Friday, May 27, 2016

தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து என்ன பயன்?- தமிழக அரசுக்கு நீதிபதிகள் 5 கட்டளை- பகிர்வு

"அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து 'உலகத் தமிழ் மாநாடு' நடத்துவதால் என்ன பயன்?" என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழ் மொழியை அஞ்சல் வழியில் உலகம் முழுவதும் பரப்புவது தொடர்பாக 5 கட்டளைகளை பிறப்பித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த ஆர்.லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ் 'செம்மொழி' அந்தஸ்து பெற்று தன்னிகரில்லாத மொழியாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை தவிர வேறு மாநிலத்தில் தமிழ் தெரிவதில்லை. மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.50, ரூ.200 கட்டணத்தில் இந்தி மொழியை இந்தியா முழுவதும் அஞ்சல் வழியில் போதித்து வருகிறது. அதுபோல தமிழையும் சலுகைக் கட்டணத்தில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ரூ.37.36 லட்சம் நிதி ஒதுக்கீடு கோரியுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மற்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழை வளர்க்க, உலகம் முழுவதும் பரவச் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பயன்?
முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாம் நூற்றாண்டில் தோன்றியது என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 11 ஆயிரம் ஓலைச் சுவடிகள் தமிழ் தொன்மை வாய்ந்த செம்மொழி என்பதற்கு கூடுதல் ஆவணங்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிஜி, மியான்மர், ஆப்பிரிக்கா, மாலத் தீவுகள், அமெரிக்கா என தமிழ் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. ஆனால் தமிழ் மொழி பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களுக்குக் கூட தெரியவில்லை.
ஹரியாணா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தமிழ்தான் இரண்டாவது அலுவல் மொழியாக கடந்த 2010 வரை இருந்துள்ளது. தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
எனவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அது சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழரும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும்.
மாநில அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை யுடன் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளுக்கும், பிற இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் நிதி ஒதுக்க வேண்டும். தமிழறிஞர்களை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பல் கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் தமிழை சலுகை கட்டணத்தில் உலகம் முழுவதும் கொண்டு செல்ல கோரியுள்ள நிதி ஒதுக்கீட்டை உடனடியாக செய்து கொடுத்து, மனுதாரரின் கோரிக்கையை 12 வாரத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

நன்றி- தி இந்து

Saturday, May 21, 2016

அரியணை ஏறிய அஇஅதிமுக ..!!?? எதிர்கட்சியாம் திமுக

சபாஷ் ... பலமான போட்டியில் வெற்றி வாகை சூடிய அஇஅதிமுக.. நிறையவே பாடுபட்டு வெற்றியை இழந்த திமுக.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற நியதியை உடைத்தற்காகத் தமிழக மக்களுக்கு வாழ்த்துகள் சொல்லலாம் .

திமுக-வை திரும்பவும் குழிக்குள் தள்ள க்காரணம் உண்டு  என்றால் அது கட்டபஞ்சாயத்தார்கள் நிறைந்த திமுக. தமிழகத்தின் சிறுஊர்களில் கூடப்   போன திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட  ஏழைகள்...அய்யோ அவர்களா..??!!
என்று நினைக்க வைத்தது உண்மை.

திமுக திரும்பவும் தன்னைச் சீர்திருத்தி குறைகளைக் களைந்து புதுபித்து க்கொள்ள மறுபடியும் ஐந்து வருடங்கள் தமிழகமக்கள் வழங்கியுள்ளார்கள்.
வாரிசுகளின் வேட்பாளர் நியமனம்   பழைய வேட்பாளர்கள் முன்பு அதிகாரத்தில் இருந்தவர்களே கட்சி அதிகாரத்தில் தொடர்வது புதிய விளம்பர பாணியில் பழைய திமுக -வின் முகம் தென்பட்டது.

ஊடகங்கள் சுட்டிக்காட்டிய 2ஜி ஊழல் ஈழப்பிரச்சினை  திமுக-வின் நிரந்தர கறைகளாய் வரலாற்றில் பதிந்த ஒன்றை இன்றைய வளரும் தலைமுறை மறக்கவில்லை .

பலர் வாய் மூட  அறிக்கைகள் விட்டு  ச்சொல் ஒன்றாய் செயல் ஒன்றாய்  ஆனதால் திமுக தலைவர் இந்தத் தேர்தல் தோல்வியை அறுவடை செய்தார்.

தமிழக மக்கள் சிறந்த எதிர்க்கட்சியாக விளங்கும் வாய்ப்பினை திமுக வழங்க ச்சட்டசபையினுள் இருந்து மக்கள் பிரச்சனைகளை  எடுத்து ப்பேசி  ஆளும் அதிமுக-வை  தறிகெட்டு ஓடும் குதிரையாக  இல்லாமல் ஆக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுக உண்டு .

பார்க்கலாம்...திமுக-வின் செயல்பாடுகளை வரும் காலங்களில்....

அதிமுக திரும்பவும் அரியணை  செயல்படா முதல்வர் செயல்படா அரசு என்பதை னை மாற்ற முயலவேண்டும்.

படிப்படியாக மதுவிலக்கு முதல்படியை இந்த அரியணை ஏறியவுடன் மக்களுக்குத் தெரிவிக்க முதல்வர் கடமைப்பட்டுள்ளார்.

முந்தைய அரசாக இல்லாமல்  செயல்படும் அரசாய் மாற்ற மக்கள் மிகசரியாக  சிறந்த எதிர்க்கட்சி யை வலுவான நிலையில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளார்கள்.

கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு அரசியல்வாதிகளால் தொந்தரவு கிடையாது அதனால் கிடைத்த நற்பெயர் மட்டுமே அதிக வித்தியாசம் இல்லாத இந்த வெற்றியை  அதிமுக விற்கு மக்கள் கொடுத்துள்ளார்கள்.

இன்னமும் தன்னை சீர்துர்க்கி திருத்தி க்கொள்ளவேண்டிய நிலையில் அதிமுக உள்ளது  என்பதும் மறுப்பதற்கில்லை.

பார்க்கலாம்...வரும் காலங்கள் சொல்லும்....



Wednesday, May 11, 2016

ரஷ்யா ராணுவம்

இரண்டாம் உலகபோரில் ஜெர்மானிய படைகளை ரஷ்ய படைகள் வெற்றிகொண்ட  71வது ஆண்டு வெற்றிதினம் அன்று ரஷ்ய ராணுவத்தின் அணிவகுப்பு புகைப்படங்கள்.



















Saturday, May 07, 2016

பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களின் பொறியில் சிக்க வேண்டாம்: ரகுராம் ராஜன் - பகிர்வு

மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் விஷயத்தில் வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், பயனில்லா பட்டங்களை வழங்கும் கல்வி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. வேலையும் கிடைக்கப் போவதில்லை. பயனற்ற இந்த பட்டங்களை அளிக்கும் கல்வி மையங்களை வங்கிகள் அடையாளம் காண வேண்டும். அதில் படிக்க மாணவர்கள் கல்விக் கடன் கோரினால் அதை அனுமதிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

கல்வியை வணிக நோக்கில் நடத்தி பணம் சம்பாதிக்கும் முறையற்ற கல்வி மையங்களால் வங்கிகளின் கடன் சுமைதான் அதிகரிக்கும். 

மிகவும் உயர்ந்த தரத்திலான பல்கலைக் கழகங்களில் கல்விக் கட்டணம் மிக அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்தில் இவை மேலும் அதிகரிக்கக் கூடும். இருப்பினும் தகுதிபடைத்த அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

திறமையான மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர இருக்கும் வாய்ப்புகளில் முதன்மையானது வங்கிகளின் மூலம்கிடைக்கு கல்விக் கடன். அவ்விதம் கடன் வழங்கும் வங்கிகள், அந்தத் தொகையை மாணவர்கள் திரும்ப செலுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அவ்விதம் படித்து முடித்த மாணவர்கள் வேறு வேலை கிடைக்காமல் கடைசியில் குறைந்த ஊதியம் கிடைக்கும் பணிக்குச் செல்ல நேரிடும். அப்போது அவர்களால் வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமத சூழல் ஏற்படும்.

இதுபோன்ற லாப நோக்கிலான கல்வி மையங்களை அடையாளம் காண வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. வெறுமனே கல்விக் கடனை வழங்கி அவர்களை கடனாளி ஆக்கி உதவாத பட்டத்தை பெற வைப்பதில் என்ன பயன் இருக்க முடியும் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

தனியார் கல்வி மையங்களில் எப்போதுமே கல்விக் கட்டணம் அதிகமாகத்தான் இருக்கும். எதிர்காலத்திலும் இது அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது என்றார்.

இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதால் இனி பட்டமளிப்பு விழாவில் பேச்சைக் குறைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வரலாம் என வேடிக்கையாகக் குறிப்பிட்டார் ராஜன்.

இப்போது உங்களிடம் நான் பேசிய வார்த்தைகளில் ஏதேனும் ஓரிரண்டு வார்த்தைகளை சில ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் நினைவில் வைத்திருந்தீர்களானால் நானும் ஒரு சாராசரி பட்டமளிப்பு விழா பேச்சாளராவேன். ஆனால் பெரும்பாலும் யார் பட்டம் அளித்தார்கள் என்பதே பலருக்கும் நினைவில் இருப்பதில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் கூறியது எங்கு நினைவிருக்கப் போகிறது.

தாராள சந்தை என்பதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. ஆனால் முன்னேறிய நாடுகளில் கூட செல்வந்தர்களுக்குச் சாதகமாகவே சந்தைப் பொருளாதாரம் உள்ளது.

மிக அதிக ஊதியம் வழங்கும் பணிகளுக்கு திறமை மிக அவசியம். இதற்குரிய சூழலில் படித்து வரும் மாணவர்களுக்கு இது எளிதாகக் கைகூடுகிறது என்றார் ராஜன்.

நன்றி - தி இந்து

Friday, May 06, 2016

சும்மா இரு



சும்மா இரு
நினைவுகள்
தானாய் ஓடியது
திரும்பவும்
சும்மா இரு
இரண்டு நிமிடங்கள்
பார்த்தது
கேட்டது
படர்ந்தது
கிளைத்தது
சுயம்
தொலைந்தது
சும்மா இரு
சுயம் தெரிய
சுகம் தெரிய
எண்ணங்கள்
தொலைவது
எப்போது?

Tuesday, May 03, 2016

உலகம் சுற்றினால் இந்தமாதிரி இடங்களையெல்லாம் பார்க்கலாங்க..!!

முடிஞ்சவங்க உலகம் சுற்றி வண்ணமயமான இடங்களை ரசிக்க ...அவர்கள் ரசித்த இடங்களை புகைப்படங்களில் ரசிப்பது தனிசுகம் தான்.

இடங்கள் இருக்கும் நாடுகள் சைனா , நெதர்லேண்ட், ஜப்பான் , ஆஸ்திரியா, ஜொ்மன் , இத்தாலி, நார்வே, போர்ச்சுகல்















LinkWithin

Related Posts with Thumbnails