Thursday, February 25, 2016

காலை உணவும் தொட்டுக்கையும்

அட..என்னப்பா இது சக்கரபொங்கலா..வயிறு நிறையச் சாப்பிடமுடியாதே தெவட்டுமே..


என்ற அங்கலாய்ப்புடன் தொடங்கிய காலை உணவு.ருசியாய் பாிமாறப்பட்ட சக்கரைப்பொங்கல்  சாப்பிடும்பொழுதே தெவிட்டியது.

கொத்தமல்லி துவையல் தொட்டுகிட்டு சாப்பிடுங்க தெவிட்டாது அன்பான வேண்டுகோளினால் முதல் முறையாகத் துவையலை தொட்டு க்கொண்டு சாப்பிட மீதமிருந்த சக்கரை பொங்கலும் உள்ளேபோனது.

அட..உன் யோசனை  நல்ல யோசனையாத்தான் இருக்கே... பாராட்டினேன்.

நீங்க வேற ..இன்னும் சில வீட்டுல கூட்டு இல்லாம சக்கரை பொங்கலே கிடையாதுங்க..

அப்படியா..

சாப்பாடு எவ்வளவோ முக்கியமோ அதேமுக்கியம் தொட்டுக்கைக்கு உண்டு.


நடுந்தர குடும்பம் எங்கள் வீடுகளில் கோடை ஆரம்பித்துவிட்டாலே பழைய சோறு தான் காலை உணவு அதற்கு தொட்டுக்கை சின்ன வெங்காயம் வறுத்த மோர்மிளகாய் கருவட துவையல் மிளகாய் துவையல் அச்சு வெல்லம் பாதி வருத்த கடலை என தினம் ஒன்றாய் பட்டியல் நீளும்.


வந்த தொட்டுக்கையே ஒரு நாள் விட்டு மறுநாளும் வந்தால் வம்பு நிச்சயம்.


குளிர்காலங்களில் காலை சாப்பாடு பெரும்பாலும்இட்லி தோசை   அவ்வப்பொழுது சப்பாத்தி பூரி சுடுசாதம்
இட்லி தோசை தொட்டுக்கை என்றாலே மிளகாய் துவையல்  தேங்காய் சட்னி  நல்லெண்ணெய் ஊற்றிய இட்லி ப்பொடி அரிதாக கடப்பா என்கிற சாம்பார் வெரைட்டி.

இப்படியாக  மதிய சாப்பாடு தொட்டுக்கை பற்றி எழுத நினைக்கிறேன் பார்க்கலாம்.


Wednesday, February 24, 2016

அம்மா பொறந்த நாளும் அஇஅதிமுக-வும்

நேற்றைய தினசரிகளில்  ஆளும் முதல்வருக்கு எதிராக திமுக கொடுத்த விளம்பரங்கள்  ஹாட் என்றால் அதிமுக தரப்பு கொடுத்த வாட்ஸ் அப் பதிலடியும் ஹாட்...
அகவை -68


பேருந்து நிலையம் பகுதிகளில்  வாழ்த்துகள் தெரிவித்த ப்ளக்ஸ் பொிது பெரிதாய் கட்டப்பட ...

காலையில் எங்கள் ஊர் கோவில் வாசலில் வாகனங்கள்  அதிகமாய் நின்றது .
என்ன விசேசம் என்று போய் பார்க்க ..அட...அம்மா பொறந்தநாளுக்கு ஊரு ஒன்றியம் நகரம் கவுன்சிலருன்னு அம்மாவுக்காக எல்லாரும் சாமி கும்பிட்டாங்க..

பூசை முடிஞ்சது வாகனங்கள் புறப்பட்டது.

அஇஅதிமுக கொடிமரங்கள்  இருந்த இடங்களில் எல்லாம் அதாங்க முச்சந்தி நாற்சந்திகளில் எல்லாம் இயக்க ப்பாடல்களை ஒலி பரப்பி  ஒன்றியம் கொடி ஏற்றினார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் சத்தம் குறைந்து இயக்கப் பாடல்கள்  நின்றுவிட...வெயில் தாக்கம் நின்றவர்களும் ஓடிப்போனார்கள்.

அம்மா பொறந்த நாள் முடிவுக்கு வந்தது.

அஇஅதிமுக கொடி பறக்கிறது.

Tuesday, February 23, 2016

மாலை நேர தேநீரும் இருசக்கர பயணமும் சிலகாட்சிகள்

வேலை பார்க்கும் மாலை  தேநீர் இடைவெளியில்  ஊரின் எந்தப்பக்கம் சென்றாலும்  இரண்டு மூன்று தொலைவில்  வயல்வெளியும் கிராமம் தான்.

மாலை நேரத்தில் தேநீரை அருந்திவிட்டு  இருசக்கரவாகனத்தில் பயணத்தில் சூரியன் மறையும் மாலையும் தென்றல் காற்றும் ஆகா...அனுபவித்தபடியே
சட்டென மனத்துக்கு ப்பிடிக்கும் காட்சிகளை மொபைல்போன் கேமாரா சுட த்தவறுவதில்லை.

அப்படி எடுத்த சிலகாட்சிகள்..

சாலை ஓர மரங்கள்

ஊரின் அருகில் வெண்ணாறு

வயல்வெளியில் மறையும் சூரியன்


Monday, February 22, 2016

காதலர் தின கின்னஸ் சாதனை

நியூசிலாந்து நாட்டை ச்சார்ந்த அன்னா கோச்ரேனே காதலர் தினத்தன்று தலைகீழ் தொங்கும் விளையாட்டில் ( Trapeze) வெப்ப காற்று பலூனில் 10000 அடிக்கு மேல் பறந்து அங்கிருந்து  தலைகீழ் தொங்கி கின்னஸ் சாதனை ப்படைத்திருக்கிறார்.

2171 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கியது முந்தைய சாதனையாக இருந்தது.

Saturday, February 20, 2016

காலையும் கருப்பு தேன்சிட்டும்

வேனிற்கால வருகை காலையில் சிறிது குளிருடன் உடலை வருடிய மெல்லிய தென்றல். புங்கை மரங்கள் இலையுதிர்த்து  புதிய பசுமையை உண்டாக்கத் தொடங்கின.

காலைவெயிலில் எதிரொலித்த பசுமை கண்களுக்கு விருந்து.

பூக்கள் புதிதாய் பூக்க தொடங்கிய மரமொன்றில் முழுகருமை நீண்ட மூக்கு கைக்குள் அடங்கிவிடும் உருவத்தில் கருப்பு தேன்சிட்டு.

கிளைக்கு க்கிளைக்கு தாவுதலில் தொடங்கிய நடனம் பூக்களில் தன் கூர்மூக்கை உள்நுழைத்து வெளியே எடுக்கும் வரை இடைவெளிதிரும்பவும் தத்தி த்தத்தி தாவும் நடனம்.

நேரம் போனது வேறு வேலை அழைத்தது பிரியமனமில்லாமல் பிரித்தேன்.

கையில் இருந்த மொபைல் போனில் சுட்டது .


Thursday, February 18, 2016

எனை பாதித்த செய்திகள் 18-02-16

செய்தி ஒன்று

ஹாிஷ்  என்ற இளைஞர் பெங்களுரு சாலை விபத்தில் உடல் துண்டானபோதும் தான் பிழைப்பது கடினம் என்று அறிந்து  தன் உடல் உறுப்புகளை  தானம் செய்ய கெஞ்சியது எனை பாதித்தது.இறக்கும் நிலையிலும் அவரின் சிந்தனை  ரியலி கிரேட்..
செய்தி தொடுப்பு
ஹாிஷ் விபத்து
மாியாதைக்குரியவர்
செய்தி இரண்டு

அர்ஜென்டினா உள்ளுர் கால்பந்து போட்டியில் சிகப்பு அட்டை காட்டி வெளியேற்றிய நடுவரை  சிகப்பு அட்டை பெற்ற கால்பந்து வீரா் துப்பாக்கியால் சுட்டு கொன்றது எனை பாதித்தது.

இது என்ன விளையாட்டு??!!

செய்தி தொடுப்பு
சுட்டு கொன்ற கால்பந்து வீரா்

Tuesday, February 16, 2016

பட்டினியால் சாக கிடந்த இரண்டு வயது சிறுவனை காப்பாற்றிய தொண்டுநிறுவனத்தினர்

நைஜீரியா நாட்டில் பட்டினியால் மெலிந்து நோய்வாய்பட்டு இறக்க கூடிய நிலையில் இருந்த ரோட்டோர சிறுவனை காப்பாற்றிய தொண்டு நிறுவனத்தினர்.
Friday, February 12, 2016

குழப்ப அரசியலும் தமிழகமும்.

சொல்லிக் கொள்ளும்படி செயல்படாத அஇஅதிமுக தலைமை.  தலைமை
எவ்வளவு சொன்னாலும் அடங்காத ஸ்டிக்கர் ஒட்டிகள் உள்ளாட்சி ஓட்டை சுகாதாரம்  சொல்லவே தேவையில்லை எனச் சொல்லும்படி குறைகள் பல இருந்தாலும்  மாவட்டம் ஒன்றியம் நகரங்களின் அதிகார ஆட்சியின்மை அஇஅதிமுக கொஞ்சம் முன்னோக்கி நிறுத்த...

தகப்பனா...பிள்ளையா போட்டியில் தி.மு.க.  பேச ஒன்றுமில்லாத நமக்கு நாமே.. இப்பொழுதே மாவட்ட செயலாளர்களிடம் அந்த அந்த மாவட்ட எம்.எல்.ஏ  நேர்முககானலுக்கு உட்கார 2சி  வசூலிக்க த்திட்டமாம் ாிப்போர்ட்டா் செய்தி ஆட்சிக்கு வந்தால் கொடுத்தவர்கள்  சம்பாதிக்க என்ன செய்வார்கள்? கடந்த ஆட்சியே அதற்கு ச்சிறந்த உதாரணம்.

மாற்று த்தேவைப்படுகிறது நிறைய க்குழப்பம் நிலவுகிறது. சந்தர்ப்பவசத்தால் அமைந்த கூட்டணியில் எல்லோருக்கும் முதல்வர் கனவாம் . நல் ஆட்சி கிடைக்குமா ??!! இன்று ஒரு சேர நின்றாலும்  அவரவர் தோரணைக்கு அவரவர் ஆட்சியானால்  என்ன செய்வது?

குழப்ப க்கட்சி தேமுதிமுக தெளிவான தி்ட்டமில்லாத கட்சியாக இன்னும் பார்க்கப்பட குழப்ப த்தலைமையை வழிநடத்தும் சாரதி மனைவி மச்சான்  இன்னமும் கற்றுக்கொள்ள ஏராளம். கூட்டணி கட்சி தேமுதிமுக.

பாஜக   காதர்கட்சி இப்பொழுது தமிழகத்தில் வேலை இல்லாதது போல் தெரிகிறது.

பாவம் தமிழ்மக்கள் இலவசத்தால் கட்டுண்டு...டாஸ்மாக்கில் மயங்கி க்கிடந்து தமிழ் ச்சமூகம் பற்றிய சுயநினைவு அற்றவனாய் வாக்குறுதிகளினால்  வசிகரீகப்பட்ட  கோடிக்கான தமிழர்களில் நானும் ஒருவனாய் சட்டமன்ற தேர்தலை நோக்கி...

Tuesday, February 09, 2016

புதிய பயணமும் சிறிய பதைபதைப்பும்.

வேற்றுமொழி வழக்கம் உள்ள புதுஇடத்திற்கான முதல்பயணம் சிறிது பதைபதைப்பு உருவாக்கியது.

பயணம் பல வினாக்களை மனதில் உருவாக்கிப்படியே இருக்க இப்பொழுது இருக்கும் சமுதாய சூழலில் பெண்களுடனான பயணம் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

எப்படி ச்செல்வது?

பெரிய நகரம் சென்று அங்கிருந்து சின்ன ஊர்களுக்கு எப்படி செல்வது?

எங்குத் தங்குவது ?

நமக்கு த்தெரிந்த நபர்கள் யாரும் இருக்கின்றார்களா?

சாப்பாடு எப்படி இருக்கும்?

அங்குள்ள மனிதர்கள் அவர்களின் மொழி பழக்கவழக்கங்கள் பற்றிய மனதில் ஏற்படும் வினாக்கள் அதைப்பற்றிய விவர தேடுகையில் கிடைத்த விபரங்கள் அதைப்பற்றிய குழப்பங்கள் எல்லாம் சேர்த்து  பயணத்தைச் சுவாரசியம் ஆக்கியது.

பொதுவாக புது இடங்களுக்கு ச்செல்கையில் கடைப்பிடிக்கும் வழக்கங்கள் தெரியாதது கூடப் பதைபதைப்புக்கு காரணமாக இருக்கலாம்.

என்ன என்ன தேவை?  என்று சென்றவர்களிடம் விசாரித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி உடை மற்றும்  தேவைப்படும் பொருட்கள் சேகரித்து பயணத்திற்கு த்தயார்செய்தல் புதிய அனுபவம்.

விவர சேகரிக்கையில் அவர் அவர்களின் பார்வைக்கு தகுந்தமாதிரி அந்த இடங்களைப் பற்றிய பேச்சுகளை  , கிடைத்த இணைய த்தகவல்களுடன்  ஒப்பீடு செய்து ஒரு முன்முடிவுக்கு வருகையில் பயணநாள் வந்துவிட்டது.

பயணமும் ஆரம்பமாகியது புதியஅனுபங்களை நோக்கி...


Saturday, February 06, 2016

வண்ண அலங்கார சம்பா -பிரேசில்

ஜிகா வைரஸ் பயத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரேசில் நாட்டில் ஆரம்பமான சம்பா நடன திருவிழா.LinkWithin

Related Posts with Thumbnails