Sunday, August 30, 2009

ஹாய் மதனும் தமிழக அரசும்


தமிழக அரசு கொண்டு வர உள்ள “ சமச்சீர் கல்வி திட்டம் ” என் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கூடவே கவலையும் வந்தது. அரசு திட்டங்கள் பெரும்பாலும் நல்லவையே செயல்படும் விதத்தில் நேர்மை இல்லாது போகும் போது அந்த தி்ட்டத்தின் முடிவுகள் காணாமல் போய்விடுகின்றன. அதுபோல் இத்திட்டமும் ஆகி விட கூடாது என்ற பயமும் கவலையும் கலந்தே உள்ளன.

இந்த தி்ட்டம் வெற்றியடையும் அதே சமயத்தில் உலகத்தோடு எந்த பகுதியிலும் போட்டி போடும் அளவிற்கு மொழி அறிவு துறை அறிவு என எல்லாவற்றிலும் தரமான கல்வியை சமச்சீர் கல்வி தி்ட்டம் வழங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அப்புறம் ஆனந்தவிகடனில் வெளியாகியிருந்த மதன் கேள்வி பதிலில்

வெற்றியடைந்த மனிதனுக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்ற கேள்விக்கு அந்த பெண் என்பவள் அந்த மனிதனை பெற்ற தாயை குறிக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

பதில் பிடித்திருந்தது. பெரும்பாலும் தாயினுடைய வளர்ப்பில் தான் ஒவ்வொரு மனிதனுடைய வெற்றி என்பது என் கருத்து.

மனைவி என்பவள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமே .

Saturday, August 29, 2009

நீயாய் நானாய்




















அணு சேர்க்கையாய்

சேர்ந்து உருவாகி

வளர்ந்த உயிர்ப்பாய்

பிறப்பு

தன்னையே தான்

பாதுகாக்க

கற்று கொள்ளும்

வரை

கற்று கொள்ளல்

வளர்ச்சி

தன்னையே தானாய்

விடுவித்து

நீயாய்

நானாய்

அவன்

அவளாய்

அதுவாய்

இதுவாய்

பிளவு பட்டு

தோன்றியவற்றில்

அழிந்து போகும்

உருவாகும்

சேர்க்கையாய் வாழ்க்கை

Friday, August 28, 2009

கறி விருந்து

முதல் நாள் திருமணத்துக்கு போக முடியவில்லை. மறுநாள் வரவேற்புக்கு சென்றான். அன்றைக்கு கறி விருந்து. திருமணம் இவனுடைய நண்பனுக்கு பெண் வீ்ட்டிலிருந்து வந்திருந்தார்கள்.

கறி விருந்து என்றாலே மது யாராவது வாங்கி கொடுத்துவிட வேண்டும் இல்லாவிடில் மாப்பிள்ளை அதற்காக செலவு செய்ய வேண்டும் இது எழுதபடாத விதி.

செலவு செய்யவில்லையென்றால் நாங்களும் போய் எவ்வளவோ கரைச்சு பாத்தோம் கரைய மாட்டேங்கிறான் என்று சொல்வார்கள். இன்னம் சில போ் சேர்ந்து குடிக்கறப்ப நல்ல குடிச்சான் இவன் செலவு பண்ணமாட்டேங்கிறான் கஞ்ச பய என்பார்கள்.

இதற்கு பயந்தே கல்யாண பட்ஜெட்டில் இதற்குரிய தொகை உண்டு.

வரவேற்புக்கு வருவோம்.

பெண் வீட்டாரில் இருவர் குடித்துவிட்டு பந்தியில் அமர்ந்தார்கள் கோழிகறி கப்பில் வைத்திருந்தார்கள். ஆளுக்கு ஒரு கப் காலி செய்தார்கள்.

பந்தி வாடிப்பவரிடம் நான் பெண் வீட்டுகாரன் இன்னும் ரெண்டு கப் கோழிகறி கொண்டு வாருங்கள் என்று சொல்ல அவரும் வாங்கி வைக்க அதுவும் காலி.

குடித்த இருவரும் திரும்பவும் கேட்க வைப்பவர் ஒதுங்கி கொண்டார். இப்பொழுது மாப்பிள்ளை அண்ணன் கொண்டு வைத்து வைக்க அதுவும் காலி .

