Tuesday, December 29, 2015

இந்தோனிசியா கசையடி தண்டனை-புகைப்படசெய்தி

இந்தோனிசியா திருமணமாகாத ஆண் பெண் பல்கலைகழக மாணவர்கள் இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் நின்றததற்காக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட ஆண்களுக்கும்  முஸ்லீம் மத ஷரியா சட்டப்படி கசையடி தண்டனை மக்கள் முன்னே வழங்கப்பட்டது  .

தண்டனை வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
16 comments:

நந்தவனத்தான் said...

தகாத உறவுன்னா என்ன? அருகில் நின்று பேசுவதே தகாத உறவா?

ஒரு கல்லூரி மாணவியான அந்தப் பெண் சக மாணவரின் மிக அருகில் நின்று பேசிய குற்றத்திற்கு இந்த தண்டனை. 8ம் நூற்றாண்டினை விட்டு வர மறுப்பவரின் காட்டுமிராண்டிதனமிது. இதனாலேயே மதசட்டங்களை ஒழித்து பொதுவான கிரிமினல்/சிவில் சட்டங்களை கைகொள்ளவேண்டும்.

ராஜ நடராஜன் said...

நம்ம ஊர் சூடான அரசியலை விட்டுட்டு உங்களை யார் இந்தோனேசியா போக சொன்னது:)

இதை விட கொடுமைகள் சிரியா,ஈராக்கில் ஜிஹாத்,ஷரியா கலிபா ஆட்சி என ஐ.எஸ் காரன் நடத்தியிருக்கான். பிரம்படி கொடுப்பவன் முகத்தை ஏன் மூடிக்கொண்டு தண்டனை கொடுக்கிறான்? அவ்வளவு பயமா?

வேகநரி! சூடா வடை தயார்:)

ராஜ நடராஜன் said...

நந்தவனம்! இந்தோனேசியாவிலிருந்து தப்பிக்க வழி கேட்டா பொதுவான கிரிமினல்/சிவில் சட்டத்துக்கு வழி காட்டுறீங்களே! இருக்கும் நிலையிலேயே மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுங்கிறது பிஜேபி.

நந்தவனத்தான் said...


என்ன செய்யுறது ராசநட, தாய்குலம் தழும்புனா தமிழனுக்கு தாங்காதே!

பரபரப்பாக தலைப்பை கொடுத்துவிட்டு நடந்தது என்ன எனவாவது எழுதாவிட்டால் அந்த அப்பாவிகளை பலர் தப்பாக நினைப்பார்கள் என்றுதான் அந்த பின்னூட்டம். நல்ல வேளையாக இந்த பதிவினை படிக்கும் முன்னரே கார்டியனிலும் டெய்லிமெயிலிலும் இந்த செய்தியை படித்துவிட்டதால் எனக்கு உண்மை தெரிந்திருந்தது, இல்லாவிடில் நானே இத்தலைப்பை உண்மை என நம்பி கடந்து போயிருப்பேன்.

------------
சகோ.வேகநரி,விடுமுறைதின மயக்கம் தீர்ந்து அடுத்தவாரம் வருவார் போலிருக்குது.

-------------

இப்ப என்ன செய்ய? சுதந்திரம் பெற்ற போதே பொதுசிவில் சட்டம் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து பண்டிதரும் அரசியல் சட்ட அண்ணலும் மாட்டுகறி சாப்பிடாதே என்று அரசியல் சட்டத்திலேயே ஒட்டிவிட்டு போய்விட்டார்களே!!! :((

ராஜ நடராஜன் said...

நந்தவனம்! செய்தி கார்டியன,டெய்லிமெயில் வரை போய் விட்டதா! அப்ப பதிவின் தலைப்பே தமிழ் பத்திரிகைகள் மாதிரி பரபரப்புககுத்தானா?

மெய்யான செய்தி தகவலுக்கு நன்றி நந்தவனம்.

செய்தியின் சாரம் கீழே!

http://www.dailymail.co.uk/news/article-3378338/Screaming-agony-young-woman-caned-cheering-crowd-just-near-fellow-student.html

தவறு said...

நந்தவனத்தான் ,ராஜநடராஜன் இருவருக்கும் நன்றி நான் செய்த தவறை சுட்டிகாட்டியதற்கு...ராஜநட பரபரப்புக்கு அல்ல பதிவு ...என்னுடைய புரிதலில் தவறு.

மீண்டும் இத்தவறு நிகழவண்ணம் பார்த்துக்கொள்கிறேன்.

பதிவை திருத்திவிட்டேன்.

என் நோக்கம் தண்டனை நிறைவேற்றத்தை காட்டவே..சுட்ட செய்தி தவறாக பதிவு அமைந்ததில் மிகுந்த வருத்தமே.

நன்றி..!!

வேகநரி said...

ஷரியா என்கின்ற தற்காலத்திற்கு பொருந்தாத மதசட்டங்களை நடைமுறைபடுத்துவதினால் இந்த கொடுமைகள் நடைபெறுகிறது. இதே இந்தோனிசியாவில் சவூதி நாட்டுக்கு வேலைக்கு சென்ற தனது பெண்களை இதே ஷரியா சட்டத்தின் மூலம் சவூதி தண்டிக்கும் போது சவூதிக்கெதிராக எதிர்புக்கள் கண்டணங்கள் ஏற்படுகிறது.
பொதுவான கிரிமினல் சிவில் சட்டங்களுக்கு நல்வழி காட்டும்போது, மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று இருக்கே என்பது, வெள்ளபாதிப்பால் கொடுமைபடும் மக்களை பார்த்து நாங்களும் சுவிம்மிங் பூல்லில் சுவிம்மிங் அடித்து கொண்டுதான் இருக்கிறோம் என்பது போல்.

ராஜ நடராஜன் said...

மீண்டும் வந்தேன்! தவறுன்னு சரியா பேர் வச்சிருக்கீங்க:) தத்தி தவழ்ந்து கற்பதில் இப்ப தலைப்பு சரி!

உங்கள் பொறுப்பு அக்கறைக்கு பாராட்டுக்கள்.

ராஜ நடராஜன் said...

நரி! வந்தீகளா!

மழை பற்றி மீண்டும் ஒரு பதிவு போடனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். இப்ப உங்க பின்னூட்டத்தால் அதனை இங்கேயே குறிப்பிடுகிறேன்.

வெள்ளப் பாதிப்பால் தமிழகம் தத்தளித்தது உண்மைதான். சில தினங்களுக்கு முன்பு அர்ஜென்டினா போன்ற நாடுகளில் கடும் வெள்ளம் வந்தது. நீங்க சொன்ன மாதிரி ஸ்விம்ங் பூல்ன்னு நினைச்சுகிட்டுத்தான் சிலர் விளையாடினார்கள். யாருமே பதிவுலகில் இது பற்றி குறிப்பிடவில்லை.

எதிர் விவாதம் ஒன்றை உங்களுக்கு முன் வைக்கிறேன். பிஜேபி எதிர்க்கட்சியாய் இருக்கும் போது மட்டும் குண்டு வெடிப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் ஆட்சியில் அரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லையா அல்லது இப்போதைய பிஜேபி ஆட்சிக்கு பயந்து கொண்டு குண்டுகள் உறங்குகின்றனவா அல்லது நமக்கு நாமே பிஜேபி திட்டமா?

சரி! பொது சிவில் கிரிமினல் சட்டங்கள் வேண்டுமென்ற கோரிக்கையை பிஜேபிதான் எதிரணியாக இருக்கும் போது முன் வைத்தது. இப்பொழுது எதிர்ப்பதற்கே எதிரணி இல்லாத மெஜாரிட்டியில் வாய் மூடி இருப்பதன் மர்மம் என்ன? கிறுக்குத்தனமா அறிக்கை விடும் பிஜேபி இந்துத்வாவாதிகள் யாராவது இதுபற்றி பேசியிருக்கிறார்களா?

மதத்தின் பெயரால் தவறுகள் எங்கேயிருந்தாலும் விமர்சிக்க படவேண்டும். நரி இடது கண்ணில் ஷரியாவையும் வலது கண்ணால் இந்துத்வாவையும் பார்க்கிறது:)ராஜ நடராஜன் said...

வேகநரி! ஷரியாவை பின்பற்றும் சவுதி அரேபியா உட்பட தங்கள் நாட்டின் நலன்,எதிர்காலம் என திட்டமிடுகிறார்கள். ஷரியாவின் தீமைகள் சட்டத்திற்குட்பட்டு நிகழ்க்கூடும்.ஆனால் அவை பொதுவெளியில் அதிகமாக இல்லை மாதிரிதான் எனக்கு படுகிறது.

இணைய வசதிகள் வந்த பின் பலரும் வெளியுலகையும் சேர்த்தே பார்க்கிறார்கள். இதோ முதல் முறையாக சவுதியில் பெண்கள் வாக்களிக்கிறார்கள். இன்னும் மாறுதல்கள் வரலாம்.

ராஜ நடராஜன் said...

இன்னுமொன்று விடுபட்டு போய் விட்டது. எங்கே போர் உருவாகிறதோ பொருளாதாரம் சீர்கெடுகிறதோ அங்கே வறுமை உருவாகின்றது. போர் உருவாக்கப்படுவதால் பொருளாதாரம் சீர்கேடுகிறது வறுமையும் பின் தொடர்கிறது. வறுமை போருக்கான காரணங்களை தேடுகிறது. பின் போருக்கான காரணங்கள் மதம் கொண்டு வதம் செய்கின்றது.

நந்தவனத்தான் said...

நீங்க அபூர்வ பதிவர்தான்... எழுதியதை தப்புன்னு பொதுவாக தமிழ் பதிவர்கள் ஒப்புக்க மாட்டார்கள்,சப்பை கட்டு கட்டுவார்கள் இல்லைனா கண்டுக்காம விடுவார்கள். ராசநட கருத்தினை வழிமொழிகிறேன்.

ராஜ நடராஜன் said...

நந்தவனம்! நீஙிக சொல்லும் சப்பை கட்டு எனக்கும் பொருந்துமென பணிவுடன் சொல்லிக்கொள்கிறேன்.இப்படித்தான் பூச்சி முருகன் பற்றி ஏதோ கவனக்குறைவால் சொல்லப்போக நம்ம பங்காளி வருண் நமக்குன்னே ஒரு பதிவு போட விட்டேனா பார்ன்னு சிலிர்த்துக்கொண்டேன். பழைய நினைவுகளை இப்ப் யோசிக்கும் போது ரொம்ப குழந்தைதனமா இருக்கும். பதிவுலக அனுபவங்களும் இன்னுமொரு குழந்தைதனத்தை நிச்சயமாக தரும்.

வேகநரி said...

ராஜநட, குண்டு வெடிப்பதன் காரணம்,கலிபோர்னியாவில் சாயிட்பாருக்கும்,அவர் மனைவி தஷ்பீன் மாலிக்கும் எதற்காக 14 பேரை கொன்று 21 பேரை காயபடுத்தினார்களோ அதே காரணம் தான் இங்கும்.
//சரி! பொது சிவில் கிரிமினல் சட்டங்கள் வேண்டுமென்ற கோரிக்கையை...//
நான் ஷரியா சட்டம் நடைமுறைபடுத்தும் நாடுகளில் தான் பொதுவான கிரிமினல் சிவில் சட்டத்தின் அவசிய தேவையை சொன்னேன்.இங்கு அவர்கள் அரசியல்வாதிகள் அப்படி தான் ஏதாவது சொல்வார்கள். தமிழகத்தில் அரசியல்வாதிகள் ஈழம் என்று சொல்வதில்லையா அது போல் தான்.
//இதோ முதல் முறையாக சவுதியில் பெண்கள் வாக்களிக்கிறார்கள். இன்னும் மாறுதல்கள் வரலாம்.//
ஒரு சிறு மாறுதல்கள் வரலாம்.வந்த சிறு நல்ல மாறுதல்கள் கூட இல்லாம போய் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிட கூடிய வாய்புகளே அத்தகைய மதவாத நாடுகளில் அதிகம்.
இன்னுமொன்று விடுபட்டு போய் விட்டது என்று நீங்க சொன்ன கருத்து உண்மையானது. போர் பொருளாதாரத்தை அழிக்கிறது, வறுமையை உருவாக்குகிறது, மனிதர்களுக்கு நாசத்தை விளைவிக்கின்றது.
உங்களுக்கும், பதிவர் தவறுக்கும், சகோ நந்தவனத்தானுக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

வேகநரி! கண்ணுக்கு முன்னால் தெரியும் பதிவுகளை தவிர்த்து பின்னூட்டத்திற்காகவே பின் சென்று பார்க்கும் கெட்ட பழக்கத்தில் மீண்டும் வந்தேன்:)

உங்கள் பார்வையில் எனக்கு பாதி உடன்பாடு இருந்தாலும்கூட ஷரியாவை இன்னும் வாழ வைத்துக்கொண்டிருப்பது அமெரிக்காதான்.எனவே எண்ணைப் பொருளாதாரம் இருக்கும் வரை ஆட்டம் இப்படியேதான் போகும்.இஸ்ரேலுக்கான இரு பெரும் எதிரிகளான சதாம்,கடாபியை வீழ்த்தியாகி விட்டது.பக்கத்தில் இருக்கும் சிரியாவில் உள்நாட்டுப் போரை உருவாக்கியாற்று.இஸ்ரேலுக்கு எதிரியே இல்லை என்னும் நிலையிலும் எண்ணைப் பொருளாதாரம் இல்லாமல் போகும் நிலையில் உலக மாற்றங்கள் வரலாம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமான நிரந்தர தீர்வு என்ன தெரியுமா?இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடுவது.நினைக்கவே நல்லாயிருக்குது:)

ராஜ நடராஜன் said...

வேகநரி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails