Tuesday, June 30, 2009

டமார், டமார்

“ டமார்” என்று வேகமாக கதவு அடித்து சாத்தப்பட்டது. யார் மீதோ வெளிப்படுத்தா முடியா கோபம் கதவில் வெளிபடுத்த முடிந்தது. எல்லோரும் மௌனம் காத்தார்கள்.
கதவு யார் மீது வெளிப்படுத்த முடியும் கதவில் பொருத்தபட்டிருந்த நாதாங்கி மெதுவாய் ஆடி நின்றது.
நிசப்தம் நிலவியது. கதவை ஓங்கி அடித்து சாத்தியவர் மீது கோப பட முடியா சூழல் நிசப்தம்.

“ டமார் ” அடித்து சாத்தப்பட்டது கதவு. கதவை சாத்தியவன் சிறுவன் அம்மா கேட்டாள் எதிர்பார்தது கிடைக்கவில்லை கோபம் . வெளிப்படுத்த முடியாமல் சிறுவன் வெளிப்படுத்திய இடம் கதவு. உணர்வுகளின் விளைவுகளை உள்வாங்கி கொண்டது.

அம்மா கேட்டாள் சிறுவன் மௌனமாக நின்றான். வீட்டு கதவு உடைஞ்சு போச்சுன்னா என்ன செய்ய என்று கேட்டவாறு சிறுவனை அடித்தாள். அழுதவாறே அவ்விடம் அகன்றான்.

ஊர் திருவிழா சாமி புறப்பாடு வெடிகள் வெடிக்கப்பட்டது. டமார்..டமார் என்ற சத்தம் இருகைகளால் காதுகளைஅழுத்தி பொத்தியப்படி கண்கள் மூடியப் படி இருக்க அப்படியே நின்றாள் இளம் பெண்.
வெடி வெடித்து முடிந்த பிறகும் அப்படியே நின்றாள்.
அருகில் நின்றிருந்த தோழி தட்டி எடீ ..கைய எடு..எடுத்தாள். சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை கண்களை கசக்கியவாறே தோழிகளுடன் நடந்தாள்.

நிறைந்த பயணிகளுடன் பேருந்து ஊர்ந்தது அடுத்த பேருந்து நிலையத்தை தொ ட தூரம் இருக்கையில் டீயூப் வெடிக்க டயர் டமார் என்ற சத்தத்துடன்வெடித்தது. மிகுந்த சிரமப்பட்டு பேருந்தை ஓரங்கட்டினார் ஓட்டுனர்.

எல்லோரும் கீழிறிங்கினர் பாதி தன் அலுவலின் அவசரம் தன்னையே நெந்தார்கள். அடுத்த பேருந்தை எதிர்நோக்கி எல்லோர் கண்களும் உற்றுநோக்கின. வரும் பேருந்து முக்கியம் பெற்றது. அதுவும் நிறைந்து வந்தது முடிந்தவர்கள் முண்டியடித்து ஏறினார்கள். பாதி பேர் நின்றார்கள் நடந்தார்கள் பரிச்சயமில்லாதவர்கள் கூட பழகியவர்கள் போல் பேசிக்கொண்டார்கள் அவர் அவர்களின் எண்ண ஓட்டங்கள் பரிமாற கொள்ளப்பட்டன.

Monday, June 29, 2009

ஞாயிறு காலையிலே சங்கமம்

வசந்த காலத்தின் வருகையை சாலையில் நிறைந்திருந்த அந்த புளியமரங்கள் அறிவித்தன. இளதளிர்கள் பூக்களால் நிறைந்திருந்தது மரம்.

அமைதியான சூழலில் எழுந்தது காற்றின் சப்தம். கண்களால் உடன் பார்க்கமுடியாப்படி கிளைகளின் ஊடே உட்கார்ந்திருந்த சிறுபறவைகளின் குரலோசை ஒரு மரம்
மரத்தின் கீழ் சிறுவர்கள் ஐந்து பேர்.

அன்று ஞாயிறு காலையிலே சங்கமம் ஆனார்கள்.

டேய்..நாம எல்லாரும் போயி ..இன்னும் அரமணி நேரத்துல வந்துடுவோம். இன்னிக்கு புளியம்பூ தொக்கு செய்வோம்.
தலைவனாக கருதப்பட்டவனின் வார்த்தைகள்.

அய்யா..நான் சீக்கரம் வந்துடுவேன்.

டேய் நீ வறப்ப உப்பு எடுத்துட்டு வாடா..

டேய் நீ என்னடா எடுத்துட்டு வர்ற

நான் மொளவா எடுத்துட்டு வர்றேன்.

சரி..டேய் ரொம்ப எடுத்துட்டு வந்துடுடாத பாத்துக்க...

நான் கொட்டாங்குச்சி...

பெரிசாடா ரெண்டு வேணும்.

சரி எல்லாரும் சாப்பிட போவலாம்.

முன்னடி வர்றவங்க புளியம்பூ பறிங்க நிறைய வேணும்.

கலைந்தது சிறார்கள் கூட்டம்.

காற்றின் சப்தம் சிறுபறவைகளின் குரலோசை கேட்டு கொண்டிருந்தது.

Saturday, June 27, 2009

ஒன்று இருக்கஒன்று இருக்கும்.

சுவாசம் இருக்க
செயல் இருந்தது
உணர்வுகள் இருக்க
விளைவுகள் இருந்தது
தேவை இருக்க
ஆசை இருந்தது
கோபம் இருக்க
மௌனம் இருந்தது
வேதனை இருக்க
இன்பம் இருந்தது
முயலாமை இருக்க
முயற்சி இருந்தது
தோல்வி இருக்க
வெற்றி இருந்தது
எல்லாம்
கால சுழற்சிக்கு
உட்பட
ஒன்று இருக்க
ஒன்று இருக்கும்.

மைக்கேல் ஜாக்சன் சுயசிகிச்சையின் பலிகடா

வலியைப் போக்குவதற்காக டெமெரால்(Demerol) என்ற மருந்து மருத்துவரால் பரிந்துரை செய்யப்படவேண்டிய வகை மருந்து ஆகும்.

மைக்கேல் ஜாக்சன் சமீபகாலமாக அதிக அளவில் டெமெரால் மருந்தை தனக்கு த்தானே ஊசி போட்டுக் கொள்ளத் தொடங்கியதாக தெரிகிறது.

தொடர்ச்சியாக இந்த மருந்தை பயன்படுத்துவோர் அந்த மருந்துக்கு அடிமையாகி விடும் அபாயம் உள்ளதாக லண்டனைச் சேர்ந்த மருந்துவவியல்பேராசிரியர் ஸ்டீவ் பீல்டு கூறுகிறார்.
பிறகு மருத்துவரின் அனுமதியின்றி தன்னிச்சையாக வலியைப் போக்கும் பெத்தடின் மருந்தை அடிக்கடி பயன்படுத்தினால் சுவாசம் குறைந்துவிடும் மாரடைப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 26, 2009

மரணயோகம்

நல்ல நாள் பார்தீங்கின்னா நாளைக்கு விறை விட்டுபுடலாம் என்று அந்த வேலைகாரர் சொன்னார்.

நீ வேற நாம என்னக்கு நாள் பாத்துருக்கோம்.

இல்லங்க அஷ்டமி நவமி இப்படி ஏதாவது இருந்துச்சுன்னா விறை விடமாட்டாங்க அதனாலதான்.

சரி நான் கேக்குறேன்.

சாமி நாளக்கு நல்ல நாளா பாத்து சொல்லுங்க …

ஏன் கேக்குறீங்க..

நாளக்கு விறை விடலாமுன்னு இருக்கோம் அதனாலதான்.

காலண்டர் பார்த்தார் சாமி நாளக்கு வேண்டாம் ரெண்டுநாளு கழிச்சு விடலாமே..

ஏன் சாமி..

நாளக்கு முழுக்க மரணயோகம் வருது. அப்புறம் அஷ்டமி நவமி ன்னு வருது பாத்து செய்யுங்க.

சரிங்க சாமி ..

விறை விட தேவையான அத்துனை ஏற்பாட்ட செஞ்சாச்சு இனி நிப்பாட்ட கூடாது.

விறைய விட்டுட வேண்டியதுதான் ஆண்டவன் கொடுத்த எல்லா நேரமும் நல்ல நேரம் தான்.

வா..பாத்துகலாம் சாயங்கலாம் விறைய விட்டுபுடலாம்.

Wednesday, June 24, 2009

நகர்வலம் புறப்பட தயாரானார் ராமர்

வானத்தின் நீலம் கலர் சாயம் முகத்தில் அடிக்கப்பட்டது. ரத்தசிவப்பு கலர் சாயம் உதடுகளில் பூசப்பட்டது. கலர் மணிகள் மாலைகள் சிறியதும் பெரியதுமாக கழுத்தில் மாட்டப்பட்டது. கலர் கலராய் மினுக்கும் ராஜா காலத்திய ஆடைகள் அணியப்பட்டது.
பட்டாபிஷேகம் கிடையாது கிரீடம் சூட்டப்பட்டது.

இதோ தயாராகிவிட்டார் இந்த யுகத்து ராமர். பாவம் ராமர் அரசராயிருந்தவர் இந்த யுகத்து ஆண்டியாகிவிட்டார்.

வீடு வீடாய் கடை கடையாய் ஏறி இறக்கினர். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அதிகபட்சம் ஐந்து ரூபாய் கிடைத்தது. காலையில் ஒன்பது மணிக்கு போட ஆரம்பித்த வேசம் கிட்டதட்ட ஒரு மணி நேரம்கழித்து பத்து மணிக்கு நகர்வலம் புறப்பட தயாரானார் ராமர் நான்கைந்து மணி நேரங்கள் செலவழித்து நகர்வலம் முடிக்க அசந்து போய் மர நிழலில் ஒதுங்கி வேசம் கலைத்தார் ராமர்.

சேர்ந்த சில்லரைகளை எண்ண ஆரம்பித்தார் வேசராமர். இருபதைந்து ரூபாய் கொண்ட சில்லரை குவியல்கள் இருந்தது. ஒன்று இரண்டு மூன்று என ஆறு குவியல்கள்
ஆகா ..இன்றைக்கு ராமன் போட்டபடி நூற்றைம்பது என்று தனக்குள் பேசியப்படிவேச ராமர் அடுத்த ஏரியா நகர்வலத்துக்கு புறப்பட தயாரானார்.

Monday, June 22, 2009

சாலையில் இயங்கும் ஒயர்லஸ் தொடர்வண்டி

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனம் சாலையில் இயங்கும் கார்களாலான தொடர்வண்டி அமைப்பு ஒன்றை வடிவமைத்து வருகிறது. 10 கார்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்று மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் செல்லலாம். கார்களின் அணிவகுப்பில் முன்னால் செல்லும் ஒரு காரில் மட்டும் டிரைவர் கவனமாக வாகனத்தை ஓட்டினால் போதும் அதைப் பின்தொடர்ந்து செல்லும் 9 கார்களிலும் டிரைவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

இந்த அணிவகுப்பு அமைப்பிற்கான சென்சார்கள் குறைந்த அலைவரிசையை பயன்படுத்தும் ஒயர்லஸ் கருவிகள் ஆகியவற்றைவோல்வோ நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்த கருவிகள் பிற தயாரிப்பாளர்களின் வாகனங்களிலும் பொருத்தக்கூடியதாக இருக்கும்.

முக்கிய நகரங்களிலிருந்து ஓரே தடத்தில் பயணம் செய்யவிருக்கும் வாகன உரிமையாளர்கள் அணிவகுப்பி்ல் பங்கேற்க முன்பதிவு செய்து இவ்வமைப்பை பயன்படுத்தும் தூரத்திற்கேற்ப அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும்.

Saturday, June 20, 2009

முதிர் கன்னி


இன்னமும்
முதிர்கன்னிகளாய்
பெண்கள்
கிரகம் சரியில்லை
தோஷம் பெண்ணுக்கு
வளர்ந்த சமூகம்
வரதட்சணை
ஒரு வீடு
நான்கு பெண்கள்
பல வீடு
வறுமையின் கொடுமை
இன்னமும்
முதிர் கன்னிகளாய்
பெண்கள்
உணர்வுகள் பெருகி
உணர்வுகள் அழிந்து
உள்ளுக்குள் குமுறி
தேய்ந்து போகும்
உயிர்ப்புகள்
வெளிப்படும் உணர்வுகள்
விரக்தியாய் பேச்சு
துடிப்புகள் இல்லா
நடத்தை
இன்னமும்
முதிர் கன்னிகளாய்
பெண்கள்.

தொடு சுகம்

நாம் வளர்க்கும் பிராணிகளிலேயே நாய்தான் தொடு சுகத்தை ரொம்பவும் விரும்பும். நாம் வெளியூர் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுமே பாய்ந்து வந்து நம்மபேரில் விழுந்து கட்டிப்பிடிடா என்னை என்று சொல்லுவதுபோல இருக்கும் அதன் ஆரவாரம்.

பொதுவாக தொடுசுகத்தை விரும்பாத அந்தச் சுகத்துக்கு ஏங்காத உயிர் ராசிகளே கி்டையாது மனிதராசி உட்பட.

முதல்முதலில் இது இவனுக்குக் கிடைப்பது பெற்ற தாயிடமிருந்துதான் . இது கிடைக்காத அதிஷ்டங்கெட்ட(அனாதை)ப்பிள்ளைகளை நான் கவனித்திருக்கிறேன். அவைகள் கட்டுக்கடங்காத சுழிசேட்டைகள் செய்துகொண்டே இருக்கும்.

இது பெறுகிறவர்க்கும் இன்பம் தருகிறவர்க்கும் இன்பம்.

இந்தச் சுகம் தாயிடம் முளைவிட்டு தந்தையிடம் வேர்விட்டுசகோதரர்களிடம் இலைவிட்டு நண்பரிடம் மொட்டடாகி காதலரிடம் பூவாகி..என்று வளர்ந்துகொண்டே போகும் . உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் இந்தத் தொடுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கும் அவை எந்தவகை உணர்ச்சியானாலும் சரி.

தொடுதலினுடைய கிளைவிடுதல் என்பது பலவகைகள் ஆரம்பத் தொடுதல் தடவுதல் உராய்தல் அழுத்துதல் அமுத்துதல் நிமிட்டுதல் செல்லத்திறுக்கல்கள் நுள்ளுதல் தட்டுதல் இப்படி இன்னும் இன்னும் இதன் ஆக உச்சம் தழுவல் ஆறத் தழுவுதல்.

-கி.ராஜநாராயணன்-

Friday, June 19, 2009

எத்தன பேர் வர்ற சொல்லுற..


உளுந்த எடுத்து புடுலாமா கர்ணா…

இன்ன ஒரு நாலு நாளு போவட்டுங்க எடுத்துபுடுவோம்.

இல்ல கர்ணா..எடுத்து புடுவோம் . ரெண்டு நாளா மாடு ஒன்னு வந்து ராவடி பண்ணிகிட்டே இருக்கு ஒன்னு ரெண்டு காயி இருக்கதான் செய்யும் அதெல்லாம் பாக்கபுடாது கர்ணா..

யாரு மாடுங்க அது.

யாரு மாடுன்னே தெரியல..நானும் தெருவுல போயி விசாரிச்சு பாத்தாச்சு இன்னக்க கூட கரெக்டா டயத்துக்கு வந்துருச்சு ரோட்ட தாண்டி போய் வெரட்டிட்டு வர்றேன்.

சரி.. சரிங்க அப்புறம் ஏன் போட்டு வைச்சிகிட்டு நாளக்கு ஆள வர சொல்லி புடுறேன் எடுத்து புடுவோம்.

எத்தன பேர் வர்ற சொல்லுற கர்ணா..

என்னங்க ஆறு சனம் வர்ற சொல்றேன் பாத்துகலாம் எடுக்க முடிஞ்சா எடுக்கட்டும் இல்லாட்டின்னா மக்க நாளு எடுத்து போவுது என்னப்ப இப்ப தக்கா முக்கி பாத்துட்டு செய்வோமுங்க..

அய்யா அப்படியே குறுவைக்கு விறைய விட்டுபுடுவோங்க.. தண்ணி இப்ப வராது போருல தண்ணிய பாச்சுப்போம் . பாதிலேயே தண்ணி வந்துச்சுன்னா அதக்கு தக்கவாறு பாத்துப்போம்.

சரி கர்ணா..உளுந்து எது மிச்சமா இருக்குமா..

பாப்புங்கய்யா..நாம தண்ணி பாச்சின பிறகு ரெண்டு நாள்ல மழ பேஞ்சு போச்சுய்யா பாதி செடி செத்து போச்சு..

என்னய்ய செய்யிறது நாம எவ்வளோ மெனகெட்டாலும் மானம் ஒத்துழைச்சாதாங்க உண்டு.

வர்றேன் கர்ணா..

நீங்க வாங்கய்யா..

Thursday, June 18, 2009

அதற்கு கூட மனது இல்லாத மனிதர்களிடம் பழகி என்ன பயன்?

அவர்கள் வீட்டுக்கு மின்சார விளக்கு எரியவில்லையென்றால் ஆட்கள் கூட்டி செல்வான். யாருக்கும் உடம்பு சரியில்லையென்றால் டாக்டரிடம் கூட்டி போவான். மீன் தேவையென்றால் வாங்கி வந்து தருவான். கிட்டதட்ட அவர்கள் வீட்டு ஆளாய் நின்றான்.

அவர்களும் வஞ்சகம் இல்லாமல் வேலை வாங்கி கொண்டார்கள். பழக்க வழக்கம் நன்றாகத்தான் சென்றது.

இவன் வீட்டில் தங்கைக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்தது.
அவர்களை விடவும் மிகவும் சுமரான குடும்பம் இவனுடையது. தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது சொல்லி கொண்டிருப்பான் .

எப்படி செய்யபோகிறீர்கள் ? என்றோ அவனுடைய நல்லது கெட்டது குறித்தோ வாய் திறந்து ஒரு வார்த்தை கேட்க மாட்டார்கள்.

இதையெல்லாம் தாண்டி அவனிடம் வேலை சொல்வதையே குறைத்து கொண்டார்கள். இவனுக்கு குழப்பம் ஏன் அழைக்கவேயில்லை . அவனும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

திருமணம் நல்லபடியாக முடிந்தது. கொஞ்ச நாட்களில் பழையப்படி வேலைகள் சொல்ல ஆரம்பித்தார்கள். இவனுக்கு புரிந்து போனது அவர்களுடைய மனது பற்றி இனியும் இந்த பழக்க வழக்கம் தேவையா என்று யோசித்தவாறு அந்த நட்பை உதறினான்.

மனிதன் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் பிராணி தான். யார் எதை செய்தாலும் நேரடியாக அல்லது மறைமுக எதிர்பார்ப்புகள் கட்டாயம் உண்டு. உதவி இல்லையென்றாலும் கூட ஆறுதல் வார்த்தைகள் தேவை.
அதற்கு கூட மனது இல்லாத மனிதர்களிடம் பழகி என்ன பயன்?

Wednesday, June 17, 2009

பேசி கொண்டே இருப்பாள் அந்த பெண்

பேசி கொண்டே இருப்பாள் அந்த பெண். தான் எதற்காக பேசுகிறோம் என்று மட்டும் தெரியாது. ஆனால் பேச வேண்டும். அப்பாவியாய் பேசுவாள் கோபபடுதல் கூட கோபமாய் தெரியாது வெகுளியாய் தெரியும்.

அந்த பெண் நான்கைந்து சகோதரர்களுடன் பிறந்தவள் தான்.
சொத்து பிரிக்கும் போது இவளை திருமணம் செய்து வைக்க ஆக வேண்டிய செலவுக்கு ஈடாக வீட்டு மணை எழுதி வைத்தார்கள்.

உடல் வளர்ச்சி உண்டு உள்ள வளர்ச்சி சமுதாய ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஓடும் அளவிற்கு வளர்ச்சி இல்லை. அதனாலயே யார் இந்த பெண்ணை வைத்து கொள்வது போட்டா போட்டியில் இந்த பெண் பந்தாடப்பட்டாள்.

அந்தந்த சகோதரர்களின் மனைவிகளிடம் பட்ட துன்பமும் கொஞ்சம் நஞ்சமல்ல . இவள் திருமண செலவுக்கென பங்கு இருந்ததால் மாப்பிள்ளை பார்த்தார்கள். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் போல மாப்பிள்ளை பார்த்து பவுன் போட்டு வண்டி வாங்கி கொடுத்து எல்லா சீர் செய்து கல்யாணம் முடித்தார்கள்.

புகுந்தகம் போயும் பெண் பேசி கொண்டே இருந்தாள் நல்லது கெட்டது தெரியவில்லை என்ன செய்ய முடியும் . மாப்பிள்ளை வீடடார் நல்லவர்கள் பெண் வீட்டாரிடம் உண்மை சொல்லி தான் வாங்கிய சீர் அனைத்தையும் திரும்ப கொடுத்து பெண்ணை வீட்டில் விட்டு சென்றார்கள்.

அதற்கு பிறகு இந்த பெண்ணுடைய வாழ்க்கை மிகவும் துன்பத்திற்குள்ளானது.

ஒரு சகோதரர் மட்டும் சகோதரியை பாதுகாத்தார் ஆனால் பொண்டாட்டிக்கு கட்டுபட்டவர். அவர் பொண்டாட்டி வாயிலாக அது துன்ப படுகிறது இவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அந்த பெண்ணுடைய நிலைமை வீட்டிற்கு பின்புறம் ஒரு சிறு இடம் ஒதுக்கி அங்கு வைத்துள்ளார்கள். அவர்கள் வீட்டு நாய் வீட்டு திண்ணையில் ஓய்யாரமாய் படுத்து தூங்கும்.

யாரை குற்றம் சொல்வது இந்த பெண்ணை பெற்றவர்கள் குற்றமா அல்லது இந்த பெண் மனவளர்ச்சி இல்லாமல் பிறந்தது குற்றமா .. எல்லோரும் வாழ்க்கை இருக்கதான் செய்தது இவர்களையும் சேர்த்து தான்.

Tuesday, June 16, 2009

அழுதப்படியே இருந்தான் அந்தபையன்.

மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பாக எல்லோரும் கூடியிருந்தார்கள். சில பேர் நோயுற்று சேர்க்கபட்ட தன்னுடைய உறவினர்களை பார்க்க பல பேர் இறந்துபோன தன்னுடைய சொந்த அல்லது உறவினர்களின் உடல்களை வாங்க வெளியில் காத்து கிடந்தார்கள்.

சத்தம் போட்டு விரைந்து வரும் ஆம்புலன்ஸ் வண்டியிலிருந்து முதலுதவி செய்யப்பட்ட மயங்கி நிலையில் இருந்த அந்த நடுவயதுகாரர் தள்ளுவண்டியில் படுக்க வைத்து மருத்துவமனையின் உட்புறம்
கொண்டு செல்லப்பட்டார்.

வருபவர்கள் உட்கார நீண்ட செட் போடப்பட்டிருந்தது. அதில் ஆண்களும் பெண்களுமாக நிறைந்திருந்தார்கள்.

அவர்களுக்கு நடுவில் இருபது வயது மதிக்கதக்க பையன்
அழுதபடியே இருந்தான்.

எலா..அழுவதடா கண்ணு…..

எதிரில் அமர்ந்திருந்த முதியவர் அவர் ஊனம் நடக்க குச்சி வைந்திருந்தார் அந்த குச்சியை காட்டி டேய்…பேசமா இருக்கனும் இல்ல உதச்சு புடுவேன் என்று அந்த பையனை மிரட்டினார்.

அவன் பார்த்தான் வெறுமன பார்த்தான் அவனுடைய பார்வைக்கு எந்த அர்த்தமும் இல்லை. கண்களில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

ஐந்து நிமிடம் கழிந்தது திரும்பவும் எழுந்து நின்று அழ ஆரம்பித்தான் பையன்.

உட்காருப்பா என்று கையை இழுத்து உட்கார வைத்தார்கள்அவன் பக்கதிலிருந்த பெண்மணி இந்தாப்பா துடைச்சுக்க என்று துண்டு கொடுத்தாள்.

துண்டை வாங்கி அப்படியே வைத்தான். கண்களில் கண்ணீர் வழிந்த படியே இருந்தது.

திரும்பவும் மிரட்டினார் பெரியவர்.

இந்நிகழ்வு தொடர்ந்த படியே இருக்க எல்லோரும் ஏன்? வினாவுடன் அந்த பையனை பார்த்தப்படியே இருந்தார்கள்.

அழுதப்படியே இருந்தான் அந்தபையன்.

“ராகிங்” பற்றியபல்கலைக்கழங்களின் மானியக்குழு அறிவித்துள்ள விளக்கம்

சீனியர் மாணவர்கள் கேலி செய்தால் தான் ராகிங் என்பது தவறான எண்ணம்.

புதிய மாணவர்களை மட்டுமின்றி எந்தவொரு மாணவனையும் பிற மானவர்கள் தவறான பேச்சு தவறான கடிதம் மற்றும் தவறான செயல்களால் கேலி செய்வது முரட்டுதனமாக நடந்து கொள்வது ஆகியவை ராகிங் குற்றம் ஆகும்.

உடல் ரீதியாக துன்புறுத்துவது பாலியல் ரீதியில் திட்டுவது ஓரின சேர்க்கை பலவந்தமாக ஆபாசப்படுத்துதல் உடலில் காயங்கள் ஏற்படுத்துதல் சுகாதார கேடு விளைவித்தல் போன்றவையும் ராகிங்தான்.

ஆபாசமாக பேசுதல் ஆபாசமாக தபால் இ-மெயில் அனுப்புதல் பொதுவாக அவமானப்படுத்துதல் மனஉளைச்சல் ஏற்படுத்துதல் துன்புறுத்தி இன்பம் காணுதல் போன்ற செயல்கள் அனைத்தும் ராகிங் குற்றத்தின் கீழ் வரும்.

இவ்வாறு பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றம் ராகிங் குற்றங்களுக்கு ஜாமீன் கிடையாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Monday, June 15, 2009

புகைப்பட தொகுப்புதுணைமுதல்வர் வருகை

காலை ஏழு மணிக்கு பேருந்து நிலையத்தில் டிராபிக் போலீசார் பதினைந்து பேர் வேனில் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அடுத்த அரைமணி நேரத்தில் இன்னொரு வேன் நிறைய போலீசார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.

இரு அணியினரும் பதினைந்து அடிக்கு ஒரு ஆளாக நின்று கொண்டிருந்தனர். பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கூட்டம் வேலைக்கு செல்வோர் கல்லூரிக்கு செல்வோர் என அந்த பேருந்து நிலையம் களை கட்டியிருந்தது. ஒரு பக்கம் கட்சியினர் ஒன்று சேர ஆரம்பித்தார்கள்.

போலீசார் விரைந்து போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்கள்.

எட்டு மணியை நெருங்கியது பேண்டு வாத்திய குழுவினர் வரவேற்பிற்கான இசையை அடித்து நொறுக்கி கொண்டிருந்தனர். வெள்ளை சட்டை வெள்ளை வேட்டிகள் ஒரு இடத்தில் குமிழ காலை வெயில்பட்டு பளீரென்று எதிரொலித்தது.

அந்த எல்லைக்கு உட்பட்ட ஹைவே போலீசார் தனக்கான வாகனத்தில் வந்து போக்குவரத்தை சரிப்பார்ந்தனர்.
அங்கிருந்த போலீசார் பொதுமக்கள் பரபரப்பாயினர்.
போக்குவரத்து மேலும் சீர்மை செய்யப் பட்டது.

அடுத்த பகுதியில் கட்சி பிரமுகரின் வாகனம் மிகவும் விரைந்து சென்றது. உச்ச கட்டத்தை நெருங்கியது அங்கிருத்தவர்களின் எதிர்பார்ப்பு வரும் வழியை எல்லோர் கண்களும் உற்றுநோக்கியபடி இருந்தது.

இடையே பல்வேறு விதமான கருத்துகள் அனுமானங்கள் விவாதிக்கப்பட்டன. இங்கு நிற்கமாட்டார் நிற்பார்
என பலவிதமான அனுமானங்கள் பொதுமக்களின் எதிர்பார்ப்பு இடையே நிகழ்ந்தது.

அட்வான்ஸ் பைலட் என்ற வாசகம் குறிப்பிட்ட வாகனம் விரைந்து வந்தது.

மிகுந்த பரபரப்பு

அடுத்து பைலட் என்ற வாசகம் குறிப்பிட்ட வாகனம் விரைந்து வர அதன் தொடர்ச்சியாக அடுத்த இரண்டு காவல் வாகனம் விரைந்து வர மிக வேகமாய் ஒலித்தது வரவேற்பு இசை.

துணை முதல்வர் அமர்திருந்த வாகனம் விரைந்து வந்தது
கட்சி பிரமுகர்கள் கூட்டமாய்நின்ற இடத்தில் வாகனம் நின்றது சால்வை மரியாதை வாங்கி கொண்டு புறப்பட்டது.
சென்றவுடன் போக வேண்டியவர்கள் கலைந்தார்கள் திரும்பவும் குழப்பம் ஏற்பட்டது. போலீசார் கடுப்படித்தார்கள் போக்குவரத்தை சரிசெய்தார்கள்.

Saturday, June 13, 2009

வடசென்னை ரவுடி வெல்டிங்குமார் மகனின் கதறல்

ரவுடிகள் ராஜ்ஜியத்தில் ரோந்து வரும் என் அப்பாவைப் போன்ற சகாக்களே! உங்களை எல்லாம் கும்பிட்டு கேட்கிறேன். குற்றங்களை கைவிடுங்கள் ரவுடித்தனத்திற்கு ஆளான எங்கள் தந்தையை ரவுடிகளுக்கே பலி கொடுத்துவிட்டு இப்போது நாங்கள் நிற்கதியாய் நிற்கிறோம்.

எத்தனை பேரின் உடல்களை சல்லடையாக்கி கொன்றீர். இப்போது பாருங்கள் உங்கள் உடலிலேயே இருபது கத்தி குத்துகள் என்று தன் தந்தையின் உடலை கண்ட சுசில்குமார் கதறி கதறி அழுதார்.

என்ன அழுது என்ன பயன் ரவுடிகள் உருவாவதில்லை உருவாக்கபடுகிறார்கள்.

வறுமை அதிகார மோகம் அன்பின்மைஇது மூன்றும் மனித சமுதாயத்தில் இருக்கும் வரை ரவுடிகள் இருப்பார்கள் அழிவார்கள் இது உண்மை.

Friday, June 12, 2009

சீனாவின் சின்னதனம்

சர்வதேச மார்கெட்டில் “மேட் இன் இந்தியா” என்று குறிப்பிட்ட மலேரியாவுக்கான மருந்துகளை போலியாக சீன நிறுவனங்களே பெருமளவில் உற்பத்தி செய்துள்ளன.
தரம் குறைந்த மருந்துகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளன.

சீன நிறுவனங்களின்மோசடி தனம் நைஜீரிய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

எதிரி வல்லவனாய் தான் இருப்பான் நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.

எல்லாவற்றிலும் மெத்தனம் காட்டும் மத்திய அரசு இதிலாவதுவிழித்து கொண்டால் சரி.

இனிமையாய் உன் நினைவுகளில்…

இனிமையான உன் நினைவுகளினால் என்னுள் சங்கீதம் இசைக்கும் ஞானத் திருவுருவே! வேத நாயகனே! அஞ்ஞான இருள் படைத்து அதை அகற்றி மெய்ஞான ஒளி தரும் பராபரமே! ஏக்கங்களின் விளைவாய் ஏமாற்றம் உண்டாக்கி பற்றுகள் நீங்க ஏற்றம் தரும் கருணைக் கடலே!கண்ணின் கருவிழியும் நீ காட்சியும் நீ! மாண்புகள் பலவும் நீ! மாசற்ற அன்பு நீ! ஆனந்த பிறப்பிடம் நீ! எழும் உன் நினைவுகளின் ஏகாந்தம் நீ!

நீபடைத்த படைப்பில் அனைத்துமே அர்த்தமுள்ளவை அவற்றின் வேறுபாடுகள் உன்னில் எழுந்தவை உன்னில் வளர்பவை உன்னில் மறைபவை.

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என எல்லாம் கடந்து நீ படைக்கும் ஒவ்வொரு உலகமும் மாறுபாடுகளையுடயது. எல்லைகள் வகுக்க முடியா அளவில் பரந்து விரியும் பரம்பொருளே!

உன் அமைதியாய் மழலை பேச்சு இயற்கை எழில் தவழும் தென்றல் என எவ்வளவோ இருக்க உன் கோபமாய் வறுமை இயற்கை சீற்றம் என வெளிகாட்டுகிறாய்.

நீ வெளிப்படுத்தா ரகசியங்கள் ஆக நீயே இருக்க எல்லாவற்றிலும் எக்காலமும் நிறைந்து நிற்பவனே உன்னில் பணிந்து...

பாக்கி பணத்த கொடுடீ

பார்சல் டீ ஒன்னு கொடுங்க...

எம்மா..போண்டா எனக்கு.. கையிலிருக்கும் பிள்ளை கேட்டது.

ஆமா ..வாங்கி கொடுத்தா நீ திங்க மாட்டே..யாரு கையிலாவது கொடுத்துபுட்டு எம்மாபோண்டான்னுகேப்ப..

எங்க போண்டா ஒன்னு அப்படியே கணக்குல சேத்துங்குங்க..

எம்மா அப்பா வருது பார்.

சீக்கிரம் பாக்கிய கொடுங்க என்று டீக்கடைகாரரை அவசரப்படுத்தினாள் தாய்.

கணவன் வந்து விட ஆமா இருநூத்தி அம்பது ரூபா சம்பளம் கொடுக்கற வேலக்கு போவாத ..யாரு கடன் சொல்றாங்களோ அவங்களுக்கு போற வேலைக்கு என்று கணவனிடம் பாய்ந்தாள்.

பாக்கி பணத்த கொடுடீ..

நேத்து வாங்குன சம்பளத்துக்கு கணக்கு சொல்லு என்றாள் மனைவி.

எங்கடீ வந்து கணக்கு கேக்குற..

ஆமா உன்னுகிட்ட வீட்டுகுள்ள கேட்டா காதவ சாத்தி வைச்சு உதப்ப..

அதான் இங்க கேக்கிறேன்.

சரி ..சரி பணத்த கொடு என்றான் கணவன்.

பாத்துகய்யா உன் பொண்டாட்டி எவ்வளோ வெவரமா இருக்குதுன்னு என்று டீக் கடைக்காரர் கிண்டலடித்தார்.

Wednesday, June 10, 2009

அவர் வேலைக்கு செல்லவில்லையென்றால்

அவர்காலை ஐந்து மணிக்கு வேலைக்கு சென்றால் பெரும்பாலும் வீடு திரும்ப இரவு பதினொன்றை ஆகிவிடும். திரும்பவும் காலை ஐந்து மணிக்கு செல்ல வேண்டுமென்றால் காலை நான்கு மணிக்கே கிளம்பவேண்டும்.

பிள்ளைகள் நிறைந்த குடும்பம் சொற்ப ஊதியம். இடைப்பட்ட அத்துனை நிர்வாகமும் அவருடை பொண்டாட்டி கையில் தான். வீட்டினுடைய அத்திவாசிய பொருட்களிலிருந்து மற்ற நல்லது கெட்டது அனைத்தையும் சமாளிக்க வேண்டும்.

அன்றைய தினம் அவர் வேலைக்கு செல்லவில்லையென்றால் மறுநாள் வீட்டினுடைய தேவைகள் நிறைவேற்றம் மிகவும் கஷ்டம். அதனால் எதைப்பற்றியும் கவலைபடாது வேலைக்கு சென்றுவிடுவார்.

இரவு வீடு திரும்பியவுடன் இரவு சாப்பாட்டிற்காக முகம் கால் கை அலம்பி உட்காருவார். சாப்பாட்டை கொண்டு வந்து வைப்பார்கள் நாலு உருண்டை உள்ளே போயிருக்கும் அவர் மனைவி

ஏங்க..நாளக்கு அரிசி வாங்கியாகனும். நடுவலுவன் நோட்புக் கேட்டுகிட்டே இருக்கான்.

செய்வோம் முதலாளி கிட்ட கேட்டு இருக்கேன்.

அப்புறம் அந்த கல்யாண தேவை வருது அதுக்கு பட்டம் கட்டணும்.

செத்தநாலி சும்மா இருடீ ...

செய்ய வேண்டியத சொன்னா ஏங்க இப்படி

இப்ப நான் சாப்பிடனுமா ..வேண்டாங்கிறியா ..சொல்லு

அதற்கு பிறகுகனத்த மௌனம் நிலவும் இருவரிடமும் அப்படியே படுக்கை சென்று விடுவார்கள்.

சில நாட்கள் சண்டையும் நடக்கும்.

இதுவும் குடும்பம்.

Tuesday, June 09, 2009

தீவிரம் குறைந்தது திரும்பவும் நெருப்பாய்

நெருப்பா சுட்டது உடம்பு அவயங்கள் சோர்வாகி மிகுந்த களைப்பை ஏற்படுத்தியது. என்ன செய்ய வேலைக்கு வந்தான் அவன். வந்தாலும் அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை.
பிறரிடம் கேட்டு அறிந்த நாட்டு வைத்திய மருந்தைஉட்கொண்டான்.

தீவிரம் குறைந்தது திரும்பவும் நெருப்பாய் தகித்தது.

வயலில் மேய்ந்த மாட்டை விரட்டப்போய் மாட்டினுடைய கயிறு காலில் சிக்கி காலின் தோள் வழுகொண்டதால் புண்ணாகி உடனே ஆறவில்லை. கால் நடக்க முடியாமல் அண்டங்கட்டி வந்தது இந்த சொரம்.

வேலைக்கு போய்தான் ஆகவேண்டும் சாமளித்து விடலாம் என்ற நினைப்பில் வேலைக்கு வந்தால் ஒன்றும் கதைக்கு ஆகவில்லை.

சொரம் மிகுதியால் கண்ணை மூடினால் நினைவுகளுக்கு ஒழுங்கு முறை வராமல் தவித்தது.

அவனுக்கு ஆஸ்பத்திரி போவ விரும்பாமல் சொரத்தை அனுபவித்தப்படியே உட்கார்ந்திருந்தான்.

Monday, June 08, 2009

தேவை பெருக அலைச்சல் பெருகி என்னடா லைப் இது..! ?

ஏங்க போங்க..அடிக்கடி மனசு குந்தி போயிருதுங்க. ஆமா ஓரு ஆளா நின்னுகிட்டு என்னத்த செய்ய முடியுது. மெயினா காசு அப்புறம் குடும்பத்தோட தேவை நிறைவேற்றுதல் சொந்த தேவைகள் இதற்கிடையே நம்ம சுற்றமும் நட்பும்.

இதுல காசுக்கான அலைச்சல் பத்தும் பத்தாம இருந்துச்சுன்னா அவ்வளதான் மனச எவ்வளவு தூக்கி நிறுத்துனலாம் நிக்காது குழம்பிகிட்டே இருக்கும்.
தேவை இல்லாத கோபம் .

உழைப்ப உழைக்கதான் முடியும். கெடைக்குது ஆனா பசி அதிகம் பத்தமாட்டேங்குது. எதையும் முடியாதுன்னு சொல்ல முடியாது செய்யனும் செஞ்சே ஆகனும். தேவை பெருக
அலைச்சல் பெருகி என்னடா லைப் இது..! ?

இதான் லைப்பா இல்லாட்டி இத தான்டி ஏதும் இருக்கா யோசிச்சா குழப்பம் தான் மிச்சம். நாளைய தேவை மனசுல நின்னாலைப் தான்டி என்னத்த யோசிக்க..

எல்லா சொல்லுவாங்க நம்பிக்கை கொள் அப்படின்னு ஆன எதார்த்தம் கஷ்டம் மனச தேத்த சரியான ஆள் இல்லாட்டி மேல கீழதான் கடைசியா என் தலையெழுத்து என்ன செய்ய அ னுபவிச்சிதான் ஆகனும் வாழ்க்கய ஓட்ட வேண்டியதான்.

பெரியகுடும்ப நிர்வாகம் ஒன்டி ஆளின் புலம்பல்.

