Wednesday, May 25, 2011

பொய் காளை


இரண்டுகால்
பாய்ச்சலில்
வலம் வந்த
காளைமாடு
தாள சத்தம்
வேகம் எடுக்க
ஆ டியது ஆடியது
கால்களின் சலங்கைகள்
சல..சலக்க..
ஓடியது  ஓடியது
கூடியிருந்தவர்களின்
மகிழ்ச்சிக்காய்
ஆ டியது
இரவு பத்துக்கு
சுமந்த வேடம்
அதிகாலை ஐந்துக்கு
கலைக்கப்பட்டு
வாங்கபோகும்
காசுக்காய்
காத்திருந்த
பொய்காளை…..

தமிழால் தப்பிக்க நினைக்கும் முன்னாள் முதல்வர்.


தோ்தல் முடிவுகள் தி.மு.க.  எதிராக அமைந்ததும் ஒற்றைவரியில் தன்னுடைய கருத்தை  வெளியிட்டு அமைதியான  முன்னாள் முதல்வர் தனது மகள் கனிமொழி
கைதினால் ஒரு நீண்ட  அறிக்கையை  வெளியிட்டுள்ளார்.


முன்னாள் முதல்வரின்  அறிக்கையை இச்சுட்டியில் காண்க…

தான் பிறந்தது வள ர்ந்தது சம்பாதித்தது எப்படி?  என திரும்பவும் தமிழக மக்களுக்கு தான் எப்படி என்பதை உண  ர்த்த கடமைப்பட்டுள்ளார்.

காலங்கள் மாற மக்களின் மனோ பாவமும் மாறுகிறது. தன்னுடைய தமிழால்(அறிக்கையால்) தமிழக மக்களின் மனதை மாற்ற முயல்கிறார் அல்லது சமாதானம் செய்யமுயல்கிறாரா தெரியவில்லை???!!!

இவருடைய அறிக்கையை அவருடைய கழக கண்மணிகளே நம்பாதபட்சத்தில் தமிழக மக்கள் எவ்வாறு நம்புவார்கள்.

தற்பொழுது ஒவ்வொரு குடும்பத்தில் படித்த இளை ஞ ர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் மூலமாகவே 2ஜி ஊழல் படிக்காதவர்களையும்  சேர்ந்தது உண்மை.

முன்னாள் முதல்வரின் குடும்பவாரிசுகளுக்கு உண்டான சொத்துபட்டியலை   இச்சுட்டியில் காண்க…

http://savukku.net/home/857-2011-05-21-06-43-43.html

Saturday, May 21, 2011

நடுத்தர வர்க்கம்


நடுத்தரவர்க்கத்தினனாய்  ஓடும் வாழ்வு. சமுதாயகட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டு வாழும்போது பெரிதும் குறுக்கீடாய் அமை வது அவர் அவர்களது சுயமரியாதை.


எதைப்பற்றியும் அலட்டி கொள்ளாத கீழ்தட்டு மக்களாய் இருக்கவேண்டும் அல்லது காசைக்காட்டி வாயைமூடும் பெரும்தனக்காரர்களாய் இருக்கவேண்டும் என்ற நடுத்தரவர்கத்தின் முனுமுனுப்புகள் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.

தன்னுடைய   வழி என்பதைவிடவும் தன்சுதந்திரம்  என்றெல்லாம் பார்க்காது  அருகில் உள்ளவர்கள் என்னசொல்வார்களோ  என்ற மற்றவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பதில் நடுத்தரவர்க்கம் என்றும் நடுத்தரவர்க்கமே…

நட்டத்திலும் துன்பத்திலும் யாரும் பங்கெடுக்கமுன்வரமாட்டார்கள். அவர்கள் வார்த்தை தான் வேதாந்தமாய்  வாதமாய் முன்வை க்கப்படும்  .

எவ்வளவு புரிதல்களோ டு எடுத்து சொ ன்னாலும் அவர்களுக்கு உரிமையுடைகளின் வார்த்தைகள் குப்பை தான்.
இன்றளவிலும் நடுத்தரவர்க்கங்களில்  நடக்கும் குடும்ப சண்டைக்கு மற்றவர்களின் வார்த்தையும் ஒரு காரணம்.

நடுத்தரவர்க்கத்தின் பிரச்சனை  க்கு மிகமுக்கியபங்கு பொருளாதாரம். வரும் வரவு அறிந்து செலவு செய்யதெடங்கினால் இன்றைய சமுதாயத்தின் கவர்ச்சியான அம்சங்களை பாதிக்கு மேல் இழக்கதொடங்கினால் ஏதோ  குடும்ப வண்டியை ஓட்டலாம்.

குடும்பநபர்களின் அவசியங்களும் ஆசைகளும் எவ்வளவு தான் தடைபோடமுடியும் என்றகோண  த்தில் ஒவ்வொரு பிரச்சனையும் அணுக ஆ ரம்பித்தால் நடுத்தரவர்க்கத்தின் கடன் இல்லாத வாழ்வு என்பது ஆச்சர்யம் தான்.

நடுத்தரவர்க்கம் என்பது எப்பொழுதும் ஆச்சர்யமும் அவல மும் நிறைந்த வர்க்கம் தான்.

இன்பங்களும் துன்பங்களும் முழுவதுமாய் அனுபவிக்க கூடிய பக்குவம் படைத்தவர்கள் நடுத்தரவர்க்கம்.

Friday, May 20, 2011

நம்பிக்கைஇறந்துபுதைக்கப்பட்ட
அப்பாவின்
உயிர்மூச்சோடு
நின்றுபோன
பிள்ளை களின்
கனவுகள்
தடம் மாறிய
வாழ்க்கையின்
போக்குகள்
தாயினால் மறுக்கபட்ட
ஆ சை கள்
பார்வையிட்டஉறவுகள்
வேதனைப்பட
உதாவது சிலஅ டிகள்
தள்ளி நிற்க
ஆ சைகளும்
நிராசைகளுமாய்
நகரும் வாழ்வு
நம்பிக்கையின்
கயிற்றை ப்
பிடித்தப்படி….

Saturday, May 14, 2011

தமிழகத்தின் புதிய அரசு செய்யவேண்டியவை ….தி.மு.க. அரசின்  மீது  ஏற்பட்ட வெறுப்பின் காரண  மாய் இமாலய வெற்றியை   பெற்ற அ.இ.அ.தி.மு.கழகம் ஆ ட்சி அமைக்கிறது.


மக்களால் விரும்பி அமையாது  மாற்றம் தேவை என மக்கள் கருதியதால்  புதிய  அரசு  அமை கிறது.

தி.மு.க . ஆட்சிகாலத்தில் சீர் கெட்டு ப்போன துறைகள்

  1. சட்டம்- ஒழுங்கு
  2. கல்வி துறை
  3. மின்சாரம்
  4. போக்குவரத்து
  5. வேளாண்மை

இத்துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி சரிசெய்யப்படவேண்டும்.

அ.இ.அ.தி.மு.க அரசின் முந்தைய  ஆட்சி காலங்களில் பலவீனமான துறை  எதுவென்றால் உள்ளாட்சி துறை  தான்.
இத்துறையின் மீது தனிகவனம்  செலுத்தப்படவேண்டும்.

விளை நிலங்கள்   வீட்டுமனைகள் ஆவாது தடுக்கப்படவேண்
டும்.

புற்றீசல் போல பெருகிகுயுள்ள தமிழக அரசின் மதுபான கடைகளை  குறைக்க வேண்டும்.

செய்யவேண்டியவைகள் நிறைய இருப்பினும் அவசியம் செய்யவேண்டியவை    மேற்கூறியவைகள்.புகைப்படதொகுப்பு


Monday, May 09, 2011

பிரிவுபிரிவுகள்
துன்பம் அல்ல
சுயவள ர்ச்சியின்
அடையாளம்
வாழ்ந்த
அடையாளங்களை
உற்றுபார்த்து
உருகும் மனிதம்
தேவை ப்படும்
காலங்கள் இணை  வாய்
உயிர்ப்பின்
நிலைப்பாட்டில்
பிரிவுகள்அவசியம்
தன்னிலிருந்து
ஒதுக்கும்
தாய்க்கு தெரியும்
பிரிவின் தேவை
பிறரை  நாடாது
தன்காலில்
தானே கால் ஊ  ன்றும்
தன்னம்பிக்கை
பிரிவு. 

போதும் பொண்ணுபணம் தான் வாழ்வு  என்ற சூழலில்இயற்கையை  நாம் எவ்வளவு மோசமாக கையாள்கிறோம் என்பதை நாலு வரிகளில்  அழகாக எடுதுரைத்தது  பிடித்தது.

"தாமிரபரணி'யின் நல்லகண்ணு பாராட்டு விழா அழைப்பிதழில்………

 "இயற்கையை மாற்றினால்' என்றொரு கவிதை இருந்தது.

அது மனதைத் தொட்டது; மனசாட்சியைச் சுட்டது.


கடைசி மரமும் வெட்டி உண்டு

கடைசி நதியும் விஷம் ஏறிக்

கடைசி மீனும் பிடிபட

அப்போதுதான் உறைக்கும்

பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!

(நன்றி  தினமணி)

நகை  கடையில் ஒரு பெண்ணை   பார்த்து முகவரிக்காக பெயர்கேட்டார்கள்.

அந்த பெண்..போதும் பொண்ணு என்றது.

கடைக்காரர்க்கு ஆச்சரியம் திரும்பவும் கேட்டார்.

அட..ஆமாங்க  எம் பேரு போதும் பொண்ணு தான் என்று சொ ல்ல…

திரும்பவும் அவரே விளக்கம் தரும் பாணியில் எங்க  வீட்டுல  நான் நாலாவது பொண்ணுங்க இதோட பெண்பிள்ளை  போதும்  என்பதற்காக   எம்பேர போதும் பொண்ணு  வைச்சாங்க…

அதற்கு பிறகு பொறந்த புள்ள ஆம்பள   புள்ளங்க…
என்றார்.

கேட்க ஆச்சரியமாய் இருந்தது. எல்லாம் நம்பிக்கை  தான்.Wednesday, May 04, 2011

தடம் மாறாத தண்டனை கள்.


அந்த பெண்ணை     போய் அழைத்துவந்தவர்களில் ஒருவர் செல்போனில் சத்தம் போட்டுகொண்டிருந்தார்.

யோ வ் ராமலிங்கம் ..அந்தபார்ட்டி என்னபுடிச்சு நச்சரிக்கிறான்..

நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க…என்னய்யா  பதில் சொல்லறது.

நீங்க தானே என் பொண்டாட்டி அழைச்சிட்டு போனியோ …

நீங்களே கொண்டுவந்துவிடுங்க அப்படீன்னு பார்ட்டி நச்சரிக்கிறான் என்றார் பஞ்சாயத்து பேசப்போனவர்களில் ஒருவர் .

படிச்சப் பொண்ணா  பாத்து கட்டிட்டு வந்துட்டான் வந்த எடத்துல மாமியாரு மருமகளுக்கு ஆவல  போலிருக்கு…

அதனால  காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் வெயில்ல நிக்கவைச்சிருக்கான் மாப்பிள்ளகாரன்பொண்ணுவீட்டுகாரனுக்கு தெரிய அங்குள்ள பெரிய ஆட்களை   பெண்வீட்டுகாரர்கள் அணுக …

இங்குள்ள  பெரிய ஆட்களை  அணுகி அவ ங்கிட்ட பேசி பொண்ண  தனியா  ஊருக்கு அனுப்பிவிட்டுருங்க என்று சொல்லஇவர்கள் ஏதோ பேசி பெண்ணை   காரில் ஏற்றி அனுப்பி விட  

மாப்பிள்ளையும் சொந்தகாரர்களும் இப்பொழுது இவர்களிடம்                   வாங்க போயி பேசுவோ ம்  என்று ஒற்றைகாலில் நிற்கிறார்கள்.

இந்த உலகம் எவ்வளவு தான் வேகமாக போனாலும் அல்லது சிந்தனை செய்தாலும்எத்தனை   தலை முறைக்கு இன்னும் இதுமாதிரியான தண்டனை கள் இருக்கபோகிறதோ  தெரியவில்லை ?

பழமையில் ஊ றிய திருந்தா ஜென்மங்கள் இருக்கும் வரை    இது மாதிரியான  நிகழ்வுகளுக்கு அழிவில்லை  தான் போலும்.

எல்லா வசதியும் உள்ளவனிடம் இப்பிரச்சனை   நடக்கிறது என்பது மிகமுக்கியம்.Tuesday, May 03, 2011

அடிமை வாழ்வு
ஈரம்காய
இன்னும்சில
நாட்கள்
மண்ணில்புதையுண்ட
விதைகளின் உயிர்ப்பு
சூரிய பார்வையில்
வள ர்ச்சியென்று
உயிர்ப்பின்
முன்னோக்கிய வேகம்
சுதந்திர நினைவுகள்
மனதில் புதைந்திருக்க
அடிமை வாழ்வு
வள ர்ச்சியின் காலங்களை
எதிர்நோக்கி
பாதுகாத்து
கொ ள்ளப்படும்
உயிர்ப்புகள்.


LinkWithin

Related Posts with Thumbnails