Thursday, July 28, 2011

மாற்றம் வேண்டி....


இரண்டுநாள் குற்றாலம் போய் வர வாய்ப்பு கிடைத்தது.  வருடம் முழுவதும் ஒரே இடம்  . மாற்றம் வேண்டி மனது நினைக்கும் ,சூழல்கள் அமையாவிடில் இரண்டுநாட்கள்  அதே இடம் அதே மனிதர்கள்.

பொம்மை கடையில்...


மலையும் மலைச்சார்ந்த இடமும்


மனிதர்கள் இல்லா மலையும் மலைச்சார்ந்த இடமும் பார்க்கும் பொழுது எண்ணங்கள் அவ்வளவு இல்லாத மனதில் உட்கார்ந்த அமைதி.பறத்தலில் ஓய்வு


மழையும் மழைசாரலுமாய் பயணம்.

கொட்டும் அருவி மழைமுகட்டில் தங்கியிருந்த மேகங்கள் மழையில் நனைந்த  மரங்களின் பசுமைஅழகாய் தான் இருந்தது.கொட்டும் அருவியில் தலை நனைத்து உடலும் நனை கையில்சிலிர்த்த உடலும் மனமும், முண்டியடித்த கூட்டம் அருவிக்குள்  எனை தள்ள மூச்சு முட்டி எதிர்மனிதர்களை பலம் கொண்டு தள்ளி கொண்டே வெளியில் வந்துமூச்சை இயல்பாக்கியப்பொழுது எழுந்த நிம்மதி.

நடைமுறை வாழ்க்கைக்கு தினந்தோறும் கடமைகள் வருடம் முழுவதும் தேவை என்றாலும் வருடத்தில் சிலநாட்கள் அதையெல்லாம் தவிர்த்து செல்லும் மாற்றம் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவையாகவே ப்பட்டது.

Friday, July 22, 2011

வித்தியாசமான மியாவ் - சுந்தர ராமசாமி
எனக்கு தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள்  அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்:
“ இந்தப் பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்…

என்ன சொல்லவர்றார் …?! சிந்திக்காத செம்மறியாட்டு கூட்டமுன்னு சொல்லவர்றாரா  சுந்தரராமசாமி.

Tuesday, July 19, 2011

தினக்கூலி


எதிர் பார்த்தலில்

தொடங்கும்

உழைப்பு

ஊ தியம்

கிடைத்துவிடும்

நம்பிக்கையில்

நண்பகல்

தாண்டியும்

தொடரும்

வேலை முடியும்

நேரம்

நாளை ஊதியம்

என்ற வார்த்தையில்

துவளும் மனம்

கறுத்தமுகம்

தளர்ந்த உடலுடன்

உழைப்பில் ஓய்வு

தினக்கூலி.

Monday, July 18, 2011

வெறிநாய் கடியும் மரணபயமும்


சென்னை வாசி அவர் புதுக்கோட்டை காரைக்குடி  சொந்தஊ ர்.சில நாட்கள்  சொந்த அலுவலின்  காரணமாக  தன் ஊ  ர் வந்து தங்கினார்.

ஒரு நாள் காலை  நடைப்பயில வீட்டை விட்டிறங்கி கொஞ்சதூரம் சென்றிருப்பார் பின்னால்  திடீரென்றுவந்து ஒரு நாய்  கெண்டைக்காலை கடித்துவிட்டு ஓடத் தொடங்கியது.

அவருக்கு தெரிந்த ஒருவர் அது வெறிநாய் உங்களையும் கடிச்சிடுச்சா…இப்பதான் அங்க ஒருத்தர கடிச்சிது.

போங்க..போங்க…சீக்கரம் போயி டாக்டர பாருங்க என்றார்.

அங்குள்ள லோக்கல் டாக்டரிடம் காண்பிக்க  அவரிடம் வெறிநாய் கடி என்றதுமே..

நீங்க போயி திருச்சியில காண்பித்து விடுங்கள் என்று சொல்லி அவரும் அனுப்பிவிட…

திருச்சி வந்துஊசி போட்டு கொண்டு சென்னை வந்து சேர்ந்துள்ளார்.

நண்பர் இணை    த்தின் வாயிலாக தேடி அதனுடைய தீவிரத்தை அறிந்தவுடன் பயப்பட ஆ ரம்பித்துவிட்டார்.

தன்னுடைய எதிர்காலம் தன்பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும கவலைப்பட்டு நண்பர் ஒருவரிடம் கொட்டி தீர்த்துவிட்டார்.

நான் என்ன பாவம் செய்தேன்?  எனக்கு ஏன் இவ்வாறு நடக்கிறது?

என்னுடைய பிள்ளை ஜாதகம் என்ன சொல்கிறது? நான் இல்லாட்டியும் எதிர்காலத்தில்அவன்  நன்றாக இருப்பானா ???

எனக்குஏதோ ஆகப்போகிறது என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர் ஒருவரிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

அவருடைய நண்பர் ஆறுதல் கூறியும் டேய்..வெப்சைட்ல ரொம்ப ரிஸ்கா  போட்டிருக்காண்டா..

என்ன செய்யுறுதுன்னே தெரியல என்று  சொல்ல..

அவருடைய பயத்தை  தீர்ப்பவர் யார்???

வெறிநாய் கடிப்பற்றி இச்சுட்டியில் காண்க…Friday, July 15, 2011

புகைப்படதொகுப்பு

எருக்கன் பூ

உணவுக்காய் உழைப்பு

வீடு திரும்புகையில்...

கருவேலமுள்

ஓய்வின் போது

Wednesday, July 13, 2011

வற்ற தொடங்கிய குளம்


குளம் வற்றதொடங்கியது. பக்கத்தில்  உள்ளகிராமங்களில் மீன்பிடித்து முடித்தபிறகே கடைசியில் எங்கள் ஊ ர் கிராமத்தில் மீன்பிடிப்பார்கள்.

பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக ஆள் போட்டு கண்காணித்து மீன்களைப்பிடித்து விற்பனைக்கு கொண்டு செல்வார்கள்.

அந்த பதினைந்து நாட்களும் சிறுவர் சிறுமியர்களுக்கு கொண்டாட்டம் தான்.   சேற்றில் புதையுண்டு கிடக்கும் மீன்களை  குளம் காவல் காப்பவரை ஏமாற்றி பிடித்து செல்வதில் அவர்களுக்குமிகப்பெரிய சந்தோசம் .
காவலாளி முதுமையடைந்து  கண்பார்வை மங்கியது இவருடைய பலவீனமாகவும் சிறுவர்களுடைய பலமாகவும் மாறி அன்றைக்கு அவர் அவர்கள் வீட்டுக்குரிய குழம்பிற்கு தேவையான  மீன்களை பிடித்து செல்வதில் தான்அவர்களுடைய வெற்றி .

காவலாளியும் பெண்களை  முன்னிலைப்படுத்தி தனக்கு தெரிந்த  அத்துனை  கெட்டவார்த்தைகளை திட்டியும் அதையெல்லாம் துச்சமென மதித்து அவர்களுடைய ஈடுப்பாடு மீன் பிடித்தலில் இருக்கும்.

காவலாளி யின் இளம் வயது மகன்கள் வந்து யாராவது ஒரு சிறுவனை  நையப்புடைக்கையில் மற்ற சிறுவர்கள் பயந்து ஓடிவிடுவார்கள்.

இது வருடந்தோறும் நடக்கும் ஒரு திருவிழா நிகழ்வு.

இரைக்காக வட்டமிடும் கழுகு

இதுத்தவிர குறிப்பிட்ட அளவு கழுகுகளும் கொக்குகளும் குளத்தை ஆக்ரமித்து கொள்ளும். பத்து தடவை முயற்சித்து  ஒரு மீனை தூக்கி செல்லும் சில கழுகுகள். மெதுவாய் நடந்தே சிறு சிறு மீன்களை தனக்கு விருந்தாக்கி கொள்ளும் கொக்குகள்.

எல்லா கழுகுகளும் மீனை தூக்குமா என்பதும் சந்தேகமே….


Tuesday, July 12, 2011

ரகசியம்

மறைக்கப்பட்ட

பொருள்

மனதுள் செய்தி

அறிவிக்கப்படாத

முடிவுகள்

அறியும் ஆவலில்

தொடர் தோல்வி

ரகசியம்

தொடர்முயற்சி

என்றைக்காவது

ஒரு சந்தர்ப்பத்தில்

ரகசியங்கள்

கட்டவழிக்கப்படுகிறது

ரகசியங்கள்

செய்தியாய்

உருமாற்றம் அடைய

ரகசியங்கள்???!!!

Friday, July 08, 2011

குலதெய்வமும் கணிதமேதையும்


கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறுப்பற்றி தெரிந்த நண்பரிடம் கேட்டேன். அவர் கேள்விபட்டதாக சொன்ன கதை இது.

அவர் கும்பகோணத்தில் வாழ்ந்தார். படுக்கும் போது சிலேட்டை வைத்துக்கொண்டே படுப்பாராம். திடீரென்று கண்விழித்து சிலேட்டில் கணிதத்தை போட்டு பார்ப்பாராம்.

எப்படி போடுகிறாய் என்று அவரிடம் கேட்டால் தன்னுடைய குலதெய்வத்தின் பெயரைச்சொல்லி அது  சொல்லிக்கொடுப்பதாக சொல்வாராம்.  

அவருக்கு காசநோய் பீடித்து 32 வயதில் இறந்து விட்டார்.

அவர் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் படித்தவர் என்றும் அவருடைய பேராசிரியர் பெயர் ஹா ர்டி எ ன்றும் குறிப்பிட்டார்.

ராமானுஜம் எண்  ஒன்று உள்ளது என்றும் குறிப்பிட்டார்.


அவரைப்பற்றிய வரலாறு எனக்கும் தெரியாது. கீழ்கண்ட சுட்டியில் சென்று நான் அறியும் வரையில்…

ஐரோப்பிய கணித அறிஞர்கள் சிலரின் வாழ்க்கையை விவரிக்க ஆரம்பித்த தொடர் இது. ஆனால் அதற்குள்ளாக இந்தியா உருவாக்கிய ஒரே மாபெரும் கணித மேதையைப் பற்றிச் சொல்லிவிட ஆசை. ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வசித்த ஸ்ரீநிவாச ராமானுஜனின் வாழ்க்கையை இன்றுவரை இந்தியர்கள், அதுவும் குறிப்பாகத் தமிழர்கள் அறிந்தாரில்லை.

ராமானுஜன் ஒரு கணித மேதை என்று நாமும் தபால் தலைகள் வெளியிட்டுச் சிறப்பித்துவிட்டோம். பாடப் புத்தகங்களில் ஒருவேளை அவரது பெயர் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் என்னதான் செய்தார், ஏன் அவருக்கு இத்தனை பேரும் புகழும் உலக அளவில் இருக்கிறது என்பதைக் கணிதம் அறிந்த பெரும்பாலானோர்கூடப் புரிந்துகொள்வதில்லை. இன்று இந்தியாவில் மிகச் சில கணித விற்பன்னர்கள் மட்டுமே ராமானுஜனின் பெருமையை முழுதாக உணர்ந்துள்ளனர்.

மேலும் அதிகமாகஅவரைப்பற்றி இச்சுட்டியில் காண்க…


அவர் வாழ்க்கை வரலாறுபற்றி இன்னோரு சுட்டியில் காண்க..


இரண்டு சுட்டிகளுக்கும் சிலவித்தியாசங்கள் உள்ளது.

மேலும் அவரைப்பற்றி...

Tuesday, July 05, 2011

வாழ்க்கை ஓடி கொண்டுதான்...மனதளவில் நொறுங்கி போயிருந்த அவன் மனதை  சரிசெய்யவது என்பது கடினமாகத்தான் இருந்தது. அவனுடைய   பார்வையில் அவன் உலகத்தில் அவன் ராஜாவாய் இருந்ததால்  முழுமையாக
தன்னுடைய வழி சரியென்று பொருந்திப்போனான்.

தன்னம்பிக்கை புத்தகங்களின் மேற்கோள்கள் நண்பர்களின் கவுன்சிலிங் என அவனுடைய  பிரச்சனைக்களுக்கு தீர்வு காண  ப்பட்டாலும் அவன் பிரச்சனை தீர்ந்துபோய் விடவில்லை.

கேட்கும் நேரங்களில் கவனமாய் கேட்பான் . செயல் படும் விதம் என்னவோ அவன் மனஇயல்பு படி தான் செய்துமுடிப்பான்.

வாழ்க்கை ஓடிகொண்டுதான் உள்ளது.

நீ இதை செய்தால் என்னுடைய சக்திக்கு தகுந்த மாதிரி நானும் அதை உனக்கு  செய்வேன்.

அவசியம் கருதி அவர்களிடம் சொல்லாமல்  ஒரு செயல் இவன் நிகழ்த்திவிட்டால் பதிலுக்கு பதில் செயல்களின் திட்டங்கள் போடப்படும். பதில் செயல்கள் செய்யும் காலங்கள் எதிர்நோக்கப்படும்.  பதிலுக்கு செய்து முடித்தால்  தான் நிம்மதி.

வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.

எதிராளி அவர்களுக்கு செய்யவேண்டும் ஆனால் எதிராளிக்கு அவர்களைப்  பற்றி எந்தகவலையும் கிடையாது. தன்னுடைய முன்னேற்றம் மட்டுமே குறிக்கோளாய்…

எதிராளி யின்  பயன் தரும் செயல் பாதிக்கப்பட்
டால் எத்தனைவருடம் பக்கதில் இருந்தும்  தூசி  தான் அவர்கள்.

வாழ்க்கை ஓடி கொண்டுதான் உள்ளது.

செயல்களுக்காய் முகம்  பூத்து கிடக்கும் செயல்கள் முடிந்தவுடன் ரயில் பயணத்து நட்புகளாய் உறவுகளும் நட்புகளும் …

வாழ்க்கை ஓடி கொண்டு தான் உள்ளது.

வாழ்வின் நகருதல்கள்  இதுபோல் பல்வேறு கரைகள் தொட்டே ஓடி  கொண்டு தான் உள்ளது.


Monday, July 04, 2011

காசு வருகிறது


காசு வந்ததும்

ஓர்

புதிய முகம்

தோன்றுகிறது

உறவுகளும்

நட்புகளுக்கும்

ஓர்

புது விதி

எழுதப்படுகிறது

அலட்சியங்களும்

அவமதிப்புகளும்

இயல்பாய்அரங்கேறும்

மனித நிகழ்வுகளில்

துவண்டு போகும்

சுயமரியாதைகளும்

சுதந்திரங்களும்

காசு வருகிறது

அற்பனின் வாழ்வில்…


LinkWithin

Related Posts with Thumbnails