இலங்கை தமிழர்களின் மயானமாகத்தான் இருக்கும்.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு சில யோசனைகளை மு.கருணாநிதி ப.சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை தமிழர்களின் நலனுக்கு முதன் முதலாக குரல் கொடுக்க வேண்டிய உரிமையுடையமு. கருணாநிதி அவரே குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் மௌனம் சாதித்து விட்டார்.

கிட்டதட்ட எல்லா வன்கொடுமைகளைத் தமிழினத்துக்கு எதிராக
நடத்தி முடித்துவிட்டது இலங்கை அரசு. இன்னமும் நடத்தி கொண்டிருக்கிறது. உலக நாடுகளும் இதைப்பற்றி வருத்தமும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றன. சிறிதும் கவலை படாமல் இலங்கை அரசு மேற்கொண்டு தன்னுடைய இனவதையை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறது.

விரைந்து செயல்படவேண்டிய நேரத்தில் யோசனைகள் இப்பொழுதுதான் தலைவர்களுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படுகிறது.

இவர்களுடைய யோசனைகள் செயல்வடிவம் கொடுக்கும் நேரத்தில் இலங்கை தமிழர்கள் கிட்டதட்ட தனக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை தாங்கிவாழும் பக்குவம் பெற்றிருப்பார்கள். எல்லாம் இழந்து நிற்கும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு இவர்கள் திட்டங்கள் செயல்படுத்தும் இடம் கிட்டதட்ட இலங்கை தமிழர்களின் மயானமாகத்தான் இருக்கும்.

Sunday, June 07, 2009

அன்புள்ள காதலா அன்புடன் 8

மெதுவாய் ஊடுருவும்
எனது உயிர்ப்பு
அவனுள் காதலாய்
ஊடலாய்
சினுங்களுக்காய்
எனது நடிப்பு
அவனது இதயத்தில்
பிடிப்படும்
எனது மென்மை
உரசல்களுக்கான
உடன்பாடு
தகித்த இரவுகள்
ஆண்மையின் விழிப்பாய்
எனது பூரணம்
உயிர்ப்பை தேடி
அவனுள்…

Saturday, June 06, 2009

இது ஆண் அது பெண்.

பல் இளிக்கும் சிநேகபாவமாய் சிரிக்கும் ஆஹா..என்னடா என்றைக்கும் இல்லா புதுமையாய் சிரிக்குதே மயங்கியது இது.

அது வந்து …ஒரு சின்ன ஹெல்ப் வேணும் நீங்கதான் செய்யனும் வேண்டுகோள் விடுக்கும்அது.

சிரிச்சதாலயே பத்து வருச பழகிட்ட நெனப்பு இதுக்கு என்ன உதவி …கேட்பது இது.

இத மட்டும் செஞ்சு கொடுத்துடுங்க..அது.

இந்தா வர்றேன் வேலை முடிக்க ஆளாய் பறந்தது இது.
(தன் வீட்டின் முக்கிய வேலை பின்னுக்கு)

ஆ..என்ன இவ்வள சீக்கிரமா முடிச்சிட்டிங்களா ..பல் இளிக்கும் அது.

நான் போனா சீக்கிரம் முடிச்சுடுவங்க பெருமையாய் இது.

ரொம்ப நன்றி அது.

இது போற வீட்டு வழி அது வீடு.

சில நாட் பார்க்கும் அது அறிந்ததற்கான முக அறிவிப்பு கூட இருக்காது.

வேலைன்னா சிரிக்குது அது இனிமே இருக்கட்டும் நினைக்கும் இது.

இதுவால் ஆக வேண்டிய வேலை வந்ததுஅதுக்கு வந்தது இது பல் இளித்தது.

தவிர்க்க முடியல இதுக்கு ..என்ன..

“கண்ணின் கடைப்பார்வையை கன்னியர் காட்டிவிட்டால் மண்ணில் மாமலையும் ஓர் கடுகாம்”

Friday, June 05, 2009

ஆசை வந்தது போலவே ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும்சிறுகதை போட்டிக்காக)

எல்லோரும் இருப்பது மாதிரியே அவனும் ஒரு குடும்பமாக அல்லது தன் துணையுடன் இணைந்து அவனுடைய பதிவை இந்த அருமையான உலகில்விட்டுச் செல்ல அவனுக்கு ஆசை வந்தது.

ஆசை வந்தது போலவே கூடவே ஒரு தயக்கம் அவனுக்கு,யாரிடம் இவனுக்கு துணை தேட சொல்வது.

தன்னுடைய சிறுவயதுகளில் யாரோ ஒரு ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் தன் வயதுகளையொத்த சிறுவரோ , சிறுமியோ விளையாடி சென்றதை பார்த்திருப்பான் ஆனால் அவனுக்கு தெரியாது அந்த பிள்ளைகளையுடைய பொற்றோர் தான் அவர்கள் என்று , இவனும் எதிர்பார்ந்திருந்தான் அவனை பாதுகாப்புடன் அழைத்துச்செல்ல , அவர்களோடு இவன் விளையாடி செல்ல விபரம் தெரிந்த நாளாய் தனியாகதான் நின்றிருந்தான்.

எப்பொழுதெல்லாம் பெற்றோருடன் செல்லும் சிறுவர் சிறுமிகளை பார்க்கிறானோ அப்பொழுதெல்லாம் தனிமை உணர்ச்சி தன் மனதின் ஓரத்தில் துளிர்விடும்பார்த்தப்படியே நிற்பான் நிறைய எண்ணுவான் குழம்பியவாறு வேறு இடம் செல்வான்.

வயிறு பசிக்கும் உணவு தேடல் தொடங்கும் அதனால் இவனுடைய தனிமை உணர்வுகள் அடிக்கடி பின்னுக்கு போய்விடும்.

இப்படியாக வளர்ந்தவன் அவன்.

ஆண்டுகள் ஓட வளர்ந்த மனிதனாய் அவன். உணவு தேவை உழைப்பினால் நிறைவேற தனிமை உணர்ச்சிகளின் உந்துதலினால் அதிகம் பாதிக்கப்படுவான் .

ஏன் ? என்ற குழப்பம் தன்னுடைய மனதில் தோன்றியப்படி இருக்கும் விடைகள் கிடைக்காது.

வளர்ந்த உடல் தன்னுடைய செயல்களை பருவத்திற்கேற்றவாறு தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் உணர்வுகளின் வாயிலாக , அவனது அடுத்த தேவை உணவாக மட்டுமே இருந்தால் உணர்வுகளுக்கு தானாய் பூட்டு விழுந்து விடும் .

அவ்வாறு இல்லையென்றால் அவனுடைய செய்கைகளில் மூர்க்கம் கூடி விடும் களைப்பினால் சோர்ந்து போய் உட்காரும் வரையில் அவன் செயல்களில் மூர்க்கம் தொடர்ந்தப்படியே இருக்கும்.

இவனுக்கான தேவையை தானாய் பெறவும் வழி தெரியவில்லை இவனுக்கு , அவ்வாறு பிடித்து அணுகிய எதிர்பாலினத்தையும் அரவணைக்க தெரியாது குழப்பமாய் இடம் பெயர்வான் ஏனென்றால் காடுகளில் வாழவில்லை நகரங்களில் வாழ்ந்திருந்தான் .

உணவுக்கான தேடுதலில் அப்படி இப்படி அனுபவம் பெற்றிருந்தான்.

இன்றைய நாட்களிலும் அவனுக்கு தயக்கம் வரும் யாரிடம் இவனுக்கு துணை தேட சொல்வது என்று ஏனென்றால் அவன்….

Thursday, June 04, 2009

கூரையில் தூக்கியெறியும்வடைக்கு

காசுக்கார குடும்பம் அது. அவர்கள் வீட்டு வேலை தோட்ட வேலை கள் முடிய வேலைக்கு கூலி சரியாக கொடுத்துவிடுவார்கள். மிக அரிதாய் ஒரு சில பேர் தொடர்ச்சியாக அந்த குடும்பத்திற்கு வேலைக்கு செல்வார்கள்.

உலகத்தில் காசு இருந்தால் எல்லாம் நடக்கும் . அவர்களின் நினைப்பு உலகம் புரிந்தவர்களுக்கு தெரியும் காசு அவர் அவர் வாழ்க்கையில் எதுவரை என்பது அதனால் அதற்குரிய மரியாதையை கொடுத்துவிடுவார்கள்.

இவர்களோ நம்மிடம் உள்ள காசுக்காகதான் வேலைசெய்ய வருகிறார்கள் என்ற நினைவுகளினால் பத்து நாள் அவர்கள் வீட்டில் வேலைசெய்தவர் மரியாதை நிமித்தமாக கூட அவர்களை பார்த்துவிட கூடாது. கண்டு கொள்ளமாட்டார்கள் காசு கேட்பார் என்கிற நினைப்பில் பேச தயங்குவார்கள்.

இவர்கள் குடும்பத்தோடு பழகிய முறையில் நண்பன் ஒருவன் சொல்வான் நீங்கள் செய்வது சரியில்லை என்று அடு்த்தநிமிடம் அவர்களின் பதில் “கூரையில் தூக்கியெறியும்வடைக்கு ஒரு காக்கை இல்லை ஒன்பது காக்கை” என்பார்கள்.

நண்பன் தன்னுள் நொந்தவாறு காலம் பதில் சொல்லும் என்ற உள்ள நினைவுகளுடன் இடம் அகன்றுவிடுவான்.

Wednesday, June 03, 2009

காசு இருக்கிறது அவ்வளவுதான்

அம்மா ஆசிரியை அய்யாவும் ஆசிரியர் கை நிறைய சம்பளம் இல்ல.. இல்ல..பை நிறைய சம்பளம். சக ஆசிரியர்கள் மத்தியில் அவர்கள் பிரபலம். ஏதாவது கஷ்டமுன்னா பணம் கொடுப்பாங்க சும்மா இல்ல வட்டி தாங்க..

மாசம் பொறுந்தா டான்னு வட்டி வந்துவிடவேண்டும் இல்லையென்றால் வட்டிக்கு வட்டி தான் அவர்கள் கணக்கு.
அவருக்கு தெரிந்தவர்கள் தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என ஆலமரமாய் விரிந்தது. வட்டி வர வர காசெல்லாம் இடமாகின.

ஆசிரியர்களுக்கு ஒரு பெண் ஒரு பிள்ளை அழகான குடும்பம். பெண்ணை கட்டி கொடுத்தார்கள் பேரப்பிள்ளை பிறந்தது காலம் மாறியது பெண்ணுக்கு நடுத்தர வயதுதான் ப்ளட் கேன்சர் வந்தது அதிர்ந்த குடும்பம் பெயர் பெற்ற மருத்துவமனைகளில் ஏறி இறக்கினார்கள் காசு இருந்து என்ன பயன் விதி வேலை செய்தது.

பிள்ளைக்கு கல்யாண வயது வந்தது பெண் பார்த்தார்கள் அமையவில்லை தேடினார்கள் தேடுகிறார்கள் பிள்ளைக்கு ஏதோ தோஷமாம் பெண் அமையவில்லை. விதி வேலை செய்கிறது.
அவர்கள் வீட்டில் எங்கே நிம்மதி? தேடுகிறார்கள். காசு இருக்கிறது அவ்வளவுதான் அதை பயன் படுத்த கூட ஆள்

கற்பனையாய் அவன்நினைவின்
தாக்கம்
ஏங்கி இழையும்
மனது
விரைந்து வரும்
பெருமூச்சு ஏக்கம்
இயலாமையில்
தவிக்கும் மனது
நிறம் மாறும்
எண்ணங்கள்
கற்பனையாய்
கனவுகளாய்
காகித பூக்களில்
வாசனை தேடும்
எனை இழக்க
அவனை நினைக்க
என்னுள்
கற்பனையாய் அவன்

Tuesday, June 02, 2009

ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை சம்பளமும் நடுத்தர வர்க்கமக்களின் ஏக்கமும்.

தமிழக அரசு ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பளத்தை அரசு ஊழியர்களுக்கு அள்ளிதள்ளியுள்ளது.
ஏற்கனவே ஆசிரியர்கள் பாதிபேர் கந்துவட்டிகாரர் ஆகியுள்ள சூழலில் மேலும் கந்துவட்டிகாரர்களை உருவாக்கும் தமிழக அரசின் சம்பளஉயர்வு.

அரசுஊழியர் அல்லாத நடுத்தரவர்க்கத்தினரை மிகவும் சோதனைக்குள்ளாக்கும் . நாள் முழுக்க உழைத்து அவன் வாங்கும் சம்பளத்தில் சாப்பாட்டிற்கு சரிசெய்ய தன்னுடைய அவசிய தேவைகளுக்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டிவரும். ஏழைகள் ஏழைகள்தான். நடுத்தரவர்க்கம் தன்னுடைய நிலைமையிலிருந்து முன்னேற நினைக்கஎல்லைக் கோட்டிற்கு கீழே ஏழையாய் அடித்துவீழ்த்தபடலாம் அல்லது பணக்கரானாய் உயர்த்தபடலாம்.

சமுதாயத்தில் இக்கரையும் வரமுடியாமல் அக்கரையும் போகமுடியாமல் தத்தளிக்கும் நடுத்தரவர்க்கம். ஊதிய உயர்வு அது சம்மந்தமாக ஏற்படபோகும் பண பரிவர்த்தனைகளில் மிதிப்படபோவது நடுத்தரவர்க்கம்.

ஒவ்வொரு நடுத்தரவர்க்கத்தையும் ஊதிய உயர்வுவாயைப் பிளக்க வைத்ததில் தவறில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails