Monday, February 01, 2010

பணம் பணம் என அலைந்து



















மற்றவர் வாழ தன்னையே அழித்துக் கொண்டவர்கள். தங்களது சொந்த வாழ்வில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்றி கொள்ளலாம். ஆனால் அவனைச் சேர்ந்தவர்கள் அவனது கூட்டம் என நினைத்து தன்னையே அழித்து கொண்டவர்கள் அவர்கள்.

தம்பி நன்றாக இருக்க வேண்டும் நினைத்த அண்ணன்களும் அண்ணன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த தம்பிகளும் இத்தகைய உணர்வுகளுக்கு விதை போட்டு பயிராக்கிய பொற்றோர்களும் இருக்கவே செய்தார்கள்.

இன்றைக்கு உள்ள சமுதாய சூழலில் ஒற்றுமை உணர்வுடன் செயல்படும் குடும்பங்கள் மண்ணில் வாழும் சொர்க்கம்.

கூட்டு குடும்பாய் இருப்பதில் சிரமங்கள் இருக்கவே செய்யும் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகவும் பகிர்ந்து கொள்ளும் துன்பம் பாதியாக குறையும்.

கால மாற்றங்கள் மனிதனுடைய தேவைகள் அதிமாக தன்னை மட்டுமே நினைத்து பணம் பணம் என அலைந்து தன்னை நிலை நிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம்.

அதனால் வாய்ப்புள்ள சில மனிதர்கள் மட்டுமே சேர்த்து சேர்த்து தன்னிடம் இருத்திக் கொள்ள நடுத்தரவர்க்கமும் அதற்கு கீழ் உள்ளவர்களும் படும்பாடு சொல்லமுடியாது.

பணம் தான் வாழ்வு என்று மாறிவிட்ட சூழலில் உணர்வுகள் மழுங்கிபோய் மனிதர்கள் வாழ்க்கையை தள்ளவேண்டிய நிர்பந்தம்.

குடும்பம் ஆவது உணர்வாவது இன்றைக்கு சாப்பிட சோறு கிடைத்ததா உடுத்த உடை கிடைத்ததா இன்றைக்கு ஜெயித்து விட்டோம் என கொண்டாட வேண்டிய நிலைமை தான் இன்றைக்கு இருக்கிறது.

தேவைகள் அதிமாக கொண்டே போகிறது மனித உணர்வுகளும் மழுங்கி கொண்டே போகிறது. இது காலத்தின் கட்டாயம்.

1 comment:

PPattian said...

நியாயமான கருத்து.. எதிர்காலம் வளமாய் இருக்க பிரார்த்தனைகள்..

LinkWithin

Related Posts with Thumbnails