Monday, September 28, 2009

குடும்ப போர்


அவனிடமிருந்து அவனது குடும்பத்தாரின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றம் அடைந்ததாய் நினைக்க போர்கொடி தூக்கினார்கள். வெள்ளைகொடி இவன் தூக்க இல்லை போர்தான் என்று சங்கு ஊதினார்கள்.

மிரட்டல்கள் உருட்டல்கள் துவங்கின ஆனாலும் வெள்ளைகொடியை தாங்கி பிடித்தே நின்றான். இவன் போரி்ல் ஈடுபடுவதற்கான எந்த ஆயுத்தம் செய்யவில்லை சங்கும் ஊதவில்லை.

போரின் முடிவு யார் ஒருவருக்கோ வெற்றியாக முடியும். குடும்ப போரில் பாதிக்கப்போவது இருதரப்பாருடைய மன நிம்மதி தான்.

எதிர்தரப்பிடமிருந்து மிரட்டல் உருட்டல்களும் நின்றபாடில்லை ஆனாலும் இவன் வெள்ளைகொடியை பிடித்தவாறே ஒற்றைஆளாய்..

அன்புள்ள..
இதுவரை கிடைக்கா தனிமை இன்று கிடைக்க நான் உனை அழைக்கிறேனடா காற்று வாக்கினில் விரைந்து வா என் காதலனே..

இயற்கை அன்னை விரிந்திருந்த பசும்புல்வெளியில் தனிமையில் நான் என் மனது மட்டும் உன் வரவை எதிர்நோக்கியப்படியே காத்திருக்க ஏமாற்றாமல் வந்துவிடு என் காதலனே..

நான் தனிருந்திருந்த போது மர நிழலோட உண்டான எனது சிநேகம் தொடர்ந்துவிடாபடி இருக்க வந்து விடுவாயா என் காதலனே…

நிறைந்திருந்த மௌனபயத்தின் பிடியில் நான் என்பயம் களைய விரைந்து வா என் காதலனே..

அன்புடன்..
Thursday, September 24, 2009

பயம் குழப்பம் செய்யும்.வீதியின் நீண்ட மௌனம் தூரத்து சத்தமாய் நாயின் குரைப்பு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையேயான ராக்கோழிகளின் சத்தம் இருள் விட்டு வெளிச்சம் காட்டிய விளக்குகள்ஒற்றை ஆளாய் இவனின் பயணம்.

மனது விழிப்புணர்வுடன் வீதியின் இரு ஓரங்களிலும் கண்களால் ஆராய்ந்தப்படி இவனின் பயணம் பயத்துடன் நினைக்க ஆசைகள் ஆயிரம் கவலைகள் ஆயிரம் எதுவும் எண்ணங்களின் பிடியில் சிக்காமல் ஒதுங்கி இருக்க இருள் பற்றிய பயம் இவனில் அதிகம்.

சிறு பூச்சி ஊர்ந்து செல்ல இவனின் மனதில்தேளாய் உருவகம் பெற்று ஒரு நிமிடம் தன் நடைவேகம் குறைத்தான் விளக்கின் வெளிசத்தில் சிறுபூச்சியென தெரிந்துதொடர்ந்த பயணம் மனதில் வீற்றிருந்த இரவின் ஆதிக்கம்.

பயம் குழப்பம் செய்யும்.

Tuesday, September 22, 2009

உன் காரியம் முடியநலமாய் நீ

இருக்க

நான் செலுத்திய

அன்பு உண்மை

உன் காரியம்

முடிய

போலியாய் நீ

சொன்ன பதிலும்

அன்பு

தோற்றது நான்

காலங்களின்

சுழற்சியில்

பருவங்கள் மாறும்

காரணங்கள்

தெரிய

உண்மை எது?

பொய் எது?

உணர அன்பு

தவமாய்

அன்பு தியாகமாய்

அன்பு அமைதியாய்

மழலையின் புன்னகையாய்

என்னில்..
Saturday, September 19, 2009

தான் வாழ காசு தேவைவாழ்க்கைக்கு காசு தேவை . காசுக்கான போராட்டத்தில் அவன் அவனையே இழந்தான். சமுதாயத்தில் வாழ்க்கையை வசதிகளோடு தன்னிடம் காசு இருந்தும் காசு சேர்த்து கொண்டே இருப்பவர்கள் உண்டு.