திரும்பவும் என பத்து முறை புது சொந்தம் சாப்பாட்டினால் முரண்பாடுகள் உருவாகி விட கூடாது என மாப்பிள்ளை அண்ணன் பொறுமையாய் கொண்டு வந்து வைத்தபடி இருந்தார்.

அதற்குள் இரண்டு பந்திகள் முடிந்தது.

இப்படியும் மனிதர்கள்.

Wednesday, August 26, 2009

தட்டுபட்டது

நலம் விரும்பி அவன் . அவனுடைய நிலைமை அவனுக்கு தெரியும் ஆனாலும் மற்றவர்கள் நலன் விரும்புவன் மற்றவர்கள் விரும்பலாம் விரும்பாமல் போகலாம் இவனுக்கு தெரிந்த நல்ல கெட்டதை சொல்லி விடுவான்.

ரோட்டில் போவோர் வருவோர்க்கு அல்ல அவனை சார்ந்தவர்களுக்கு அவனின் சுற்றமும் நட்புக்கும் மட்டுமே இவனுடைய யோசனைகளும் செயல்களும் அப்படி சொல்லி கேட்காமல் ஜெயித்தவர்களும் உண்டு தோற்றவர்களும் உண்டு .

அவனை பயன்படுத்தவார்கள் முடிந்தவரை இவனும் போய் செய்து கொண்டிருப்பான் காரியங்கள் முடிந்தவுடன் இவனை தூரவைத்துவிடுவார்கள்.

அப்படிதான் ஒருநாள் அந்த பெரியவரிடம் வீட்டுக்கு பொருள் ஒன்று வாங்கி வைத்துள்ளேன் வீட்டில் கொடுத்துவிடுங்கள் என்று கூற அதெல்லாம் முடியாதுப்பா என்று கூறி விட்டார்.

இவனை பயன்படுத்தியவர்களில் அந்த பெரியவரும் ஒருவர்.

யோசனைகள் செய்தான் இந்த பெரியவரின் பழக்கம் தேவையா என்று முடிவாய் அவருடன் பழகுவதையே விட்டுவிட்டான்.

அப்பொழுது புரிந்துகொண்டான் முதலில் சுயம்விரும்பியாக இருக்கவேண்டும் அதற்கு பிறகு தான் நலம் விரும்பியாக இருக்க வேண்டும் என்று .

எங்கோ பின்னனியில் நலம் விரும்பியிலும் சுயநலம் இருப்பதாய் எனக்கு தட்டுபட்டது.

Tuesday, August 25, 2009

நம் வாழ்வு



என்னில்

விடை தேடுகிறேன்

கேள்வியாய்

என் செயல்கள்

காரணங்களாய்

விடைகள் தெரிய

அடுத்த நிகழ்வு

இன்னமொரு கேள்வியாய்

தேடுதல்

தொடர் நிகழ்வு

தகுந்த காலங்கள்

வந்தவுடன்

தெரிந்த காரணங்கள்

செயல்களாய்

நமது வாழ்வின்

இயக்கம்

இயல்பாய் நம்

வாழ்வு

Monday, August 24, 2009

முற்றுபெறாத எண்ணங்கள்


காலையில் இருந்தே அவனுக்கு ஒரே யோசனையா இருந்திச்சி யாரு கிட்ட கேட்பது அவனுக்கு தெரிந்த பலபெயர்கள் மனசுல ஓடிட்டு இருக்க யாரை முதலில் கேட்பது தகுதிவாரியாக அவனுள் எண்ணங்கள் தோன்றியபடி இருந்தன.

இவன் கிட்ட போய் கேட்ட என்ன நினைப்பான்? என்ன பதில் சொல்வான்? இருக்குன்னுவான்னா இல்ல இல்லேன்னு சொல்லிபுடுவான்னா தயக்கம்.

யோசனையோடு ரோட்டில் நடந்து போய்கிட்டு இருந்தான் ஒரு அம்மா பெருகுரலெடுத்து ஒப்பாரி வைச்சு அழுதுகிட்டு இருந்தது.

முதல் நாள் உறவுக்கார வீட்டில் தங்க போக இந்த அம்மாவுடைய வீட்டில் கதவை உடைத்து பீரோலில் அது சேத்து வைத்திருந்த சேமிப்பு அதனுடைய மகன் சேத்து வைந்திருந்த உண்டியல் காசு என எல்லாவற்றையும் திருடி சென்றுவிட்டார்கள்.

