Wednesday, April 29, 2009

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய குடும்பம்.


அவருக்கு உடல்நிலை சரியில்லாத போனது. மிக மோசமாக உடல் நிலை பாதிக்கபட்டது. மருத்துவரிடம் காட்டி சரி செய்தார்கள்.

ஒரு மாத இடைவெளி திரும்பவும் வீட்டு தலைவருக்கு உடல்நிலை சரியில்லாத போனது. திரும்பவும் மருத்துவர் கூடுதலாக ஜாதகம் பார்க்கப்பட்டது.

ஜாதகம் பார்த்தவர் கோவில் ஒன்றுக்கு பரிகாரம் வீட்டை வாஸ்து பார்க்கவேண்டும் சொல்லிவிட்டு தன் பணியை முடித்து கொண்டார்.

வாஸ்து பார்ப்பவர் அழைத்து வரப்பட்டார். வாஸ்து கணிப்பவர் வந்தார் வீட்டு நிலை சரியில்லை சமையல் செய்யும் இடம் அமைந்தது சரியில்லை அதை மாற்றிவிடுங்கள் என்று கூறி தனக்குரிய தொகையை பெற்றுக்கொண்டு தன் பணியை செவ்வனவே செய்ய வீட்டின் நிலையை மாற்றி அமைக்க நிலையை பெயர்த்தார்கள் பழைய வீடு அது நிலையோடு சேர்ந்திருந்த சுவரும் சேர்ந்து விழ சுவரையும் புதிததாக கட்ட வேண்டிய நிலைமை.

பார்த்தார்கள் வீட்டையும் புதிததாக கட்டிவிட்டார்கள். மருத்துவ செலவு வீட்டு செலவு என பொருளாதார நெருக்கடியில் சிக்கியது குடும்பம். மன அமைதியை தேட வேண்டிய ஒன்றாக இருந்தது.

வீட்டிற்கு குடிப்போனார்கள் போன கொஞ்ச நாட்களில் திரும்பவும் வீட்டு தலைவருக்குஉடல்நிலை சரியில்லாமல் போனது.

வேறு இடம் போய் விடலமா என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ நல்லது கெட்டது இரண்டையுமே பார்த்த வீடு இன்று சரியில்லாமல் போனது.

காரணம் மனித மனமா அல்லது வீட்டின் கெட்ட காலமா..

Monday, April 27, 2009

முகம் பார்க்க காசு நஷ்டம்

அந்த பகுதியில் பிரபலமான கடை தேநீர் அருந்த வடை பஜ்ஜி சாப்பிட ..

அண்ணா ஒரு டீ வடை ஒன்னு கொடுங்க என்றான்.

வடையும் டீயும் வந்தது. வடை எடுத்து ஒரு கடி அவன் முகம் உடனே சுருங்கியது.

அண்ணா ஒரே உப்புண்ணா என்று சாப்பிடமால் ஒதுக்கி வைத்துவிட்டு தேநீர் அருந்தி முடித்தான்.

காசு கொடுக்க கல்லா பெட்டி அருகே சென்றான். எவ்வளவு காசு என்றான் டீ வடையும் சேர்த்து ஆறு ரூபா கொடுங்க என்றார் கடை முதலாளி.

வடைக்கு சேத்துமாண்ண காசு என்றான் .

ஆமாம் என்றார். இன்னக்கு உப்பு அதிகமாயிடுச்சுப்பா என்றார்.

எண்ண உங்களுக்கு உப்பு அதிகமுன்னு முன்னடியே தெரியுமில்லே சொல்லவேண்டியதானே என்றான்.

முதலாளி ஒன்றும் சொல்லவில்லை.

அவன் தினமும் டீ அருந்தும் கடை நல்ல பழக்கவழக்கம்.
ஒன்றும் சொல்ல முடியாமல் வடைக்கும் சோ்த்து காசு கொடுத்தான்.

முகம் பார்க்க காசு நஷ்டம் இவனுக்கு ஆன செலவை ஈடுகட்ட விற்பனை செய்யும் கடை முதலாளி என்ன செய்ய..

Sunday, April 26, 2009

காதல் அன்பு பாசத்திற்கு அர்த்தமாகுமா?

ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காத சுயநல எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தொடர்நிகழ்வு காதலாகிறது.

எனக்குரியவள் அல்லது எனக்குரியவன் என்ற பற்றுதலுடன் செய்யப்படும் செயல்கள் பகிர்ந்து கொள்ளும் உணர்வுகள் தான் காதலில் நிகழும் அன்பாக கருதப்படுகிறது.

எவ்வாறு இருந்தாலும் இருவருக்கு உட்பட்டே எல்லா நிகழ்வுகளும் எல்லா பகிர்தலும் எல்லைகளுக்கு உட்பட்டே நிகழ்வதால் காதலை வேண்டுமானால் பாசத்திற்கு உட்படுத்தலாம்.

எல்லாவற்றிலும் அன்பு தானாகவே நிகழும். பாசத்தினுடைய முற்றிய நிலை தான் அன்பு.

காதல் என்றால் காமம் என்று சொல்லும் இந்த சமுதாயத்தில் காதல் அன்பு பாசத்திற்கு அர்த்தமாகுமா தெரியவில்லை?

Saturday, April 25, 2009

தந்தையிடம் போராட்டம் நடத்திய பெண்பிள்ளை.

நீங்க எம்மேலதான் அன்பு காட்டணும் அவளுக்கு அது செய்றீங்க அதெல்லாம் நான் ஒத்துக்கமுடியாது என்று தந்தையிடம் போராட்டம் நடத்திய பெண்பிள்ளை.

எம்மா இப்படியெல்லாம் இருக்ககூடாது எல்லோரிடமும் அன்பா இருக்கனும் உம்மேல மட்டுன்னா எப்படிம் மா என்ற தந்தையின் சமதானம்.

நீங்க எதுவேனா சொல்லுங்க அப்பா நீங்க எம்மேலதான்.

இது பாசம் . எல்லைகளுக்கு உட்பட்டது.

எல்லார் நலன் எல்லாவற்றிலும் நலன் உயரிய நோக்கமே அன்பு. எல்லைகள் கிடையாது.

அன்பு பாசம் காதல் வேறுபாடுகள் அதிகம் கொண்டவை. பாசமும் காதலும் நலன் சார்ந்த எதிர்பார்த்தலில் ஏற்படும் பற்றுதல் இந்த பற்றுதல் விடுபடகூடிய வாய்ப்புகள் அதிகம்.

தொடர் பற்றுதல் அன்பாக மாறுதல் அது வாழ்வு. வாழ்வின் சூழலில் இதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி வெற்றி பெறுவார்களும் உண்டு.

Friday, April 24, 2009

பார்வைகளால் சிறுத்து போகிறான்

பார்வைகளால்
சிறுத்து போகிறான்
பொருள் இல்லா
யாரிடமும் கையேந்தா
உழைப்பு
உதவும்நண்பர்கள்
வாழ்க்கையின் போக்கு
எதிர்கால
பயமுறுத்தல்களாய்
இவனின் பார்வைகளாய்
அவர்களின் அறிவுரை
எதிர்க்க வரும்
கோபம்
ஒரு காலம்
உதவியவர்கள் அவர்கள்
என்
நலம் விரும்பிகளாய்
பார்வைகளால்
சிறுத்து போகிறான்.

பிள்ளைகளின் போக்கு

தனக்கு கிடைக்கும் சம்பள பணத்தில் தன்னுடைய தேவைகளை குறைத்து மீதம் பண்ணிய பணத்தில் நூறு குலி நிலமாய் சோ்த்து சேர்த்து கிட்டதட்ட பதினைந்து மா நிலத்துக்கு சொந்தமான விவசாயி அவர்.

நிலத்தில் உழைப்பை விட்டால் வீடு வீடு நிலமாய் இருந்ததால் தன்னுடைய விவசாய நிலத்தை பெருக்கினார்.

மூன்று ஆண் பிள்ளை ஒரு பெண் பெண்ணை கட்டி கொடுத்துவிட மூன்று ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தது.

தங்களிடம் பதினைந்து மா இருக்கிறது என்ற நினைப்பில் தன்னுடைய விவசாய நிலத்தில் கூட உழைக்க மறுக்கும் பிள்ளைகள்.

இந்த விவசாயி இன்னமும் நிலத்தில் உழைத்தப்படி இருக்க பெரிய பையன் லோடு மேனாய் வேலை பார்க்கிறார்.
நல்ல சம்பாதிப்பு அத்தனையும் குடித்தே காலிப்பண்ண கூட்டு குடும்பமாய் வாழ்ந்ததால் அவருடைய தம்பிகளும் பொறுப்பற்ற முறையில் நடக்க ஆரம்பித்தனர்.

தம்பிகள் நிலத்தில் உழைத்தாலும் இவருக்கு விவசாயத்தில் கிடைக்க கூடிய பலனுக்கு பங்கும் உண்டு. இவருடைய சம்பளம் வீட்டிற்கு வருவது கிடையாது. அதனாலயே தம்பிகளும் அலட்சியம் பண்ண வீட்டின் சூழல் இருந்தும் கஷ்டமே..

இந்த விவசாயி எவ்வளவோ எடுத்து சொல்லி பார்க்க பிள்ளைகளின் போக்கு அப்படியே இருந்தது. எது எப்படியோ தனக்க பிறகு தன் பிள்ளைகளுக்கென்று ஏதாவது இருக்க வேண்டும் என்ற நினைப்பில் மிகுந்த கஷ்டங்களுக்கிடைய தன் நிலத்தை காப்பாற்றுகிறார்.

கூட்டு குடும்பத்தில் மூத்த பிள்ளையின் பங்கு பொற்றோர்களின் நடத்தைக்கு இணையாக இருந்தால் மட்டுமே குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

Thursday, April 23, 2009

தொட்டு தடவினா மருந்து துப்பினா அசிங்கம்.

காலையில் எழுந்திருந்து பார்த்தான் கண் இமைகளை தடவினான். ஒரு கண் இமையில் கட்டி வந்திருந்தது. என்னடா இது இரவு படுக்கை போகும் போது கண் இமை நன்றாக இருந்தது என்று நினைத்து கொண்டே படுக்கைவிட்டு எழுந்தான்.

என்னடா தம்பி கண்ணு வீங்கிருக்குஎன்றாள் தாய்.

ஹீட் போலிருக்கு கண் கட்டி வந்திருக்கும்மா என்றான்.

ஒண்ணுமில்லேடா ..உன் விரல உள்ளங்கையில தேச்சு சூடா வைடா அப்புறம் உன் எச்சில தொட்டு போடுடா சரியா போயிரும் நல்ல மருந்துடா அது என்றாள் தாய்.

வாயில் உமிழ்நீர் சுரந்து எச்சில் ஆனது. துப்ப எத்தனித்து துப்பினான். எட்டி போய் விழாமல் அவன் சட்டையின் மேல் வழிந்தது.

அய்யோ.. சே..என்று தன்னை நொந்தான்.

பக்கத்திலிருந்தவன் முகம் சுழித்து அந்த இடம் அகன்றான்.

ஒரு இடத்தில் மருந்தாகியது மற்றொரு இடத்தில் அசிங்கமானது.

Monday, April 20, 2009

காற்று

சன்னல்கள் இருந்தும்
அடைக்கபட்ட கதவுகளால்
நான்
சிறை கைதி

பறிக்கப் பட்ட
எனது சுதந்திரம்
தென்றலாய் இல்லாது
வெப்பமாய் நான்

தடுப்பு இல்லா
சீரான எனது இயக்கம்
தடுக்கபட
மாறிய இயல்பாய் நான்

புரட்சியாய் சூறைகாற்று
அழிவு
அமைதியாய் தென்றல்காற்று
ஆக்கம்.

அங்கும் இங்கும் அலைந்து

அதனுடைய நகருதலில் விரைவு தெரிந்தது. எறும்பு ஒவ்வொன்றும் ஒரு திசையாய் பயணித்தது. சில எறும்பு அங்கும் இங்கும் அலைந்தது. சில எறும்புகள் சேர்த்து வைந்திருந்த உணவு துகள்களை தூக்கி ஓடின.

மரம் மரத்தின் அடியில் கிடந்த கல்லில் துளை போட்டு கல்லின் அடியில் உள்ள மண் பரப்பில் அதன் வாழிடம் அமைந்திருந்தது.

எறும்புகள் வந்து செல்லும் துளையில் இடையூறு ஏற்படாத வரையில் அதனுடைய நகருதல் இயல்பாக அமைந்திருந்தன. உணவுக்காய் அலைதல் தேடிபிடித்த உணவுதுகள்களை உள்ளே கொண்டு செல்லுதல் திரும்பவும் வெளிவருதலாய் தொடர்நிகழ்வாக அதனுடைய நகருதல் அமைந்திருந்தன.

வந்து செல்லும் வழியில் நீர் விழுந்தது. தொடர்சியாக நீர் விழுந்தது திக்கு முக்காடி ஒவ்வொன்றாய் வெளிவந்து இடம்பெயர நீர் வருவது நின்றவுடன் உணவு துகள்களை சுமந்தவண்ணம் எறும்புகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.

கும்பல் கும்பலாய் வெளிவந்து நின்றன.சிறிது நேரம் கழிந்தது வரிசையாய் நகருதல் அமைந்தது. எறும்புகள் இன்னமொரு பாதுகாப்பான இடம்நோக்கி இடம் பெயர்ந்தது.

Saturday, April 18, 2009

பிராயசித்தமா...பரிகாரமா...

எந்தவொரு செயலுக்கும் ஓர் விளைவு உண்டு . இதை தவிர்க்க முடியாது. முடிவை வேறொரு செயலினால் ஏற்படும் விளைவின் மூலம் மாற்றலாம். இதற்கு பிராயசித்தம் அல்லது பரிகாரம் ஆகும்.

சக மனிதர்களோடு நலனில் நாம் இடையூறாக நின்று அவர்களுடையநலன் பாதிக்கும் பட்சத்தில் அந்த மனிதர்களின் நலனுக்காக திரும்பவும் உழைத்தல் பிராயசித்தம் ஆகும்.

தன்னுடைய சொந்த நலன் பாதிக்கும் பொழுது நமக்கு மேற்பட்ட சக்தியை நம்பி நாம் பாதிக்க படாது இருக்க செய்யபடும் பிரார்த்தனை பரிகாரம் ஆகும்.

பரிகாரத்தை விடவும் பிராயசித்தம் முக்கியதுவம் பெறுகிறது.

முதலில் பிராயசித்தம் செய்து நம் நலனில் பலன் பார்க்கலாம். பிறகு பரிகாரம் செய்யலாம்.

பிராயசித்தமா...பரிகாரமா...

Friday, April 17, 2009

தன் தலைவிதியை நொந்து கொண்டான்.

எங்கள இல்லாம உங்களுக்கு ஏது சொந்தம்? பாத்து மரியாதை நடந்துக்க அவனுடைய அப்பாவழி உறவுக்கார பையன் திட்ட மௌனமாய் நின்று கொண்டிருந்தான் இவன்.

உள்ளுக்குள் மென்று முழுங்கினான் எதிர் வார்த்தை பேசிவிடலாம். அதற்கு தகுந்த பலம் இல்லாததால் தலை குனிந்தவாறு நின்றான்.

வாழ்க்கையின் போக்கில் நொடிந்த குடும்பம் இவனது குடும்பம். உறவுகளோடு ஒத்து போனால்தான் தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் நல்லது என்று நினைத்தவாறு பொறுமையாய் நின்றான். தன் நலத்தைவிடவும் இங்கு குடும்ப நலன் முக்கியம்.

பேசி முடித்தார் இல்லை திட்டி முடித்தார். இவன் மனது வேதனையானது நமக்கு மட்டும் ஏன் இப்படி? குழப்பம் தான் வந்தது ஓர் முடிவுக்கு வரமுடியாது கடைசியில் தன் தலைவிதியை நொந்து கொண்டான்.

உறவுகார திருமணம் ஒன்றில் இவன் கலந்து கொண்டதால் வந்த விளைவு இது.

தனி மனித உணர்வுகள் காரணமே இல்லாது யார் வேண்டுமானலும் சிதைக்கலாம். சூழ்நிலைகளே நிர்மாணம் செய்கின்றன. யாரும் தப்பமுடியாது உணர்வுகளின் தாக்குதலுக்கு என்பது தான் உண்மை.

Thursday, April 16, 2009

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்.

இரவு பத்து மணி ஆனது வீட்டுக்கு கிளம்பாமல் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தான். கடைத் தெருவும் காலியாகி வெறிச்சோடியது நண்பர்களுடன் பேசிப் படியே நின்றான்.

அவனது நண்பர்கள் வட்டத்தில் யாரவது கிளம்புவதற்கு சைகை செய்தால் தான் அந்த கூட்டம் அப்பொழுது கலையும்.
அதற்குள்ளாகவே நண்பர்களுடைய வீட்டிலிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும்.

இதெல்லாம் அவனுக்கும் நண்பர்களுக்கும் திருமணம் ஆகும் வரையில் தான் கிட்டதட்டஎல்லோருக்கும் திருமணம் ஆனது.

அவர் அவர்கள் சேருவது மிகவும் கடினம் ஆனது. அப்படியே சேர்ந்தாலும் ஒன்பது மணி ஆனதும் நண்பர்கள் வட்டத்திலிருந்து இல்லாவிடில் இவனிடமிருந்து வீட்டுக்கு கிளம்புவதற்கான சைகைகள் தொடங்கிவிடும்.
அதிக பட்சமாக இரவு பத்து மணி தான் இலக்கு.

அதற்கு மேல் என்றால் அவள போயி எழுப்ப முடியாதுங்க? இது ஒரு நண்பர் அப்புறம் நான் தான் போட்டு சாப்பிடனும் இன்னொரு நண்பர். பல்வேறு காரணங்கள்எப்படியே குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு செல்லவேண்டும்.

திருமணம் எங்களை சிறைபடுத்தியதா அல்லது சுதந்திரம் அடைய வைத்ததா தெரியவில்லை.

ஏனடா என்னை காதலித்தாய்?

என்னை ஏன் காதலித்தாய்?

உனக்காக என்னையே தந்து என்னபயன்? என்னவனே..
தவறு பழக்கத்தால் சொல்லிவிட்டேன்.

என்னமோ வந்தாய்…வண்ணமுகம் காட்டினாய்..
மின்னல் புன்னகை பூத்து நான் வீழ என்னில் உன்னை ஏற்றும் வேளைதனில் நீ மறுத்தாய் ஏன்?

வந்து போன வசந்தமா நீ
இல்லை வேகமாய் வந்த புயல் அல்லவா நீ

புயலுக்கு பின் அமைதி எங்கும் அமைதி
என்னுள்..அழிவுக்கு பஞ்சமில்லை.

பசி மறந்து தூக்கம் கெட்டு நண்பர்களை பிரிந்து ..சே!

என்னை உன்னில் ஏற்றிவிட்டாயோ இல்லையோ உன் நினைவுகளை ஆலவிருட்சமாக வளர்த்து விட்டாய் என்னுள்.

வாழ்வு நீ! நீயே வாழ்வு என்று எண்ண என் எண்ணங்களையெல்லாம் எடுத்தெறிந்தவன் நீ!

உனக்காக தானடா உறவுவிட்டு உண்மைநண்பர்களை உதறி
என் நலம் மறந்து
உன் நலம்நினைத்த என்னைஉன் (மன )வாசல் மிதியாதே என்றும் சொன்னது ஏனோ?

உண்மை தெரியாது
போலிக்கு மயங்கிவிட்டேன் போலியான அன்புக்கு மயங்கிவிட்டேன்

பரவாயில்லை சிறிது காலம் வந்து போனாலும் இனிய நினைவுகள் கொடுத்ததற்கு நன்றிகள் கூறி பொய்யாய் உனை வாழ்த்தும்..

Wednesday, April 15, 2009

நாம் எதிர்பார்த்தது கிடைக்காமல் போகும் போதுதான்

தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் காரணமாக ஒரு மனிதனின் அணுகுமுறையே மாறிவிடுகிறது.எதையும் இறைவனின் பிரசாதமாக ஏற்கப் பழகிக் கொண்டு விட்டால் தோல்வி மனப்பான்மையும் விரக்தி எண்ணமும் மறைந்துவிடும்.

எதையும் எப்போதும் ஆண்டவன் தரும் பிரசாதமாக ஏற்கப்பழகிக் கொண்டுவி்ட்ட ஒரு கர்மயோகிக்கு துயரம் என்பதே கிடையாது.

அவர் மனம் எப்போதும் உற்சாகத் துள்ளல் போட்டுக் கொண்டிருக்கும்.

-சுவாமி தயானந்த சரஸ்வதி-

எதையுமே ஆண்டவன் தரும் பிரசாதமாகஏற்க பழகுதல் என்பது மிகவும் கடினம்.

நாம் எதிர்பார்த்தது கிடைக்காமல் போகும் போதுதான் அது தோல்விகளாய் ஏமாற்றங்களாய் உருமாற்றம் பெறுகின்றன. இதை மனது இயல்பாக ஏற்றுக்கொள்ளுதல் என்பது சந்தேகம் தான். ஒரு சிலருக்கு வாய்க்கலாம் அவர்களை கணக்கில் எடுத்து கொள்ளலாமா தெரியவில்லை.

Monday, April 13, 2009

எழுதபடாமல் என்னுள்

எழுத நினைத்தவைகள்
எழுதபடாமல்
என்னுள்ளே அமிழ்ந்து
போகும் எண்ணங்கள்

வெளிச் சொல்லி
ஆறுதல் தேட
பயமாய் நான்

பகிர்ந்து பாதியாய்
பிரிக்க
துணை தேடுதல்

தேடும் துணிவு
போதாது
காரணமாய்
சுற்றமும் சூழ்நிலையும்

பகிர்ந்து கொள்ள
நிலையான ஒன்றை
துணை தேட

நிலை எது?
நிலையாமை எது?
மனதின் கேள்வி

எழுத நினைத்தவைகள்
எழுதபடாமல்…

அந்த சிலை வெய்யிலில் காய்ந்தது மழையில் நனைந்தது.


அந்த சிலை வெய்யிலில் காய்ந்தது மழையில் நனைந்தது. ஓடும் நாய் முகர்ந்து பார்த்து சிறுநீர் கழித்தது. அதற்கு தெரியுமா அது எட்டி பார்க்க முடியாத இடத்தில் அது இருந்தது என்று. வணங்கிய தலைகள் கும்பிட்ட கைகள் பார்த்த கண்கள் வேண்டுதல் செய்த வாய் கண்டு காணாமல் போனது.

இருபைதைந்து முப்பது வருடங்களாக கருவறையில் தீப ஓளி மலர் மாலைகள் முதல் மரியாதை இடையே வாழ்ந்தது அந்த சிலை. அதற்குரிய அய்யர் மட்டுமே தொடலாம் குளிப்பாட்டலாம் ஆடை அணிவிக்கலாம் அலங்காரம் செய்யலாம். யாரும் பார்க்க அனுமதி இல்லை.

காலப்போக்கில் அபிஷேகம் தண்ணீர் ஊற்ற மூக்கின் நுனியில்சிறுசில் பெயர்ந்து போனது சிலை மூளியானது.
அய்யர் வேண்டுதல் விடுத்தார் ஊர் பெரியதலைகளிடம் சிலை மாற்ற வேண்டும் என்று கோரினார்.

புதிய சிலை மாற்றப்பட்டது.பழைய சிலை வெய்யிலில் காய்ந்தது மழையில் நனைந்தது.

Saturday, April 11, 2009

உள்ளுர்பயணமா..வெளியூர்பயணமா..இத படிங்க

“ சீப்புக்கண்ணாடி, ஆடை , சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்பு பாட்டரி விளக்கு தூக்கு கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்பு கோவணம் படுக்கை
காப்பிட்டபெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே!”

-பாரதி தாசன்-

எது தேவையோ எடுத்துட்டு கிளம்புங்க ஊருக்கு..

Friday, April 10, 2009

தூக்கம் கலைக்கிறேன் துக்கமாய் கவலைகளுடன் கண் விழிக்கிறேன்.

தன்னுடைய கூட்டிலிருந்து பறவைகள் தூக்கத்தை கலைத்து கொள்ளும் நேரம் என் கண்களும் கூடவே விரிக்கின்றன்.

தூக்கம் கலைக்கிறேன் துக்கமாய் கவலைகளுடன் கண் விழிக்கிறேன்.