தான் வாழ தன்னை உயிர்ப்பித்து கொள்ள வே காசு அவசியமானது. தனது முன்னோர்களால் ஒன்றும் ஆகாதபட்சத்தில் தன்னை இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்தி கொள்ள காசு தேவை. அதைப் பெற்று தன்னை நிலை நிறுத்தி கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல.

தன்னையே இழந்து நிறைய வேதனைப்பட்டு நிறைய உழைத்து தான் ஆக வேண்டும். அதற்கிடையே வாழ்க்கையில் ஏற்படும் அவமானங்களையும் அவமதிப்புகளையு ம் தன் உணர்வு எந்த மனிதானலும் ஏற்று கொள்வது மிகக்கடினமே. ஆனாலும் வாழ்ந்தாக வேண்டும். மனதுக்குள்ளே அழ வேண்டியது தான்.

அடிக்கடி விரக்தியின் எல்லைகளை தொட்டு விட்டு திரும்ப இருப்பவனை பார்த்து பார்த்து இருக்கும் நிலைமையும் கொடுத்துகொண்டு அவன் இன்னமும் காசுக்காய் அலைந்தப்படி..


Wednesday, September 16, 2009

சம்பாதிப்பார் குடிப்பார்.

அப்பாவின் திறமையால் பதினைந்து மா நிலம் சேர்ந்தது. மூத்த மகனுக்கு திருமணமாகி கல்யாணவயதில் ஒரு பெண் இரண்டு மகன்களும் உண்டு. இதுவரையில் கூட்டு குடும்பமாக வாழ்ந்ததில் குடும்பம் நடப்பதற்க்கான நிர்வாக செலவில் துளியும் பங்கு கிடையாது.

சம்பாதிப்பார் குடிப்பார். அப்பாவின் புத்திமதி பொண்டாட்டியின் வற்புறுத்தல் குடிப்பதை நிறுத்தவில்லை.

குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டு தந்தை தன்னுடைய மூத்தமகனிடம் நான்கு மா நிலத்தை விவாசயம் செய்து அதில் வரும் லாபத்தை நீயே வைத்துகொள் என்று கூறிவிட

எனக்கு வேண்டாம் என்று மூத்தமகன்மறுப்பு கூறினார்.

காரணம் கேட்டால் என்னிடம் பணம் இல்லை அதனால் என்னால் நட முடியாது என்று கூற தினசரி 200 ரூபாய்க்கு குடிக்கிறாயே என்று கேட்டால் மௌனம் தான் பதிலாய் கிடைக்கும்.

எப்படியாவது தனியாக பிரித்து விட்டுவிடவேண்டும் என்று அப்பா தீவிரம் காட்ட மூத்த மகனோ மௌனமாக ஆனாலும் ஒரு ஆளால் குடும்பம் கெட்டுவிட கூடாது என்ற த

எண்ண்த்தில் அப்பா.

பொய்மையின் பிடியில்
உண்மையாய் இருக்க

முயற்சிக்க

பொய்மையின் பக்கம்

இருக்கும் எனை

தொடர்நிகழ்வாய்

கவர்ந்திழுக்கும் உண்மை

ஓடிவர

எண்ணுகிறேன்

பொய்மையின் பிடியிலிருந்து

கொஞ்சமாய் விலகி

திரும்பவும்

பொய்மையின் பிடிக்குள்

நான்.

Monday, September 14, 2009

பச்சோந்தி மனிதர்கள்.

மனது வலி்த்தது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சுயநலம். அவர்களின் நலன் சார்ந்த செய்கைகளில் கண்டு கொள்ளாதப்பொழுது உறவுகள் என்றால் குறை , குறை.

எதிராளியின் நலம் துச்சமென மிதித்து துவசம் செய்து அவர்களுடைய நலனில் அவர்களுடைய அக்கறை மிகப்பெரியது.

