Friday, February 26, 2010

அசத்தும் கையேடு(http://kaiyedu.blogspot.com)
மணற்கேணி 2009 போட்டியின் "தமிழ் அறிவியல்" பிரிவின் வெற்றியாளர் "திரு.இரா.இரஞ்சித்" அவர்களை தமிழ்வெளி மற்றும் சிங்கை வலைப்பதிவர்களின் சார்பாக வாழ்த்துகிறோம்.

போட்டியில் வெற்றி பெற்ற எங்களது சக வலைபதிவர் , எங்களது இனிய நண்பர் இரா.இரஞ்சித் அவர்களை வாழ்த்துகிறோம்.Thursday, February 25, 2010

முகம் பார்க்கும்

உட்கருத்து புரிந்து போன கதைகள் கவிதைகள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக பார்ப்பது படிப்பது கடினம்.

நாம் படிப்பதற்கு உரிய கதைகள் கவிதைகள் தான் எவை?

பார்க்க தகுந்த வேறு மாதிரியான நிகழ்வுகள் என்ன? என்ற தேடுதலில் வியப்பை அளிக்கும் மையகருத்துகள் புதிய உணர்ச்சியை உண்டுபண்ணும் உணர்வாக நம்முள் முகம் காட்டி நிற்கும்.

டேய் என்ன புடிடா கருப்பா... என்று ஒருவன் கத்தினான்.

குளத்தினுள் விளையாடி கொண்டிருந்த பத்து பதினைந்து சிறார்களில் ஒருவன் . கருப்பா என்கிற கருப்புசாமி நீந்த தொடங்கினான்.

கத்தியவன் உள்ளுக்குள் முழ்கி காணாமல் போனான்.

கருப்பு தேடினான்.

இரண்டுநிமிடங்கள் ஆனது வேறொரு இடததில்வெளிவந்தான்.

டேய் கருப்பு அங்கே பாரு..டேய் கருப்பு.. ஒரு சேர கத்தினார்கள்.

கழுத்து திருப்பி முகம் பார்க்கும் வினாடியில் முழ்கி போனான். முழ்கிய இடத்தில் வட்டமாய் அலைகள் கிளம்பியது.

சிறார்களின் சந்தோச கத்தல்கள் குளம் குழம்பியது.

அருகில் பேசி எட்ட நின்றுஉள் ஒன்றாய்

புறம் ஒன்றாய்

அருகில் பேசியவன்

நினைக்க பேச

இரண்டும் ஒன்றாய்

எட்ட நின்றவன்

நம்ப தகுந்தவன்

அருகில் பேசியவன்

நம்ப தகாவதன்

எட்ட நின்றவன்

கவர்ச்சியாய்

அருகில்

கண்களுக்கு தெரியா

தூரமாய்

தோற்கடித்து

அனுபவம் தரப்படும்

தெரிய கடினம்

அமைதி தரப்படும்

அருகில் பேசியவன்

எட்ட நின்றவன்

Saturday, February 20, 2010

உன்கோபம் உன்பார்வை

உன்வேகம் உன்கோபம் உன்பார்வை எல்லாம் என்னுடைய கருத்துகளுடனான எதிர்போராட்டம்விளைவு உன்கோபம் என் மீது இன்றைய எதிரியாய் நான்.

நீ செய்த செயல்களின் விளைவுகள் வரும் காலங்களை எதிர்நோக்கு கட்டாயம் வரும், விளைவுகளை நீ உணரும் சமயம் உன் அருகில் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம் வெளிப்படும் உண்மைகள் சொல்லும் என்னுடைய வாதத்தின் இயல்பை ஏனென்றால் என்னில் எழுந்த கருத்துகள் யாவும் உன் நலன் சார்ந்தவையே..

உன்னில் நான் வாழ்ந்த நண்பனாய் வாழும் எதிரியாய்..

நாளை நடப்பதை யாரறிவார்?

Wednesday, February 17, 2010

அவன் உலகு

அரை நிர்வாணம் தான் அவன் அரைக்கால் சட்டை கிடையாது. ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று பிளாஸ்டிக் சேர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஒன்றரை வயது இருக்கும் அந்த சிறுவனுக்கு விளையாட தேவை ஒரு பிளாஸ்டிக் சேர் மட்டும் தான். அடுக்கியிருந்த மூன்றில் ஒன்றை எடுப்பதற்கு அதனுடன் போராட்டம் நடத்தி கொண்டிருந்தான்.

நகர்த்தினான் மூன்றும் சேர்ந்து நகர்ந்தது. அவனுக்கு எட்டும் தூரம் ஒரு சேரை தூக்கினான் சிறிது மேல் எழும்பியது. அதற்கு மேல் தூக்க உயரம் இடையூறாக இருக்க அப்படியே திரும்பவும் வைத்தான்.

சிறிதுநேரம் மௌனமாய் நின்றான். பலம் கொண்டு கிழே தள்ளினான். தள்ளப்பட்ட சேரில் ஒன்றை உருவினான்.

அதன் பிறகு அந்த சேர் அவனுடைய வாகனமாக மாறியது. தள்ளி கொண்டே அவன் வீட்டு வாசலிருந்து குறிப்பிட்ட தூரம் போய் திரும்புவதுமாக இருந்தான்.

தள்ளி கொண்டே சென்றவன் திடீரென நின்றான் . சேரை அப்படியே விட்டு விட்டு வீட்டு வாசலுக்கு ஓட்டம் பிடித்தான். வேகத்துடன் அவனது சேரை ஆட்டோ ஒன்று கடந்து சென்றது.

எனக்கு ஆட்டோ அவன் எப்படி அதனை உருவகப்படுத்தி வைத்திருந்தான் என்று தெரியவில்லை. சைக்கிள் இரு சக்கர வாகனங்களை அவன் மதிக்கவேயில்லை. அதைப்பற்றி அவன் தெரிந்திருக்க நியாயம் இல்லை தான். ஆனாலும் அதைப்பற்றிய கவலை இல்லாமல் அவனுடைய விளையாட்டு தொடர்ந்தபடி இருக்க அவனுடைய உலகமும் சமுதாயத்தின் போக்கும் வெவ்வேறாக இருந்தது.

அவன் உலகில் அவன்தான் எல்லாமுமாக இருந்தான்.

இப்பொழுது சிறுவன் முழுநிர்வாணமாகி இருந்தான். சேர் அவனிடமிருந்து காணாமல் போயிருந்தது. வெற்றுடம்புடன் ஓடுவதும் திரும்பவும் ஒடியாரதுமாக இருந்தான்.

Tuesday, February 16, 2010

தேநீர் வேளை

கண்விழித்து சிறிது நாழியில் டீக்கடை நோக்கி ஓடும் எனது மிதிவண்டியில் எனது பயணம் தெரிந்த முகங்களின் தலையாட்டலுக்கு புன்னகையுடன் பதிலுக்கு தலையாட்டியப்படியே தொடரும் பயணம் முடிவுறு விதமாய் வழக்கமாக டீக்குடிக்கும் டீக்கடை.

அன்று குளிர் அதிகமாய் இருக்க டீ வாளியை தூக்கிகொண்டு வரும் சிறுவனின் அசைவுகள் என்னவோ முன் வீசி பின் இறங்க பின் வீசி முன் இறங்க ஒரு அமைப்புக்குள் உட்பட்டதாய் இருந்தது.

சிவப்பு குல்லாய் உடம்பு மறைக்க ஓர் துணியும் தன்னுடைய மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பெரியவர்.

முல்லெ..கனகாம்பரம்…மல்லி …யம்மோவ் பூ…

காலை வெயில் கதகதப்பில் நடுரோட்டில் படுத்திருந்தஆடு. துணைக்கு அதன் பங்காளிகள் நின்றப்படி குளிர்காய்ந்து கொண்டிருக்க மணல் ஏற்றி வந்த வண்டிகாரன் சத்தம் போட்டதும் எழுந்து ஓடவேண்டிய நிர்பந்தம்.

பேருந்தைப் பிடிக்க வேகமாக நடைப்போட்ட இளம்பெண்ணுடைய விழிகளின் அலைதல் தான் யாரை பார்க்கிறோம் தன்னை யார் பார்க்கிறார்கள் என்றப்படியே நடந்தாள்.

டேய் ..சார் வந்துருவாருடா..வாடா மேல போயிருவோம்.. நண்பனை கூப்பிட்டப்படியே விரைந்து மாடி படியேறிய சிறுவன்.

திரும்பி பார்க்க பத்தாம் வகுப்பு தேர்வெழுத அணுகவும் வீனஸ் கல்வி நிலையம் என்ற விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அய்யா வணக்கம் என்று குரல்வந்த திசையில் திரும்ப. வாங்கண்ணா..வாங்க..எண்ணா டீ..

இல்ல வேணாம்..இப்பதான்..

சரிண்ண... நான் கிளம்புறேன்.

சரி வாங்கய்யா..

Saturday, February 13, 2010

நம்பி்க்கை கொள் நிம்மதியை இழந்து விடு

அப்படி இப்படி குடும்பம் நடத்த ஆட்ட தூக்கி குட்டியில போட்டு குட்டிய தூக்கி ஆட்டுலபோட்டால் தான் முடியும்.

சரிதான் ஒன்யே நம்பிகிட்டே இருந்தாலும் கதைக்கு உதவாது இதுமனசோட பாடு ..கஷ்டபட்டு தான் ஆகனும் ஏதாவது முயற்சிப்போம் அறிஞ்சவங்க தெரிசவங்க கேட்டு இதெல்ல எறங்குன்னா எப்படி இருக்கும் அதுல்ல எறங்குன்னா எப்படி இருக்குமுன்னு கேட்டுகிட்டு எறங்குன்னா ஆத்துல ஒரு காலா சேத்துல ஒரு காலா நிக்க வேண்டியதா போக என்ன செய்ய சிவனேன்னு உட்காருவும் முடியில நிக்கவும் முடியல ஓடு ..ஓடு ..ஓடிக்கிட்டே இருந்ததான் நிக்கமுடியும் போலிருக்கு

நம்ம தெரிஞ்சு நம்ம நெலமையில நிம்மதியா இருந்தா தொல்ல இல்லதான். ரெண்டு வருச முன்னாடி என்னோட சேந்து சைக்கிள் மிதிச்சு சுத்துனான் இன்னிக்கு வண்டில போறான். அவனுக்கு இருக்குற வாய்ப்பென்ன கணக்கு கெடையாது வண்டில போறான் அது பெருசு.

தகுதி தெரியாம ஆசப்பட்டு மெனக்கெட்டு எதுவும் தெரியாம எறங்குன்னா கால ஒடிச்சு போடதான் செய்யும் என்ன செய்ய..

மனதின் கோரப்பிடிக்குள்
எண்ணங்களின்

ஆக்கிரமிப்பு

விரும்பும் ஒன்றாய்

விரும்பாதது

மனம் சொல்லும்

சமாதான காரணங்கள்

மிகச் சரியாய்

உண்மைப்போல்

நுட்பமாய் பார்க்கையில்

விரும்பாத ஒன்றை

விரும்ப வைக்க

மனம் போடும்

வேடம்

உண்மையான

வேலையாளாய்

கையிலிருக்கும்

காசாய்

நம்பிக்கை செய்து

வசமாய் சிக்க

வைக்கும்

மனதின் கோரப்பிடிக்குள்

நான்.

Wednesday, February 10, 2010

கிறுக்கனின் கிறுக்கல்
மௌனத்தின் பெருவெளியில் இழுக்கப்பட்டு சுழற்றி தூக்கியெறிப்பட இதுதான் இலக்கு என்று தீர்மானிக்க முடியா பயணம்.

ஆரம்பம் தெரியாது முடிவும் தெரியாது. பயணம் ஆரம்பம் தானா இல்லை முடிவா தெரியாது. பயணம் …பயணம் தொடர்ந்து நிகழ்வு.

நேரம் இல்லை மாறுதல்கள் இல்லை இயக்கம் இருக்க இயக்கம் இல்லை.

இழுக்கப்பட்ட அத்தனையும் பெருவெளிக்குள் பெருவெளியாகி அடையாளம் இழந்து அதுவாகி…

Wednesday, February 03, 2010

ராஜதந்திரம்பிறர்கண்கள்படாது

செயல்

ரகசியங்கள் வெளியிடா

மனது

பிறர் தெரிந்து

ஆராய்கையில்

சொல்லப்படும்

போலி சமாதானங்கள்

காரிய வெற்றி

வெளிகாட்டப்படும்

முடிவுகள்

மனித நடைமுறையில்

எதிராக

இடம் மாறுகையில்

தவறானசெயல்

சரியாகவும்

சரியான செயல்

தவறாகவும்

ராஜதந்திரம்

Monday, February 01, 2010

பணம் பணம் என அலைந்துமற்றவர் வாழ தன்னையே அழித்துக் கொண்டவர்கள். தங்களது சொந்த வாழ்வில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்றி கொள்ளலாம். ஆனால் அவனைச் சேர்ந்தவர்கள் அவனது கூட்டம் என நினைத்து தன்னையே அழித்து கொண்டவர்கள் அவர்கள்.

தம்பி நன்றாக இருக்க வேண்டும் நினைத்த அண்ணன்களும் அண்ணன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த தம்பிகளும் இத்தகைய உணர்வுகளுக்கு விதை போட்டு பயிராக்கிய பொற்றோர்களும் இருக்கவே செய்தார்கள்.

இன்றைக்கு உள்ள சமுதாய சூழலில் ஒற்றுமை உணர்வுடன் செயல்படும் குடும்பங்கள் மண்ணில் வாழும் சொர்க்கம்.

கூட்டு குடும்பாய் இருப்பதில் சிரமங்கள் இருக்கவே செய்யும் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகவும் பகிர்ந்து கொள்ளும் துன்பம் பாதியாக குறையும்.

கால மாற்றங்கள் மனிதனுடைய தேவைகள் அதிமாக தன்னை மட்டுமே நினைத்து பணம் பணம் என அலைந்து தன்னை நிலை நிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம்.

அதனால் வாய்ப்புள்ள சில மனிதர்கள் மட்டுமே சேர்த்து சேர்த்து தன்னிடம் இருத்திக் கொள்ள நடுத்தரவர்க்கமும் அதற்கு கீழ் உள்ளவர்களும் படும்பாடு சொல்லமுடியாது.

பணம் தான் வாழ்வு என்று மாறிவிட்ட சூழலில் உணர்வுகள் மழுங்கிபோய் மனிதர்கள் வாழ்க்கையை தள்ளவேண்டிய நிர்பந்தம்.

குடும்பம் ஆவது உணர்வாவது இன்றைக்கு சாப்பிட சோறு கிடைத்ததா உடுத்த உடை கிடைத்ததா இன்றைக்கு ஜெயித்து விட்டோம் என கொண்டாட வேண்டிய நிலைமை தான் இன்றைக்கு இருக்கிறது.

தேவைகள் அதிமாக கொண்டே போகிறது மனித உணர்வுகளும் மழுங்கி கொண்டே போகிறது. இது காலத்தின் கட்டாயம்.

LinkWithin

Related Posts with Thumbnails