Saturday, March 30, 2013

சீனாவும் குப்பையும்
                               

இலவசம்னா சும்மாவா! (பகிர்வு)


உலகமயமாக்கலில் இந்தியா முழுமையாகச் சேர்ந்துவிட்டது என்று கூற முடியாவிட்டாலும் இதுவரை சேர்ந்ததில் நடைபெறும் வியாபாரமே ஐரோப்பிய நாடுகளுக்குச் சவால்விடும் வகையில் இருக்கிறது. அதனால்தான் சில்லறை விற்பனை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா அனுமதி தர வேண்டும் என்று அப்படி ஆலாய் பறந்தார்கள்.
வியாபாரிகள் எப்போதுமே தங்களுடைய விற்றுமுதல் விவரங்களையும் வியாபார தந்திரங்களையும் மற்றவர்களிடம் சொல்வதில்லை. அதற்குக் காரணங்கள் பல. முதலாவது, வியாபார உத்தி தெரிந்துவிட்டால், நுகர்வோர் தங்களுக்கு மிகக் குறைந்த விலையில் பொருள்களைத் தரச்சொல்லி நச்சரிப்பார்கள். தரம், எடை தொடர்பாக கேள்விகேட்டு நிம்மதியை இழக்கவைப்பார்கள். வியாபாரமே மோசடிதான் என்று மூர்க்கத்தனமாக முரண்படுவார்கள். எனவே ரகசியம் காத்தார்கள்.
ஆனால் இன்றைக்கு எதையும் எல்லோரிடமிருந்தும் மூடி மறைக்க முடியாது. எடை, தரம், விலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவும் தரப்படுத்தவும் சட்டங்களும் அதை அமல் செய்ய அமைப்புகளும் ஏற்பட்டுவிட்டன.
இந்த நிலையில், "கோடைக்கால விழாச் சலுகை', "ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்', "வட்டியே கிடையாது - பொருளை எடுத்துச் செல்லுங்கள்' என்றெல்லாம் விலை அதிகமுள்ள பண்டங்களுக்கே விளம்பரம் செய்கிறார்களே, இவை நம்பத்தக்கவைதானா என்ற சந்தேகம் நமக்குள் எழுவது இயற்கையே.
இதை வணிகச் செய்திகளைத் தரும் பருவ இதழ் ஒன்று இந்தியா முழுக்க ஆய்வு செய்து நம்முடைய சந்தேகத்துக்கு விடை தந்திருக்கிறது. இந்தியச் சந்தையில் இப்போது கணிசமான நுகர்வோர்கள் இளைஞர்களே. அவர்கள் உண்பது, உடுப்பது மட்டுமல்லாமல் இதர நுகர்வுப் பொருள்களையும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஈர்க்கவும் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்கவும் புதியவர்களிடம் அறிமுகப்படுத்தவுமே வர்த்தக நிறுவனங்கள் இந்த உத்திகளைக் கையாள்கின்றன.
இப்படி விற்கப்படும் பொருள்களின் சந்தை மதிப்பு மட்டும் - மூர்ச்சையடையாதீர்கள் - ஆண்டுக்கு இரண்டு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய். இந்த இலவசங்கள் இன்று நேற்றல்ல 1903-ஆம் ஆண்டே "கிங் சி ஜிலெட்' என்ற தொழிலதிபரால் சவர ரேசர் விற்பனையில் தொடங்கப்பட்டது. அவர் துணிச்சலாக ரேசர்களை தனக்குத் தெரிந்தவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அவர்களுடைய உறவினர்கள் நண்பர்களிடையே இலவசமாகவே வழங்கினார். ரேசரோடு ஒரு சில பிளேடுகளை மட்டுமே முதலில் வழங்கினார்.
ரேசரை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் சும்மா இருப்பார்களா, தொடர்ந்து அவருடைய பிளேடுகளை வாங்கினார்கள். ரேசர் அறிமுகத்தில் ஆன செலவு - பிளேடு வியாபாரத்தில் லாபமாக வந்து கொட்டியது.
இதே உத்தியில்தான் எச்.பி. நிறுவனம் தன்னுடைய பிரிண்டர்களை விலை குறைவாக விற்கிறது. அதன் பிறகு "காட்ரிட்ஜ்' விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்து அதைச் சரிக்கட்டிவிடுகிறது. இப்படி பல நிறுவனங்கள்.
கூகுள், யாகூ போன்ற நிறுவனங்களும் ஈ மெயில், மேப், சர்ச் இலவசம் என்று அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.
இதுபோக சில பண்டங்களை வாங்கினால் நுகர்வோர் கொடுத்த தொகையில் ஒரு பகுதியை அவருக்கே திருப்பித்தரும் "கேஷ்-பேக்' என்ற உத்தியையும் கையாள்கின்றனர். இதையும் கண்மூடித்தனமாக அவர்கள் செய்வதில்லை. அந்த நிறுவனத்தின் விற்பனை உத்திக்காக ஒதுக்கும் தொகையில் 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் இதற்குச் செலவிடுகின்றனர். அதனால்தான், "முந்துங்கள் - இந்த ஆஃபர் சில நாள்களுக்கு மட்டுமே' என்று அறிவிக்கிறார்கள். மிகப்பெரிய மோட்டார் வாகன நிறுவனங்களே இப்போது "0' சதவீத வட்டியில் கடன் பெற்று எங்களுடைய வாகனங்களை ஓட்டிச்செல்லுங்கள் என்று அறிவிக்கின்றன.
"இதெல்லாம் நுகர்வோரின் தலையில் கை வைக்காமல் சாத்தியமா?' என்றால், "சாத்தியமே' என்று ஆய்வு தெரிவிக்கிறது. உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர், வங்கிகள் இணைந்து தங்களுக்கு வர வேண்டிய லாபம் அல்லது வருமானத்தைக் குறைத்துக் கொள்ளச் சம்மதித்து, அவரவர் தகுதிக்கு ஏற்ப இந்தச் செலவைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
நுகர்வோருக்கும் லாபம், இவர்களுக்கும் விற்பனையை உயர்த்த முடிவதால் வியாபாரம் பெருகுகிறது என்பதால் நீண்டகால நோக்கில் லாபம்.
இப்படி இலவசங்களை அறிவிப்பதால் தங்களுடைய தயாரிப்புகளை நேரடியாக நுகர்வோரிடம் விற்க முடிகிறது, புதிய பிராண்டுகளை எளிதில் அறிமுகம்செய்ய முடிகிறது, நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கிறது, பொருள்களை அதிக காலம் தேங்கவிடாமல் விரைவாக விற்றுத்தீர்க்க முடிகிறது என்று அதன் பலன்களைப் பட்டியலிடுகின்றனர். இதனால் உற்பத்தியும்,சந்தைப்படுத்தலும், விற்பனையும் தொய்வின்றிச் சீராக நடைபெறுகிறது.
தொடர்ந்து தங்களிடமே வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக, "விசுவாச போனஸ்' என்று சில நிறுவனங்கள் கழிவுகளை அறிவிக்கின்றன. அந்தச் சந்தை மதிப்பு மட்டும் 5,000 கோடி ரூபாய் என்று தனியாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்படி பெரிய நிறுவனங்களின் வியாபார உத்திகளால் அதிகபட்சம் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கூட அவற்றுக்கு சேர்ந்துவிடுகின்றனர்.
"ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்றால் இனி அஞ்சவேண்டாம், சற்று பேரம் பேசி சலுகைகளைக் கூடுதலாகக் கேட்டு வாங்குங்கள், அதற்கும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

நன்றி தினமணி

Friday, March 29, 2013

பிறப்புக்கு முன் குழந்தையின் சிரிப்பையும் அசைவையும் பார்க்க உதவும் மென்பொருள்

புதியதாக வடிவமைக்கபட்டுள்ள நீயூ ஸ்டேட் ஆப் த ஆர்ட் இமேஜிங்  மென்பொருள் கருவில் உள்ள குழந்தையின் நிலைமையினை  மிகதெளிவாக தருகிறது.

3டி அல்ட்ரா சவுண்டு ஸ்கேனில்  இந்த மொன்பொருளை இணைத்து கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவையான போட்டோ ஷாப் எபெக்ட்களை கொடுத்துவிடலாம்.

பிறப்பதற்கு முன்னே குழந்தையின் முகம்  குழந்தை சிரிப்பது உதைப்பது ஆகியவற்றை நேரடியாக பார்க்கவும் அவற்றை அப்படியே வீடியோவாக மாற்றிகொள்ள முடியும்.

கருப்பையில் உள்ள கருவின் குறைகளை மிக தெளிவாய் உடனே கண்டறியமுடியும்.

மொனோகோ சேர்ந்த மருத்துவர் பொ்னார்ட்பெனோயிட் இந்த மென்பொருளை வடிவமைத்தவர்.

நிஜத்தில் ஸ்பைடர் மேன்

உக்ரைன் நாட்டை சேர்ந்த மஸ்டாங்க் என்பவர் மாஸ்கோநகரின் பெரியகட்டிடங்களின் விளம்பில்   தொங்கியப்படி ....


Thursday, March 28, 2013

உருளைகிழங்கு யானையும் பட்டாணி பட்டாம்பூச்சியும்

பிரேசில் நாட்டை சேர்ந்த வெனீசா டௌலிப் என்பவர் வடிவமைத்த காய்கறி விலங்குகள்... எல்லாம்  நாம பாக்கிற பார்வை தாங்க....
LinkWithin

Related Posts with Thumbnails