அந்த அம்மா அழுவதை பக்கத்தில் வசித்தவர்கள் ஆறுதல் சொல்லியதோடு பரிதாப பட்டார்கள். அந்த இடம் சோகமாய் இருக்க தன் முகத்தை திரும்பி பார்த்தான்.

அவனுடைய செயலில் முகத்தில் சின்ன மாறுதல் கூட ஏற்படவில்லை தீவிர எண்ணங்களுடைய ஆளுமைக்கு கட்டு பட்டு கிடந்தான். வெளிசெயல்களின் எந்த பாதிப்பும் தன்னுள் ஏற்படாமல்தன் வழியே நடந்தான்.

அவனை பார்த்தவர்கள் வித்தியசமாக பார்த்தார்கள்.

யாரும் கேட்கவில்லை அவனை அவனும் பதில் சொல்லும் நிலையில்லை.

வெளிப்பட்ட அந்த அம்மாவின் வேதனைக்கு இரக்கப்பட பரிதாப பட நிறையபேர் நின்றார்கள். ஆனால் உதவி செய்ய யார்?

இவன் மனதிலும் அந்த கேள்விதான் நிறைந்து நின்றது உதவி செய்ய யார்?

பரிதாப படுவார்கள் இரக்கப்படுவார்கள் நிறையப்பேர் திறம்பட செய்தார்கள் இந்த வேலையை உதவி செய்பவர்களை கண்டுபிடிப்பது அரிது.

பழக்கமான முகங்களில் தேடினான் யாரெல்லாம் இரக்கப்படுவார்கள் யாரெல்லாம் உதவி செய்வார்கள் யாரெல்லாம் இரக்கப்பட்டு உதவி செய்வார்கள் என்று

யோசனையாய் குளத்தோர கல்லின் மீது அமர்ந்து குளத்தை வெறித்து பார்த்தப்படி அமர்ந்திருந்தான்.

Friday, August 21, 2009

எல்லாம் வல்ல மனது.



எல்லாம் வல்ல

மனது

நினைத்தவை

தூரம் இருக்கையில்

வேண்டும்

வேண்டும்

விரும்பும் மனது

நெருங்கையில்

கண்டும் காணாது

தூர விலகி

விலக விலக

விரும்பி

நெருங்க நெருங்க

விலகி

தூரம் நிற்கையில்

கவர்ந்து

அருகில் போக

தூர நிற்கும்

எல்லாம் வல்ல

மனது.

Thursday, August 20, 2009

விசாரணையும் சாரூவும்


அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளால் வரம்புக்கு மீறிய கேள்விகள் கேட்கபட்டேன்.-சாரூக்கான்.

பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பெரிது படுத்தின. விசாரணை என்று வந்துவிட்டால் ராமன் என்ன சுப்பன் என்ன இல்லை சாரூக்கான் தான் என்ன ?

இங்கு மக்களால் அறியப்பட்ட மனிதர் நடிகர் அவ்வளவே , விமான நிலைய அதிகாரிகளை பொறுத்தவரையில் விமானத்திலிருந்து இறங்கிவரும் பயணி களுள் ஒருவர்.

சந்தேகம் அவர்களுக்கு சந்தேகத்தை தெளிய வைக்க வேண்டிய பொறுப்பு இவருடையது. மணி நேரம் ஆனால் என்ன நாட்கள் ஆனால் என்ன?

காசு இருந்தால் பத்து பேர் அறிந்திருந்தால் அவர் மனிதர் இல்லை மாமனிதர் ஆகி விடுவார் இது இந்தியர்களின் பொதுவான மனோபாவம். அதிலும் நான்கு பேர் சிரிக்க நான்கு பேர் அழ நான்கு பேரை சீ்ட்டின் நுனியில் உட்கார வைத்து சண்டை போட்ட நடிகர் இவர்.

இவரை போய் விசாரிக்கலாமா அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

இனி அமெரிக்க மண்ணையே மிதிக்க கூடாது என்று தான் நினைத்தேன் லட்சோப லட்சம் ரசிகர்களின் அன்பு என்னை திரும்பவும் இங்கு வர வைத்து விடும் போலிருக்கிறது என்ற பேட்டி வேறு.

இவர் போக வில்லையென்றால் அமெரிக்கா என்ன ஆகும்?

Monday, August 17, 2009

ஐஸ்பையன்


ரோட்டின் ஓரத்தில் ஐஸ்க்ரீம் வண்டி நின்று கொண்டிருந்தது. ஒன்றிரண்டு துளிகளாய் வானம் மழை தூவியது. ஐஸ் விற்பவன் ஓரமாய் உள்ள கல்லில் உட்கார்ந்திருந்தான்.

பன்னிரெண்டு வயது இரண்டு பையன்கள் அங்கிருந்து
சைக்கிளில்வந்தார்கள். ஒரு பையன் சிறு ஊனம்
தவ்வி இறங்கினான் சைக்கிளிலிருந்து இறங்கிய கையோடு

யோவ்.. ஐஸ்…(அந்த பையனுக்கு பதினேழு இருக்கலாம்)

சிரித்து கொண்டே வந்தான்ஐஸ் பையன்.

நீங்க அமெரிக்காவுல ஐஸ்க்ரீம் வித்தீங்களாம் ஊனமான பையன்.

பதில் சொல்லாது சிரிப்பை மட்டுமே பதிலாக்கி என்ன வேண்டும் என்ற பார்வையுடன் பார்த்தான்.

ரெண்டு ரெண்ருவா ஐஸ்க்ரீம் கொடுங்க..

ஐஸ்க்ரீம் வாங்கிய கையோடு அப்புறம் என்னடா என்று இன்னொரு பையன் கேட்டான்.

அப்புறம் என்ன வண்டிய வெல பேசிருவோமா என்றான் சிரித்தப்படியே ஊனமான பையன்.

இப்பொழுது எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் மலர்ந்து மூவரும் சிரித்து கொண்டிருந்தார்கள்.

Saturday, August 15, 2009

சுதந்திர தின விருந்து



ஒன்னாம் நம்பர் நெய் கால் கிலோ கொடுங்க என்றார் புது வாத்தியார். அவர் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.

வாத்தியாரிடம் ஒருவர் என்ன விசேடம் என்று கேட்க..

நாளைக்கு சுதந்திர தினம் கேசரி கிண்டி பள்ளிகூடத்துக்கு எடுத்துட்டு போவனும் என்றார்.

அப்புறம் என்ன..

வெண்பொங்கல் இன்னொரு வாத்தியார் செஞ்சு எடுத்துட்டு வந்துருவாருங்க இட்லி பூரி

ஹோட்டல்ல ஆர்டர் கொடுத்தாச்சு.

ஏ..அப்படி..இவ்வளவு விசேடமாவ சுதந்திர தினம் கொண்டாடுவிங்க என்றார்.

உங்க பள்ளி மாணவர்கள் எவ்வளவு செலவு நிறையல்ல பிடிக்கும் என்றார்.

எதுக்கு செலவு பிடிக்கும்.

பையன்கள் எல்லாருக்கும் கேசரி கொடுத்து டிபன் செய்ய…

ஆசிரியர் அதிர்ந்து போய் என்னது நீங்க வேற கொடி ஏத்த வர்றவங்க வாத்தியார் எல்லாருக்கும்டிபன்.

அப்ப பையன்களுக்கு ..

25 காசு சாக்லேட் 3 கிலோ எடுத்துவக்க சொல்லிருக்கேன் அதாங்க என்றார் ஆசிரியர்.

இவரும் விடாபிடியாக வருசத்துக்கு ஒரு நாள் வாத்தியாரெல்லாம் சேந்து காசு போட்டு நல்லபடியா பசங்க திங்கறத்துக்கு வாங்கி கொடுக்கலாம்என்றார்.

அதெல்லாம் காரியத்துக்கு உதவாதுங்க என்றார் ஆசிரியர்.

அந்த ஆசிரியர் வேலைபார்க்கும் பள்ளியில் மொத்தம் மாணவர்களின் எண்ணிக்கை 230 ஆசிரியர்களின் எண்ணிக்கை8 அவர்களுடைய மாத சம்பள தொகை ஒரு லட்சத்துக்கு மேல் ..

நீங்களே சொல்லுங்கள் ஆசிரியர்கள் கூடி முடிவு செய்தால் பள்ளி மாணவர்களுக்கு நல்ல தரமான இனிப்பு வழங்க முடியுமா? முடியாதா ?

Friday, August 14, 2009

வேடங்கள் கலைக்கும் வரை


நாடகம் அமைத்த சூத்திரதாரியின் கையிலிருக்கும் நாடகத்தின் போக்கு பொருள் சொரிந்தவை திடீர் திருப்பங்கள் மிக்கவை.

அடுத்த காட்சி இன்னது என்பது தெரிந்துவிட்டால் நாடகத்தின் போக்கில் சுவையிருக்காது. நம் வாழ்க்கை நாடகத்தின் போக்கும் மாறும் நேரம் மாறும்.

நம்முடைய வேடம் நிலைக்கும் வரை அது நாம் விரும்பியோ விரும்பாமலோ எடுத்து கொள்ள வேண்டிய கட்டாயம்.
வேடத்திற்கான காட்சிகள் முடிந்தவுடன் வேடம் கலைகிறோம்.

நாடகத்தின் போக்கில் பல ஆச்சர்ய நிகழ்வுகள் ஏற்ற இறக்கங்கள் நடந்திருப்பினும் முடிவு சுபமே. பல்வேறு நாடகங்கள் அறிவுறுத்திய பாடம் இது.

வேடங்கள் கலைக்கும் வரை வேடங்களே வாழ்க்கையாக நாம்.

Thursday, August 13, 2009

ஹவ் ஆர் யூ எஸ்.எம்.எஸ்


அந்தபையன் செல்போன் வாங்கி சில மாதங்கள் ஆகின. ஒரு நாள் தவறான அழைப்பு வர பெண்குரல் ஒரு குறிப்பிட்ட நபரை கேட்க இல்லீங்க..ராங் நம்பர் என்று சொல்லி கட் பண்ணிவிட்டார்.

இரண்டு மூனறு நாட்கள் கழித்து SMS ஆக வர ஆரம்பித்தது.

W R U?


H R U?

உன் மூச்சு என் மூச்சு

இது போன்றுரொமான்ஸ் SMS ஆக வர தடுமாறி போனான் அந்தபையன்.

தடம் மாறி வந்த ராங்கால் அதன் தொடர்ச்சியாக வந்த ரொமான்ஸ்SMS கள் அந்த பையனுடைய மனதில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.

அந்த பையன்ஆறாவது படித்திருக்கிறான் அப்பொழுது தான் செல்போன் பயன்படுத்த கற்றுக்கொண்டான்.

ஆங்கிலம் அவ்வளவு தெரியாது தான் என்ன அனுப்புகிறோம் என்பதைவிட தான் ஒருவருக்கு SMS அனுப்பியாச்சு என்ற திருப்தி.

இவன் அவனுடைய அக்கா அசந்திருக்கும் நேரத்தில் அக்காவுடைய செல்போனை எடுத்துMSG. INBOX ல் உள்ள SMS பார்வேட் செய்வதாக இருந்தான்.

யாருக்கு மேற்சொன்ன பையனுக்கு , இந்த பையனுக்கு குழப்பம் தீர்ந்தது. எதிர்பார்ப்பு வீணானது.

Wednesday, August 12, 2009

எல்லாம் பயம்


பன்றி காய்ச்சல் திருச்சிக்கு வந்துவிட்டதாம். நம்மூருக்கு எப்ப வரப்போவது தெரியல தஞ்சாவுரூ..அப்புறம் அம்மாபேட்ட தான்.

நம்ம ஏரியாவுல வராது. நெருக்கமா இல்லேல்ல அதனால வராது. பாத்து இருந்துக்க வேண்டியது தான்.

ஒரு பக்கம் பன்னி காய்சசல்ன்னா இன்னொரு பக்கம் சென்னையில சுனாமி பயம். சில ஏரியாவுல லேசான நிலநடுக்கமா..

பேசிகிட்டே இருந்தப்ப பார்த்த அந்த வீட்டிலிருந்து எங்க..இங்க வாங்க..சீக்கரம் வாங்க..

பாம்புங்க..சீக்கிரம்

டேய் வாடா கம்பு எடுத்து வாடா போவோம்.

அப்பதான் உணவு முழுங்கிட்டு மெதுவா பொந்துக்குள்ள போயிட்டிருந்தது.

என்ன பாம்புடா அது.

இர்ற பாப்போம் ..எலா மேல கட்டு கட்டா இருக்குடா..

கட்டு விரியனோ.. இல்லடா அது புடையான் பாம்புடா..

அடிறா..அடிறா...
தட்....தட்... என்ற சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

Tuesday, August 11, 2009

சுமைதாங்கி


நொறுங்கும் இதயம்
சுமைகளின் வேதனை
தாங்கும் அளவையும்
மீறி..
உள்ளாய்
என் ஆற்றல்
எனை காக்க
இடம் மாற்ற
சுமைகளுக்கோர்
இடம் தேட
அதுவும் சுமையாய்
முயற்சியாய்
கடைசி வரை
இயற்கையி்ன் போக்கில்
சுமைகளை தாங்கும்சுமை தாங்கியாய்…

Monday, August 10, 2009

கடன் வந்து மேலாட



இன்னைக்கு மதிய நேரம் திடீரென்றுஒரு வாய்ப்பு ஏற்பட்டது நண்பர் ஒருவர் மூலமாக பாருக்கு செல்வதற்காகதான்.

எல்லோரும் குடிப்பாங்கல்ல அந்த பாருக்கு தாங்க.. நண்பருக்கு நான் கம்பெனி கொடுக்க சென்றேன் குடிக்க
அல்ல பேச..

கூட்டம் குறைவாகதான் இருந்தது. உள்ளே நுழைந்தவுடனேயே இரு வாசகங்கள் கண்களில் படும்படி எழுதி வைத்திருந்தார்கள்.

“ கான மயிலாட கடன் வந்து மேலாட
கடன் வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட…”

வாடிக்கையாளர்களே நீங்கள் நாணாயமானவர்கள் தான் எங்களால் தான் கடன் கொடுக்க முடியவில்லை என்று ஒரு வாசகமும் அதற்கு அடுத்த வாசகம்

“ கடன் காரனாக இரவு போய் படுத்தால் காலையில் கடன்காரனாக எழுந்திருக்க வேண்டும். ஆகையால் இருப்பதை கொண்டு செலவு செய்ய கற்றுக்கொள்வோம்”.
என்றும் எழுதி வைத்திருந்தார்கள்.

யோசிக்கதான் வேண்டியிருந்தது. கெட்டதில் நல்லது இது தானா நண்பர்களே..

Saturday, August 08, 2009

தலித் வீ்ட்டில் உணவு சாப்பிட்ட ராகுல்.


தலித் வீட்டில்உணவு சாப்பிட்டது நானோ..நீங்களோ .கிடையாது. ராஜீவ் காந்தியின் மகன். அதனால் தான் இன்றைய செய்திதாள்களுக்கு அது ஒரு செய்தி.

எங்க கிராமத்துல சொல்வார்கள் “ இருக்கிறவன் கிழிசல போட்டுகிட்ட அது எளிமை , இல்லாதவன் என்றால் அவன் கிட்ட நல்ல துணி உடுத்தி கூட வசதியில்லதாவன் என்று இகழ்வார்களாம்” அதனால கூழோ கஞ்சியோ உடுத்தற ஆடை முக்கியமுன்னு சொல்வார்களாம்.

ராகுல் போய் பைவ் ஸ்டார் ஹோட்டலில் உணவு சாப்பிடுதல் பெரிய விசயமல்ல. சாதாரண வீட்டில் உணவு சாப்பிட்டதது தான் செய்தி.

சாதிகள் இல்லையடி பாப்பா.. பாரதி

இங்கு செய்தி ராகுல் ஒரு தலித் வீட்டில் உணவு சாப்பிட்டார் என்பது முக்கியம்.

ஒரு தலித் வீடு என்பது அதை விட முக்கியம்.

இருப்பவனும் இல்லாதவனும் சாதிய வேற்றுமையும் இந்த செய்தியில் அப்பட்டமாக வெளிப்படுத்தப் படுகிறது.

அப்புறம் எங்கே சாதிகள் இல்லாமல் போவது? எங்கே சமநிலை?

எல்லாம் மாயை..

Friday, August 07, 2009

படித்தவுடன் பிடித்தது

ஒருவன் கங்கை ஆற்றில் இறங்கி ஜலத்தை தன் இரண்டு கைகளாலும் இறைத்துக் கொண்டிருந்தான். அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த வைதீகர் ஒருவர் இதைக்கண்டு “அப்பா ! தண்ணீரை ஏன் வீணாய் இறைக்கிறாய்?” என்றார்.

ஒருவன்: “ சென்னையிலுள்ள என் தென்னந்தோப்பு வாடிப் போவதாகக் கேள்விப்பட்டேன் அதற்காக இக்கங்கை நீரை இறைக்கின்றேன்.”

வைதீகர்: என்னப்பா! அடி வண்டல் முட்டாளாக இருக்கிறாயே! சென்னையிலுள்ள தென்னந்தோப்பிற்கு கங்கையிலிருந்து ஜலம் இறைத்தால் போகுமா? இந்தச் சொற்ப அறிவுகூட உனக்கு இல்லாமற்போனது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன்.

ஒருவன் : ஓய் வைதீகரே! கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போக வேண்டாம் . சற்று நேரத்திற்கு முன் தாங்கள் நடத்திய காரியம் நினைவிருக்கிறதா? தர்ப்பணம் செய்வதாகச் சொல்லி நீங்கள் இரண்டு கைகளாலும் அள்ளி அள்ளி இறைத்த கங்கை நீர் மேக மண்டலம் சந்திர மண்டலம் நஷத்திர மண்டலம் இவைகளையெல்லாம் தாண்டிப் பல கோடி மைல்களுக்குப்பாலுள்ள மோஷலோகத்தில் வசிக்கும் பிதுர்களுக்குப் போய் சேர்கின்றபோது சில நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள சென்னைக்கு ஏன் கங்கை நீர் சேரக்கூடாது?

-ஆனந்த விகடன்-

படித்தவுடன் பிடித்தது பிடித்தவுடன் சிந்திக்கவும் செய்ததது.

Wednesday, August 05, 2009

வீணாய் போன உண்மை உழைப்பு


மறுநாள் ஆடிப்பெருக்கு மக்கள் அனைவரும் நீர் நிலைக்கு சென்று வழிப்பாடு செய்வார்கள்.
அன்று எல்லோர் வீடுகளிலும் பெரும்பாலும் மீன் கறி சாப்பாடாகத்தான் இருக்கும்.

கடந்த பத்து மாதமாக தன்னுடைய குளத்தில் மீன்கள்வளர்த்தார். தினசரி அதற்கு உணவிடுதல் அதை பராமரித்தல் என்று நேரம் எடுத்து கொள்வார்.

ஆடிப்பெருக்கு அன்றைக்கு நல்ல விலைக்கு விற்று விடலாம் என்ற நோக்குடன் முதல் மீன்பிடி ஆட்களை வைத்து மீன்களை பிடித்தார்.

உயிர் மீனாக இருக்க வேண்டும் இல்லையெனில் விற்க முடியாது. வீட்டில் உள்ள அனைவரும் நாள் முழுதும் உழைத்து மீன் பிடி ஆட்களுடன் சேர்ந்து மீன்களை பிடித்து தொட்டியில் விட்டார்கள்.

மீன்பிடி குளத்துக்கும் தொட்டிக்கும் நாற்பது அடி தூரம் அன்றைய தினம் குளத்தும் தொட்டிக்கும் உயிருடன்மீன்களை கொண்டு விடுவதற்காக நடை நடையாய் நடந்து சோர்ந்தே போனார்கள்.

நாற்பது ஐம்பது கிலோ மீன் இருக்கும் துள்ளி குதித்தது தொட்டியில் காற்றோட்டமாக தொட்டியை மூடிவிட்டு வேலை முடிக்கும் போகும் போதும் மணி இரவு 7.30 ஆகியிருந்தது.

உழைத்த உழைப்பு இமைகள் தானாய் மூடின. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி பிடித்த வைத்த மீன்களை காசாக்க வேண்டுமே என்ற ஆவலில் தொட்டியி்ல் மீன்களை பார்க்க சென்றார்.

மேலிருந்த மூடியை அகற்றினார். பகல் இரவும் சேர்ந்தே இருந்தது அதிகாலையில் பிடித்து வைத்திருந்த எல்லா மீன்களும் செத்து விறைத்து போயிருந்தது.அப்படியே அதிர்ந்து போய் நின்றார்.கண்கள் தானாய் கண்ணீர் சொறிந்தன. முதல் நாள்பட்ட கஷ்டம் வேதனை நெஞ்சு முழுக்க துக்கமாய் அன்று முழுக்க செயல் பட பிடிக்காமல் இவரும் சாப்பிடாமல் வீட்டில் அனைவரும் சாப்பிடாமல் அன்றைய தினம் கழிந்தது.

Monday, August 03, 2009

பிடித்த வாசகம்


மாலை நேரம் போக்குவரத்து அதிகமாக இருந்தது. பொறுமையாய் போய் கொண்டிருந்தேன் என் முன்னால்
கதிர் அறுக்கும் இயந்திரம் ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது பின்புறம் வாசகம் ஒன்று எழுதியிருந்தார்கள்.

பெரும்பாலும் வண்டிகளில் “ வளைவில் முந்தாதே” “ மரம் நடுவோம்” அப்புறம் குடும்ப கட்டுபாடு வாசகங்களாக இருக்கும்.

இந்த லாரியின் பின்புறம் “ நெருப்பு மட்டும் காயப்படுத்தாது சிரிப்பும் தான் காதலித்து பார் தல ”
என்று எழுதியிருந்தார்கள்.

உண்மை தாங்க.…

Sunday, August 02, 2009

அன்பு மறைய …


உயிர் வாழும்
காலம்
கசந்த உறவுகள்
உயிர் போன
பின்
நினைத்த உறவுகள்
இருந்தபொழுது
அகந்தையின்
இடிபாடுகளில்
சிக்கி தவித்து
அன்பு தெரிய
வீம்பாய் உரிமை
பிடிவாதம்
அன்பு மறைய
இறந்தபொழுது
நான்யார்?
நீ யார்?
பொய் வாழ்க்கை
போலி வேடங்கள்
உணர்வுகளில்
கரைந்து
மனம் நெகிழ
வாழ்ந்த கணங்கள்
எத்தனை?

Saturday, August 01, 2009

இன்னியிலிருந்து பத்தாவது நாள்

காலை கடைக்கு கிளம்பும் போது பையை ஊதிப்பார்த்தான். ஒரு நூறு ஒரு ஐம்பது நோட்டும் இருந்தது. அன்றைக்கு அவன் செய்ய வேண்டிய செலவு தொகை 1000 ஆகும்.

யாரிடம் கேட்பது அவனுக்கு தெரிந்தவர்களிடம் முதல் நாள் வரையிலும் முயற்சித்தான் எல்லாம் கைவிரித்தார்கள். ஏற்கனவே வாங்கியதை சரியானப்படி நாணயம் செலுத்ததால் கொடுக்க மனம் இருந்தவர்கள்கூட மறுத்துவிட்டார்கள்.

காலையில் எழுந்த போதே யோசனையுடன் எழுந்தான். யோசனை செய்து என்ன ஆகப்போகிறது. குழப்பம் குழப்பம் குடிப்பழக்கம் உண்டு அவனுக்கு நேராக போய் குடித்தான் இருந்த 150 காலி என்ன செய்ய..

தெரிந்தவர் ஒருவரிடம்போதையுடன் போய் கேட்டான் . அய்யா பாத்து குடுங்க நான் திரும்ப கொடுத்துவிடுகிறேன். முடியாது என்று மறுத்து விட ..

அய்யா நான் இன்னைக்கு தேவைக்கு பண்ணியே ஆகனும் கொடுங்கய்யா என்று அழ ஆரம்பித்தான்.

மிகுந்த சங்கடம் உருவானது. அவர் சத்தம் போட்டு பணம்கொடுத்தார். இன்னியிலிருந்து பத்தாவது நாள் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனான்.

சொல்லிவிட்ட போன நான்காம் நாள் கடுமையான நெஞ்சுவலி ஏற்ப்பட்டது இவனுக்கு குடியினால் வந்த வினை .

அவர்கள் வீட்டில் செலவு செய்தார்கள். மருத்துவர் வீட்டுக்கு போவதும் வருவதுமாக இருந்தான்.

பத்துநாட்களும் கடந்துவிட பணம் வந்தபாடில்லை நாட்கள் போய் கொண்டிருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails