Thursday, April 16, 2009

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்.

இரவு பத்து மணி ஆனது வீட்டுக்கு கிளம்பாமல் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தான். கடைத் தெருவும் காலியாகி வெறிச்சோடியது நண்பர்களுடன் பேசிப் படியே நின்றான்.

அவனது நண்பர்கள் வட்டத்தில் யாரவது கிளம்புவதற்கு சைகை செய்தால் தான் அந்த கூட்டம் அப்பொழுது கலையும்.
அதற்குள்ளாகவே நண்பர்களுடைய வீட்டிலிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கும்.

இதெல்லாம் அவனுக்கும் நண்பர்களுக்கும் திருமணம் ஆகும் வரையில் தான் கிட்டதட்டஎல்லோருக்கும் திருமணம் ஆனது.

அவர் அவர்கள் சேருவது மிகவும் கடினம் ஆனது. அப்படியே சேர்ந்தாலும் ஒன்பது மணி ஆனதும் நண்பர்கள் வட்டத்திலிருந்து இல்லாவிடில் இவனிடமிருந்து வீட்டுக்கு கிளம்புவதற்கான சைகைகள் தொடங்கிவிடும்.
அதிக பட்சமாக இரவு பத்து மணி தான் இலக்கு.

அதற்கு மேல் என்றால் அவள போயி எழுப்ப முடியாதுங்க? இது ஒரு நண்பர் அப்புறம் நான் தான் போட்டு சாப்பிடனும் இன்னொரு நண்பர். பல்வேறு காரணங்கள்எப்படியே குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு செல்லவேண்டும்.

திருமணம் எங்களை சிறைபடுத்தியதா அல்லது சுதந்திரம் அடைய வைத்ததா தெரியவில்லை.

1 comment:

கோவி.கண்ணன் said...

//திருமணம் எங்களை சிறைபடுத்தியதா அல்லது சுதந்திரம் அடைய வைத்ததா தெரியவில்லை. //

அதையேன் கூடுதல் பொறுப்புணர்வு கொடுத்ததாக நினைக்கக் கூடாது ?

மேனேஜராக பதவி உயர்வு பெற்றால் கூடுதல் பொறுப்பு கொடுப்பதாகத் தானே பொருள், அதுக்கு ஊதியமும் கூடுதலாக கிடைக்குமே.

:)

LinkWithin

Related Posts with Thumbnails