Tuesday, January 26, 2010

Monday, January 25, 2010

உறுதிமொழிகள்
உறவுகள் நிலைக்கும்

எதிர்பார்ப்புகளுடன்

பழகும் காலங்கள்

உறுதிமொழிகள்

உரையாடல்கள்

எல்லாம் நடக்கும்

நம்பிக்கையுடன்

பேச்சு

வளர் மாற்றம்

நடைபெறா செயல்கள்

நிறைவேறா

உறுதி மொழிகள்

விட்டுபோகும்

தொடர்புகள்

இயக்கம் தான்

நிரந்தரமாய்

மாற்றங்கள்

எப்பொழுதும்...

Saturday, January 23, 2010

துன்பங்கள் வெகுதூரமில்லை
அவனுக்கு தெரியாது அன்றைக்கு அவனது குதிகால் எலும்புகள் உடையுமென்று தன் நண்பனுடைய வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்ப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கப்பட்டான்.

மயகத்தில் இருந்தான் அதற்குள்ளாகவே வேண்டிய முதலுதவிகள் செய்யப்பட்டுபடுக்கையில் கிடத்தப்பட்டான்.

வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு

பதறி கொண்டு வந்தார்கள் . அவன்மேல் அளவுகடந்த வெறுப்பும் உருவானது.

நான்கு நாட்களாக வீட்டில் அவனிடம் சொல்லிவந்தார்கள். டேய் ...உன்னுடைய நடவடிக்கை சரியில்லை பார்த்து நடந்து கொள் என்று நடந்தே விட்டது இன்று.

நடுத்தர குடும்பம் அது. உழைப்புகேற்ற ஊதியம் அவர்களுடைய தொழில் உழைப்பு நின்றுவிட்டால் ஊதியமும் நின்றுவிடும்.

வருமானம் வருவதற்கு தகுந்தாற்போல் செலவு செய்யதது. வருமானத்திற்கு மீறி வந்த செலவுகள் கடனாய் நின்றது அதுவே பெரும் தொகையாக நிற்க இப்பொழுது இவனது செலவுகள் சேர்ந்துகொள்ள குடும்பம் திகைத்தது.

திடீர் விபத்தினால் இவன் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இவனது குடும்பமும் சேர்ந்து பாதித்தது.

விபத்துகள் தவிர்க்க முடியாதவை என்றால் கஷ்டங்களும் தவிர்க்க முடியாதவையே. மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் நடக்க தயாரானது அந்த நடுத்தரகுடும்பம்.

துன்பங்கள் வெகுதூரமில்லை.

Saturday, January 16, 2010

இவர்களுக்கு பூசைகள் தேவையில்லை
காலையிலிருந்து தினமும் பலபோ் வந்து குளித்துபோகும் கரையை சுத்தம்செய்ய ஆரம்பித்தான்.

குளிக்க வரும்போது ஆண்களும் பெண்களும் தூக்கியெறியும் துணிகள் கரை முழுக்க பரவி கிடந்தது.

சிறு சிறு முட்செடிகள் வளர்ந்து கிடந்தன. மாட்டின் கழிவுகளும் மனித கழிவுகளும் ஆங்காங்கு கிடக்ககுளிக்க வருபவர்கள் ஒதுங்கிபோய் குளித்து விட்டு போனார்கள்.

கரையின் சுத்தம் முக்கியம் கிடையாது தன் வேலை முடிந்தால் போதும் என்று கரையின் சுத்தத்தில் அக்கறை காட்டாது சென்றவர்கள் அதிகம். சில சேர்ந்து பேசினார்கள் கவலைப்பட்டார்கள் செய்யவில்லை சென்றார்கள். செய்யகூடிய மனசு உள்ளவர்கள் சிலநபர்களுக்கு சொந்த வேலைபளு காரணமாக செய்யமுடியாமல் போனது.

இவர்களுக்குள் தனி ஒரு ஆளாக நின்று அந்த கரையை சுத்தம் செய்தான் . மெல்லிய உடல்வாகு கலைந்த முடிகள் தன்னை பற்றிய கவலை என்பது இல்லாது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி வயல் வேலை யாக இருந்தாலும் சரி அந்த வேலை முடியும் வரை அந்த வேலையில் அவனுடைய உழைப்பு அவனை ஒரு பைத்தியகாரனாக உலகத்திற்கு காட்டியது. அவன் பெயர் கார்த்தி என்கிற கார்த்திகேயன்.

யாருடனும் அவனுடைய பேச்சு மிக அரிது. குறிப்பிட்ட சிலபேரிடம் மட்டுமே அவனது பேச்சு. வேலையில் காட்டும் அவனுடைய ஈடுப்பாட்டில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

உழைப்பால் அவன் பொருளாதாரத்தில் உயர்ந்து விடவில்லை பத்து மனிதர்களுக்கு மத்தியில் தன்னை

காசினால் பெருமைப்படுத்தி கொள்ளும் அவசியமும் இல்லாமல் இருந்தது.

குடும்பமாக இருந்தாலும் சரி தான் வாழ்ந்த சுற்றுபுறமாக இருந்தாலும் சரி அவனால் முடிந்தவரை பத்து பேருக்கு பயன்பட கூடிய வகையிலே வாழ்கிறான்.

தன் வேலை முடிந்தால் போதும் யார் எப்படி இருந்தால் என்று செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் அவன் மௌனமாய்வாழும் மனித தெய்வம் தான்.

இவர்களுக்கு பூசைகள் தேவையில்லை புகழ் தேவையில்லை .

புகைப்பட தொகுப்பு
Monday, January 11, 2010

தியானமாய் தூக்கம்போர்வை

இழுத்து மூடியப்படியே

படுத்துறங்கிய

அதிகாலை

விழிப்பு தட்டும்

ஒரு முகமாய்

எண்ணங்களால்

ஏதோ ஒரு

மந்திரம்

தியானம் செய்வதாய்

எண்ணங்கள்

தேய்ந்துதூக்கம்

திடீரென்று

விழித்தெழும்மனது

பதற்றமாய்

தன்னையே நொந்து

தொடர் நிகழ்வு

முயற்சியின்மை

தியானமாய்

தூக்கம்.

Sunday, January 10, 2010

பெற்ற மனம்நடக்க முடியா

சூம்பிய கால்கள்

சுப்பன் போகிறான்

பூங்காவுக்கு

ராமன் போகிறான்

கோவிலுக்கு

ஏக்கமாய் எங்கள்

மனது

யார் துணை

தேடியும் யாரும்

இல்லை எங்களுக்கு

பெற்ற மனம்

பதற

அய்யோ ..

எம் புள்ளங்களா..

நான் இருக்கேனடா

உங்களுக்கு..

தள்ள என்கைகள்

ஊனம் இல்லை

தள்ளி வருகிறேனடா

நான் உங்களுடைய

கைவண்டியை

நான் பெத்த

மவனே...

Thursday, January 07, 2010

மனம் தான் என்ன?
மனம் சொல்ல

கண்களில்

தெரிந்த பயம்

மனம் சொல்ல

கண்களில்

தெரிந்த மகிழ்ச்சி

மனம்

போ என்றவுடன்

போக துணிந்த

கால்கள்

கட்டளைகள்

கிடைத்தவுடன்

செயல்களில்

புலன்களின் ஈடுபாடு

நிற்க துணிந்த

மனம்

சாக துணிந்த

மனம்

மனம் மட்டுமே

வாழ்வாய்

மனம் தான் என்ன?

Wednesday, January 06, 2010

கர்ணனின் கொடைத்தன்மை

டாக்டர் ருத்ரன் அவர்கள் கதாபாத்திரங்களிடமிருந்து என்ற தலைப்பில் கர்ணனின் கொடைத்தன்மை பொதுவுடைமையின் பின்புலத்தில் பிறக்கவில்லை அவனுள் இருந்த பிறப்பு குறித்த சமூகக் கணிப்பு குறித்த ஒரு தாழ்வு மனப்பான்மையினாலேயே மேலோங்குகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

பலவீனமான ஒன்றை மறைக்க மற்றவர்களிடம் அதிகம் காணப்படாத அல்லது மற்றவர்களிடம் இல்லாத குணம் அல்லதுமற்றவர்களிடம் இல்லாத தன்மையைப் பெற்று தன்னுடைய வாழ்க்கை சூழலில் தன்னை தொடர்ச்சியாக தக்க வைத்துகொள்வதே இயற்கை. இயற்கையின் பல மாற்றங்கள் , வரலாற்றில் பல மாற்றங்கள் நிகழ காரணமே இந்த இயற்கையின் விதி தான். பலம் பலவீனம் என அலைப் போன்ற நிகழ்வுகள் ஒன்று வாழவும் ஒன்று இறக்கவும் செய்கிறது.

ஆகையினால் கர்ணனின்கொடைத்தன்மைக்கு அவனுடைய தாழ்வு மனப்பான்மையே காரணமாக கொள்ளமுடியாது. எல்லா உயிர்க்கும் உள்ள பொதுவான பண்புதான் இது என்பது என் கருத்து.

Monday, January 04, 2010

மனிதரை நேசியுங்கள் நெருங்காதீர்கள்.அதைச் சாதிக்கிறேன் இதை சாதிக்கிறேன் என்று போவதும் நான் தான் செய்யவேண்டும் என்று பொறுப்பைத் தலையில் சுமக்க நினைப்பதும் பிறர்கடமைகளை செய்யபுகுவதும் நிம்மதியை குழிதோண்டி புதைத்துவிடும்.

நன்றிகாட்டலாம் நன்றியை பிறர் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

கடமையை செய்து விடுங்கள் பிறர் கடமையை உணர்த்த போகதீர்கள். துடுக்குதனமும் திருட்டுதனமுமாய் சில சுகங்கள் அடைவதும் சக்தியாகவும் சமார்த்தியமாகவும் எண்ணி சிலரால் செய்யப்படும் அப்புறம் அதன் விளைவாய் அவர்கள் அடைவதை நம்மால் காணமுடியாது.அதனால் அவை நம்மையும் அப்படி நடக்க தூண்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

வெல்லத்தின் மீது ஈ எப்போதும் உண்டு

இன்பத்தின் பின் துன்பம் கட்டாயம் உண்டு.

நாளைக்கு நடப்பதை நினைத்து இன்றே குழம்பாதீர்கள் நமக்கென தேடும் நன்மைக்காக பிறரை கெடுக்காதீர்கள்.

இழப்பே கூடாது என்று எண்ணாதீர்கள் இழப்பு வந்தால் அதையே நினைத்து கொண்டிருக்காதீர்கள்.

சூழ்நிலைகேற்ப வளைந்து கொடுத்து மிக கவனமாக இருங்கள் சந்தேகத்திலேயே இல்லாமல் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுங்கள்.

மனிதரை நேசியுங்கள் நெருங்காதீர்கள்.

---ஸ்வாமி----

சந்தேகம்
சந்தேகம்

முன் நிகழ்வுகளின்

பாதிப்புகளால்

நிகழ்ந்தவை

சரியாய்

தெரிந்து கொள்ள

ஆவலாய்

எதிர் இருப்பவர்களின்

செயல்களை

பார்க்க

தொலைந்து போன

நிம்மதி

மனித மனத்தின்

அசிங்கமான

வெளிப்பாடாய்

வேலை இல்லதாவர்களின்

மனதில் தோன்றி

தன்னை அழித்து

பிறரையும்

அழிக்கும்

மனித உணர்வு.

LinkWithin

Related Posts with Thumbnails