தன்னை இழந்து தட்டு தடுமாறி அவர்களின் நலம் காக்க போராடி இவர்களுக்கான வாழ்வில் இவர்கள் கண்டதெல்லாம் வாழ்க்கை இழப்பு. மதியா ? விதியா?

என்னால் காரியங்கள் ஆக வேண்டும். ஆன காரியங்களில் பலன் மட்டுமே தொடர்நிகழ்வாக பாவிக்கும் திறன்.

அவ்வாறு இல்லாவிடின் எங்கு பலனோ அங்கு எனது இருப்பு

என்று தன்னையே உருமாற்றி கொள்ளும் பச்சோந்தி மனிதர்கள்.

சந்தர்ப்பங்களும் சூழல்களும் தொடர்நிகழ்வாக இணைந்து வரும் காலம் வரை இவர்களுடைய வெற்றி ரசிக்க பட வேண்டிய ஒன்று.

காலங்கள் மாறும்.

Friday, September 11, 2009

முடிந்தவனுக்கு ஆயுதம் முடியாதவனுக்கு மௌனம்.

எலே உன் செருப்பால அடிச்சுடுவேன்.

உன்ன இந்த பக்கம் மாடு ஓட்டிட்டு வரவேணாம் சொல்லியும் ஓட்டிட்டு வந்துட்டே இருக்க பாத்துக்க..

அப்படியே நின்றான் அந்த சிறுவன்.

வெயில் தகிப்பு கண்கள் கூசியது. கண்களை இடுக்கி பார்த்த படி மௌனமாய் நின்றான்.

யாரையோ திட்டி இவன் வேடிக்கை பார்ப்பது போல..

திட்டியவனுக்கு இவனின் மௌனம் எரிச்சலை மூட்டியது.

உன்ன பாரு என்ன செய்யப்போறேன் என்னடா அப்படி பாக்குற..

மௌனமாய் நின்றான் சிறுவன்.

ஏன்டா ஊம கம்மனாட்டி பேசுடா ஏதாவது...

முகத்தில் எந்த சலனம் இல்லாமல் பார்த்தான்.

இங்கிருந்து முதல்ல போடா என்று கத்தினான்.

மௌனமாய் நகர்ந்தான்.

திட்டியவனுக்கு கோபம் தீராது இரண்டு வயல்களுக்கு அப்பால் பம்பு செட்டில் தண்ணீர் குடித்தான்.

அதற்குள் இவன் வேறு இடம்நகர்ந்தான்.

Tuesday, September 08, 2009

ஆறுதல்

வேண்டாத நினைவுகள்

ஒன்று கூடல்

வெடித்து கிளம்பிய

எரிமலையாய்

வந்து விழுந்த

வார்த்தைகள்

சோகமாய் உன்மனது

உட்கார்ந்து யோசிக்க

இடம் தேடிய கண்கள்

கிடைத்த சுவர்களின்

முடுக்கு

முகம் புதைத்து

காணாமல் போக

திட்டிய தாயின்

ஆறுதல்

வெடித்து கிளம்பிய

அழுகை

தாயின் சமாதானம்

அமைதியாய் நீ.

Monday, September 07, 2009

மனைவி நல வேட்பு நாள்தினசரி செய்தி தாள்களுக்கு இடையே விளம்பரம் ஒன்று வந்தது. மனைவி நல வேட்பு நாள் அழைப்பிதழ் அறிவு திருக்கோயிலுக்கு வாருங்கள் என்று அழைந்திருந்தார்கள். கணவன் மனைவியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அந்த இயக்கத்தோடு தொடர்புடைய ஒருவரிடம் விபரம் கேட்டேன். மனைவி நல வேட்பு நாளில் கணவன் மனைவிக்கு சேர்ந்து தியானம்பயிற்சி சொல்லி தருவார்களாம்.

என்ன என்று விசாரிக்க கணவனும் மனைவியும் எதிர் எதிராய் உட்கார்ந்து கொண்டு ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு அவர்கள் சொல்லி தரும் ஒற்றுமைக்கான மந்திரங்களை தியானம் பண்ண வேண்டுமாம். அவ்வாறு செய்தால் கணவன் மனைவிக்குள் அமைதி உருவாகி ஒற்றுமை உருவாகுமாம் என்று சொன்னார்.

மேலும் ஒரு விபரம் சொன்னார். அதில் சிறப்புரை ஆற்றவரும் பெண்மணி தன் கணவனை எந்தரிக்க வேண்டுமென்றால் எந்தரிக்க வேண்டும் உட்கார் என்றால் உட்கார வேண்டும். இல்லாவிடில் ஏக ரகளைதான் அவர்கள் வீட்டில் கணவனை படாதபாடு படுத்தி விடுவார்.

இவர் சிறப்புரை ஆற்றி என்னத்த பண்ணி என்றும் அங்கலாயத்துகொண்டார்.

ஆமா நீங்க…

Friday, September 04, 2009

விதி வலியதுஆந்திர முதல்வர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம்.

Wednesday, September 02, 2009

காணாம போன ஆந்திர முதல்வரு

ஆந்திர முதல்வரு காணாம போயிட்டாரு தொலைகாட்சி சேனல்களுக்கு செம தீனி. நாளைக்கு காத்தால செய்தி தாள்களுக்கு மேட்டரு கிடைச்சு போச்சு.

காணாம போன முதல்வர தேட ஹெலிகாப்டரு அப்புறம் இஸ்ரோ நாசா உதவியெல்லாம் கேட்டிருங்காங்க.

நீங்க வேறங்க எங்க ஊரு மாரியப்பன் காணாம போயி பத்து நாள் ஆவுது .

ஒரு நாதி கெடையாதுங்க. எங்க ஊரு மாரியாத்த கோயில்ல சீட்டு எழுதி கட்டிருங்கோங்க.

புகைப்பட தொகுப்பு
Tuesday, September 01, 2009

குடிகார தந்தையும் குடிகார மகனும்


அப்பாவும் டிரைவர் மகனும் டிரைவர். அப்பாவும் குடிகாரர் மகனும் குடிகாரர். காசு இருக்கும் போது சிகெரெட் பிடிப்பார்கள் காசு வரத்து குறைந்தால் பீடி தான் இருவருமே..

அப்பா மகனிடம் அவ்வப்போது செலவுக்கு காசு இல்லாவிடில் பத்து இருபது என காசு வாங்கி கொள்வார்.

இதனாலயே பையன் தன் குடும்பத்திற்கு என செலவுக்கு பணம் கொடுக்க மாட்டான். அப்பாரையும் மதிப்பது கிடையாது.

ஒரு நாள் இரவு வீட்டினுடைய செலவிற்கு பணம் கொடுக்க மகனிடம் அப்பா சொல்ல..

முறைத்து பார்த்தான்மகன். என்னி்டம் பணம் இல்ல…

அப்புறம் நீ சம்பாதிக்கிறது எல்லாம் என்னாச்சு? அப்பா

அதான் அப்பப்ப நீ வாங்குறியே.. மகன்.

அவன் சொல்றது கரெக்ட்தான் இது அம்மா.

எடி.. பு..மவளே நீ என்னடி வக்காளத்து மூனு வேள சாப்பாடு நான் போடுறேன் . இவன் கிட்டபத்துருவா வாங்கினா கேள்வி கேட்க கூடாதா..

எல…… கோ… உங்கிட்ட மகன் அப்படின்ன தான் பத்துருவா வாங்குனா நீ என்னடா ரொம்ப ஓவரா பேசுற..

நானும் கஷ்டபடுறேன்டா நாய..

நீ போய்யா இங்கிருந்து என்று கணவனை விரட்டினாள் மனைவி.

போடி..போ..உம் மகனோட சேந்துகிட்டு நீ எக்கேடாவது கெட்டு போ என்று தள்ளாடிய படியே சைக்கிளை மிதித்தான் அந்த கணவன்.

இரவு பதினோரு மணி லேசாய் குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails