Monday, February 28, 2011

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா


முகம் மலர்ந்து இருந்தது.

சிரித்தப்படியே  பேசிகொ ண்டிருந்தான்.நேரம் ஆ கியும்
கிளாம்பாது நிற்க..

இவ னது நேரம் தெரிந்த நண்பன்  நீ கிளம்பல.. என்று கேட்க

கட்டிங் போ ட கம்பெனி யாராவது வருவாங்களான்னு பாத்துகிட்டு இருக்கேன் என்றான். 

என்ன விசேசம்... என்னிக்கும் இல்லாத அதிசயமாய்  நீ  வீட்டுல  இருப்பதே தெரியாது நைட் எட்டு மணிக்கு   வீட்டுக்கு ஓடிப்போயிடுவ...

என்ன   நிகழ்ந்தது? இவன் மாற்றம் கண்டு கேள்வி கேட்டான்.

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா   என்று சிரித்தப்படியே  சொன்னான்.

நாலஞ்சு நாளு   அய்யா ப்ரீ...என்றான்.

உன் பொண்டாட்டி ஊருக்கு போ ன துல  உனகென்ன சந்தோசம் அ ப்படின்னு கேட்டா...

அட போங்க சும்மா பொ ழுதுக்கும்  நை...நைன்னுட்டே இருப்பாங்க...

இவரு பொண்டாட்டி போயி அங்க என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியல?

மதியம்  இரண்டு மணி  மேகங்கள் இடையூறு செய்யாத வெயில் சிமென்ட் தரைத்தளம்  முக்காடிட்டு களத்தில் கிடந்த நெல்லை    இருவர் திரட்டி கொ ண்டிருந்தார்கள்.

பாதங்கள் செருப்பு கிடையாது வெயில் சூடு பற்றிய கவலை யெல்லாம் கிடையாது உழைப்பு.

எழுபது வயதிருக்கும்  கூனலாய் உடம்பு   அந்த பெண்மணிக்கு இருகைகளிலும் இரண்டு விளக்கமர்  கூட்டி கொ ண்டே இருந்தது.

வெயிலின் சூடு தெரிந்தாலும் அதைப்பற்றிய   கவலை  இல்லா உழைப்பு என்ன சொ ல்ல...

Thursday, February 24, 2011

கல்யாண காலங்கள்


கல்யாண   காலம் இது. உறவுகள் நண்பர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களில்எதிர் எதிர்பாலின தகுதியுடைவர்கள் சேர்ந்து கொ ள்ளும் விழா.

காசு பார்த்து குடும்பம் பார்த்து மாப்பிள்ளை   பார்த்து பெண்பார்த்து நிச்சயம் செய்து  பெரியோ ர்கள்பேசி முடித்து நல்லநாளில் இணை  ப்பு விழா செய்யும் நாளில் வரவேற்று அழைப்பிதழ் கொ டுத்துவிடுவார்கள்.

சாதரண  மாய் தெரிந்தவர்களுக்கு ஒரு நாளை க்கு  ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் திருமண  ங்கள் நடைபெறும் தகவல் தெரிவித்து குறைந்தபட்சம் மூன்று அழைப்பிதழ்கள் வந்துவிடும்.

முக்கியதுவம் பெறும் அழைப்பிதழ்கள் முதல் இடம்பெறும்.
எனக்கு   நீ வந்தால் உனக்கு நான் வ ருவேன் என்று எழுதப்படாத  ஒப்பந்தித்தின் அடிப்படையில் திருமண  ங்கள் வரவேற்பு என்று செல்லவேண்டும்.

உறவின ர்கள் திருமணம் நண்பர்கள்  திருமணம்  என்றால் கட்டாயமாக இரண்டு நாட்கள் செல்லவேண்டும். வேலை  கருதி போவாது இருந்தால் நாங்களும் உங்க நல்லது கெட்டதுக்கு வரணுமா வேண்டமா என்ற கேள்வியை கேட்டு திண  றடிப்பார்கள்.

தனியொ  ரு வாகனம் என்றால் பிரச்சனை  இல்லை . பேரூந்து பயண  ம் என்றால் நசுங்கலும் கசங்கலுமாய்  தான் செல்லவேண்டும்.  திருமண  த்திற்கு செல்லவேண்டிய காலைவேளை களில் அன்றாடம் செய்யவேண்டிய கடமைகளை   சரியாய் செய்து முடித்து கிள ம்புவதற்கு தனியொ ரு பக்குவம் வேண்டும். இல்லாவிடில் காலை  வேளை களில் ஏற்படும் வார்த்தை வாதங்களை   தவிர்க்க முடியாது.

எது எப்படியாக இருந்தாலும்  நம்கென்று நாலு பேர் வேண்டும் என்ற  எண்ணத்தில் உருவாகும் இத்தகைய  சிரமங்கள் ஒன்றுமே இல்லாது போ ய்விடும். 

Friday, February 18, 2011

வானம் பார்த்தவன்.


ஒரு மாதம் முன்பு வரை  கண்கள் பார்க்கும் எல்லை வரை பசுமை போ ர்த்தியிருந்த வயல்கள் நிறம் மாற த்தொடங்கி அ டர்ந்த பச்சையில் அங்கு அ ங்கு பொ ன்நிறம் கொ டுக்க காலை  மாலை  சூரியகதிர்களின் எதிரொலிப்பில் மெல்லிய காற்று நெற்பயிர்களின் அ சைவு  தினமும் ரசிக்க தக்கதாய் இ.ருந்தது.


பொ ன்நிறமே  கொ ஞ்சம் கொ ஞ்சமாய் தன்னை  வியாபித்து கொள்ள ஏதோ   ஒரு அ றிவிப்பை  விவவசாயிக்கு கொ டுத்தப்படி இருந்தது.

விவசாயி வானம்  பார்த்தான் நீலவானம் தென்படுகையில் நிம்மதியும் கருமேகங்கள் காண்கையில் கவலை யும் சூழ்ந்து கொ ண்டது.

சீக்கரமாய் உன்னை   நீ பொன்நிறமாய் உருமாற்றம் செய்துகொள்ளகூடாதோ ? என்று மனதின் வழி நெற்பயிர்களுடன் பேசினான்.

இவ்வள  வு நாள் பெய்தாய் இப்பொழுது ஏன் பெய்கிறாய்? என்று வானம் பார்த்து கேட்டான்.

நெற்பயிரும் சும்மாயிருந்தது.

வானமும் சும்மாயிருந்தது.

” கைக்கு எட்டியது , வாய்க்கு எட்டாதோ ” என்று மனதுகுள் பேசினான்.


நெற்கதிர்கள் முற்றி வெயிலில் காய்ந்தது காலை  மௌ   னமும்  மாலை யில் சலசலத்து  காற்றோ டு பேசியதுபார்க்க மகிழ்வெய்தினான் விவசாயி.

நிமிடங்களில் மாறும் நிலைமையாய் மறுநாள் பெய்த மழை நெடுசாண்  கிடையாய் நனை ந்த நெற்கதிர்கள் காற்று இல்லை சத்தம்   இல்லை    நீண்டிருந்த அமைதியில்   இடையே பறவை களின் சத்தம்.

விவசாயியை  வெறுமை  சூழ்திருந்தது. 

Wednesday, February 16, 2011

தவிப்புதவிப்புகள்
தொ டர்கதை
கிடைக்கும் வரை
இல்லாத பொ றுமை
நிமிடங்கள்
மணிகளாகி
அச்சமூட்ட
ஆ ராய்ந்த
முன்முடிவுகள்
அறியும் ஆவல்
மன தின் வேகம்
முகத்தில் தெரிய
செயலின் வேகம்
”அவசரம்”  என்று
பிரகடனம் செய்ய
பிரசவிக்காத
முடிவுகள்
பிரசவிக்கும் வரை
தவிப்புகள்
தொ டர்கதை.

Monday, February 14, 2011

வெற்றி கோஷம் காதலர் தின திருமணம்.ஊ ர் அறிய    திருமணம் நடந்ததில் காதலர்களுக்கு மகா சந்தோசம். அ தைவிடவும் காதலர் தினத்தில் நடந்தது இரட்டை சந்தோ சத்தை  கொ டுத்தது.

தன்னோ  டு படித்தவர்களுக்கு மத்தியில்  பெருமையாய் நின்றாள் மண  ப்பெண்.

தன்னோ டு நண்பர்களுக்கு காலரை தூக்கிவிட்டான்   மண  வாளன்.

இவர்களோ  டு படித்தவர்களுக்கு புதுஉத்வேகத்தை கொடுத்தது இந்திருமண  ம்.

அவனுடைய நண்பர்கள் ” லவ் IS  வேல்யூ COIN “  என்று பேனர்கட்டினார்கள்.

பெண் கொ டுப்பவர்கள் நூறு தடவை  மாப்பிள்ளை யை  பற்றி யோ சித்து மாப்பிள்ளை  குடும்பத்தாரின் வழிமுறையை ப் பார்த்து பெண் கொடுப்பார்கள்.

நம் குடும்பத்தில் இருந்தமாதிரியே   அங்குபோ ய் இந்தபெண் வாழ்ந்து விடுமா ?  நம்ம வீடு மாதிரி நம் பெண்ணை   அனுசரிப்பார்களா ?   போன்ற  பல வினாக்களுக்கு மத்தியில்  பல பேரிடம் விசாரித்து எடுக்கப்படும் முடிவு.

பெண்ணாய் மாப்பிள்ளை   தேடியதில் அவர்களுக்கு சந்தேகம்  விபரமாய் பேசினாலே புதுமைபெண்ணின் போராட்டமாய் பெற்றோ ர்களை   கைவிட்டு காதலனோ  டு சென்றுவிடுவது அ ப்படியும் இல்லையா என க்கு கல்யாணமே வேண்டாம் என்ற தமிழ்திரைப்பட நடவடிக்கைகள்.

இருபது வருடங்கள் நம்மோ டு வளர்ந்த பெண்  என்று நிறையவே பேசினார்கள். இளமை  எல்லாவற்றையும் தூக்கி எறிந்து தான் தேர்வு செய்தவன் சரியென்றது.

 பெற்றோ ர்கள் அ வ்வள வாக திருப்தி அ டையாதுபோக காதலர்தினத்தில் திருமண  ம் நடந்தேறியது.

பெண்ணிற்கு  திருப்தியான வாழ்க்கையா என்பதை  எதிர்காலங்கள் தான் சொ ல்லவேண்டும்.

Wednesday, February 09, 2011

பாவம் தி.மு.க. வா...அல்லது பொது மக்களா...


தேர்தல் நெருங்கிட்டே வருது இலவச டி.வி. குடிசைகளை  கோபுரங்களாய் மாற்றும் திட்டம் என  பல திட்டங்களை  சொல்லி சொல்லியே   திருவாளர் பொதுமக்கள் வாக்குகளை  பிடுங்கும் திட்டம் ஆ ளும் தி.மு.க.  அ ரசு கையில் வைத்து கொண்டிருந்த வேளை யில்…

தி.மு.க. தலைமைக்கு  விழுந்த பெரிய இடியாக  ஸ்பெக்ட்ரம் ஊ ழல் அ மைய  இதுப்பற்றிய முழுவிபரங்களையும் எல்லோ ரும் புரிந்து கொள்ளும் வகையில்


சென்று அறியலாம்.


மறைக்க தி.மு.க வும்  வெளிப்படுத்த அ.இ.அ.தி.மு.க வும் மற்ற எதிர்கட்சிகளும் கங்கண  ம் கட்டி நிற்க     திருவாளர் பொ துமக்கள் எப்பொ ழுதும் போல   குழப்பமாய்

வாக்களிக்க தயாராய் காத்து இருக்கிறார்கள் எ ன்பது நிதர்சனமான உண்மை .

மறக்காமல் வாக்களிப்போம் வாருங்கள் பொதுமக்களே....???!!!

Tuesday, February 08, 2011

துறவும் உறவும்.


உள்ளுக்குள் ழுழ்கினேன்
கிடைப்பது
சிப்பியா..
சிப்பியுள்
முத்தா…
விடைகள் தெரியாது
முழ்கினேன்
மூச்சை இழுத்து
மூச்சை அடக்கி
எண்ணங்களோடு பயண  ம்
தொ டர்புகளாய்
வேடமாய் உறவுகள்
இது பொ ய்
தத்துவ மனது
மேலே செல்
திரும்பி பார்த்தவாறு
நடக்கிறேன்
இருப்பு தூரங்கள்
ஆ க
எண்ண ங்கள் அ ருகே
உறவு தொடர்ந்தது
முத்தாவது..
சிப்பியாவது...
புன்னகை  செய்து
பின் தொடர்கிறேன்
உறவுகளோ டு...

Monday, February 07, 2011

தூசி


வேலை முடிந்து  இரு சக்கர வாகனத்தில் திரும்ப சூரியன் கொ ஞ்சம் கொ ஞ்சமாய் தன்னை  மறைக்க துவ ங்கியிருக்க வசந்தகால த்தின் ஆ ரம்பம்  காற்று வீசிய தாலாட்டில்
மகிழ்ந்த மனது  .

அ டையாளம் கண்டு புன்னகை செய்தவர்களுக்கு எதிர்புன்னகை  செய்து கடக்க இருசக்கர வாகன ஓ ட்டத்திற்கு இணை  யாக மனதின் எண்ணஓட்டங்கள்.

மேட்டிலிருந்து பள்ளம் இறங்கிய  வண்டி பறந்ததூசி ஒரு கண்ணின் உள்ளே  அனுமதியின்றி குடியேறி மேல் இமையின் உட்புறம்  அ மர்ந்தது. ஈரத்தினால்   நன்றாய் ஒட்டி கொள்ளும்   மெல்லிய தூசிவேடிக்கை  காட்ட  விளை யாட்டு தொ டங்கியது.

கண்ணின் உறுத்தல் முக்கியமாய் நினைவுகள் அறுப்பட்டு போனது.

கண்இமையை  கசக்கி வெளியேற்ற முயல கண்ணீர்  வர தூசி நகராது அடம்பிடிக்க கண்ணை  திறந்தாலே உறுத்தியது.
பொறுத்தபார்த்த மற்றொ ரு கண்ணும் அழ ஆ ரம்பிக்க செயல்
தீவிரம் அ டைய ...விடா முயற்சி...உறுத்தல்.

ஏங்க...என்ன ஆ ச்சு ?  நலம்விரும்பிகளின்  கேள்வி.

கண் இமையை கசக்கியதால் இரத்த சிவப்பாய் கண். இரண்டு கண்களும் சேர்த்து அதிக வெப்பத்தை வெளிப்படுத்த உறுத்தலின் பிடியில் மூளையும் உடம்பும்.


 மறுநாள் காலை வரை கண் இரத்தசிவப்பை  தக்கவைத்துகொள்ள காரண  மாய் அ ந்த  தூசி.

Thursday, February 03, 2011

அவர்தலையில் முண்டாசு காக்கிகால்சட்டை இடுப்பில் பச்சை பெல்ட் மேல் வெள்ளை பனியன் எவரிடமும்  அதிகம் பேசாதுவேகமான  நடை   முழுதும் நரைத்த தலைமுடி தாடி மீசை வெளுத்த மார்ப்புமுடிகள் அவரை சுலபமாய் அடையாளப்படுத்தும் .

வயதுக்கான உடலோ  மனமோ  கொ ஞ் சமும் இ ல்லாதவர் நரைத்த முடியை வைத்து  அ னுமானித்தால் உண்டு.

உடலை  பாதிக்கின்ற எந்தவிதமான  பழக்கவழக்கங்களுக்கும் உட்படாத   இன்றள வும் இளை ஞ னின் சுறுசுறுப்பாய் அ வர்.

இருவர் பெண்பிள்ளை கள் மூவர் ஆ ண்பிள்ளைகள். தன்  ஆ ண்பிள்ளைகளுக்கு தனி தனியாக  வீடு  பெண்பிள்ளை கள் இருவரையும் நல்லமுறையில் திருமண  ம் செய்வித்தார்.

தான் பார்த்த அ ரசாங்க வேலையில்   ஓய்வு பெற்றவுடன் வ ந்த பண த்தில் பிள்ளை களுக்கு கொடுத்தார். பிள்ளைகள்  சிலர் வாங்கி கொள்ள  சிலர் மறுக்க  ..மறுத்த பிள்ளை  களை   பற்றி சிறிதும் கவலை படவில்லை .

உடல்தகுதி மனமும் இளமை  அவரில் தோன்றும் எண்ணங்களுக்கு பதிலாய்  தன்னை   கடுமை யான  விரதங்களுக்கு உட்படுத்தி  மாதம் ஒரு கோவில் போய்விடுவார்.

தன்னள வில் தான் ராஜாவாய் இருந்து தன்னை சார்ந்தவர்களுக்கும் செய்து மனிதர்களில் முன்மாதிரியாய் இருப்பவ ர்.

அவர் தான் தோட்டி என்று பொதுசனங்களால் அ ழைக்கப்படும் குப்புசாமி.
பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்யும்  துப்புரவு பணியாளர் தொம்பன் இனத்தை சார்ந்தவர்.

புகைப்படதொகுப்பு எங்க ஊரு


LinkWithin

Related Posts with Thumbnails