த்தைகளால்

வதைப்பட்டான்

பக்கமாய் இருந்து புலம்பல்

கேட்டவனின் சிபாரிசு

புது காலணி வாங்க

நாளைக்கு நூற்றிருபது

சம்பளம் நான்பெற்று

வீட்டில் கொடுக்காவிட்டால்

என்கால்களின் கொதிப்பாய்

எங்களின் பசிகொதிப்பு

நான் என்ன செய்ய?

Sunday, March 28, 2010

பங்குனி உத்திர திருவிழா
ஊரின் ஒதுக்குபுறமாய் உள்ள அந்த முருகன்கோவிலில்

பங்குனி உத்திர திருவிழா நாளைக்கு நடக்கவிருக்கிறது.

ராட்டினகாரர்கள் ஊரினுடைய சிறுவர் ,சிறுமியர்களின் காசை காலிபண்ணி கொண்டிருந்தார்கள்.

கடைவிரிப்பவர்கள் தனக்கான இடத்தைகம்புகள் கட்டி பதிவு செய்தார்கள்.வளையல் விற்பனை வண்டியும் காரம் இனிப்பும் விற்பனைவண்டியும் தன்வருகையை பதிவு செய்தது.

திருவிழா பிரசித்தம் இனிப்பு கலர் பானமும் கலர் பாயசமும் விற்பதற்கான மேசை அதற்குரிய இடத்தில் தன் இருப்பை பதிவுசெய்ய திருவிழாவின் காலையை எதிர்பார்த்து கொண்டிருந்தது.

நான்கு ஆண்கள் ஐந்து பெண்கள் நான்கு சிறுவர்கள் என நறிகுறவர் பட்டாளம் வந்திறங்கியது. வந்தவுடன் தன் உடைமைகளை இறக்கி வைத்து குழுவாய் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.

திறந்தவெளி சமையல் முடிந்தவுடன் வட்டமாய் உட்கார்ந்து ஆடு-புலி ஆட்டம் தொடங்கியது.

ஏ...அஞ்சு கேளு....

தாயக்கட்டை உருட்டியவர் அஞ்சு...அஞ்சு... என சொல்லியவாறு கட்டைகளை தரையில் உருட்ட எல்லோருடைய பார்வையும் கட்டைகளின் மேல்

நான்கு என்று சொல்ல....

அய்யோ..

ஒரு சேர குரல் உயர்ந்து அந்த இடத்தை கலகலப்பாக்கி கொண்டிருக்க சமுதாயத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காக வெள்ளையும் சொல்லையும் அணிந்திருந்தவர்கள் இவர்களின் சந்தோசத்தை பார்த்து பொறமைபட..

வாழ்க்கையின்னா இப்படிதான் இருக்கனும்என அங்கலாயத்து கொண்டார்கள்.

பல்வேறு மனிதர்கள் பல்வேறுவிதமான சிந்தனைகள் என

அந்தஇடம் அல்லகோலப்பட திருவிழாவின் நாயகன் முருகனுக்கு என்ன சிந்தனையோ தெரியவில்லை அவர்மட்டும் மௌனமாய் அமர்ந்திருந்தார்.

கோவிலின் அய்யர் மட்டும் அவ்வப்போது அவருடைய இடத்திற்கு போய்வந்தார்.

Friday, March 26, 2010

இறந்தகாலம்
இறந்து போன

என்னுடைய நினைவுகள்

சுவடுகளைதேடுகிறேன்

வேதனைகளின் விசும்பொலி

சத்தத்தில்

காணாமல்போன மகிழ்ச்சியின்

சிரிப்பு சத்தங்கள்

காலடிதடங்களாய்

இன்பத்தின் நேரங்கள்

கலங்கரைவிளக்கமாய்

துன்பத்தின் நிரந்தரம்

என் பார்வையா…

இது இயற்கையா….

என்னது நீங்களுமா?

ஒரு வாரமாவது நம்மசைடு பைப்ல தண்ணி வந்து பயங்கர கஷ்டமா இருக்கு.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது குடிக்கவாவதுதண்ணி தூக்கி குடுங்க என்று சொல்ல..

திருவாளர் குடத்தை தூக்கிகொண்டு கிணற்றடி நோக்கி நடந்தார். தெருவில் எல்லோருக்கும் ஆச்சர்யம் சில பேர் பார்த்ததுடன் சரி .. சில பேர் கேட்டார்கள்.

என்னது நீங்களுமா?

திருவாளர் ஏன் ? கேள்வியுடன் கிணற்றடி நோக்கி முன்னேறினார். திருவாளர் கிணற்றடி சென்றடைந்தவுடன் அங்கு அய்யராத்தம்மா ஒருவர் தண்ணி தூக்க வந்தார்.

ஏன்டாப்பா உன் ஆத்துகாரி வாரமாட்டாளோ நீ வந்துருக்க

என்று கேட்க ...

அப்போது தான் புரிந்தது திருவாளருக்கு ஆகா ...நம்ம ஏன் ?ஆச்சரியமாக பார்த்தார்கள் கேட்டார்கள் என்று

நினைத்தவாறு ,அது இல்லம்மா ஒருத்தருக்கு ஒருத்தர்

ஒத்தசையா இருந்துக்க வேண்டியது தான் என்று சொன்னவுடன்

ஆமான்டா கல்யாணம் ஆன பிறகு பொண்டாட்டி சொன்னா அப்படின்னு குடம் தூக்கினஇன்னிக்கு ....

இதுக்கு முன்னாடி ஒரு நாளவாது தூக்கினியடா என்று கேட்க..

சுருக்கென்று தைத்தது திருவாளருக்கு..ஆகா கல்யாணத்துக்கு முன்னாடி குடம் தூக்கமா விட்டாச்சே என்று நினைத்தவாறு நிலைமைய சமாளிக்க வேண்டுமே என்றகவலை . நீங்க வேற அப்ப அக்கா , தங்கச்சி இருந்தாங்க அதனால நாம செய்யல இப்ப யாரு இருக்கா அதனாலதான் நாம செய்யிற மாதிரி இருக்கு என்றவாறு நிரம்பிய நீர் குடத்தை தூக்கியவாறு நடையை கட்டினார்.

தனி மனிதவாழ்க்கை திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் எவ்வளவு எடை போடப்படுகிறதே என்ற சிந்தனைக்குள்ளனார் திருவாளர்.

Wednesday, March 24, 2010

அகங்காரம் அழைக்கிறதுஅகங்காரம் அழைக்கிறது

அதனோடு விளையாட…


மாயவலை விரித்துவசீகரித்து

விளையாட்டை விளையாட..


குறைஅறிவு நிறை

பெற்றதாய் புன்னகைக்க

அகங்காரம் அழைக்கிறது


காலதேவைதையின் கையசைப்பில்

கணக்குகள் போட்ட வெற்றியின்

மிதப்பு

அகங்காரம் அழைக்கிறது


வெற்றியின் புன்னகை

தன்னைமறந்து தம்சூழல்

மறந்து

அகங்காரம் அழைக்கிறது


நீ என்பது நீயல்ல என்பதை

உணரும் வரை

அகங்காரம் அழைக்கிறது

அதனோடு விளையாட…


Tuesday, March 23, 2010

சச்சரவுகளில் சகோதரத்துவம்.

முகம் வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. துடைக்காது முகம் கழுத்து வழியாக இறங்கி மார்ப்பு பகுதியை நனைத்தப்படி இருக்க பேசி கொண்டே இருந்தார்.

யாருக்கு மனசு பக்குவம் பத்தல ? என் ஆயோ ட தாலியவித்து படிக்க வச்சேன்.

இந்த பய படிக்கல ..அவன் படிச்சான். ஆன எனக்கு ஒரு பய ஒன்னும் செய்ய மாட்டேங்குறான்.

எலா..ஏந்தரிச்சு வந்தேன் உன்ன அடிச்சு பிச்சுடுவேன் கம்மானாட்டி ஏன்டா ... எலா... கல்லாவில் இருந்தப்படியே இறைந்தான் தம்பி.

அவருதான் குடிச்சுட்டு பேசுறாரு நீங்க பாட்டுக்கு வியாபாரத்த பாருங்க என்றார் நலம் விரும்பி ஒருவர்.

முறைத்து அண்ணைப் பார்த்தப்படியே பேசி கொண்டிருந்தான் தம்பி.

எலே..ஒ........பயலே நான் பாதுகாத்த வைச்ச சொத்து. அதுல உக்காந்துகிட்டு . இன்னிக்கு வந்த காசு டா நாய உனக்கு காசு தான்டா பெருசு வேறென்ன தெரியும் உனக்கு.

போடா..பு...மவனே நான் அப்படிதான் பேசுவேன என்றார் குடிகார அண்ணன்.

ஏன்டா..உன்ன... என்று கல்லாவிலிருந்து வேகமாய் தம்பி அடிக்க எந்தரிக்க அவரை அமுக்கினார்கள் நாலு பேர்.

உடுங்க என்ன திமிறினார் தம்பி.

ஆஹா.. என்று நக்கலாய் தம்பியபாத்து சிரிக்க ஆரம்பித்தார்.

யாருக்கு மனபக்குவம் பத்தாது கம்னாட்டி அங்க உக்காந்திருக்கிறது நீ. நீ தான்டா பொறுக்கனும் ஏன் ம…பயலே..

குடும்ப நண்பர் ஒருவர் வந்தார் வாங்க வண்டில ஏறுங்க..

பார்த்தார் அண்ணன் . அந்த பய என ஆரம்பிக்க..ஏறுங்க என முறைத்தார்.

முறைத்தவுடன் ஏறினார் அண்ணன் எலே.. நான் உன்ன பாக்குறேன்டா வண்டியில் ஏறி நின்று நாக்கு துறுத்தினார்.

வண்டி கிளம்பியது கொஞ்சம் தூரம் போனதும் எதிரில் வரும் வண்டிக்காக வேகம் குறைக்க குதித்து மனம் போன போக்கில் நடந்தார்.

Sunday, March 21, 2010

இலக்குகள் இல்லா நடைபயணம்
என்னை விட்டு என்னில் ஆழம்பார்க்க தொடங்கினேன். எல்லாம் பூச்சாண்டி வேலை தான். எந்த ஒன்றையும் முழுமை அடையாமல் முழுமை அடைந்துவிட்டதாக நினைவுகளால் நிரம்பி மீண்டும் ஓர் முறை திரும்பி பார்க்க அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது ஒன்றும் இல்லை.

என்னதான் அறிந்தோம் என்பதை விடவும் நினைவுகளை நெஞ்சில் நிரப்பி கற்பனை விமானத்தில் ஒலி வேகத்தில் பயணம் செய்து என்னையே நான் ஏமாற்றி கொண்டதுதான் ஹைலைட்.

ஏதோ ஒன்றை நான் அறிந்ததாக நினைத்த கொண்டிருக்கும் வேளையில் நம்மைவிடவும் நன்றாக உணர்ந்தவர்கள் அதிகம் என்பதையும் உணர்ந்தேன். எல்லா விசயங்களிலும் நடந்தது இதுதான்.

என்னுள் அறிவு அடக்கமாய் முட்டாள்தனம் முன்னேறிகொண்டே இருக்க விளைவு வித்தியாசமான மனப்போக்குகள் விபரீதமான எண்ணங்கள் தேவையில்லா ஆவல்கள் எதை விடுவது? எதை விரும்புவது?

இலக்குகள் இல்லா நடைபயணத்தில் ஒவ்வொன்றும் ஆச்சரியமாய் வாழ்வும் அர்த்தமுள்ளதாய் தெரிவதாக ஓர் பாவனை.

பயணங்கள் தொடர்ந்தப்படியே இருக்க இலக்குகள் தான் எங்கே?

Saturday, March 20, 2010

ஒற்றைசிட்டு


சுற்றி திரியும்

சிறிய பட்சிகளோடு

பறந்து திரிய ஆசை

பட்சிகள் பறக்கின்றன

அண்ணாந்து பார்க்க

ஏக்க பெருமூச்சு என்னில்

இயலாமை கொப்பளிக்க

ஒளி குறைந்த கண்களாய்

கால்களின் பலம்

குறைய…

ஒற்றைகல்லில் ஓய்வு

பார்வையில் பட்ட

சுற்றிதிரியும் ஓர்

ஒற்றைசிட்டு

இடுக்கிய கண்களை

அகல விரிக்கிறேன்

அதன் உலகம்

மகிழ்ச்சியாய்

அங்கும் இங்கும்

பறந்து பறந்து

அதனிடத்தில் சோர்வின்

சுவடுகளை தேடுகிறேன்

கவலையின் சாயல்களை

ஆராய்கிறேன்

சோர்வும் அதற்குசுகமாய்

தெரியும் போலும்

கவலையும் அதற்கு ஊக்கமாய்

தெரியும் போலும்

Thursday, March 18, 2010

தாய்..தாயா அவள்?


மூன்று ஆண்பிள்ளைகள் அந்தகுடும்பத்தில் அவர்களை கட்டி நல்லபடியாக வளர்க்கவேண்டிய பொறுப்பு அவர்களுடைய தாயிடத்தில் தான்.

நல்ல நாளில் நல்ல நேரத்தில் சம்பாதிக்க விமானம் ஏறிய கணவர் போனவர் போனவர்தான். வருடங்கள் ஓடியது தகவல் இல்லை .

வளரும் நிலையில் உள்ள பிள்ளைகளின் படிப்பு செலவு குடும்ப நிர்வாகம் என தடுமாற்றம் அடைந்த தாய்.

அதை யும் தாண்டி பிள்ளைகளை நல்லபடியாக நற்குணங்களுடன் வளர்க்க வேண்டும் என நினைத்தவள்.

வயதிற்குரிய அத்தனை குணங்களும் பிள்ளைகளுக்கு வரமால் இல்லை.

வயதிற்கு வந்த தன் பிள்ளைகளை அழைத்தாள். டேய் தம்பியலா.. என் பிள்ளை அங்க நின்னு தப்பு செஞ்சுது இங்க நின்னு தப்பு செஞ்சுது என்று ஊர் சொல்வது எனக்குபிடிக்காது.

உங்களுக்கு என்ன தேவையோ என்னிடம் கேளுங்கள். நான் உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொன்னாள்.

சிகரெட் பிடிக்க ஆசையா என்னிடம கேளுங்கள் …

தண்ணி அடிக்க ஆசையா என்னிடம் கேளுங்கள்….

எது வேண்டுமோ வெளியில் போய் அதை செய்யாமல் வீட்டிற்கு வாருங்கள் உங்களுக்கு தேவை பட்டதை செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல..

பிள்ளைகளுக்கு முழுசுதந்திரம் கொடுத்தாள் அந்த தாய்.

கொடுத்த சுதந்திரத்தை ஒருபொழுதும் தவறாக உபயோகபடுத்தாத பிள்ளைகளாய் இருந்தார்கள்.

வெளியில் அநாயசமாக சுற்றும் பழக்கமும் குறைந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.

விசேடகாலங்களில் அம்மா கையால் கறி வறுத்து வீட்டு தோட்டத்தின் மர நிழலில் மது அருந்துவார்கள். மனம் நோகாமல் அவளும் செய்து தருவாள்.

இன்றைக்கு மூன்று பிள்ளைகளும் சமுதாயத்தில் நல்ல மதிப்போட வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

விளக்கமற எடுத்தேன் பிச்சுபுடுவேன் நாய போயி சம்பாதிச்சு வாடா என்று சத்தம்

தன் மகனை விரட்டி கொண்டிருந்தாள் இன்னொரு தாய்..தாயா அவள்?

Wednesday, March 17, 2010

என் மனம்

மாயம் செய்த

என் மனம்

இரவின் வெளிச்சம்

பழகிய கண்கள்

கயிறா..

பாம்பா..

அசைவு தெரியவில்லை

கயிறு

நினைத்த மனம்

வளைந்து நெளிந்து

பாம்பு

மாறிய மனம்

விவாதங்கள்விரைவாய்

தொட்டுப்பார்

தொடாதே

முன்அறி

அனுபவி

அமைதி இல்லாநிகழ்வாய்

அச்சமாய் என்மனம்

Saturday, March 13, 2010

புகைப்பட தொகுப்பு

பிரித்த சொத்து , பிரியா சொத்துகாலையில் எழுந்தவுடனேயே காலைகடன்களை முடித்த கையோடு வீட்டிற்கு தேவையான காய்கறி வாங்க கடைத்தெரு நோக்கிய பயணம்.

சிந்திப்புகள் காய்கறி பற்றி அல்லாமல் ஒத்துவராத உறவுகள் பற்றியும் சுயவளர்ச்சியின்நிறைகுறைகள் மனதில் அலையாய் வீசிக் கொண்டிருந்தது.

பயணத்தின் இடையே பார்க்கப்பட்ட நண்பர் நல்லது கெட்டது அலசி ஆராய்ந்து கொள்பவர்கள் தான்நாங்கள்.

இன்றைக்கு பிரித்த சொத்து , பிரியா சொத்து பற்றிய பேச்சு வளர்ந்தது.

எங்களுடையப்பார்வையில் தெரிந்தமட்டும் அலசிஆராயப்பட்ட கருத்துகள். முடிவு என்னவோ இந்த மாதிரி அந்த மாதிரி செய்யலாம் என விவாதிக்க , செய்யகூடிய அதிகாரம் படைத்தவர்கள் அங்கேயும் விவாதிக்க அதிகாரம் படைத்தவர்கள் இங்கேயும் என்பது உண்மை.

என்ன செய்ய எப்படி தான் நாம நினைச்சாலும் புடி அங்க இருக்குற வரையும் நாம பத்த நெனைச்சுக்க வேண்டிய தான்.

என்று முடிவு காணப்பட்ட பிரிந்தோம்.

ஓடிய சிந்தனைகள் யாவும் விட்டு விட்டு தொடர்புப்படுத்தி கொண்டிருந்தன.

Tuesday, March 09, 2010

உங்களுக்கு பிடிக்குமா..
மனித சுவாசிப்புகள்

நின்றுதான் போகும்

ஆயுதங்கள் சுவாசிக்க தொடங்கினால்

-விஜய குமாரன்-


நேருவின் படத்தை

பார்த்தவன் கையில்ரோஜா

குத்தி கொள்ளதான் சட்டையில்லை

-ராஜ ராஜன்-


குப்பைதொட்டியில் குழுந்தையின்

அழுகுரல்

தெருநாய் சலித்துகொண்டது

ச்சே..இன்னமொருபங்காளி

-கீதாசரஸ்வதி-


எழுந்திருக்க மனமில்லை

தலையணைக்குள்

உன் ஞாபகங்கள்.

-விஜயகுமார்-

Saturday, March 06, 2010

தப்பு தப்பா

வீட்டுல வைந்திருந்த மீன் குழம்பு நல்லா இருந்திச்சு. சாப்பிட சந்தோசமா இருந்திச்சி. குழம்பு வைத்தவர்களுக்கு ஓர் பாராட்டு.

திட்டு வாங்கவும் அவங்க ரெடியா இருப்பாங்க.

அப்படியும் இப்படியும் இருந்ததாங்க மதிக்கிறாங்க. பாருங்க குழம்பு சரியா வைக்கலேன்னு சொல்லாமவ விட்டுட்டு இன்னொரு நாள் சரியி்ல்ல அப்படின்னு சொன்னா..

அன்னிக்கு உப்பு இல்லாம காரம் இல்லாமஇருந்திச்சு

அன்னிக்கு சொல்லல இப்பமட்டும் குறை சொல்றீங்க என்று பேச்சு வேற..

மூடுக்கு தவுந்த மாதிரி நாம பேசுறதாங்க இது. ஜாலியா இருந்தா தப்பு தப்பா தெரியறதே இல்ல அதே இங்க கொஞ்சம் மூடு அப்செட் ஆயிடுச்சுன்னா உர் மேட்டர் தான்.

அவங்களும்யாரும் பண்ணாத தப்ப பண்ணிட்ட மாதிரி இவங்க வாங்கி வச்ச சேர் ஆயிரத்துல இருந்து அம்பது காசுக்கு வந்துட்ட மாதிரி மூஞ்சு போற போக்கு இருக்கே யப்பா..

பேசுறப்ப நிதானமா இருக்கனும் போலிருக்கு நினைச்சிகிட்டே பேச்ச கொறைச்சா ஏங்க கோவமா ங்கிற பீலிங் வேற ..

எது எப்படியா இருந்தாலும் குடும்பத்துல நிதானம் கொஞ்சம் கஷ்டம் இல்ல நிறைய கஷ்டம் தான் போங்க.

இடை இடையே நித்தியானந்தாவுக்கு திட்டு வேற அந்த சாமியாரு பயல பாத்தீங்கிளா எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க ..

ஒரு படி மேல போயி இந்த சன் டீவி காரன் இருக்கான் பாருங்க அய்யோ போட்டுகிட்டே இருகாங்க அந்த கன்றாவிய...

சன் டீவியாம் ...சன் டீவி..

Friday, March 05, 2010

வாரம் ஆயிரம்

அந்த நாடார் காவல் நிலையத்துக்கு அலையாய் அலைந்து கொண்டிருந்தார். கள் இறக்கி விக்க அனுமதி கேட்டு தான் இந்த அலைதல். கால்கள் நொந்தும் அனுமதி கிடைக்கவில்லை.

கோடை பிறக்கவும் தனது வீட்டை புதுப்பிப்பது அல்லது பிள்ளைகளுக்கு சடங்கு சுத்துவது தான் எண்ணம். அந்த எண்ணம் நிறைவேறதான் காவல் நிலையத்துக்குதினமும் நடந்தார்.

அரசியல் புள்ளிகள் சிலரை வைத்தும் அனுமதி கோரினார்.

எல்லாம் பேசினார்கள் வாரம் ஆயிரம் மாமூல் தனியாக கொடுத்துவிட வேண்டும் என்று நாடாரிடம் பேசப்பட்டது.

கலக்குற தண்ணியோட மாத்தரய போட்டு இன்னும் அஞ்சு லிட்டர் தண்ணி எச்சா ஊத்தினா இவங்க கேக்கற காச குடுத்துபுடலாம் என மனதில் நினைத்தவாறே

“தர்றேங்க” என்றார்.

இந்த கோடையில் ஏதாவது நல்ல செலவு பண்ணிவிடவேண்டும் என்ற திடம் தெரிந்தது.

யோவ் நாடாரே நாங்க அனுமதி கொடுக்கற பத்தி ஒண்ணும் இல்ல எல்லா ஸ்டேசன் அனுமதி கொடுதாங்கன்னு சொன்ன நீ செய்யலாம். இல்லாட்டினா...

அய்யா எப்ப வர்றேங்க...

இந்த பக்கமா வர்றப்ப ஏட்டு அய்யாவ பாத்துட்டு போய்யா..

சரிங்க..

அந்த மதுரவீரன் என்ன நினைச்சிருக்கோ தெரியல என்று நினைத்தாவாறே அவ்விடம் அகன்றநாடாருக்கு கோடைக் காலம் வறட்சியாகவும் தெரிந்தது வளமையாகவும் தெரிந்தது.

Thursday, March 04, 2010

பேசுனது போதும்

பேசுனது போதும் அந்தாளு பொய்யன் தெரிஞ்சு போச்சு..வாங்கப்பா..

அடுத்து ஆக வேண்டிய காரியத்த பாப்போம்…. உண்மைய புரிஞ்சுக்கறது எப்படி முயற்சிப்போம்.

தெரிஞ்சவங்க சொல்லி கொடுங்க சார்.

வேண்டாம் அந்தாளு புராணம்.(நித்தியானந்தா..)

Wednesday, March 03, 2010

நாம்

சுழற்றி அடிக்கும்

சோதனைக்கு

இடையே குடும்ப

நபர்களின்சந்தோசம்

வேதனைகள்

மறந்த மனது

பிள்ளையின் பிடிவாதம்

மனைவியின் சிரிப்பு

உறவுகளின் பகிர்தல்

காசுக்கான அலைதலில்

காணாமல் போன

குடும்ப அமைதி

காலங்கள் குறுகலாய்

பேச பகிர

நேரமில்லாது அலையும்

உயிர்ப்புகளாய் நாம்

Monday, March 01, 2010

செய்திகள் மாறும்.நண்பர் ஒருவர் வைத்திருக்கும் நிறுவனத்திற்கு வெள்ளை அடித்தது பெரிய விசயம். வெள்ளை அடிப்பதில் என்ன பெரிய விசயம் என்கிறீர்களா..

ஏங்க இதுக்கு போய் இத்தன ஆயிரம் செலவு பண்ணிகிட்டு என சொல்லி சொல்லியே பல வருடங்களை இழுத்து பாசி பிடித்த சுவர்கள் .சுவர்களைவெள்ளையாய் பார்த்தவுடன் இந்தவாரத்து சூடான செய்தி அதுவாகி இருந்தது.

செய்தியின் சூடு தணிவதற்குள் மற்றொரு நண்பருக்கு பெண் பார்ந்திருந்தார்கள். இவர்கள் ஜாதகத்தை சரிபார்க்க சில இடங்களில் செய்யலாம் செய்யகூடாது என்று சொல்ல பெண் வீட்டாரிடமிருந்து பையன்ஜாதகத்தை கேட்டு அனுப்ப இவனுடைய பேத்தல் செம ஹாட்.

செட் ஆயிருமாங்க தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கேட்டு கொண்டே இருக்க..

எங்களது நண்பர் குழுவில் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் நண்பர் ஒருவர் அறிவியல் கட்டுரைப் போட்டியில் முதல்இடம்வெற்றி பெற்றது அடுத்த செய்தியாக இருந்தது.

செய்திகள் மாறும்.

LinkWithin

Related Posts with Thumbnails