Tuesday, June 28, 2011

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஊர்களில் பழைய  கோவில்களும் உண்டு.  தெருவுக்கு ஒரு கோவில்என புதிததாய் முளைத்த பலகோவில்கள் உண்டு.

கிராம அய்யர்கள்நகரங்களுக்கு  தேவையான வருமானம் கருதி இடம்பெயர்ந்து விடுவதால் கிராமங்களில் பெரிய கோவில்கள் தவிர அய்யர்கள் தட்டுபாட்டினால்சிறு கோவில் தெய்வங்கள்   வாரம்  ஒரு முறை குளிக்கும பூ வைத்து பொட்டு வைத்து கொள்ளும்.

அய்யர்கள் தட்டுபாட்டினால் ஒரு கிராம அய்யர் குறைந்தது சிறு சிறு பத்துகோவில்கள்  தன்கட்டபாட்டில் வைத்திருப்பார்கள். அங்கு அவர் வருகை தினசரி என்றெல்லாம் இருக்காது.

அப்படி அவர்  தினசரி வருகை புரிந்து கோவில் தெய்வத்தை குளிபாட்ட வேண்டுமென்றால்  மாதம் இவ்வளவு என்று சம்பளம் பேசிக்கொடுத்துகோவில்  விசேசநாட்களில் அவர் ஏற்பாடு செய்யும்சிறப்பு பூசைகள் யாகங்களுக்கு அந்தபகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுத்துநடத்தினால் அந்தகோவில் கோவிலாக இருக்கும் இல்லாவிடில்  இருண்ட கோவில் தான் அது.

இன்றைக்கு தமிழகத்தின் நிறையகிராமங்களில்  உள்ள சிறு சிறு கோவில்கள் அழிந்தும் புதிததாய் முளைத்து கொண்டும் தான் இருக்கின்றன.

அய்யர் ஒருவர் பிடித்து வைத்துள்ள பத்துகோவில்களில் அதுவும் ஒன்று. சிறிய சிவன் கோவில் அது. அர்ச்சனை செய்ய நிறையமக்கள்  கோவிலுக்கு வெளியே நின்றிருந்தார்கள். மாலை ஆறு மணியாகியும் கோவில் திறக்கப்படவில்லை.

கோவில் சாவி வைத்துள்ள பெரியவர் விரைந்து வந்தார்  இன்றைக்கு அய்யர் வரமாட்டார் என்று சொல்ல
விளக்கு மட்டும் போடவந்தவர்கள் விளக்கு ஏற்றிச்செல்ல அர்ச்சனை அந்தபெரியவரே செய்தார்.
கருவறைக்கு வெளியிலே நின்றுகொண்டே பூவை  கருவறையின் உள்ளே இருக்கும் தெய்வத்தின் மீது தூக்கி எறிந்தார்.
ஏற்கனவே காய்ந்த பூக்கள் சிதறிகிடந்தது. வெளியில் இருந்தவாறே தேங்காய் உடைத்து சூடம் காட்டினார்.
மந்திரங்கள் கிடையாதுஅர்ச்சனை முடிந்தது.

அய்யர் கட்டுபாட்டில் உள்ளகோவில்களில் வருமானம் அதிகம் உள்ள தெய்வங்களுக்கு சிறப்புகவனம் செலுத்தப்படும். வருமானம் வராத கோவில்களின் தெய்வங்களுக்கு அய்யர்களின் பராமுகம் நிரந்தரம்

பாவம் , பாவம் செய்த தெய்வங்கள்.

Saturday, June 25, 2011

ஜென்னும் கபீரும் உங்கள் புரிதலுக்கு...பாசிபடர்ந்த பாறைப்பிளவினூடே
தன்னுடைய வழியைத் தேர்ந்துகொள்ளும்
சிற்றோடைபோல்
அமைதியாகத் தெளிகிறேன்; துல்லியமாகிறேன்.
                                                      
                                                           (ஜென் கவிஞர்)


என் இறைவன்
என்னவிதமானவரென்று தெரியவில்லை.

அவரிடம்
உரக்கக் கத்தி வேண்டுகிறார் முல்லா?

சிறுபூச்சி நகரும்போது
அதன்மெல்லிய கணுக்கால் ஓசையைக்கூட
அவரால் கேட்கமுடியுமே..

உனது ஜபமாலையை உருட்டி
மந்திரத்தை உச்சாடனம் செய்
உனது இறைவனின் சின்னத்தை
நெற்றியில் தரித்துக்கொள்
சடைமுடியை
நீட்டிவளர்த்துக்கொள்

எனினும்
உன் இதயத்துக்குள்ளிருக்கிறது கொடூர ஆயுதம்
உனக்குள்
எப்படியிருப்பார் இறைவன்?

                                                                     ( கபீர்)

Friday, June 24, 2011

தேவையும் பாதையும்நடந்து
களைப்புறுகையில்
நீள்கின்றபாதை
இன்னமொரு
புதிய பயணத்தை
காட்டியப்படியே
நீள்கிறது
வாழ்வின்  தேவைகள்
முடிந்ததாய்
நினைக்கையில்
அறியாமல
உள்நுழையும்
ஓர்புதிய தேவைக்காக
வாழ்வு நீள்கிறது.


Tuesday, June 21, 2011

இப்படியுமா எழுத்தாளர்கள்


இரண்டுநாட்களாய் நான் பெருமையாய் நினை த்தவர்களின் விசயங்கள் தலைகீழாய் மாறிவிட்டது.

இப்போதைய காலக்கட்டத்தில்  தமிழை நன்றாய் வாழவைப்பவர்களில் எனக்கு தெரிந்த வரையில் ” ஞாநி, சாநி, ஜெமோ , எஸ்.ரா, …..”   இன்னும் சிலபேர்களை நினைத்ததுண்டு.

இவர்களை  முழுமையாக வாசித்தது கிடையாது. நான் வாசித்தவைகள்  மிக சொற்பமே....

இணை   யத்தின் வா யிலாக  இவர்களைப்பற்றி நான் அறிந்து கொண்ட வகையில் அதாவது  சாநி , ஜெமோ , எஸ்.ரா   ஆகியோ ரின் மதிப்பு சராசரி வாசகனான என் னில் இவர்கள் இறக்கமே…

சாநி ப்பற்றி நான் படித்தது ….சாநி, ஜெமோ , எஸ்.ரா இவர்களைப்பற்றிய பதிவைப்படிக்க...


தமிழ் தெரிந்து தமிழை விற்க தெரிந்த வியாபாரிகள் இவர்கள்            .

நிறைய வாசிப்பு அனுபவங்கள் இருந்தால் மட்டுமே இவர்களிடமிருந்து தப்பிக்கலாம் போலும் ஊடகங்கள்  கூட இவர்களின் படைப்புகளை பாராட்டி எழுதுவது தான் கொடுமையாய் உள்ளது.

Monday, June 20, 2011

மரணம்


மரணங்கள் எவ்வளவு விரைவாய் சம்பவித்து விடுகிறது.
இறக்கும் முதல் நாள் வரை   தன் பிள்ளைகளை  பள்ளிக்கு அனுப்பி பிள்ளைகள் சென்று மறையும் வரை வாசலில் நின்று தன்னை  வீட்டிற்குள் மறைத்து கொள்வது. மறுநாள் இறக்கபோகிறோம் என்பது தெரியுமா???

நம்முடைய உள்உணர்வுகள் நமக்கு காட்டும்  என்பது ஒரு சிலரின் கருத்து. நாம் நம்மை   உள்நோக்கினால் நம்முடைய எதிர்காலத்தை  கோடிட்டு காட்டும் என்பது அவர்களின் வாதமாய் உள்ளது.

நம்பிக்கையுடன் வாழ பல  காரணங்கள் இருந்தாலும் மரணம் நிகழ ஏதோ  ஒன்று வலுவான காரணமாய் அமைந்துவிடுகிறது.தன் எதிர்பார்ப்பு நிறைவேறா சூழலில்  தற்கொலையும் பிறர் எதிர்பார்ப்புகள் நிறைவேறா சூழலில் கொலையும் நிகழ்ந்துவிடுகிறது.

ஓடுகின்ற உடல் இயந்திர உறுப்புகள் ஓய்வெடுத்து கொள்ள அல்லது பழுது பட்டு  போதலில் தான் இயற்கை மரணம் நிகழும் போல் உள்ளது.

எதிர்பாராத திடீர் விபத்து அல்லது நோயினால் ஏற்படும் இறப்பு துர்மரணமாய் வாழ்வின் போக்கை மாற்றிவிடும் .

குடும்ப உறுப்பினர்களின் சம்பாத்தியத்தில் இருக்கும் நபரது மரணம்  பெரிய அளவிலான தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

பெரிய அள வு சோகத்தை உண்டுபண்ணுவது இளம்வயதினர் மரண ம் தான்.

இன்னொருவரை சார்ந்து வாழ்வு வரும்போது இருந்து கஷ் டப் படுத்துவதை விட போய் சேர்ந்தால் நலம் என்று நினைப்பவர்களும் உண்டு.

மரணம் நம்முடைய எதிர்பார்த்தலில் நிகழுமா?  எதிர்பார்க்காத மரணங்கள் அதிகம் …எதிர்பார்த்த மரணங்களும் உண்டு.

Friday, June 17, 2011

காற்றுதிரை சீலை
ஒதுக்கிவிட்டு
நுழையும்காற்றினால்
நிரம்பும் அறை
மூச்சு விடுகிறது
கருப்பையிலிருந்து
வெளிவந்தஉயிர்ப்பின்
முதல் சுவாசத்தினால்
துவங்கும்வாழ்வு
துளைகளின் வழியே
புகுந்து செல்லும்
காற்றின்வெளிபாடு
நாதமாய்
அடிக்கும் திசையில்
படும் பொருளில்
காற்றின் வெளிப்பாடு
தென்றலாய் ஆக்கமும்
புயலாய் அழிவும்
காற்று உள்நுழைகிறது
சுவாசிக்கிறேன்
”நான்”
உருவகம் பெறுகிறேன்.

Thursday, June 16, 2011

கோபத்துக்கு கோபம்


கோபத்துக்கு கோபம் என்றால் என்னதான் செய்வது? யாரோ ஒருவர் விட்டுகொடுப்பதில் சச்சரவுகளை  கடந்துவிடும் நிலைமை.


பலம் உள்ளவர்கள் பலவீனமானவர்களின் பலவீனம் அறிந்து விட்டுகொடுத்தல் பெருதன்மை.

பலவீனமானவர்கள் பலம் உள்ளவர்களுக்கு கீழ்படிதல் சச்சரவுகளில் இருந்து காப்பாற்றும்.   தன்னால் ஏற்றுகொள்ளமுடியாத நேரத்தில் அந்த  செயலையோ    ல்லது அ  ந்த இடத்தையோ தவிர்த்தல் நலம். நமக்கான காலங்களின் திசைகள் திரும்பவும்  வரையில் அல்லது நாம் பலம் பெறும் வரையில் காத்திருத்தல் மிகஅவசியம். அதுவரையில் நிறைய  கசப்புகளை   நாம் சந்திக்கவேண்டிவரும்.

பலம் உள்ளவர்களின் விட்டுகொடுத்தலையே பலவீனமாக பயன்படுத்த தொடங்கினால்   எப்பொழுதாவது கோபம் கொண்டே தீர வேண்டும் என்கிற   கட்டாயத்துக்கு ஆ ளாக நேரும்.

எடுத்துகாட்டாக தன்பிள்ளைகளின் தவறுகளை  பொறுத்து கொண்டேவரும் பெற்றோ ர்கள் என்றைக்காவது ஒரு நாள் கோபம் கொள்வது.

அதுவும் தவிர்க்க முடியா  உறவுகளில் கோபம் கொள்ளாமல்இருக்கமுடியாது.

ஏன்? எதற்கு? என்றுஇரு வினாக்களை உள்நோக்கி திருப்பினாலே  கோபத்திற்கான காரணத்தை ஆராய்ந்து களைந்துவிடலாம்.

எனக்கு என்னவோ அடிப்படை புரிதல்கள் இல்லாத மனங்களில் தான் கோபம் அடிக்கடி வரும் போல….


Tuesday, June 14, 2011

அவசரம்முடியாத
தவங்களினால்
தொலை ந்து போன
இலக்குகள்
இரண்டு நிமிடங்கள்
தங்கி செல்லாத
காக்கை
தவறவிட்ட
இரை
எதிர்பார்த்தலில்
அவசரம்
கிடைக்கும் முன்பு
புறப்பாடு
காணாமல் போன
இலக்குகள்
கிடைக்காத
இரை...

Sunday, June 12, 2011

இன்றைய முதல்வர் கடந்த முதல்வர் அடுத்து யார்?பயண த்தின் இ டையே     ரசாங்க அ  லுவலகத்தைப்பார்த்தேன்.   அ லுவலகத்தின்  வெளிப்புறத்தில் ” அம்மா” வின் முகம் ப்ளக்ஸில்தெரிந்தது.

அ ம்மா ஆ  ட்சியில் எ ன்று திட்டங்கள் பட்டியல் இ டப்பட்டிருந்தன.

இதுவே தேர்தலுக்கு முன்பு பார்க்கும் அரசுஅலுவலகங்களில் எல்லாம்  ”கலைஞர்”  முகம் தான்எங்கும் ஐந்து வருடமாக  எங்கும் இருந்தவர் இன்று கிழிந்து தொங்குகிறார்.

கலைஞரின்விளம்பர ப்ளக்ஸ் அனை த்தும்  மளிகைசாமான்கள் காயப் போட பயன்படுகிறது.

” அம்மா ” விளம்பர ப்ளக்ஸ்  நாம் வெறுக்க அல்லது கிழிந்து தொங்குவதைப் பார்க்க இன்னும் ஐந்துவருடங்கள் பொறுத்து இருக்கவேண்டும்.

இவர்களின் இருவர்முகங்கள் மக்களுக்கு பார்த்து பார்த்து போரடித்து  விட்டது.

நாம் முதல்வராய் வேறு முகங்கள் பார்க்கவேண்டும் என்றால் அந்ததகுதி அடுத்தது யாருக்கு????


பலவீனம் அடைந்துகிடக்கும் தி.மு.க.வின் மு.க.ஸ்டாலினா??!!  அல்லது வளர்ச்சியின் படிக்கட்டில் இருக்கும் தே.மு.தி.க. வின் கருப்பு எம்.ஜி. ஆ ரா??!!
தெரியவில்லை.


இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாம்  பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பொறுத்துதான்  ஆக வேண்டும்.

பார்க்கலாம் இன்றைய முதல்வரின் நாளையசெயல்பாடுகளையும் கடந்த முதல்வரின் கட்சியின் செயல்பாடுகளையும்…..

Saturday, June 11, 2011

விசாரிப்பு


கிரகங்கள்
ஒத்துப்போயின
பெண்வீட்டாருக்கு
பெண் குடுக்க
ஆவல்
மாப்பிள்ளை
விரும்ப
படித்தபெண்
தான் அவள்
இருபக்க விசாரிப்புகள்
தொ டர
மாப்பிள்ளையின்
விசாரிப்பில்
உயரம் குறைந்த
பெண்ணாம்
உனக்கு ஒத்துவராது
விசாரணை     முடிவு
மாப்பிள்ளையின்
வேறுபெண் தேடல்.

Wednesday, June 08, 2011

நிச்சயமற்ற பொ ருள் ஆதாரம்நடப்பதும் தானாய் நடக்கும்  என்ற தத்துவார்த்தமனது தைரியம் சொல்ல இயல்பு மனதோ  எப்படி நடக்கும் ?  என்ற கேள்வியை தூக்கி போட  எண்ணகுழப்பம் தான்.

நடக்கும் வழி இருந்தால் அல்லது அதை நடத்தும் சக்தி இருந்தால் இயல்பு மனதிற்கு பதில் சொல்லி அதன் வாயை அடைத்துவிடலாம்.

நடக்ககூடிய சாத்தியங்கள் தெரியாமல் இருக்கும் வரை மனதின் இருதலைபட்சமான எண்ணங்களின் அல்லாடல்கள் தொடர்ந்து கொண்டே  இருக்கின்றன.  விளைவாய் செயல்குழப்பங்கள் நம்முடைய நிகழ்வுகளில் தெரியும்.

தத்துவார்த்தமான மனதின் போக்கு அதனுடைய போக்கில்வாதங்களை தோற்றுவித்தே கொண்டிருக்க  இயல்பு மனமோ   இன்றைக்கு என்ன என்பதை எடுத்துரைக்கஎண்ணகுழப்பம் ஏற்படுவதை தவிர்க்கமுடியாமல் போய்விடும்.

நிச்சயமற்ற எதிர்காலத்தினை  நினைத்து அதற்கு தேவையான பாதுகாப்பு வழிகளைதேட  அதற்குண்டான வழிகள் இல்லையென்றால் எல்லாம் தலையெழுத்து என்ற ஒற்றைச்சொல்லோடு விரக்தியான மனப்போக்கில் இன்றையவாழ்வு.

மேற்சொன்ன அத்துனை விளை வுகளையும் மாறத்துடிக்கும் மனதுக்கு நிச்சயமற்ற பொ ருள் ஆதாரம்  கொண்டுவரும்.

பொருள் வரும்வழி சரியில்லை யென்றால் எந்தவொ ரு தனிமனித  சமுதாயவாழ்க்கை என்பது மிகதுன்பத்திற்கு உட்பட்டதே….Monday, June 06, 2011

நான் நம்புகிறேன்காலங்களினால் தான்
பதில் கிடைக்கும்
நான் நம்புகிறேன்
செயல்கள் சரியானதே
என்னில்
என் பயனாய்
என் தேவையாய்
என் எதிர்பார்ப்பு
யாருக்கும்
எதற்கும்
தொந்தரவில்லாமல்
தான்
என் காரியங்கள்
யாருக்கோ பிடிக்கவில்லை
அதிகாரம் தடுக்கிறது
என் வளர்ச்சியில்
பாதிப்பென்று
இன்றைக்கு நான்
வாழ இடம்
தேடுகிறேன்
அதிகாரம் என்றைக்கோ
வாழ்வதற்காய்
இடம் தேடுகிறது
நான் நம்புகிறேன்
காலங்களினால்….

பழசு


சிங்கத்தினுடைய   மாட்டு வண்டி வருகிறதென்றால் மற்ற  மாட்டுவண்டி ஓட்டிகளுக்கு பயம். ஒதுங்கி வழி கொடுத்துவிடுவார்கள். 

பூரணி காளைகள் பூட்டிய வைக்கோல் வண்டிதான் அ வனுடைய ஆயுதம் .  மற்றவர்கள் வைக்கோல் வண்டியை பள்ளம் பார்த்து இறக்கிவிடுவதில் இந்த சிங்கம் என்கிற சின்னைய்யன் மிகசாமர்த்தன்.

எதிர்ப்பவர்களை   உண்டு இல்லை என்று சொல்லக்கூடிய உடல்வாகு  வைக்கோல் வண்டியை  அவ னது காளையை ஓட்டும் அழகே..அய்யோ..இன்னும் கண்ணில் நிற்கிறது என்று அவனுடைய சமகாலத்து பெரியவர்பெருமூச்செறிந்தார்.

இன்றைக்கெல்லாம் அதுமாதிரியான மனுசங்க கெடையாது. வேளைக்கு பெரிய பித்தள  சட்டியில் ஒருபடி அரிசி  வடிச்சசாதம் சாப்பிடுவார்கள்.  கறி எடுத்த ஒரு சப்பை தான்  எவ்வளோ மீனு…எப்பாடி….அவங்க பாத்த வேலையும் அந்தமாதிரி…

கடைசில பயலுக்கு குஷ்டரோகம் வந்திருச்சி…எத்தன  பேரு வயித்தெரிச்சலோ…  ஆமா  இவன் போற வழி ல  எத்தன வைக்கோல் வண்டி போனாலும்  அத்தனையும் குடசாச்சு விட்டுறுவான்.
பொண்டாட்டி வேறு ஆம்படையான் பாத்தாள்…இவனுக்கு தெரிஞ்சு போச்சு வெண்ணாத்துல கொண்டுவந்து ஆள  காலிப்பண்ணி தூக்கிபோட்டுட்டு போயிட்டான்.

நாடு சுதந்திதரத்துக்கு முன்  பிறந்த தற்பொழுது வாழும் பெரியவர் ஒருவரின் கதையாடல் தான் மேற்சொன்னது.

பொம்பள பொறுக்கிய இருந்திருப்பாரு அதனால  குஷ்டரோகம் வந்திருக்கும் என்று கேட்க…

என்னன்னு தெரியல….
கும்பகோணத்துல அப்ப நிறைய தேவடியா வீடுகள் உண்டு பிரியப்பட்டவங்க தெரியாம  போயிட்டு வந்துருவானுங்க…
இன்னொருத்தன் பொண்டாட்டிய  பாக்கறதெல்லாம் அப்பரொம்பகம்மி…சமுதாயத்துல அசிங்கம் சொல்லிட்டு  அத செய்யவே மாட்டானுங்க…

என் கம்மாணாட்டி வீட்டுல இருக்கற பொஞ்சாதி பாக்கமுல்லயாம் …இவருக்கு இன்னொரு வீடாம்.. என்று திட்டுவார்களாம்.

அப்போ எல்லா பொருளும் வெல ரொம்பவும் கம்மி..சுதந்திரம் அடைஞ்சுது ரெண்ட அனா வித்த ஆட்டுகறி இன்னிக்கு கிலோ இருநூற்றி அம்பது ம்ம்ம்….என்ன செய்ய….Thursday, June 02, 2011

தயாநிதி நீங்களுமா இப்படி??????


தயாநிதிமாறன் ஊழல்செய்தி இன்றைய செய்திதாள்களின் ஹா  ட். அவருடைய  தந்தை முரெசாலிமாறன் சொன்னதாய் நான் படித்தது ஏனோ   நினைவுக்கு வந்தது.

முரெசொலி மாறன்  தன் மகன்களிடம் சொ ன்னது இது தானாம். ” உன் ஊ ரில் நீ ஒரு பழையஇரும்புகடை வைத்து பிழைப்பு நடத்தினாலும் ஊ ரிலேயே சிறந்த பழைய இரும்புகடை  எதுவென்றால் அது உன்னுடையதாகதான் இருக்கவேண்டும்.”


தயாநிதி தகவல்தொடர்பு அமை ச்சராக இருந்தகாலக்கட்டத்தில்  அத்துறைப் பெற்றவளர்ச்சியை பார்த்தப்பொழுது முரெசொலிமாறன் சொன்னதை நினைவில்கொண்டு தயாநிதியின்செயல்களை பெருமையுடன் பார்ப்பதுண்டு.

தயாநிதி தந்தையின் சொல்லை காப்பாற்றுகிறார். அமை ச்சராக இருந்தால் இப்படியல்லவோ   இருக்கவேண்டும் என்றும் நினைத்ததுண்டு ஆனால் அதற்கு பின்னால் இன்றைய செய்திதாள்களில் தயாநிதியை ப்பற்றிய செய்தியை  ப்படித்தவுடன் எனக்குள் நானே வெட்கபட்டேன்.

தயாநிதியின் ஊழல்செய்தி அறிய இச்சுட்டியை காண்க….


தயாநிதி நீங்களுமா இப்படி??????

Wednesday, June 01, 2011

காலம் எழுதும்காலம் எழுதும்
ஓர்
முடிவின் ஆரம்பம்
காலம் எழுதும்
ஓர் தொடக்கத்தில்
முடிவு
செயல் களின்
இணை  ப்பில்
உருவாகும் கருவாய்
புதியன  பல
ஒன்றாய்
பலவாய்
ஒன்றுக்கு  ஒன்று
தொடர்பாய்
தெரிந்தும்
தெரியாமலும்
காலம் செலுத்தும்
கால  ஓடத்தை....

LinkWithin

Related Posts with Thumbnails