இனிமையான காலை வேலை என்று கவிஞர் கவிதையில் தான் பார்க்கிறேன். என்னுடைய காலைகள் எல்லாம் கவலை கூடுகளை சுமந்து கொண்டே கண்கள் திறக்க நிம்மதி எப்போது தெரியவில்லை?

நம்பிக்கை வருகிறது கூடவே அவநம்பிக்கையும் வரும்.
கடந்த காலங்களை உற்றுபார்த்து நிகழ்காலத்தை மறந்த என்னுடைய மனதில் எதிர்காலம் கண்டு பயம் இருக்கவே செய்யும் இந்நிகழ்வு என்னில் தானா அல்லது எல்லோர் மனதிலுமா விடை காணும் ஆவல் இருக்கவே செய்கிறது.

எவ்வளவு விசித்திரங்கள் எத்தனை விதமான மனித மனோபாவங்கள் இனம் காண முயல்கிறேன். போலிதனங்களை உண்மையாய் நம்பி என்னிலே இருக்கும் உண்மையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டதாக உணர்கிறேன்.

Thursday, April 09, 2009

புகைப்பட தொகுப்புஇன்னமும் முதிர்கன்னிகளாய் பெண்கள்.

ஒரு பெண்ணுக்கு 28 வயது இன்னொரு பெண்ணுக்கு 26 வயது கடைசியாக பையன் வயது 20 கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறான்.

பெண்களுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. கையில் சேமிப்பு பணம் கொஞ்சம் வைத்திருந்தார்கள். எப்படியோ கடனை வாங்கி இருப்பதை வைத்து ஒரு பெண்ணை கரையேற்றி விடலாம் .

பையன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று சொல்ல பெண்ணுடைய திருமணமா பையனுடைய கல்வியா விவாதங்களை வென்றது பையனுடைய கல்வி.

திரும்பவும் கையில் வைந்திருந்த சேமிப்பை உண்டு பண்ண இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். இதற்கிடையில் பையனின் படிப்பு செலவுகள்.

கடன் வாங்கி கல்யாணத்தை பண்ணிவிடலாம் என்று உறவுகள் சொன்னால் யாரிடமும் கடன் வாங்காமல் கல்யாணம் பண்ணிவைக்கவேண்டும் என்ற அப்பாவின் பிடிவாதம்.
இன்னமும் முதிர்கன்னிகளாய் பெண்கள்.

Tuesday, April 07, 2009

அமைதி அறிவு சிந்தனை

இன்றைய காலை கண் விழித்தவுடன் ஒழுங்கு பட அமைந்த மனது. மனதின் அமைதி எனை சருகாக்கியது. இந்த தகுதி மிக சில விநாடிகள் தான்.

கண்கள் பார்த்த முதல்பார்வை எண்ணங்கள் உயிர் பெற்றன. மிக சில நேரம் தான் அதில் பயணிக்க அடுத்த விசயம் பற்றிய மனதுடைய அடுத்த கட்ட பயணம் ஆரம்பம் அமைதி காணாமல் போனது.

எண்ணங்களை கையாள நினைத்தேன். முடியாது விரும்பாத எண்ணங்களுக்கு உயிர் தந்து மனதின் மௌனம் மனதாலயே கலைக்கப்பட்ட விநோதம்.

மதிப்பீடு சூழ்நிலையின் விளைவால் தேக்கி வைக்கப்படும் கருத்து எண்ணங்களின் மொத்த கூட்டுதொகையாக மனது அடுத்து வரும் நிகழ்வுகளை பற்றி அனுமானங்கள் அறிவு என்ற பெயர் சூட்டி சிந்தனை என்ற பெயரில் ஒப்புமை செய்ய முடிவுகள் சரியாகவோ தவறகவோ அமைந்தன.

எண்ணங்களிலிருந்து விடுபட முயற்சி செய்து திரும்பவும் எண்ணத் தொகுப்புகளால் ஆளப்படுகிறேன்.

Monday, April 06, 2009

இப்படிக்கு நடுத்தர வர்க்கம்.

சே.. என்னடா லைப் இது. ஒரு ஆளா நின்னுகிட்டு மெனகெட வேண்டியதா இருக்கு.

பணம் ஒரு பக்கட்டு குடும்ப நல்லது கெட்டது ஒரு பக்கட்டு சே ..நிம்மதி எப்பதான் வரும்.

நம்க்கு மட்டுதான் வாழ்க இப்படியா ..இல்ல எல்லாருக்கும் இப்படிதானா..

நம்ம தலையெழுத்து என்னவோ அதனா நடக்கும்.

அதெல்லாம் இல்ல வாழ்க இன்னா இப்படிதான் இருக்கும்.

எந்த பக்கட்டாவது ஒரு நிம்மதி இருக்கனும். இந்த மாதிரி இருந்தா என்ன செய்ய..

இந்த காசு இல்லேன்னா.. செய்ய வேண்டியத செஞ்சுதான் ஆகனும்.

சே.. என்னடா லைப் இது.

இப்படிக்கு

நடுத்தர வர்க்கம்.

பணத்தேவை

பணத்தேவை
அதிகம்

எதிர்பார்ப்பும்
அதிகம்

வாழும் தேவை
தேவை பொருள்

பொருள்
பொருள்சார்ந்த உலகம்

தோற்றம் கண்டு
உறவாடி

தோற்றம் கண்டு
இகழ்ச்சி செய்யும்

மானிட சமூகம்
பார்க்க
உறவாட
பணத்தேவை அதிகம்.

Sunday, April 05, 2009

பிள்ளைகளின் வியாதிக்கு பெற்றோர்களும் காரணமாக இருக்கலாம்?

நமக்கு க்ரோமோசோமில் செக்ஸ் க்ரோமோசோமில் உள்ளதைத் தவிர இருக்கும் க்ரோமோசோம்கள(22 ஜதையும்) Autosomes தான். அதிலே ஒரு க்ரோமோசோமில் கோளாறு இருந்தால் கூட வியாதி உண்டாகும் என்ற நிலைக்கு Autosomal Dominant என்று பெயர்.

உதாரணமாக க்ரோமோசோம்-11 ல் (இந்த வியாதி இருக்கும் இடம்)ஒரே ஒரு க்ரோமோசோம் கோளாறு. இது அப்பா க்ரோமோசோமில் என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கோளாறான க்ரோமோசோம் பகுதி எந்தக் குழந்தைக்குப் போனாலும் அந்தக் குழந்தைக்குவியாதி வரும். அது ஆணாக இருந்தாலும்சரி பெண்ணாக இருந்தாலும் சரி அப்பாவுக்கு 2து 11வது க்ரோமோசோம் அம்மாவுக்கு 2து 11வது க்ரோமோசோம் . இதில் அ ப்பாவின் கோளாறான க்ரோமோசோம் எந்தக் குழந்தைக்கு வந்ததோ அது பீடிக்கப்படும்.

இதற்கு 50 % வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு இந்த கோளாறு கண்டு பிடிக்கப்பட்டால் அந்த க் குடும்பத்தை முழுவதுமாக அலசிப் பார்க்க வேண்டும். 3,4 தலைமுறைகள் பார்த்தால் எத்தனை பேர் இதனால் தாக்குண்டார்கள் என்பது தெரியும்.

Saturday, April 04, 2009

நான் வாழ்ந்து என்ன செய்யப் போறேன்?


அவர் ஒரு ஆசிரியர். மிகவும் கஷ்டப்பட்டு ஆசிரியர் ஆனவர். திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் ஒரு பையன். யாரும் இன்னமும் தனக்கு தானே நிர்வாகித்து கொள்ள முடியாது.

மனைவி கோர்டில் டைப்பிஸ்ட் வேலை . மனைவியின் மீது கணவருக்கு சந்தேகம். தின தொந்தரவு ஒரு நாள் இறந்து கிடந்தாள் கொலை குற்றம் சுமத்தபட்டார் இவர். உண்மை என்னவென்று அவருக்கு மட்டுமே தெரிந்தது. பிள்ளைகள் மூவரும் அம்மா பிறந்தகம் சென்றார்கள்.

கொலை நீருபணமாகி ஆயுள் கைதியானார். சிறையில் இவருடைய நன்னடத்தை காரணமான ஒரிரு வருடங்கள் முன்னமே விடுதலையானார்.

ஆசிரியர் வேலையும் பறி போனது. தண்டனை முடிந்து வெளிவரும் போது வளர்ந்த இவருடைய பிள்ளைகள் இவருடன் பார்க்க மறுத்தன பேச மறுத்தன. இவருக்கு கிடைத்த முதல் அடி இரண்டாவதாக தன்னை நல்லவனாக நீருபிக்க சிவன் கோவில்களில் தங்கி உலவார பணி செய்து வருகிறார்.

இன்னமும் இவர் போய் வெளியில் சகஜமாக பழக முடியவில்லை பிள்ளைகளும் இவருடன் ஒட்டாது வாழ்ந்து வருகிறார். யாருடனாவது பேசுகையில் நான் வாழ்ந்து என்ன செய்யப் போறேன்? விரக்தியுடன் பேசுவார்.

Friday, April 03, 2009

கன்னித் திரை (டாக்டர் டி.நாராயண ரெட்டி)

புராதன பாலஸ்தீனத்தில் திருமணத்துக்குப் பின் ஒரு பெண்ணுக்கு கன்னித்தன்மை இல்லை என்பது தெரியவந்தால் மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டார் அபராதம் கட்டவேண்டும். இன்றும் சீனாவில் குபெய் மாநிலத்தில் திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் கன்னித்தன்மை இல்லாதவள் என்பது தெரியவந்தால் பெண்வீட்டாரின் சொத்தில் பாதியை மணமகனுக்குத் தரவேண்டும்.

டான்ஸ் ஆடுதல் சைக்கிளிங் ஹை ஜம்ப் லாங்க் ஜம்ப் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுதல் ஓடிவந்து பேருந்துகளில் ஏறுவது டூவீலர்களில் காலைத் தூக்கிப் போட்டு அமர்வது போன்றவை காரணமாகவும் ஹை மென் கிழியலாம். சானிட்டரி நாப்கின் வகைகளில் டாம்பூன் என்ற ஒரு வகை உள்ளது. இதைப் பயன்படுத்துபவர்களில் சிலருக்கும் கன்னித்திரை கிழியலாம்.

ஒரு பெண் புத்திசாலியாக இருந்தால் நவீன மருத்துவத்தின் மூலம் ஆண்களை எளிதாக ஏமாற்றிவிடலாம். உடலில் வேறு இடத்திலிருந்து ஜவ்வை ஆபரேஷன் மூலம் எடுத்து புதிய கன்னித்திரை உருவாக்கும் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு hymeno plasty என்று பெயர்.

கன்னித்தன்மை மட்டுமே ஒரு தம்பதிக்குச் சந்தோசம் தந்துவிடாது. தேவை பரஸ்பர நம்பிக்கை !

ஆதரவு தரவேண்டியவர்களே மிதித்தால்

மிகுந்த மன உளைச்சலில் இருந்தான் அவன்.

பெரிய குடும்பம் அது. பெண்கள் இரண்டு பையன்கள் இரண்டு அப்பா வகையில் பயன் ஒன்றும் இல்லை. மிகுந்த சிரமங்களுக்கிடையே வாழ்க்கை நகர்ந்தது.

கறவை மாடு , மாடு சார்ந்த தொழிலும் தான் அவர்களின் வாழ்க்கைக்கு உதவியது. இவன் சிறுவயதிலேயே பதினைந்து வருடம் வெளியூர் சென்று வேலை ப்பார்த்து பெண்களை ஒருவாறு கரையேற்றினான்.

இவனுக்கு திருமணம் ஆனது. இடையில் இவனுடைய அப்பாவும் போய் சேர்ந்து விட குடும்பத்தை கவனிக்க ஆள் இல்லாததால் வேலையை விட்டு சொந்த ஊர் வந்து சேர்ந்தான். தம்பி வெளிநாட்டில் இருக்கிறான்.

இவனுடைய மனைவிக்கும் அம்மாவுக்கும் ஆகாமல் போனது. யார் இவனுக்கு ஆதரவு தர வேண்டுமோ அவர்களே வீம்பு பிடித்தார்கள்.தனி சமையல் ஒத்துழையாமை இயக்கம்.

எந்த பக்கம் பேசுவது தெரியாது நிம்மதியை தேடினான் இவன்.

Thursday, April 02, 2009

அன்புள்ள காதலா அன்புடன் 6

எனக்காய்
அவன் விடுத்த
பழக்கங்கள்

அவன் அன்பை
கண்டுபிடிக்கும்
எனது ஆவல்

நான்
இன்னமும் தடைகள்
போட்டப்படி

அவனும்
பொறுமையாய்
மிகப் பொறுமையாய்

எனக்குள்
கேள்வி மட்டும்
ஓன்று

அவன்
விரும்ப என்னிடம்
என்ன?

விடை
தெரியா வினாவாய்
என்னுள்

நிசம் அழைக்க
என் பாதங்களின்
பயணம்

அவன்
காத்திருக்கும்
இடம் நோக்கி..

அவனில்….

Wednesday, April 01, 2009

வயதுகேற்ற ஆசைகள் அதிகம் துடிப்பு அதிகம்.

எப்பா தூங்கிறதா திருச்சிக்கு அதிகாலையிலே வந்துர்றாங்க நீ மட்டும் போய் அழைச்சிட்டு வரணும் என்ன..

சரிண்ண நான் போய் அழைச்சிட்டு வர்றேண்ண..

அந்த அதிகாலை மூடுபனி எதிர் வரும் வண்டிகள் ஒன்றும் கண்ணுக்கு தெரியவில்லை.

அரசாங்க பேருந்து ஒன்றின் மீது இவன் ஓட்டி சென்ற டாடா சுமோ மோதியது. மருத்துவமணை கொண்டு செல்லும் வழியில் இறந்து போனான்.

வருத்தங்களை தன் மனதோடு வைத்து வெளியில் சிரித்தபடியே பேசுவான். வயது இருபது. வயதுகேற்ற ஆசைகள் அதிகம் துடிப்பு அதிகம்.

எல்லோரும் போல படிக்கதான் ஆசை . வறுமை வந்துவிட்டால் வயிற்றுக்கான பிழைப்பே பிரதானம்.வீட்டின் வறுமை தொழில் கற்று டிரைவர் ஆனான்.

ஓரிரு வருடங்கள் தான் முழுடிரைவர் ஆனான்.விதி தன் பணியை செவ்வனவே செய்துவிட்டது.

வறுமையை இவன் விரட்டினானா அல்லது இவனை வறுமை வாழ்க்கை விட்டே விரட்டியதா தெரியவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails