Thursday, March 31, 2016

ஊர் சுற்றி - புகைப்பட தொகுப்பு

நீண்ட வரிசையில்  செல்லும் பல மின்கம்பிகளில் ஒன்றில் தனிமையில்  அமர்ந்திருந்த ஒற்றை காக்கையும்  சூரிய உதயம் காண காலைவேளையில் பயணித்த ஒரு காலையின் சூரியோதயம்  பங்குனி மாத திருவிழா ஒன்றில் மின்அலங்கார  தேவி மற்றொரு காலை  பயணத்தில் மற்றொரு சூரியோதயம் இருக்கும் இடத்தில் மறைந்த சூரிய அழகும் காலைவெயில் சாப்பாட்டு மேசையின் மீது பூச்சாடி   காலை தஞ்சைபயணத்தில் இளைப்பாறிய இடத்தில் இலைகள்  உதிர்த்த மரம்  கடைகாக்கும் பூட்டுகள்.Monday, March 28, 2016

கோடைவெயில் சில காட்சிகள்

மேகங்களின்
தடை இல்லா
சூரிய வெளிச்சத்தில்
தவித்தபடியே
ஓடும்
செருப்பில்லா சிறுவன்
குட்டையும்
நெட்டையுமாய்
வியர்வையில் நனைந்த
பள்ளி சிறுவர்களும்
சிறுமிகளும்
தோளில்
ஒரு பிள்ளை
கையில் மறுபிள்ளை
கடைத்தெரு
செல்லும் தாய்
வெள்ளை மேகம்
ஒன்று கடந்து போக
வெயில் சூட்டுக்கு
சிறிது இடைவெளி
கண்கள் மட்டும்
தெரிய
முழுக்க மூடிய
கருப்பு உடையில்
சிரித்தபடியே
செல்லும்
கல்லூரி பெண்கள்
வெயிலாவது..!!
வெப்பமாவது..!!
உழைத்தால் காசு
வியர்வை வழிகிறது
சுமை இழக்கும்
தட்டு வண்டிக்காரர்
கோடை வெயில்
காய்கிறது.

Thursday, March 24, 2016

சுசீலா ராமன் பாடல் புதிய அனுபவம்

சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் நண்பரின் வழியாக  “ வேல் உண்டு வினையில்லை ” பக்திபாடல் வீடியோவாக வந்து விழுந்தது.

ஓட விட்டுப்பார்த்தேன் யாரென்று தேடி ஓடினேன் இணையத்துக்கு ..

சுசீலாராமன்  வீடியோபாடல் அதுவாக தஞ்சை ப்பூர்விகமாய் லண்டன்வாழ் தமிழராக இசை ஆல்பத்தில் அசத்துகிறார்.

தமிழ் பக்தி பாடல்களை  வேறுவிதமாகப் பாடிய அவருடைய குரல்வளம் கிரேட்ங்க..

ஓரே மாதிரியாக க்கேட்ட பாடலை வேறு இசையிலும் வித்தியாசமான குரலிலும் கேட்டது புதிய அனுபவத்தை க்கொடுத்தது.

அவரை பற்றி மேலும் அறிய..
https://en.wikipedia.org/wiki/Susheela_Raman

அவருடைய இசையை நீங்களும் கேட்டுப்பாருங்களேன்.


Friday, March 18, 2016

பாரதி பாஸ்கா் பேச்சு

இரண்டு நாட்களுக்கு முன்னே  இணையத்தின் வழியாக நண்பரின் உதவியால் பாரதி பாஸ்கா் பேச்சு கேட்க நேர்ந்தது.
மதுரையில் நடந்த மாணவர்கள் மாநாட்டில் பேசினார்கள்.


அட ..நல்லா பேசுறாங்களே  ரகம்..மீண்டும் கேட்டேன் பகிர்ந்து கொண்டேன்.

Wednesday, March 16, 2016

உழைப்பும் பிழைப்பும்வாழ்வாதார போரட்டம்
வாய் பேசா மடந்தையின்
உழைப்பு

மனதின் இறுக்கம்
சிரிக்க மறந்த முகம்
யார் யாருடைய
நன்மைக்கோ
இந்த மூதாட்டி
நெய் தீப கடையில்
நெய் ஊற்றி வைக்க
நெய் தீபங்கள் எரிக்கின்றன
மூதாட்டி வாழ்வு ?

Monday, March 14, 2016

இந்தவார புகைப்படதொகுப்பு

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது  அம்மரத்தின் பக்கம் திரும்பாமல்  போகமுடியாது   பூக்களின் நிறம்  தானாக பார்க்க வைத்து விடும்
அவசியம் ஒரு க்ளிக் செய்து விடவேண்டும் என்று க்ளிக்கியது.


படத்தை க்ளிக்கியதும் நடந்தபாதையில்  அட..என்னய புடிப்பான்னு  இவங்க ஒரு  பார்வை பார்க்க ..அவங்களையும் ஒரு க்ளிக்....


டப்புன்னு ஒரு மூடு வரும் காத்து வாங்கிட்டு வரலாமுன்னு வண்டிய எடுத்துட்டு  வயபக்கம் போன  புகை மூட்டத்துடன் கூடிய ஆரஞ்சு தீச்சுவாலை..அட என்னடா அதுன்னு கிட்டக்க போனா...கரும்பு கொல்லையில கரும்பு தோகையை கொளுத்தி வைக்க அந்த இடமே வெளிச்சமாய் ஞாபகமா இருகட்டுமேன்னு ஒரு க்ளிக்...


இந்த வாரத்தில் ஒரு நாள் காலை வேப்பங்குச்சி உடைக்க போனப்ப அழகா மலர்திருந்தாங்க..


Friday, March 11, 2016

கருத்து சித்திரம் பகிா்வு - தி இந்து

பல நூறு  வாா்த்தைகள் விளக்குவதை ஒரு  சித்திரம் விளங்க வைத்துவிடும்.


Wednesday, March 09, 2016

இ-மெயில் கண்டுபிடிப்பு உண்மையும் பொய்யும் .

உண்மை எது?

பொய் எது?

கடந்த சில நாட்களுக்கு முன் படித்த செய்தி இ-மெயில் கண்டுபிடித்தது
ரேமண்ட் டாம்லின்சன்.

அதே செய்தி இப்பொழுது மறுக்கப்படுகிறது. இ-மெயிலை கண்டுபிடித்தது அமெரிக்க வாழ் தமிழர் சிவா அய்யாதுரை. அவர் அதற்கான காப்புரிமையும் வைத்துள்ளார்.

இதுவும் ஊடகங்களின் வழியாகவே  தெரியவருகிறது. ஊடகங்களின் நம்பகதன்மை ?  இதுபோன்ற விசயங்களின் உண்மை த்தன்மை எவ்வாறு அறிவது??

செய்தி வெளியிடும் முன் அதுபற்றி விரிவாக ஆராயமாட்டார்களா அல்லது வேண்டுமென்றே பரப்ப படுகிறதா தெரியவில்லை.

இ-மெயிலை கண்டுபிடித்தவர் யாரென்று தெரியாததால் ரேமண்ட் கண்டுபிடித்தார் ஊடகங்கள் சொல்லியதால் நம்புகிறேன்.

கண்டுபிடிப்பு காப்புரிமை உடையவர் எதிர்கருத்து பரப்பாவிடில் நான் முதலில் படித்த செய்தி உண்மையாக நினைத்துக்கொண்டிருப்பேன்.

அறிவியல் நேர்மை சம்மந்தப்பட்டது. அப்படியிருக்க இப்படியும் செய்திகள்.

இச்செய்தி உண்மை அல்ல என்று தெரிந்தவர்கள் உடனே தனது கருத்தை ஏதோ சமூக ஊடகத்தின் மூலம் பரப்பினால்  செய்தியின் நம்பகதன்மை கேள்விகுறியாகிவிடும்.

கண்டுபிடிப்பாளரே கண்டுபிடித்து  மறுப்பு தெரிவித்தல் என்பது அவர்களுடைய  சூழ்நிலை பொறுத்து அமைவதாகிவிடும். பொய் உண்மையாக நாமும் சந்தர்ப்பம் அமைத்து க்கொடுத்தது போல் ஆகிவிடும்.

அமெரிக்க வாழ் தமிழன் கண்டுபிடிப்பு  ..ஆகா..தானாய் வந்த மகிழ்ச்சி..கண்டுபிடிப்பின் உரிமை  இந்தியன்  கருப்பு நிறத்தவன் புலம்பெயர்ந்தவன் என்பதால் மறுக்கப்படுமானால் மிகவும் கண்டிக்கப்படத்தக்கது.

தொடர்புடைய  செய்தி

இ-மெயிலை கண்டுபிடித்தது நான்; அங்கீகாரம் வேறொருவருக்கா?- தமிழர் சிவா அய்யாதுரை ஆதங்கம்


Monday, March 07, 2016

பந்தயக் குதிரைகளும் பக்குவப்படுத்தும் கலையும் - பகிர்வு

தேசிய புகழ்பெற்ற ’இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பை’ குதிரைப் பந்தயங்களுக்காக இந்தியாவின் முக்கிய பந்தய மையங்களிலிருந்து வந்திருந்த குதிரைகள் ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றன.
பெரும்பாலும், குதிரைப் பந்தயங்களில் ஜெயிக்கும் குதிரை களைப் பற்றித்தான் ஆர்வத்துடன் விசாரிக்கப்படுகின்றன. அந்த குதிரைகள் பந்தயத்துக்காக எப்படித் தயார் படுத்தப்படுகின்றன என்பதை கேட்டால் அது ஒரு பெரிய கலை என்கிறார்கள்.
இந்தியாவில் புணே, மும்பை, ஆமதாபாத், டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் குதிரை பண்ணைகள் உள்ளன. இங்கு உயர் வகை குதிரை இனங்களை உருவாக்குவதற்காக வெளிநாடு களிலிருந்து குதிரை ஜோடிகள் விமானம் மூலம் இறக்குமதி செய் யப்படுகின்றன. இவைகளை ’ஸ்டாலின்’ என்கிறார்கள். இவற்றின் மூலம் இனவிருத்தி செய் யப்படும் குதிரைகள்தான் பந்தயத் தில் ஓடவிடப்படுகின்றன.
கருவுற்று ஆறாவது மாதத்தில் குதிரை குட்டியை ஈனும். ஒரு குதிரை அதிகபட்சம் ஐந்து குட்டிகள் வரைகூட ஈனும். பிறந்து சில நாட் களிலேயே 400 கிலோ எடையை தொட்டுவிடும். ஓராண்டு காலத் துக்கு இந்தக் குட்டிகள் அதன் போக்கிலேயே சுதந்திரமாக புல் தரைகளில் உலவவிடப்படும். இந்தக் காலகட்டத்தில் குதிப்பது, உதைப்பது, கடிப்பது என குட்டிகள் மிகவும் மூர்க்கத்தனமாகவே இருக் கும். சுவரில் மோதி காயம் ஏற் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, குட்டிகள் குதித்துத் திரியும் பகுதி களில் மென்மையான தடுப்பு வேலி போட்டிருப்பார்கள்.
பிறந்ததுமே குதிரை குட்டி களின் பிறப்பை பதிவு செய்ய வேண் டும். இதற்காகவே புணேயில் பதிவு மையம் உள்ளது. குதிரை குட்டி யின் இனம் அதன் தாய், தந்தை குறித்த விவரங்கள் அனைத்தையும் இங்கே பதிவு செய்து முறைப்படி பாஸ்போர்ட் பெற்றால்தான் அந்தக் குதிரையானது பந்தயத்தில் ஓட அனுமதிக்கப்படும்.
இரண்டு வயது தொடக்கத் திலேயே ’ஸ்டேபிள்’ எனச் சொல்லப் படும் பிரத்யேக அறைகளுக்குள் குதிரைக் குட்டிகள் அடைக்கப் படும். அப்போதே ரேஸ்கோர்ஸ் மைதானங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கே பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியும் அளிக்கப்படும். காலை யில் ஓட்ஸ், கொல்லு, மதியம் வெறும் தண்ணீர், மாலையில் கேரட், இரவில் புல். இவைதான் குதிரைகளுக்கான தினசரி டயட். சென்னை பண்ணையில் உள்ள குதிரைகளுக்கு மைசூரிலிருந்து பிரத்யேகமாக புல் தருவிக்கப்படு கின்றன. பராமரிப்புக்காக மட்டுமே ஒரு குதிரைக்கு மாதம் முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. அதேசமயம், என்னதான் தீனி கொடுத்தாலும் குதிரையின் எடை 460 கிலோவை தாண்டவிடமாட்டார்கள்.
தினமும் குதிரைகளின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதற்கா கவே இரவு பகலாக 2 கால் நடை மருத்துவர்கள் பண்ணையில் பணியில் இருப்பார்கள். 2 வயது முடியப்போகும் தருவாயில் குதிரைகள் கிளாஸ் ஒன் ரேஸில் களமிறக்கப்படும். களத்துக்கு வரும் குதிரைகளின் திறமையைப் பொறுத்து அவற்றின் மதிப்பும், ஓடும் ரேஸ்களின் தரமும் உயரும்.
பண்ணையிலிருந்து ரேஸ் கோர்ஸ் மைதானங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் குதிரை களைக் கொண்டு செல்வதற்கு ஃப்ளோட் (Horse Float) என்று சொல்லப்படும் பிரத்யேக வாகனங் களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஃப்ளோட்டில் 6 குதிரைகள் வரை நிறுத்தலாம். உயர் வகை குதிரைகளை கொண்டு செல்வ தற்கு குளிரூட்டப்பட்ட ஃப்ளோட் களும் உண்டு.
சென்னை பண்ணையிலிருந்து கொல்கத்தாவுக்கு மட்டும் ரயிலில் பிரத்யேக வேகன்களில் பந்தயக் குதிரைகள் எடுத்துச் செல்லப்படு கின்றன. இந்த வேகன்கள் குதிரை களை நிற்கவைக்க வசதியாக மரக் கட்டைகள் அடிக்கப்பட்டு உள்ளுக் குள் ஐஸ் கட்டிகள் அடுக்கப்பட்டு குளிரூட்டப்படும். ஆந்திரா சென்ற தும் மீண்டும் வேகனில் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்டு குளிரின் பதம் காக்கப்படும். அதேசமயம், என்னதான் ஊட்டி ஊட்டி வளர்த் தாலும் பந்தயக் குதிரைகளுக்கு 4 ஆண்டுகள்தான் மதிப்பு. 6 வயதுக்கு மேல் அவை பந்தயத் துக்கு லாயக்கற்றவைகளாக ஒதுக்கப்பட்டு விடுகின்றன.
இப்படி ஒதுக்கப்படும் குதிரை கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு குதிரை பண்ணையில் ஓரங்கட்டி நிறுத்தப்படும். பந்தயத்துக்கு தயாராகும்போது கோடி ரூபாய் வரை விலை மதிக்கப்படும் இந்தக் குதிரைகள், ஓடிக் களைத்த பிறகு ஆயிரங்களில் மதிக்கப்பட்டு பிற உபயோகங்களுக்கு விற்கப்படு வது பரிதாபத்துக்குரிய விஷயம்.
கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் தள்ளாட்டத் துடன் ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகள் இப்படிக் கழிக்கப் பட்டவைதான். சென்னை மாநகர காவலில் ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான குதிரைகள் எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சொந்த மானவை. குதிரைகளின் அதிகபட்ச ஆயுள் காலம் 9 ஆண்டுகள்.
பெரிய குதிரைப் பண்ணைகள்
இந்தியாவை பொறுத்தவரை சென்னையில் எம்.ஏ.எம்.ராமசாமி யின் குதிரைப் பண்ணை, பெங்களூருவில் விஜய்மல்லையா வின் குதிரைப் பண்ணை, மும்பை யில் துஞ்சு பாய் என்பவரின் குதிரைப் பண்ணை மற்றும் துபாயைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகரின் குதிரைப் பண்ணை இவைகள்தான் இந்தியா வின் பெரிய குதிரைப் பண்ணை கள். புணேயில் உள்ள குதிரை பண்ணை குளிரூட்டப்பட்டது.
உலகின் டாப் 10 பந்தயக் குதிரை இனங்கள்
இங்கிலாந்தின் துரோப்ரீட் வகை குதிரைதான் பந்தயக் குதிரைகளில் முதல் தரமானது. இதற்கு அடுத்த நிலையில் அரபு நாடுகளின் அரேபியன், அமெரிக்காவின் ஸ்டாண்டர்டுப்ரீட் மற்றும் குவார்ட்டர் ஹார்ஸ் இனங்கள் உள்ளன. இவைகளுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் பெயின்ட் ஹார்ஸ் மற்றும் அப்பாலூசா குதிரைகளும் வட அமெரிக்காவின் மஸ்தாங், நெதர்லாந்தின் ஃபிரைசியன், அமெரிக்காவின் மார்கென், அயர்லாந்தின் ஜிப்சிவேனர் குதிரைகளும் உள்ளன. குதிரை பயிற்சியாளர்களில் ஹாங்காங் பயிற்சியாளர்களும் ஜாக்கிகளில் அயர்லாந்து ஜாக்கிகளும் பிரமாதமாக பேசப்படுகின்றனர்.
கிண்டியில் கில்லி அடித்த குதிரைகள்
கிண்டியில் நேற்றுமுன்தினம் நடந்த ஸ்பிரிண்டர்ஸ் கோப்பை பந்தயத்தில் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான பெங்களூரு குதிரை ஆதமும் (ஜாக்கி: டிராவர், பயிற்றுநர்: ஷராஃப்) ஸ்டேயர்ஸ் கோப்பை பந்தயத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த குதிரை டின் டினாபுலேஷனும் (ஜாக்கி: சவுகான், பயிற்றுநர்: தேஷ்முக்) முதலாவதாக வந்து தலா ரூ.50 லட்சத்தைத் தட்டிச் சென்றன. நேற்று நடந்த இன்விடேஷன் கோப்பை பந்தயத்தில் பெங்களூருவைச் சேர்ந்த டெசர்ட் காட் (ஜாக்கி: டேவிட் ஆலன், உரிமையாளர், பயிற்றுநர்: பத்மநாபன்) என்ற குதிரை கோப்பையை கைப்பற்றி ரூ. 1 கோடியை தட்டிச் சென்றது.

நன்றி  : தி இந்து

Friday, March 04, 2016

கண்ண கட்டுதுரா சாமீ..!! - தமிழக அரசியல்

மே 16

தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது.

பத்திரிக்கை ஊடகங்கள்  இணையவழி செய்திகளின் பயணித்தலில் தமிழக அரசியல் பொதுமக்களின் மனதில் பலவிதமான உணர்வுகளை  க்கிளப்பிவிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை முன் கூட்டியே கொண்டுவந்துள்ளது.

நண்பர்களுடைய வாத பிரதிவாதங்கள் படிக்கும் பத்திரிகைகளுடைய தாக்கம் தெரிகிறது.

அரசியல் கட்சிகள் பக்கம் சார்ந்த  பத்திரிக்கைகளின்  கருத்துகளால் குழப்பம் குழப்பம்.

இவற்றையெல்லாம் மீறி விசயகாந்த் என்ன முடிவு செஞ்சாரு..என்ன முடிவு செய்ய போறாரு..எப்பா கண்ண கட்டுதுறா சாமீ..!!

அஇஅதிமுக  மௌனம்  தலைமையின் அதிரடி கட்சியை கலகலப்பாக்க...

பாமக விளம்பர டிரெண்ட்  திமுக- வின்  விளம்பர டிரெண்டை மிஞ்சி விட்டது  என்னவோ உண்மை தான்.

விளம்பர மாற்றம் வாக்கு மாற்றம் ஆகுங்களா??

கணஜோராக வேட்பாளர் தேர்வில் திமுக... சனநாயக கட்சில்லே... வேட்பாளர்களை முடிவு செய்யறது தலைவரா...பொருளாரா ...பொருத்து தான் பார்க்கணுமுங்க..

தேர்தலுக்கு த்தேர்தல்   தேர்தல் சமயம் கும்பிட்டு ...ஜெயித்தவுடன் நாள் கணக்கில் நாம நிக்க தலைவரு ரொம்ப பிசி..வாக்களர் நாம எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமுல்ல....இதெல்லாம் உங்களுக்கு த்தெரியாதது கெடையாது.

ரெண்டு பெரிய கட்சி வேணாமுன்னு சொன்னாலும் மாற்று எது ??!!  பல வினாக்களை த்தொக்கியே தமிழகம் நிற்கதியாய் நிற்கிறது.

திமுக குடும்ப அரசியல் லோக்கல் அரசியல் எப்பா நெனைக்கவே  முடியல...

அதிமுக தலைமையின் தொய்வு மன்னை வகையறாக்களின்  மறு வருகை உண்டு பண்ணிவிடுமோ பயமும் இருக்கவே...

மாற்று அரசியலுக்கான நேரம் தமிழகத்திற்கு வந்துவிட்டது உண்மைதான் . ஆனா  யாரு...

தொழிலாக மாறிய இன்றைய அரசியலில் பொது சனமாகிய நாம யார கொண்டுவரலாம்..!!??
 இந்த தேர்தல ஒரு வழி கிடைக்குமா பார்க்கலாம்.


Tuesday, March 01, 2016

இந்தவாரம் எனைக்கவர்ந்தவை-புகைப்படதொகுப்பு

கருப்பு வெள்ளையுமாய் மேகக் கூட்டம் நெடிது வளர்ந்த பனை மரங்கள் தென்னை மரங்களின் பிரதிபலிப்பு இழந்த இலைகளை திரும்பவும் உயிர்ப்பிக்கும்  புங்கைமரம் வெயில் சுட்டெரிக்கும் முன்னே வருமானம் ஈட்டும்  மாட்டு வண்டிக்காரர் நீலவான பின்னணியில் தன் அழகை வெளிப்படுத்தும் இளந்தளிர் அருகில் சென்றும் அமைதியாய் புகைப்படம் எடுக்க காத்திருந்த தட்டான் இந்தவாரம் எனைக்கவர்ந்தவை.LinkWithin

Related Posts with Thumbnails