Friday, December 13, 2013

வீடு திரும்பல்

கருமேகங்கள் சூழ்ந்து கிடக்க பூமி குளிர்ந்து கிடந்தது . காற்றின் வீச்சில் விரைந்த கருமேகங்கள் அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து தன் இருப்பை வெளிப்படுத்தின.


ஆடுகள் சிறு தூறல் விழுந்ததுமே ஒதுங்க இடம் தேடின. அவைகள் நடக்கும் நடைபாதைகள் எல்லாம் கடைகள் தான் காடுகள் அல்ல.  மழைக்கு தப்பித்தால் போதும் என்று ஒதுங்கியது.

உஸ்…உஸ்…தே...த்தே… என்று கடைக்காரர்கள் கத்தியப்படியே  ஆடுகளை விரட்டியடிக்க.. .அவைகள் அடுத்த இடம் நோக்கி விரைந்தது.

மழை பெரிதாக பெய்யவில்லை என்றாலும் தூறலில் உடல் நனையதான் செய்தது. பள்ளி குழந்தைகளின் வீடு திரும்பலில் சாரலுடன் காற்று அடிக்க உடைகள் நனைய முகத்தில் வழியும் மழை நீரை துடைத்தவாறே ஓட்டமும் நடையுமாய்,  பள்ளி குழந்தைகள் செல்லும் மிதிவண்டிகளின் வேகம் கூட விரைவாக நனைந்தார்கள். மழையில் நனையாது ஒரு கையில் குடை மறு கையில் மிதிவண்டி காற்று வீசியது குடை பயணம் போகும் எதிர்பக்கம் தூக்க சைக்கிளா.. குடையா.. தடுமாறிய குழந்தைகள்.

பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் வாகனங்களின் நெரிசலில் சிக்கி தவித்த  மிதி வண்டி குழந்தைகளும் , நடக்கும் குழந்தைகளும்நின்று செல்கையில் நனைந்து போனார்கள்.

பள்ளிகளின் பக்கத்திலிருக்கம் பெற்றோர்கள் தான் ஒரு குடையுடன் தன் பிள்ளைக்கு ஒரு குடையுடன் அல்லது மழைக்கால உடுப்பு பள்ளிகள் இருக்கும் திசையில் விரைந்தார்கள்.

எதையுமே அலட்டிகொள்ளாமல் மழையில் நனைந்தப்படி சென்ற குழந்தைகளின் குதுக்கலம் வசீகரித்தது. குடைப்பிடித்தப்படி சென்ற குழந்தைகள் நினைத்திருக்கலாம் பாவம்...அவர்களிடம் குடை இல்லை என்று ஆனாலும்  அவர்கள் மழையில் நனைந்து அடையும் மகிழ்ச்சியை  இழந்து விட்டிருந்தார்கள்.

ஒரு மணி நேரம் அந்தபகுதியே அல்லோகலப்பட்டது.

மாலை கருமேகங்களின் உதவியால் விரைந்து இருள்சூழ்ந்தது கொண்டிருந்தது.

Tuesday, November 26, 2013

புகைப்படதொகுப்பு

ஜன்னல்களின் வழியே எட்டிப்பார்க்கும் காலை கதிரவனின் ஒளி சிதறலில் எங்கள் வீடு


எத்தனை முறை புகைப்பட கருவியில் சிக்கினாலும்   திரும்ப திரும்ப புகைப்படகருவியில் சிக்கும் சூரியன் மறைவு
Wednesday, November 06, 2013

பிடி மீறுதலில்காட்சி பிழையாய்
நகரும் வாழ்வு
முடிந்த இடத்தில்
தொடர்கிறது-நம்பிக்கை

எதிர்பார்ப்புகள்
எத்தனை தூரம்
இழுத்து சென்றாலும்
அலுப்பதில்லை- முயற்சி

நிரந்தரமற்ற
நாளைக்குள்
இன்றைய என்னை
தொலைத்தேன்-கனவு

நகர்கிறது
வாழ்வு நகர்கிறது

பிடிக்குள்
பாசம்
பிடி மீறுதலில்
அன்பாகியது

கட்டு அறுத்தலில்
தொடங்கிய வாழ்வு
காட்சி பிழையாய்

முடிந்து போகிறது.

Friday, October 11, 2013

`ஹாங் இசைக்கருவி


இசைக்கருவியைப்பற்றி மேலும் அறிய

http://en.wikipedia.org/wiki/Hang_(instrument)

Tuesday, October 01, 2013

5 வது நாள் விதி தலைவிதி


நம்ம தலைவிதி நமக்கு ஒரு வாய்ப்ப காட்டுமுன்னு உட்காந்திருக்ககூடாதாம் செயல்படு…. முயற்சி செய்.

வின்ஸ்டன் சர்ச்சில் தலைவிதிங்கிறதே நாம் கொண்டுள்ள குறிகோளுக்காக முழுமையா உழைச்சி குறிகோள அடையறதாங்கிறார்.

செயல்படு...கட்டாயம் கொணடு்ள்ள குறிகோளுக்காக செயல்பட தொடங்கு.

இப்படியெல்லாம்  அவன் படிச்சி நிறைய கருத்துகள் பேசுவான்.

இவன்கிட்ட பேசிகிட்டு கேட்டவங்க எல்லாம் இன்னிக்கி இவன் தாண்டி பல கிலோமீட்டர் போயிட்டாங்க.

ஆனா... இவன் மட்டும்..

என்னென்னு சுயபரிசோதனை செஞ்சா  நம்மாளு கிட்ட செயல் கம்மி கருத்து அதிகம்.

அப்புறம் எப்புடீ முன்னோக்கி....
தொடரும்...

Monday, September 30, 2013

கொஞ்சம் அரசியல்.

நாகை நகரம் பா.ஜ.க  என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்ட
வேன்கள் பா.ஜ.க. கொடி தாங்கி  நாகையிலிருந்து திருச்சி நோக்கி  விரைந்து சென்றுக்கொண்டிருந்தன.

மதியம் 12 மணியளவில் எனது இருசக்கர வாகனபயணம்  மிக கவனமுடன்  நிகழ்ந்தது.

இடையே இடையே மரநிழல்களில் ஒவ்வொரு வேனை நிப்பாட்டி தயாரித்த கொண்டு வந்திருந்த பட்டைசாதம் பாக்கு மட்டை தடடுகளில் விநோயிக்கப்பட்டது.

வருங்கால பிரதமர் … மோடி  குரொலிகளுக்கு குறைவில்லை.

அ.தி.மு.க.    , தி.மு.க. வண்டிகளின் அணிவகுப்பையே பார்த்த கொண்டிருந்த கண்களுக்கு  தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பொதுமக்கள் மக்கள் மத்தியில்   மோடி திருச்சிக்கு வருகை புரிந்த நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டு கொண்டிருந்தது.

மறுநாள் மறந்து போனார்கள் திருவாளர்கள் பொதுமக்கள்.

முந்தைய நாட்களில் பா.ஜ.க.   எங்கள் ஊரில் இருப்பதை அந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே தெரிந்து கொள்ளலாம் .


இத்தகைய சூழலில்  இக்கட்சியின் திடீர் எழுச்சி    மோடியை மையப்படுத்தி தான் என்று சொல்வதில் ஒன்றும் மோசமில்லை   தான்.

Friday, September 27, 2013

4 வது நாள் அன்பு

அட…நேத்து குறிகோள் உடும்பு பிடியா பிடிச்சுங்கப்பா சொன்னாங்க…சரின்னு ஞாபக படுத்திகிட்டாச்சு.
நான்காவது நாள்  என்ன சொல்லப்போறாங்கன்னா நம் சுற்றியிருக்கிறவங்க கிட்ட  அன்போட இருக்கறது.

இதுக்கு ரெண்டு விதிய கட்டயாம கடைப்பிடிக்க சொன்னாங்க...

  1. நாம்மோட சொல்லிலும் செயலிலும் நேர்மையா இருக்கனும். மத்தவங்க நம்மள பத்தி குறை சொல்ல கூடாது.
  2.  நாம செஞ்சுப்புட்டு எதிர்பார்க்காம இருக்கோனும்.

வீணாகிற குடிநீர் குடிநீர் குழாய நிப்பாட்டுதல் வழியில கிடக்கிற ஆனிய தூக்கி அந்தான்ட போடுறது
சுற்றியிருக்கிறவங்க கிட்ட  சிரிச்ச முகமா இருக்கறது  இது மாதிரி சின்ன சின்ன விசயங்கள் நிறைய பெரிய மாற்றங்கள கொண்டு வருமுன்னு  அன்னக்குதான் அவனுக்கு தெரிஞ்சுது.

இவ்வளோ நாளா தெரியாம போச்சப்பா...பரவாயில்ல இன்னிக்கு தெரிஞ்சுகிட்டோம்ல இனி அப்படியிருக்கலமா?!

கட்டாயம் மாறி தான் ஆகனும்.


தொடரும்.

Friday, September 20, 2013

3 வது நாள் உறுதி

ரெண்டு நாள் போயிடுச்சி… மூன்றாவது நாள்


என்ன சொல்ல  போறீங்கன்னு போயி கேட்டா..என்ன சோதனை  வந்தாலும் தான் கொண்ட குறிகோள விடாம உடும்பு புடியா நிக்கறது.ம்ம்ம்… என்ன சோதனை … என்ன சோதனை …அடைய  வேண்டிய இலக்கு  அதாங்க.

சரியா போச்சி…அவனுக்கு தான் பெரியப்பா பையன் மாதிரி இன்னும் மத்தவங்க அரசாங்க தேர்வு எழுதி  பெரிய்யீய்ய உத்தியோகம் பாக்கனும் ஆசப்பட்டு தேர்வுக்காக படிக்க ஆரம்பிச்சான்.

அந்த தேர்வெல்லாம் எழுத குறைந்தபட்ச தகுதி ஒரு டிகிரியாம். பன்னிரென்டாவது பாஸ் பண்ணி காலேஜ்க்கு  அப்ளிகேசன் போட்டு  அப்பாகிட்ட காலேஜ்  சேர பண  கேட்ட யாருகிட்ட இருக்குடா படுவா…

இங்க சோத்துக்கே சிங்கி அடிக்கிது நீ வேற…

அப்படியே நொறுங்கி போனான்.

ஆனாலும் அத்தோட அவன் வாழ்க்கை முடிஞ்சாப்போச்சி…

இன்னொரு குறிகோளுன்னு உறுதியா நிக்கதான் வேண்டியிருக்கு..


தொடரும்.

Thursday, September 19, 2013

இப்படியும் வரைகிறார்களா ஓவியங்கள் !!

இத்தாலி நாட்டு ஓவியர் மார்சிலோ பெரன்கீ வரைந்த பென்சில் ஓவியங்கள் அப்படங்களுக்கு உயிரூட்ட வாட்டர்கலர் , கலர் பென்சில் பயன்படுத்தியுள்ளார்.


LinkWithin

Related Posts with Thumbnails