Monday, November 30, 2015

தீவிரவாதத்தால் தீவாகிய சுற்றுலாத்தலங்கள்-எகிப்து

எகிப்து 2011ம் ஆண்டு வரை 15 மில்லியன் சுற்றுலா ப்பயணிகளை கவர்ந்த நாடு 2014ம் ஆண்டில் 9 மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்துள்ளார்கள்.

காரணம்  அரசியல் கொந்தளிப்பு , ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாதிகளின் ரஷ்யவிமான தாக்குதல்.Sunday, November 29, 2015

கவிஞர் மு.மேத்தாவின் ஆகாயத்திற்கு அடுத்தவீடு


ஒருவருக்கும் தெரியாமல்
ரகசியமாய்
உன்னிடம்  கொண்டுவந்து
சேர்த்துவிடும் என்னை
இந்தக் கடிதம்!

எந்த ஊரில்
இருந்தாலென்ன...
என்கடிதத்தை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!

எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னை
எட்டிப் பார்க்கிறேன் நான்!

காற்று உன் வீட்டுக்
கதவுளை
அசைக்கும்போதெல்லாம்
நினைவுப்படுத்திக் கொள்...
உன் இதயத்தை
அசைக்க நான்
எடுத்த முயற்சிகளை!

ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த
பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக

வாரந்தோறும்
வந்துபோகின்றன
ஞாயிற்றுக்கிழமைகள்...
வருவாயா நீ?

பூங்கொத்து வேண்டாம்
வாடாமல் இருக்கும்
உன் வார்த்தைகள்...

புகை வண்டியில் உன்னை
வழியனுப்பும்போது
கேட்பேன்.
“இப்போதாவது
என்னை
என்னிடம் விட்டுச் செல்!”

அவசியம் அனுப்பிவை
உன் திருமண
அழைப்பிதழை...
பாிசு விழுந்தது
யாருக்கென்று
பார்த்துக் கொள்கிறேன்!

Saturday, November 28, 2015

நாட்குறிப்பு 28.11.2015

நாளைய விருத்தினர் வருகைக்காக திட்டமிடல் எங்கள் வீட்டில் காலையில் நடந்தது. 

விருந்தினர் வருகை முன்கூட்டியே திட்டமிடபட்டதால் திட்டமிடபட்ட அவர்களின் வருகையால் திடீரென்று எங்களுடைய நண்பரால் கோவிலுக்கு செல்ல அழைக்கப்பட்டவாய்ப்பு எங்களால் நிராகரிக்கப்பட்டது.

இன்றுசூடு தெரியவில்லை வெயில் அடித்தது.

இதுவும் மரச்சிற்பம் தான்

எங்களுடைய பக்கத்து ஊரில் ராமஜெயம் பைனான்ஸ்கம்பெனி தந்தையின் நாணயத்தில்  வளர்ந்தது தமையனின் நாணயத்தால் தலைகவிழ்ந்து.

50 ஆண்டுகால நிறுவனம் பூட்டப்பட்டது  நிறுவனர் ஓடினார். கொடுத்தவர்கள் மேலும் பூட்டைப் போட்டார்கள்.

இந்தவாரத்தின் சூடான பேச்சு இன்றும் சூடாக நண்பர்களால் பேசப்பட்டது.

இணையம் இன்றைக்கு முழுவதும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.

இணையம் திடீரென கிடைக்க நாட்குறிப்பு பதிவானது.


Friday, November 27, 2015

நேர்முக தேர்வில் உங்களுடைய கரங்களை...??!!


நேர்முக தேர்வின்பொழுது  தேர்வாளர்களுக்கு நீங்கள் அணிந்திருக்கும் உடை அடுத்து அதிக கவனத்திற்கு உள்ளாவது உங்களுடைய  கரங்களின் செய்கைகள்.

வேர்ல்டு செக்ஸியஸ்ட் பெண் ரோபோட்

ஜெமினாய்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பெண் ரோபோட் பிஜீங் நடக்கும் உலக ரோபோட் கண்காட்சியில் பங்கேற்கிறது.

5.6 அடி உயரம் கொண்ட  ஜெமினாய்ட்  பார்வைகளால் செய்திகளை பரிமாறும் கொள்ளும் வசதி வீல் சேரில் நகரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஒசாகா ஹீரோஷி இசிகுரோ பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள ஜெமினாய்ட் ரப்பர் கொண்டு மனித தோலின் வடிவம் போல வடிவமைத்திருக்கிறார்கள்.

ஜெமினாய்ட் உலகின் முதல் ரோபோட் நடிகையாக சேயுனோரா படத்தில் நடிக்கிறது.Wednesday, November 25, 2015

என் வீட்டு வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே...

மாலை 5.45 நெருங்கியது கைப்பேசிஒலித்தது.

இன்னும் விளக்கேற்ற வரவில்லையா… அன்பான கண்டிப்பு குரலில் இல்லாள் அழைக்க வேலை பார்க்கும் இடம் விட்டு இல்லம் நோக்கி விரைந்தேன்.

இருள் பரவதொடங்கிய நேரம் இருள் விலக்கி வெளிச்சம் பரப்பிய தீபங்கள் எல்லோருடைய வீட்டு வாசல்களிலும் தீப ஒளி வீச அழகோ …அழகு.

தெளிந்த வானம் பௌர்ணமி வெளிச்சத்தில் கார்த்திகை தீபங்கள் நம்மைச்சாய்க்கும்.


எங்கள் வீட்டிலும் கார்த்திகை தீபங்கள் ஏற்ற அப்பொழுது க்ளிக்கியது.

மழைக்கு ஒதுங்கிய நாய்கள்

மழைக்கு ஒதுங்கிய
நாய்கள்

நனைந்த உடம்பு
நடுக்கிய குளிர்

கதகதப்பிற்கு
காய்ந்த இடம்
தேடுகையில்

கிடைத்த இடம்
கடையின் மிதியடி

தலை மடக்கி
வால் சுருட்டி
உடம்பைச் சூடாக்கியது

கடைக்காரரின்
த்தே..ச்சூ…
காற்றில்
பறந்துப்போக

தலைநிமிர்த்தி
கடைக்காரரின்
முகம்பார்கையில்

பவ்யமாய்
அனுமதி கோரல்

மீண்டும்
தலை மடக்க
உடம்பு சூடாகியது.


Tuesday, November 24, 2015

கலை நயம்மிக்க மரவேலைப்பாடு

நான் சமீபத்தில் மரவேலைப்பாடு சம்மந்தமாக இணையத்தில் தேடினேன். தேடுதலில் அதிசயமிக்க கலையம்சத்துடன் எனக்குப்படங்கள் கிடைத்தன.

கலை என்றுமே வாழும் காலம் கடந்தும்  என்கிற வார்த்தை சரிதான்.

பிரமிக்க வைத்த உழைப்பு செதுக்கப்பவர்களின்  கைவண்ணத்தில் உருவான கலைப்படைப்புக்குரியவர்கள் என்றுமே மரியாதைக்குரியவர்கள்.

படைப்பு படைப்பாளிகளை வணங்குகிறேன்.LinkWithin

Related Posts with Thumbnails