Friday, April 30, 2010

குடிமகனின் அனுபவம்

மாடிப்படிகளில் ஏறிதான் அவன் வீட்டிற்கு செல்லவேண்டும்.

குளத்தோரம் சிறுநீர் கழிக்கப்போனவன் அந்த இடத்தில்தூங்கிவிடலாம் போல் உள்ளது என்று சொன்னவுடன் பக்கத்தில் இருந்தவர்களும் அவனைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்க முடியவில்லை. அவன் குடித்த மது வேலை செய்ய
எல்லோரும் சிரிக்க அவனும் சிரித்தான்.

ஏங்க ..உட்கார்ந்தா தூங்கிடுவேன் வாங்க வீட்டுக்கு போவோம் என்று சொல்ல..

வாடா ..போவோம் என்று கிளம்பினார்கள்.

அவன் வீட்டின் அருகில் கோவில் ஒன்று இருக்க அதனுடைய படிக்கட்டில் அமர்ந்தான்.

சரி நீங்க போங்க..

நீ வீட்டுக்கு போடா..

நான் போயிறேன் நீங்க போங்க...

மாடிபடி ஏறமுடியுமாடா.. எங்க ரொம்ப மோசமா எடை போடாதீங்க என்ன ...

நான் போறேன் பாருங்க என்று கிளம்பினான்.

மாடிப்படியில் ஏறிவீட்டின் வாயிலை அடைந்தவுடன் அவனை இறக்கிவிட்டவர்கள் அந்தஇடத்தை விட்டு அகன்றார்கள்.

மறுநாள் அவன்

ஏங்க மாடிப்படி ஏற முடியுமான்னு சந்தேகம் வந்துட்டுங்க..

அப்புறம் என்னடா செஞ்ச ..

நாலு மூச்சு இழுத்துவிட்டு மூச்ச தம்மகட்டி ஏறுனங்க
போனது தான் தெரியும் சாப்பாடு பத்தியெல்லாம் நெனைப்பே இல்ல படுத்தது தான் தெரியும் பாதி ராவுல வயிறு கப..கப.. இருக்குங்க..

தண்ணிசாதம் இருந்திச்சு அவசரத்துக்கு ...

எச்சில்சோறு

வெட்கம் அறியா
சுயம்
இரைப்பையின்
ஆரவார வரவேற்பு
குப்பை தொட்டியில்
எச்சில்சோறு

Wednesday, April 28, 2010

விட்டில்பூச்சிஒரு நாள் வாழ்வு
மரணம்  அழைக்க
விளக்கு வெளிச்சம்
நோக்கிய
எனது பயணம்
நான் விட்டில்பூச்சி

Friday, April 23, 2010

உயிர்ப்புவாழ்வு
விளக்க தேடலில்
கரைந்துபோன
கணங்கள்
உயிர்ப்பு எது?
தோன்றும் வினா
எண்ண தொடர்புகளாய்
வலிய வினை
தொடர்புகள்
தோன்றா எண்ணங்களில்
விடை

Monday, April 19, 2010

என்னுடைய பெண் அல்ல அவள்

அன்று காலை வழக்கம் போலவே கல்லுாரி கிளம்பி சென்றாள் அந்த பெண். தன் ஊருக்கு அருகில உள்ள கல்லூரியில் எம். எஸ்சி  இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள்.

கல்லூரி நாட்கள் முடிந்துவிட்டன.  அவளது அப்பா அரசாங்க  சம்பளம். தன்னுடைய பெண்களை மேற்படிப்பு வரை படிக்கவைத்து மூத்த பெண்ணுக்குசமீபத்தில் தான் திருமணம் செய்து வைத்தார்.  தானுன்டு தன் வேலையுண்டு என்று இருந்தவர்.

மௌனத்தின்  மதிப்பை யார் அறிதலும் கொஞ்சம் கடினம் . அந்த பெண் கல்லூரி போவதும் தெரியாது வருவதும் தெரியாது. மௌனமாய் அமைதியாய் அவளுடைய நடவடிக்கைகள்.
சரியாக ஐந்து மணிக்கெல்லாம்  வந்துவிடுவாள் அன்று வர தாமதமானது .

வீட்டில் அவளுடன் செல்பவர்களை விசாரிக்க ஆரம்பிக்க பெண் ஓடிவிட்டாள் என்று தெரிந்தது.  தகுதியான பையனா  என்றெல்லாம் தெரியவில்லை அவர்களுக்கு யாரோ  டிரைவர் என்றார்கள்.

சொந்தமும் சுற்றமும் கூடியது.   விசாரித்த வகையில் அவர்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர்களின் உறவு கார பையனாம் அவன்   என்று சொல்லப்பட காவல் நிலையத்தில்  புகார் செய்தார்கள்.

இரண்டு நாளில் பிடித்து கொண்டுவரப்பட்டார்கள். இனி என்னபயன்?  எனக்கு பெண் அல்ல  என்று   எழுதி கொடுக்கமாறு காவல் நிலையத்தில் இவர்பணிய பெண்ணை பெற்றவருக்கு  பெண்ணால்  எழுதி கொடுக்கப்பட்டது.

பெண் வீட்டார் இரண்டு நாட்களாய் பட்டபாடு அவர்களுக்கு தெரிந்த ஒன்று. பலவிதமான பேச்சு வெளியில்  பலவிதமான அனுமானங்கள் எழும்பியது.

பெண்ணை பெற்றவர்களுக்கு ஏன் இந்த மனகஷ்டம். தன்னுடைய மூத்த பெண்ணை நல்லஇடத்தில் திருமணம் செய்வித்தார்கள்.  வசதிக்கு குறைவு கிடையாது.  அப்புறம் ஏன் ?

அந்த பெண்  ஏன் இவ்வாறு? கேள்விகள்  எழும்ப விடைகள் எங்கே? அவர் அவர்களின் மனதிற்கு தெரியும். வாழ்க்கை வட்டம் தான் இந்த பெண்ணிற்கு  அமைந்த வாழ்க்கை என்ன சொல்லி தரப்போகிறதோ ?

வாடிய முகமாய்  தாடியுடன் யாருடனும் நின்று பேசவே அச்சப்பட்டவராய் பெண்ணுடைய அப்பா.

வாதம்

விட்டு கொடுக்க
மனமில்லாமல்
வாதமாய் சொல்
இது நான்
இல்லை
இது நீ
மறுப்புகளும்
ஏற்பவைகளுமாய்
சொல்லின் வாதங்கள்
தொடர்கிறது
வாழ்க்கையில்…

Saturday, April 17, 2010

மௌனமா…இல்லைசொல்ல ஒன்றுமில்லை
பேச ஒன்றுமில்லை
மௌனமா…இல்லை

பேசமுடியா நிலை
உதடுகள் மூடிய
வாழ்க்கை பயணத்தின்

உணர்வுகளின் தலைகாட்டல்
அமிழ்ந்து போயின
மன குளத்தினுள்ளே..

Wednesday, April 14, 2010

பிடி அரிசி அம்மன்


ஆடி மாதம் வரும் ஆடி பெருக்கின்போது சாமி கும்பிட அம்மன் தேவை. வாய்க்கால் ஓரம் அம்மன் கோவில் சிறிதாக கட்டப்பட்டது.

வழக்கமாக விளக்கேற்றுவார்கள் அம்மனுக்கு வேண்டிகொண்டவர்கள் பூசை செய்வார்கள். எல்லோருடைய நிதி உதவியும் பெற்று அம்மன் கோவில் பெரிதாக்கப்பட்டது.

பெரிதாக்கபட்டதால்  அதனுடைய நிர்வாகசெலவும் அதிகரிக்க வருமானம் பெருக்கவேண்டுமே என்ன செய்ய.. அதனை நிர்வாகம் செய்தவர் தன்னுடைய மூளையை கசக்கி  அம்மனுக்கு பெயர்மாற்றம் செய்தார்.

மகமாயி “பிடி அரிசி அம்மன் ”  ஆனது.  பிடி அரிசி அம்மனுக்கு என்று தனியாக ஒரு கதை உருவாக்கப்பட்டது.

ஆயிரகணக்கானசுற்றுபுற கிராமமக்கள்  கூடியிருந்த பங்குனி திருவிழாவில் அந்தகோவிலை நிர்வாகம் செய்தவரால் கதை  அளந்துவிடப்பட்டது.

எங்கிருந்தோ ஒரு பெண் இந்த மகமாயி கோவிலை விசாரித்து  வந்து வேண்டிகொண்டது  நிறைவேறியதாம். பிடி அரிசியை வைத்து துணியில் முடிந்து வேண்டியதால் வேண்டியது நடந்ததாம்.

அதனால் வேண்டும் வரம் பலிக்க பிடி அரிசி அம்மன் ஆலயத்திற்கு வந்து  பிடி அரிசி யை  அதற்குரிய தொகை கொடுத்து பெற்று செல்லவும் என்று ஒலிப்பெருக்கியில்  அறிவித்து கொண்டே இருந்தார்.

மக்களுக்கு சொல்லவா வேண்டும் அந்த ஏரியாவிற்கு இது புது டிரெண்ட். விற்பனை ஜோர்.

வரும் காலங்களில் இந்தகதைவரலாறு ஆகலாம்  இந்து சமயத்தின் மிகப்பெரிய சாபகேடு உண்மையல்லாதவைகள் உண்மையென கிளம்புவது தான்.

முழுக்க முழுக்க பக்தி என்பது ஒருவிதமான மனத்தின் போக்கு  ,போக்கின் முடிவு தன்னையறிதல்  .

அறிந்து கொள்ளும்வரையில் தெருவிற்கு ஒரு கோவில்   அந்த கோவில் சொல்லும் ஓர் பொய் கதை  என்பது தொடர் நிகழ்வு.

Monday, April 12, 2010

பெண் பிடிவாதம்புரிந்து கொள்ளாத பெண் பிடிவாதம் உண்மையாய் நரகம்.  மகளோ  , மனைவியோ பெண்ணினுடைய எந்த பதவியாகவும் இருக்கலாம் ஆனால்  பெண்.

பெண்  என்று அவளிடம் கோபம் காட்ட முடியா சூழலில் கோபம்  காட்ட முடியாத நம்முடைய பலவீனத்தை அவர்களுடைய பலமாக உபயோகம் செய்ய அவ்வளவுதான் வேகம் வரும் இதயத்தின் அதிகபட்ச துடிப்போடு மௌனமாகிவிடும்.

பெண்ணிடமா நம் கோபம் காட்ட , நினைத்தவர்களின் அமைதி  அவர்களுக்கு எட்டாகனி தான்.  செயல்படுத்த முடிந்தவர்கள் ஆத்திரத்தின் அடுத்தகட்ட பிரயோகம் கன்னத்தில் அறை . இன்னும் கடுமையானவர்கள்  உச்சகட்டமாய்அவர்களுடைய தலைமுடியும்  பிடித்து அடித்தல்உதையும் தான்.

புரிந்து கொண்டவர்கள் நல்லது கெட்டது சொல்லலாம்.  பிரச்சனையின்போக்கு தக்கவாறே அவர் அவர்களுடைய மனது.
பெண்னுடைய மிகப் பெரிய ஆயுதம் பேசி கொல்லுதல் அல்லது பேசாமல் இருந்து கொல்லுதல்.

எது கேட்டாலும் எனக்கு தெரியாது ? என்று ஒற்றைவரி அல்லது நீண்ட மௌனம்.   

மகளாக இருக்கையில் என்னடி பொண்ண பெத்து வைச்சுருக்க? (பெற்றவன் இவன்)

மனைவியாக இருக்கையில் நான் போயியும் போயி உன்ன கட்டி கிட்டேன் பாரு ? என்ற வெறுப்பின் உச்சம் பெண் பிடிவாதம்.

பெண்னுடைய அடுத்தகட்ட ஆயுதம் சாப்பிட மறுத்தல்.
நான் இருக்குறது தானே  உங்களுக்கு தொந்தரவு நான் போயிறேன்(செத்து போயிறேன்) …. அப்புறம் ஒன்னும் உங்களுக்கு தொந்தரவு கெடையாது.

என்னடா வாழ்க்கை மயிறு ..சே..இப்படி இருக்க? என்ற விரக்தியின் உச்சமும் பெண் பிடிவாதம் தான்.

முதல் வரியை  கொஞ்சம் நினைவுப்படுத்துக...

Sunday, April 11, 2010

விட்டது காவி
என்னில்
முளைத்து கிளைவிட
சுற்றம் பெருகி
பற்றும் பாசமும் பற்ற..

பற்று அறுக்க
என்னுள் உட்புக
காவி தான் கண்ணில்
தெரிய..

இல்லறமும்
துறவும் என்னுள்ளே..

உனை உணர்அனுபவி
அமைதியாய் இரு
காவியும்
குடுமியுடன் தாடியும்

பெற்றது சிரிக்க
கட்டியது அரவணைக்க
கோபம் காட்டி
சிரித்து மகிழ்ந்து

இல்லறமும்
துறவும் என்னுள்ளே…

விடாது இல்லறம்
விட்டது காவிTuesday, April 06, 2010

வெளிசுற்ற ஆசை தான்.

வெளிசுற்ற ஆசை தான்.  வேலை மட்டுமே வாழ்க்கையாய் ஆகிவிட்ட நிலை செக்குமாடு தான். வட்டம் தாண்டி போக ஆசையாய் வட்டம் தாண்டுகையில்கிடைப்பதும் கிடைக்காமல் போக வாய்ப்பு அதிகம் தான். கிடைத்ததை தாண்டி அதிகம் கிடைக்க வாய்ப்புதான். வட்டம் தாண்ட பயம் அதிகம்.

இரக்கப்பட மனது அதிகம் கைதூக்கி விடுபவர்கள் மிகவும் அரிது.  அவர் அவர்களின் நிலைப்பாட்டிற்கே தன்னையே தன்னை பார்த்துகொள்ள இன்னொருவரின் வாழ்வு என்பது  கடினம் தான்.

சிலபேர் எல்லைகள் வகுத்து கொள்கிறார்கள். இன்னும் சிலபேர் தி்ட்டங்கள் போட்டுதகுந்தகாலங்களை எதிர்நோக்கமிக சிலபேர் தன்னளவில் நிரம்பி வழிந்தோடுவதில் பிறரையும் வளர்த்துவிட்டவர்கள் தான்.

நாளைக்கு கிடைப்பதை விட இன்றைக்கு கிடைப்பதை தக்கவைத்து கொள்ளும் மனோபாவம் தான் அதிகம். இத்தகைய மனோபாவத்திற்கு பலவிதமான சமுதாய சூழல்களே மிக அதிகம்.


Monday, April 05, 2010

எனது மாற்றம்

விரும்பிதந்தஉனது அன்பு

என்னுள் ஊக்கமாய்

காலமாற்றம்

இயற்கை நிகழ்வு

எண்ண மாற்றம்

மன இயல்பு

எனது மாற்றம்

உனது இயல்பு

வேடங்களை விரும்பி

ஏற்றேன்உன்னால்

வேடத்தின் சுகம்

உண்மை என் முகம்

வெளிகாட்ட எண்ண

வேதனையாய் என்மனது

உனக்காக என்இருநிலை

உள் ஒன்று புறம் ஒன்றாய்

என்னவனே...

Saturday, April 03, 2010

நேர்மை அங்காடி

தமிழ்நாடு  திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாடு மேல்நிலைபள்ளியின் தலைமைஆசிரியர் திரு.இரா.மணிவண்ணன் அவர்க ள் ஓர் புதுமுயற்சியை மேற்கொண்டார்.

மாணவர்களுக்கு தேவையான  எழுதுபொருட்கள்மற்றும் தின்பண்டங்கள்  சகிதம் விற்பனைக்குபள்ளியின் ஓர் அறை  ஒதுக்கப்பட்டு நேர்மை அங்காடி என்று பெயர் வைக்கபட்டது.

விற்பனை செய்பவர் யாரும் அங்கே கிடையாது. பொருட்கள் இருக்கும் காசு அடங்கிய கல்லாப்பெட்டி ஒன்று இதுதான் நேர்மை அங்காடி.

மாணவர்கள் தங்களுக்கு தேவையான தின்பண்டங்கள் அல்லது எழுதுபொருளோ  தாங்களே எடுத்துகொண்டு அதற்குரிய தொகையினை  கல்லாப்பெட்டியில் போட்டுவிடவேண்டியது தான்.

அன்றைக்கு நடந்த காலைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது.   முதல்நாள்மிகநேர்மையாக விற்பனைசெய்பவர் யாரும் இல்லாமல் ரூபாய் இருநூற்றி தொன்னூறுக்கு வியாபாரம் ஆனது. இரண்டாவது நாள் இருநூற்றி எண்பது என விற்பனை படு ஜோர்.

மூன்றாவதுநாள்  முன்னூறுக்கு பொருட்கள் விற்பனை ஆகியிருந்தது. கல்லாப்பெட்டியில் இருந்த காசு ரூபாய் எண்பது மட்டுமே தலைமையாசிரியர் விடாது நான்காவது நாளும் முயற்சித்துபார்க்க  மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்  விற்பனை ஆகியிருந்த பொருட்கள் படு அதிகம் ஆனால் கல்லாப்பெட்டியில் இருப்பு ரூபாய்  ஐம்பது தான்.

ஐந்தாவது நாள் விற்பனை செய்யபொருட்கள் இல்லாததால் நேர்மை அங்காடி நிறுத்தபட்டு தற்காலிமாக மூடப்பட்டது.

தலைமையாசிரியர் அவர்கள் வெப் கேமரா அமைத்து நேர்மை அங்காடி தொடச்சியாக நடத்த  நினைத்திருக்கிறார் போலும் அவருடைய முயற்சிகளுக்கு வாழ்த்துகள் கூறி மாணவர்களுடைய  நேர்மைக்கு என்ன சொல்ல யோசியுங்கள்.

Friday, April 02, 2010

ஆணாதிக்கம்
கொஞ்சலாய்

வேண்டல்கள்

தட்டமுடியா

எனது செய்கைகள்

மனதில் குழப்பம்

பெண் சொல்ல

நான் கேட்பதா…

ஆணாதிக்கத்தின்

சாயல்-ஆனாலும்

எனக்கு பிடிக்கவில்லை

தட்டமுடியா

எனது செய்கைகளால்.

LinkWithin

Related Posts with Thumbnails