Sunday, July 16, 2017

ஓர் புதிய அனுபவம்

குடும்ப சூழலில்
அடிப்பட்ட
ஓர் மனிதனின்
புதிய வீட்டு கனவு
நனவாகிறது
வீட்டுக்கான இடம்
பங்காளிக்கும் உரிமையுண்டு
எங்களுக்கும் சோ்த்து தான்
விட்டுக் கொடுத்தார்கள்
வீடு கட்ட சொல்லி
பணம் யார் தருவது?
மனைவியின் ஆவலில்
மனைவியின் நகைகள்
காசானது
புதிய வீட்டின்
அடித்தளம் அமைந்தது
மேல் உயர
பணம் தேவை
யார் தருவார்கள்
அவன் உழைக்கும் இடமா?
உறவினர்களா?
அவன் நிலை தெரிந்த
நட்புகளா..?
இதையும் கடந்த
வேறு மனிதா்களா?
எதுவும் தெரிய வில்லை
அவனுக்கு
மனதில் சிந்திக்க
சில வழிகள் தெரிந்தாலும்
எது நடக்கும் குழப்பம்
குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்கலாம்
அவன்  மீன்
பிடிப்பானா..?!
ஓர் புதிய அனுபவம்
தயாராகிறது.

Friday, May 26, 2017

உச்சிப்பொழுது

தலையில்
சும்மாடு
வட்டமாய்
வரிசையாய்
கருப்புகல்கள்
அடுக்கி வைத்து
சுமந்து செல்லும்
சிறுமி
“ பூரி கல்லு, பூாி கல்லோய்”
கத்தியப்படியே
நடக்கிறாள்.
ஏறி மிதிக்கிறான்
சிறுவன்
நகரவில்லை
திரும்பவும்
மிதிக்கிறான்
நகரும் மிதிவண்டி
சவாாி சந்தோசம்
வேகமாய்
மிதிக்க
வேகமாய்  மிதிவண்டி
பள்ளிவாசல்
மணி ஒலி
வெள்ளி கிழமை
தொழுகைக்கு
முகமதியர்களை
அழைக்கிறது.
மேகமூட்டம்
வீசும் காற்றின்
இரைச்சலின்
இடையே
காதுகளில் கேட்கும்
ஃப்யான்
விரைந்து செல்லும்
வாகனங்கள்
இன்மையால்
ஓய்வெடுக்கும் சாலை
காற்று வீசுகிறது
வெம்மை தணிக்கிறது.

Thursday, May 04, 2017

திருகாணி

ஏங்க....ஏங்க...

துண்டு விரித்து படுத்திருந்தவன் கருவிழிகள் இரண்டும்  மேல் நோக்கி விழித்து அவளின் முகம் பார்த்தது.

அவன் பார்வையின் அா்த்தம் கண்டு...

நான் தேடிக்கிட்டு இருக்கேன் நீங்க துாங்கிட்டு இருக்கீங்க..

என்ன ?

திரு..காணி...

எந்த திருகாணி...

தோட்டு  திருகாணி எங்கேயோ விழுந்திடுச்சி..அதான்...

கைலி சரி செய்து எழுந்து ...என்னடி  சொல்ற..

எங்க படுத்த...எங்க உட்காந்த...

நீங்க போன பிறகு கட்டில படுத்தேன்..மாடி வாசல் கூட்டுனேன்.

ஏற்கனவே  கட்டில் தேடல் மாடி படி தேடல் முடிவடைந்திருந்தது.

உங்க கண்ணுக்கு  மாட்டிடுங்க...

பொறுமையாய்  நடந்து தேடினான் உட்கார்ந்து பார்த்தான் டார்ச் லைட் அடித்து இடுக்குகளில் தேடினான்.

துாசி தெரிந்தது திருகாணி தெரியவில்லை.

தொலைந்த திருகாணியின் இடம் மட்டும்  தொியாமல் கண்களின் தேடல்கள் தொடர்ந்தன.

உச்...

காணாமல் கவலைபட்டாள்.

சாி உடு...படுக்கையிலிருந்து எழும்போது சரி பண்ணிப்பியே...

சரிபண்ணல ...அதான்  தண்டனை..

பரவாயில்ல..இனி கவனமா இருந்துக்க...

மணி பார்த்தான்..வேலைக்கு செல்லும் நேரம் தாண்டி மணி காட்டியது.

ஆகா..நான் கிளம்புறேன்.

கிளம்பினான்.

கவலையுடன் தேடல் தொடர்ந்தாள்.

ஆனால் திருகாணி...??!!

Thursday, April 27, 2017

வசந்தமும் வறட்சியும்

கோடைக்கால காலை பயணங்கள்  5.30 மணிக்கு தொடங்கும் சில நாட்களில் 6 மணிக்கு தொடங்கும் சாலையோர மரங்களின் புதிய பூக்கள் என்னை வரவேற்கும் .

பக்கத்து கிராமங்களி்ன் ஆள் அரவமற்ற சாலைகள் அவ்வப்போது தென்படும் முதிர்ந்த முண்டாசுகள் அர்த்தபுஷ்டியின் கூடிய பார்வையில் யார் இந்த புதுமுகம்? என்ற கேள்விகள் தொக்கி நிற்க சிறிய புன்னகையுடன் கடந்து சென்றுவிடுவேன்.

காலைப்பனி குளிர்ந்த காற்றில் உடம்பும் மனமும் சில்லிட  அதிக சில்லிப்பாய் காற்று வீச சாலையின் இருமங்கிலும் பச்சை விரியும். போர்வெல் பாசன நடவில் குறிப்பிட்ட பகுதியின் பசுமை வறட்சியில் வசந்தம்.

இன்னும் சில கிலோ மீட்டர்கள் எனது இருசக்கர வாகனம் முன்னேறி செல்லும் பல்வேறு பறவைகளின் சத்தம் எப்போதாவது கடந்து பேருந்தின் இரைச்சல் இளைஞர்களின் காலைநேர இருசக்கர விரைவு பயணம் சிறுவர்களின் சைக்கிள் சவாரி எல்லாமே இசைதான்.

குளிர்நத காற்றில் உடலும் உள்ளமும் லேசாகும் வரை இலக்கு தெரியாத பயணமாய்  எனது வாகனம் பயணிக்க இயற்கையில் தான் எனைக் கரைக்கிறேன்.

செல்லிடைப்பேசியின் அழைப்பு மணி ஒலிக்க திரைப்பார்த்தால்  இல்லாள்  எனை அழைக்க ..

இருக்கும் மனநிலைக்கு தகுந்தவாறு  என்குரல் ஒலிக்கும் .

சொல்லும் சொல்லின் பதம் அறிந்து மனநிலையை படிக்கும் என் மனைவியின் குறிப்பறிந்து பயணம் முடியும் .

பயணம் தொடரும்....

Wednesday, January 18, 2017

யார் அவர் யாரோ...!!??

இரு பெரும்கழங்களின் தலைகள் இல்லா புதிய தமிழகம்.

புதிய தலைமைகளின் கீழ் இரு பெரும்கழங்கள்  .

தமிழக அரசியல்களம் நொண்டுகிறது.

புதிய தி.மு.க தலைமை தன்னுடைய அரசியல் அனுபவத்தினால் செயல்தலைவராய் முன்னிறுத்திக் கொள்ள...

அ.தி.மு.க வின் புதிய தலைமை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தடுமாறுகிறது.

பகட்டு அரசியல் வெற்று வாதங்களும் இனி தமிழகத்தில் எடுபடா சூழலில் தமிழக மக்களின் துயர் களைய...தமிழக முன்னேற்றத்தில் பங்கெடுத்து செல்லும் ஓரு புதிய தலைமையின் தேவை தமிழகத்திற்கு அவசியம்

LinkWithin

Related Posts with Thumbnails