Tuesday, April 30, 2013

படம் சொல்லும் செய்தி

போட்டியில் வெளியேறும் குழந்தை -விஸ்காசின்

அகதிகள் முகாமில்-சிரியா

வன்முறையி்ல் இடம்பெயர்ந்த குழந்தை

பள்ளிவிட்டு திரும்பும் சிறுவன்- நேபால்

பேராபத்தை நோக்கி... (பகிர்வு)


1990-இல் இருந்ததைவிட மோசமான நிலையில் இந்தியப் பொருளாதாரம் இப்போது இருக்கிறது என்று சொன்னால், சராசரி இந்தியனால் அதை நம்ப முடியாது. பாட்டாளியின் கையில் செல்பேசி; கிராமப்புறக் கடைகளிலும், உணவகங்களிலும்கூடக் கோகோ கோலா; குடிசைகளில்கூட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி; எங்கு பார்த்தாலும் இரு சக்கர வாகனங்கள்; வாரந்தோறும் புதிது புதிதாக மோட்டார் வாகனங்கள்; சுங்கம் வசூலிக்கப்படும் தங்க நாற்கரச் சாலைகள்; பல அடுக்குக் குடியிருப்புகள் என்று விஞ்ஞானத் தொழில்நுட்பத்தில், நவநாகரிக அடையாளத்தின் அத்தனை அம்சங்களும் கண்ணுக்குத் தெரியும்போது, நமது பொருளாதாரம் கால் நூற்றாண்டு காலத்துப் பொருளாதாரத்தைவிடப் பின்தங்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்பத்தான் முடியாது. ஆனால், நிதர்சன உண்மை என்னவோ அதுதான்!
1951-இல் இருந்து 1981 வரையிலான இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம், அதாவது ஜி.டி.பி. (உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு) 3.4 விழுக்காடு. 1981-இல் இருந்து 1991 வரையிலான ஜி.டி.பி.யின் சராசரி 5.2 விழுக்காடு. இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் ஜி.டி.பி. விகிதம் 5 விழுக்காடோ, அதற்குக் கீழோ இருக்கக்கூடும். கடந்த பத்து ஆண்டுகளில் மிகக்குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம் ஏற்படப்போவது இப்போதுதான். இதற்குப் பெயரா வளர்ச்சி?
ஏனைய பொருளாதாரங்களைவிட இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், அடுத்த ஆண்டு நமது வளர்ச்சி 6.1 விழுக்காடு முதல் 6.7 விழுக்காடு வரை வளரக் கூடும் என்றும் ஒரு மாயத்தோற்றத்தை மத்திய அரசும், ஆளும் கட்சியும் பரப்பிக் கொண்டிருந்தாலும், எதார்த்த நிலைமை அப்படி இல்லை. இந்தியா இதற்குமேல் அடுத்த சில ஆண்டுகள் வளர்வது சாத்தியமில்லை என்றுகூட சர்வதேசப் பொருளாதார ஆய்வுகள் கூறத் தொடங்கியுள்ளன. நமது ஆட்சியாளர்கள் கடவுள்போல நம்பியிருக்கும் "ஐ.எம்.எப்' என அறியப்படும் பன்னாட்டுச் செலாவணி நிதியமேகூடத் தனது சுற்றறிக்கையில் இந்தியாவின் வளர்ச்சி 5.7% ஜி.டி.பி.யாகத்தான் இருக்கக்கூடும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்தால், மேலே குறிப்பிட்ட வசதிகள் எல்லாம் குறைந்துவிடுமா என்று கேட்பது சிறுபிள்ளைத்தனம். அந்த வசதிகள் குறையாது. ஆனால், வேலைவாய்ப்பு குறையும். விலைவாசி அதிகரிக்கும். இருக்கும் வசதிகளைக் குறைத்துக்கொள்ள மனது வராது. நிறையக் கடன் வாங்குவார்கள். கடனாளிகளின் கதி எப்படியாகும் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? கிராமப்புற விவசாயிகள் தற்கொலைபோல நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் தற்கொலைகளும் அதிகரிக்கும்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் 72.26 விழுக்காடு பேர் வாழ்கின்றனர். ஏறத்தாழ 24 கோடிக் குடும்பங்கள் வாழும் கிராமப்புறங்களில், 10 விழுக்காடு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நகர்ப்புறங்களிலோ, 7.3 விழுக்காடு பேர் வேலையில்லாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்குக் காரணம், அடிப்படை வேலைவாய்ப்புத் தொழில்கள் என்று கருதப்படும் விவசாயம் (57%) கட்டுமானத் தொழில் (7.2%), தொழிற்சாலைகள் (6.7%), ஏனைய சேவைகள் (6.3%) போன்றவை எதுவுமே லாபகரமாக இயங்காமல் இருப்பதுதான். கிராமப்புற வேலைவாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உற்பத்தியை உறுதி செய்யாத திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது இன்னொரு மிகப்பெரிய வேதனை.
சாலை மேம்படுத்துதல், குளங்களில் தூர் வாருதல் போன்றவை எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் உணவு உற்பத்தி, தொழில் உற்பத்தி போன்றவற்றை உறுதிப்படுத்தும் வேலைவாய்ப்புகள். கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் ஆக்கபூர்வமான உற்பத்திப் பெருக்கத்துக்கு வழிகோலாமல், அன்றாடச் செலவுக்கு பயனாளிகளுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் வேண்டுமானால் கிடைக்கலாமே தவிர, பொருளாதார மேம்பாடு உறுதி செய்யப்படாது.
ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து 33,000 கோடி ரூபாய் விநியோகிக்கப்படுவது சரி. அதனால் ஏற்படும் உற்பத்திப் பெருக்கம் என்ன என்று கேள்வி கேட்க இங்கே யாருமில்லை. ஜி.டி.பி. வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி 2004-இல் அமைந்தது முதல், வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பது புறந்தள்ளப்பட்டு, சமூகப் பாதுகாப்பு என்கிற பெயரில் பல்வேறு வாக்கு வங்கித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் விளைவுதான் இப்போது, பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டிருப்பதும், வேலைவாய்ப்புக் குறைந்திருப்பதும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
மத்திய அரசிடம் அனுமதிக்காக முடிவெடுக்கப்படாமல் தேங்கி நிற்கும் திட்டங்கள் மட்டும் 396. இவற்றில் 108 திட்டங்கள் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான அனுமதி பெறுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன. 111 திட்டங்கள் கட்டமைப்புத் திட்டங்கள். 146 திட்டங்கள் கனிம வளச் சுரங்கங்கள் தொடர்பானவை. வனத் துறை அனுமதிக்காகக் காத்திருக்கும் திட்டங்கள் 409. இவை ஏன் முடியும், முடியாது என்று முடிவெடுக்கப்படாமல் தேங்கிக் கிடக்க வேண்டும்? அரசு, இந்தத் திட்டங்களை ஏன் தேங்க வைத்திருக்கின்றது? பேரம் படியாததால் என்று சொல்லிவிட முடியாவிட்டாலும், நிச்சயமாகச் செயல்பட மறந்து விட்டதால் என்று சொல்லிவிட முடியும்.
இந்தியப் பொருளாதாரம் பேராபத்தை எதிர்நோக்குகிறது. நாற்சந்தியில் இந்தியாவை நிறுத்தியிருக்கிறார்கள். மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், தேசம் சீர்குலைந்துவிடும்!

நன்றி : தினமணி

Monday, April 29, 2013

கழுகு சண்டை

கிடைத்த இரையை  கைப்பற்றி கொள்ள இரு கழுகு இடையே நடந்த ஆக்ரஷோமான சண்டை.


Saturday, April 27, 2013

தும்ப உட்டுபுட்டு வால புடிக்கிற கத


தனியார் வணிக வளாகக் கட்டட தீ விபத்துக்குப் பிறகு, கோவையில் அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காலம் கடந்தவையாகவே காணப்படுகின்றன.
கோவையில் வியாழக்கிழமை தனியார் வணிக வளாகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து 4 பெண்களின் உயிரை பலிகொண்டது. இச்சம்பவம் கோவை மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதுமட்டுமல்ல, அரசு அதிகாரிகளின் மனதையும் இந்த விபத்து உலுக்கி விட்டது. கோவை மாநகரில் தற்போது எடுக்கப்பட்டு வரும் உடனடி நடவடிக்கைகள் அதன் எதிரொலிகளே.
கோவையில் இதுதான் முதல் தீ விபத்து என்று யாரும் கூறிவிட முடியாது. இதற்கு முன்னரும் பல பெரிய தீவிபத்துகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2010 ஜூன் 27-ஆம் தேதி, கோவை, நஞ்சப்பா சாலையில் ஒரு தனியார் ஆட்டோமொபைல் உதிரிபாக விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து, 2012 ஜனவரியில் குறிச்சி மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அதே ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி தண்ணீர்ப்பந்தல் சாலையில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்து,  அதே ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தெற்கு உக்கடத்தில் மௌலானா முகமது அலி மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து எனப் பலவற்றை கோவை கண்டிருக்கிறது.
இந்தச் சம்பவங்கள் அனைத்திலும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற பேரிடர்க் காலங்களில், தற்போதைய தீ விபத்துக்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்படுகின்றனவோ இதே காரணங்கள் அப்போதும் கூறப்பட்டன.
அப்போதும் இதேபோல, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு, உள்ளூர்த் திட்டக் குழும அதிகாரிகள், மாநகரில் முறையான அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைக் கணக்கெடுத்தனர். தீயைணைப்புத் துறையினர் தங்களிடம் சான்று பெறாத கட்டடங்களைக் கணக்கெடுத்தனர். ஆனால் அதற்கடுத்த கட்டப் பணிகள் தான் நடைபெறவில்லை.
தூக்கியடிக்கப்படும் அதிகாரிகள்: இதுபோன்று அனுமதியின்றி கட்டடம் கட்டுவோர் மாநகரின் பெரிய புள்ளிகளாகவும் தொழிலதிபர்களாகவுமே உள்ளனர். தெரிந்தே தவறு செய்பவர்கள் இவர்கள்.
பேரிடர்க் கால நேரங்களில் சில அதிகாரிகள் துணிந்து நடவடிக்கைகள் எடுத்தாலும், பெரும்புள்ளிகள் தங்களது அதிகார பலத்தைப் பயன்படுத்தி, மேலிட நிர்பந்தம் மூலமாக அந்த அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு இடம் மாற்றி விடுகின்றனர்.
அண்மையில், இவ்வாறு துணிந்து நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளூர் திட்டக் குழும அதிகாரி ஒருவர் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கே இந்நிலை என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும் என்கின்றனர் தீயணைப்புத் துறையினர்.
மதிக்கப்படாத அரசு உத்தரவுகள்: 50 அடி உயரத்துக்கு மேல் உள்ள அனைத்துக் கட்டடங்களையும் உயர்மாடிக் கட்டடங்கள் என்று கணக்கில் கொள்ள வேண்டும். தீயணைப்புத் துறை அனுமதி பெறாத கட்டடங்கள் இயங்கக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பேரிடர்க் காலங்களில் பயன்படுத்த தீ விபத்துத் தடுப்புக் கருவிகள், சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும். தீ விபத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக ஒதுங்க இடம் ஒதுக்க வேண்டும். பெரிய வணிக வளாகக் கட்டடங்களில் தீயணைப்பு வாகனங்கள் சென்றுவரும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் தேசிய கட்டட விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை கட்டட உரிமையாளர்கள் மதித்திருந்தாலும், அரசு அதிகாரிகள் சரியாகப் பின்பற்றியிருந்தாலும், விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
தற்போது தீ விபத்து நிகழ்ந்த கட்டடம் விதிமுறை மீறிக் கட்டப்பட்டுள்ளது. இந்த உண்மை இப்போது தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது என்று கூறுவது, யாரும் நம்ப முடியாத ஒன்று.
எனவே விதிமீறல்கள் பிரச்னைக்குரியவை என்று தெரிந்திருந்தும் இத்தனை நாள்களாக நடவடிக்கை எடுக்காத நிலையில், 4 உயிர்கள் தீயின் கோரத்துக்கு இரையான பின்னரே அதிகாரிகள் விழித்துள்ளனர். இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்துமே, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் வேலை தான்.

நன்றி : தினமணி

இளவேனில் காலத்தொடகத்தின் அடையாளங்கள்

Friday, April 26, 2013

அழகிய இயற்கை சூழலில் அமைந்த உப்பளங்கள்

உயிர் வாழ்க்கைக்கு உப்பு அவசியம்  இந்த பூமியில் ஏராளமாய் இருக்க அதை இருவழிகளில் பிரிதெடுக்கிறோம் .  உப்பு நீரிலிருந்து எடுக்கப்படும் உப்பு பாறையிலிருந்து   எடுக்கப்படும் உப்பு.

உப்பளங்கள் அமைந்த இயற்கை சூழல் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணங்கள்  உடையது.

உலகின் மிகப்பெரிய உப்புஏரி பொலிவியா

சிலி

கொலம்பியா உப்பு சுரங்கம்

சுற்றுலாதளம் போலண்ட் உப்பு சுரங்கம்

ஜெர்மனி உப்பு சுரங்கம்

பெரு உப்பளம்
சென்ட்ரல் ருமேனியா

ருமேனியா 

எத்தியோப்பியா  உப்பளம்

எத்தியோப்பியா

கொலம்பியா உப்பு நீர் அருவி


சீனா உப்பளம்

ஆஸ்திரேலியா


இந்தியா குஜராத்LinkWithin

Related Posts with Thumbnails