Wednesday, March 30, 2011

ரகசியம்



மாற்றங்கள் தேடிய
எனது பயணத்தில்
புரியப்படாத
மர்மங்களாய் நிகழ்வுகள்
நெடிய தூரத்தின்
பயண   வாழ்வில்
எதிர்பாரா நிகழ்வுகளினால்
திக்கு முக்காடி
துயரப்பட்டு
காற்றின் வீச்சில்
அலை க்கப்பட்ட
ருகாய் வாழ்வு
முடிவு
கண்டுகொ ண்டதாய்
அலைய  ...
இன்னமும்
கண்டு கொ ள்ளப்படாமலே
வாழ்வு.  

கோடை


அக்கினி நட்சத்திரம் ஆ ரம்பிக்கும் முன்னே ஆ ரம்பித்த கோ டை.

காலை  பனியின் ஈரம், வயல் ஈரம் நம்பி பயிர் செய்த தானிய வகை செடிகள் வெம்மை  தாளாது வாட தொ டங்கின.

தர்பூசணி வண்டிகளின் நடமாட்டம் தெருக்களில் அதிகமாகியது. எலுமிச்சை பழ பயன்பாட்டினால் ரூபாய்க்கு மூன்று விற்ற எலுமிச்சை    ஒன்றுக்கு ரூபாய் ஐந்தனாது.

ரூபாய் ஐந்திற்க்கு விற்றும் அவசரத்திற்கு கிடைக்காத நிலைமை.   தினமும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தயாரிக்கப்பட்ட  நீர் மோ ரின் சுவை   திடீரென்று கிடைக்காத எலுமிச்சை பழத்தினால் ” சப்”  என்றாகியது.

தாறுமாறாய் ஓட தொ டங்கிய எண்ணங்களில் இறந்தகாலமும் எதிர்காலமும் நிறையவே இருக்க அடைந்த பாதிப்புகளும் அடையாத குறிகோள்களும் அதிகமாய் வாட்டி வதைத்தது.

குளுமை  தேவை  நீர் தேவை  நீர் இருக்கும்பொழுது வராத பொ றுப்பு  இப்பொழுது வந்தது கூட  கோபமும் வந்தது. தடைப்பட்ட மின்சாரத்தினால் விசிறிகளின் தேடல் தொடங்க இருந்த  விசிறிகளின் இயக்கம் தொடங்கியது.

வ ளமை  முக்கியமென்றால் கோடை  முக்கியம்.

கோடையை  வரவேற்று வெப்பத்தில் இளை ப்பாறுவோ ம்.

Monday, March 28, 2011

தாய்மை



சில நேரங்களில் சில வார்த்தைகள் மனதை  பாதித்துவிடும்  அ ந்தவகையில்  அண்மையில் படித்து என் மனதை பாதித்தஇக்கவிதை தாய்மை  என்ற தலைப்பில்..




 இதுவரை

பிரசவ வலிதான்

பெருவலி என

அறிந்திருந்தேன்

 "இச்சமூகத்தில்

பிரசவிக்காததுதான்

 பெருவலி'

தத்தெடுத்தபோது

 தங்கை சொன்னாள்!

-வானவன்-

Wednesday, March 23, 2011

பெண்களே நடத்திய இறுதி ஊர்வலம்


இ றந்தவ ர்  உட லை   சுற்றி  அ ழும் பெண்களைப் பார்த்துள்ளே  ன்.  
இ றந்தவர்களை    அடக்கம் செய்த பெண்களை    கண்டு மகிழ்வெ ய்தினேன். செய்தி இ து…..

புதுச்சேரி : வீராம்பட்டினத்தில் இறந்தவர் உடலை பெண்களே கொண்டு சென்று அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, அரியாங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த திருவிழா கலை நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டது. இதனால், இரு கிராமத்தை சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். போலீசார் துப்பாக்கிச் ‹டு நடத்தி கலவரத்தை அடக்கினர். பிரச்னைக்கு காரணமானவர்களை போலீசார் தேடி வரும் நிலையில், வீராம்பட்டினத்தை சேர்ந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், வீராம்பட்டினம் நாகூரார் தோட்டத்தை சேர்ந்த செங்கேணி அம்மாள்(62) என்பவர் உடல் நிலை சரியில்லாமல் நேற்று காலை இறந்து விட்டார். தாயாரின் உடலை அடக்கம் செய்வதற்கு அவரது மகன் பார்த்தீபன் மட்டுமே வந்திருந்தார். ஆனால், ஊரில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில் உடலை அடக்கம் செய்வது எப்படி என்று தெரியாமல் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்தனர். பின், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒன்று கூடி, சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, சம்பிரதாய சடங்குகள் முடிந்த பின், மாலை 5.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் செங்கேணி அம்மாள் உடலை ஏற்றி, வண்டியை பெண்கள் இழுத்துச் சென்றனர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்து விட்டு வந்தனர். சுடுகாட்டிற்கு பெண்கள் செல்லக் கூடாது என்ற சம்பிரதாயம் இருந்த போதும், தவிர்க்க முடியாத காரணத்தால், பெண்கள் அனைவரும் ஒன்று கூடி உடலை அடக்கம் செய்த சம்பவம், புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(நன்றி  தினமல ர்)

Monday, March 21, 2011

பங்குனி உத்திரம்



பொங்கல் செலவு முடிந்தவுடன்  பத்துநாட்களில் கும்பாபிஷேகம் வரச் செலவு 48 நாட்கள் மண்டாலபிஷேகம் முடிந்து இரண்டு நாட்களில் பங்குனி உத்திர செலவு.

நடுத்தர வர்க்கத்திற்கும்  கீழ்தட்டு மக்களுக்கும் அவசியமில்லாத திருவிழா  ஆ னால் வரும் நாளில் வந்து உற்சவம் கொ ண்டாடிய  முருகன்.

கோவில் புண  ரமைக்கும் பணி பத்துவருடங்களாக நடைப்பெற்றதால் சாமி வீதிக்கு வரமுடியாது  அவர் வீட்டினுள் இருக்க  இந்த வருடம் தான் அ ருள் பாலிக்கும் தகுதியடைந்தார். பக்தர்களுக்கு எல்லோ ருக்கும் காட்சி தந்து ஆ ச்சரியப்படுத்தினார்.

காலை  மதியம் அ வ்வளவாக கூட்டம் இல்லை  மாலையில் கூட்டம் தெரிய  திருவிழா களை க்கட்டியது.

பூக்கள் விற்பனைக்கு..

கடைத்தெரு

அடையாளம்

கிராமத்து ஸ்பெசல்

திறந்தவெளிகடையும் பிழைப்பும்

தப்பு

காவடி

ஓய்வின் போது..

பலூன் சிறுவன்

அலங்காரமாய் சாமி

அருள்செய்ய தயார்.

மணிகள் விற்பனைக்கு..

மாலை சூரியன்

ஒருநாள் பிழைப்பு

ஊர் கோவில்

வேடிக்கை சிறுவன்.

பூக்கள் விற்பனைக்கு..

Friday, March 18, 2011

யாருக்கு தெரியும்?



நிமிடங்களில்
சென்ற உயிர்
யாருக்கு தெரியும்
யாரும் அறியாது
போகும் உயிர்
இதுவென்று
சிரித்தார்கள்
வரும் நிமிடங்களை
வாழ்ந்து
நாளை யை   திட்டமிட
வேகமாய் நடந்தார்கள்
பொ ங்கியெழும்
பிரவாகம் முன்
மனித உயிர்கள்
தூசி தான்
மனிதம் தான்
கவலை ப்படவேண்டும்
இயற்கை  ஏன்?
இயற்கையை  இயற்கையாய்
இருக்கவிட்டால் தானே….

Thursday, March 17, 2011

பயண ங்கள் தொடரும்


விடுமுறை  கிடைக்காத நாட்களில் கிடைத்த விடுமுறை .   நெடுநாட்கள் விடுப்பட்டு போன  வீட்டு வேலைகள் கண்முன்னே அணிவகுத்து நின்றன.

தப்பிக்க நினை த்து காரண ங்கள் சொல்லி நண்பர்களை   தேடுகையில் நண்பர்களுக்கு விடுமுறை  இல்லாதது  அப்பொழுது தான் நினை க்கு வந்தது.

நாம்  தான் செய்யவேண்டும் வீட்டு வேலை களை  கடமை யுணர்ச்சியுடன் ஆ ர்வத்துடன்    வீட்டுவேலை களை  செய்யபுக கடைசியில் கடமையாய் ஆகிப் போன து.

வேலைகளை   முடித்து களை த்து திரும்புகையில் சிரித்த மனை
வியிடம்பதில் சிரிப்பு ம்ம்ம்….என்ன   செய்ய ?

திடீரென்று ஜப்பான்  அழிவில் மனதின் எண்ணஓட்டங்கள்   அ த்தகைய சம்பவம் நடக்கும்  வரை அவர்கள்  அத்தகைய  அழிவை  பற்றி நினை த்திருப்பார்களா…. நடக்கும் நிமிடதுளிகளுக்கு முன் சிரித்தவர்கள்  எத்தனை பேர் நடந்து முடிந்த பிறகு யார் யார் எந்த திசையோ  ? அல்லது சடலங்கள் எந்த திசையோ  ?  இத்தகைய  அழிவை யாருக்காவது  முன்கூட்டியே இயற்கை  உண  ர்த்தியிருக்குமா… தெரிந்தவர்கள் தான் விபரங்கள் சொல்லவேண்டும்.

நாலு  மாதங்களில் நண்பன் ஒருவனுக்கு கல்யாண  ம்.  கல்யாண    மாப்பிள்ளை யின் உழை ப்பில் தந்தைக்கு  மிகுந்த நம்பிக்கைஎங்க நாங்க பொண் பாத்துட்டோம்.. ..

அந்த பயல தாலி வாங்க காசு வச்சுறுக்கானா கேளுங்க என்றார்.

விபரம் தெரிந்த நண்பர்கள் நண்பனிடம் சொல்ல நண்பன் முகத்தில் உண  ர்வுகள் காட்டாது நின்றான். பொறுப்பை அவன் தலையில் கட்டி விட  இனி அவனுடைய  சமார்த்தியம் தான்  அவனுடைய கல்யாணம். நாலு மாதங்கள் வரை  பொறுத்திருக்கலாம் என்று நினை த்திருக்கிறோ ம்.

தெரிந்த நண்பர் வீடு கட்ட முடிவு செய்து தன்னுடைய சொந்த இடத்தில்  வீடு  கட்ட  பண  தேவைக்கு பொண்டாட்டியின்  நகைகளை   கேட்க முதலில் சம்மதம் தெரிவித்து  தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வந்தபிறகு நகைகளை  தரமுடியாது என்று சண்டைப்போட  நண்பர் ஏகத்துக்கும் அப்செட்.

முதல் கோண  ல் முற்றும் கோண   லாய் தெரிய  என்ன செய்ய உண  ர்ந்து ஒத்துழைக்க வேண்டியவர்கள் மறுத்தால்  காரிய வெற்றி எப்படி என்றுதான் தெரியவில்லை .

தனிமைக்கு விருப்பப்பட்டு அருகில் உள்ள குளம் அ ல்லது வயல்வெளி என்று சென்றால் தெரிந்தவர்களின் ஏன்?  எதற்கு? என்ற கேள்விகளுக்கு பயந்தே பயண  ங்கள் தடைப்படுகின்றன .

ஆ னாலும் பயண  ங்கள் தொடரும் நம்பிக்கையில்.....

Sunday, March 13, 2011

வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.


குழந்தையானது வளரவேண்டிய வகையில் வளரமுடிவதில்லை . ஏனென்றால் பெரியவர்கள் அவனை   ஒடு்க்குகின்றனர். ” பெரியவர்கள்” என்பது உருவமற்ற பொ துப் பண்புப்பெயர். குழந்தையானது சமுதாயத்தில் ஓர் தனியன் . பெரியவ ர்கள் குழந்தையை    மாற்றுகின்றனர் என்னும்போது பெரியவர்கள்  என்பது குழந்தையைச் சூழ்ந்திருக்கும் பெரியவர்களையே குறிக்கும் .

முதல் பெரியவர் தாய். பிறகு தந்தை. பிறகு ஆ சிரியர் ஆ வர். குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து முன்னேறச் செய்யவேண்டிய ஒரு பெரும் பொ றுப்பைச் சமூகம் பெரியவர்களுக்குக் கொ டுத்திருக்கிறது.

பெரியவர்கள் என்ன  செய்கினறார்கள்?  தங்கள் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து நல்வழியில் முன்னேற்ற எவ்வளவோ   முயற்சி செய்கின்றனர். இப்படி முயற்சி செய்யும்போது பெரியசிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். ஏன்? தாங்கள் தமக்குள்ளே அடைத்து வைத்திருக்கின்ற பல குற்றங்களை த் தாமே அறியாததனால் தான். 


குழந்தையிடம் தற்காலம்   நாம் நடந்துகொ ள்ளும் முறையை விட்டுவிட்டு  வேறுவிதமாக நடந்துகொ ள்ள வேண்டும். இதற்கு முதலில் செய்யவேண்டியது பெரியவர்களின் மாறுதல்  ஆகும்.

குழந்தையிடம் கூட நமக்குத் தெரியாதது எவ்வளவோ   இருக்கிறது. அதை நாம் அறியவேண்டும்.  குழந்தயை  உள்ளது உள்ள படி காணமுடியாத ஒருகுறை தன்னுள் இதுவரை இருந்து வருவதை  உணரவேண்டும்.

குழந்தையைப் பொறுத்தமட்டில் பெரியவனாவன் தன்னை  வைத்தே பிறரை மதிப்பவன் ஆ கிவிடுகிறான். குழந்தை  உள்ளத்தைப்  பாதிக்கும்  ஒவ்வொ  ன்றையும் தன்னை  அது  எவ்வாறு பாதிக்கிறதென்றே கவனித்து வருகிறான்.  இந்தக் கொ ள்கையால் தான் குழந்தையை ஓர் வெற்றுப்பொருள் என்று கருதி தான் நல்லதுஎன்று கருதுவதை எல்லாம் குழந்தையிடம் நிறைத்து வைக்கமுயல்கிறான்.

பெரியவர்கள் தான்  நன்மை  தீமைக்கு உரைகல். பெரியவர் குற்றமே   செய்யமுடியாதவர். குழந்தை அவரைப்பார்த்துத் தான் தன்னை நல்லவனாக்கிக்கொ ள்ளவேண்டும் என்ற  இத்தகைய  மனப்பான்மையைக் கொ ள்ளும்போது  நம்மை அறியாமலே நாம் குழந்தையின் தன்மையை   அழித்துவிடுகிறோ ம்.  

Saturday, March 12, 2011

புகைப்படதொகுப்பு

சுமைதாங்கி

உழைப்பு

கடமையும் பேசியும்

பிஞ்சு

மாலையும் விளையாட்டும்

Wednesday, March 09, 2011

வாழும் தெய்வங்களின் ரகசியங்கள்.


குழந்தையின் உள்ளமானது தன்பிறப்பிலிருந்து சூழ்நிலை யின் பல முரண்பாடுகளுக்கு இடையில் வள ர்ந்து வருகிறது.


குழந்தைகளின் சுயேச்சைத் தொழில்களின் மீது பெரியவர்கள் தம்அதிகாரத்தைச் செலுத்திவருகின்றனர். இந்த அடக்குமுறைகளின்  காரணமாக குழந்தையின் சுயேச்சை நடத்தை   தடைபட்டு குழந்தை   உள்ளத்தில் மன நோ ய்க்குரிய வித்துகள் தோ ன்றுகின்றன . 

குழந்தையை ச் சுற்றிலும் உள்ள பெரியவர்களில் குழந்தையினிடம் அதிக ஆதிக்கம் செலுத்த உரிமையுடையவர் தாயார்தான்.

குழந்தையின்  ஞாபகங்கள் . அந்த  ஞாபகங்களில் அடங்கியிருப்பவை  என்ன? மனிதனுக்கும் , தற்காலச்சமூகச் சூழ்நிலை க்கும் ஏற்படும் முரண்களா? இல்லை . குழந்தைக்கும் , தாயாருக்கும் - பொதுவாகக் குழந்தைக்கும் பெரியவர்களுக்கும் இடையே ஏற்படும் முரண்கள் என்றே கூறவேண்டும். இந்த முரண்கள் தீரா நோயை  உண்டாக்கலாம். உடல் நோ யாகட்டும்,  மன நோயாகட்டும், மழலை  பிராயத்தில்நடந்த விஷ  யங்களின் முக்கியத்தைப் பொறுத்திருக்கிறது.

குழந்தையின் உள்ளத்தைப் பகுத்தறியக் கூடாது. அதை நாம் கவனிக்க வேண்டும். கூர்ந்து நோக்கவேண்டும். உள த்தன்மை  நோக்கோடு கவனித்து , எவ்வாறு குழந்தையானவன் பெரியவர்களிடத்திலும் சூழ்நிலை யிடத்திலும்  நடந்துகொள்கிறான் ,  என்னென்ன இன்பதுன்பங்களை  அனுபவிக்கிறான்  என்றெல்லாம்  யூகிக்க வேண்டும்.


பருவமடைந்த  மக்கள் வாழ்க்கையின் போக்கு குழந்தையின் உளவாழ்வையே  ஒட்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினை யில் பிறப்பிலிருந்து இறப்புவரையுள்ள சகல வாழ்க்கை அம்சங்களும் அடங்கும். 

பெரியவ ர்கள் தங்கள் அதிகார தோரணையைக் கொ ண்டுகுழந்தைக்குப் பற்பல இடையூறுகள் விளை விக்கின்றார்கள். இதைக் குழந்தை தன் புலன்களால் அறிந்துகொள்கிறான்.

பெரியவர்களின் செயலால் குழந்தைகளின் கட்டமைப்பு சின்னாபின்னப்பட்டு உருக்குலை கிறது. இதன் காரணமாக குழந்தையின் நடுமனதில் உயர்ந்தவனாக்குவதற்கு பதிலாக தாழ்ந்தவனாக்குவதற்குரிய  இடையூறுகள் தோன்றுகின்றன.


(தொடரும்)


Tuesday, March 08, 2011

வழித்தேடிய வண்ணத்துப்பூச்சி



வெட்ட வெளியில்
சுற்றி திரிந்த
வண்ண  த்துப்பூச்சி
தப்பி தவறி
சன்னல் வழியே
மண்டபத்தில்
உட்கார இடம்தேடி
ஓர் கிளை  தேட
மரம் அழித்த
மனித தலை களால்
நிரம்பிய மண்டபம்
மாலை நேர
செயற்கை வெளிச்சம்
வழி தெரியாது
வண்ண  த்துப்பூச்சியின்
பறத்தலில்
நிரம்பிய மண்டபம்
தன்னந்தனியாக
சுற்றி திரித்தலில்
தவித்த மனதும்
லயித்த கண்களும்
வழித் தேடி…
அமர இடம் தேடி…
இன்னமும் அலை ந்தது        
வண்ண  த்துப்பூச்சி

Tuesday, March 01, 2011

உடல்நோவு



பின் இரவுகளில்
தகித்த உடல்
முதுகெலும்பின்
மையவலி
வலியில் வாடிய
உடல்
முனுமுனுப்பாய்
பிதற்றல்கள்
இடமும் வலமும்
புரண்டப்படியே
தூக்கமின்மை
நீட்டிய கால்களை
மார்ப்போடு  அணை  க்க
கிடைத்த சுகத்தில்
தூக்கம்…
உடல்நோவு காய்ச்சல்.


LinkWithin

Related Posts with Thumbnails