Tuesday, January 24, 2012

.ஒரு சொல் முடிந்த அத்தியாயம்


சமீபத்தில் எங்கள்பகுதிகளில் அதிகம் பேசப்பட்ட செய்தி தமிழக முதல்வரின் தோழியின் விரட்டியடிப்பு தான்.



எங்கள் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க வின் உடன் பிறப்புகள் அகம் மகிழ்ந்து கிடப்பது தான் உண்மை.

ஒழிந்தது சனியன்….

பார்க்கதான் பட்டை போட்ட நல்லவர் திவாகரன் மிக மோசமான ….பொறுக்கி  அ.தி.மு.வி னாராலே பேசப்படும் அவலம்.

இவ்வளவு  அவமானங்களையும் பொறுத்து கொண்டதன் பின்னனி தமிழக முதல்வரின் உயிர்தோழி  , தோழியின் உறவினர்கள் அரசில் எதையும் சாதிக்கவல்லவர்களாய்  இவர்கள் இருந்தது தான்.

இவர்களின்  விரட்டலில் யாரும் கவலைப்பட்டவர்கள் என்பது கிடையாது.

இவர்கள் செய்தது நம்பிக்கை துரோகம் இவர்களை விட்டு வைக்ககூடாது என்பதே இப்பகுதி மக்களின் ஆவலாய் உள்ளது.

இன்னமும் சூடு குறையாமல் அவர்களைப்பற்றிய செய்திகள் வாசிக்கப்படுகின்றன.


இருக்கும் இடம் அறிந்து தன் எல்லைகளை  அறியாததால் வந்த வினை  அதிகார மையத்தின் ஒரே சொல்  இவர்களை புரட்டிப்போடும் வல்லமை கொண்டதாகிவிட்டது.

பலமணிகள் காத்து கிடக்க தரிசனம் தருவார்கள் .
ஆனால் இன்றைய  நிலைமை தன் இடம் தெரிந்தால்  தனக்கு ஆபத்து. 

பாவம் இவர்கள்…..

Monday, January 02, 2012

வருட தொடக்கமும் வாழ்வும்


இருள்விலகாத பனி  சில நூறுகாக்கைகளி்ன் பறத்தலில் தொடங்கிய காலை யை   ரசித்தப்படி தொடங்கிய புத்தாண்டு.

சபதங்கள் போட்டு குறிக்கோள்கள் வைத்து இலக்கை   அடைய
முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் எங்காயாவது இறைவனை தரிசிக்கும் நடைமுறை என்னவோ சிலவருடங்களுக்கு முன்னால் தவிர்க்கப்படாத ஒன்று.



சிலவருடங்களாய் முக்கியம் பெறாதபுதுவருட தொடக்கம். நாளெல்லாம் திருநாளே சிந்தனையாய் கழியும் நாட்கள்.

குடும்ப நிர்வாகம் காசுக்கான அலைதலில் கரையும்வாழ்வில் செக்குமாட்டு சிந்தனை களை  தவிர்க்க முடியாத நேரங்களில்நொந்தவாழ்வாய்  எண்ணங்களின் பின்னடைவு.

தனி ஆளாய் இயற்கையை   ரசிக்கையில்நமக்கு மட்டும் ஏன் இப்படி ? வினாவினை தவிர்க்க முடியாத மனது.



நிறையவே அறிய ஆவலாய்.....

Friday, December 09, 2011

சுயமே சொர்க்கமாகி



நீர் நிரம்பி உடைந்து போன  என் வயல்வரப்புகளை  சரிசெய்யவே   நேரம் சரியாய் போனது.

பெரியாறு  அணை   ப்பற்றி  அறியமுடிந்தது.  அதனைப்பற்றிய செய்திகளில் ஆர்வம் இல்லாமலசொந்த பிரச்சனைகளில்மூழ்கியே   வெளிவர வழிதேடுகையில் கழிந்தகாலங்கள்.

ஓர் ஆறுதல் நமக்காக பேசதானே நாம் நம்முடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம் அவர்கள் பார்த்துகொள்வார்கள் இவ்விசயங்களை என்று சற்றே நிம்மதி அடைகையில்அவர் வாங்கிய சொத்துகளில்  தன்னை தற்காத்து வழிதேட நம் பிரச்சனை பின்னுக்கு போனது.

நம்மில் சிறந்தவர்கள் குரல் கொடுக்க இவர்கள் கண்விழிப்பது இயல்பாக போய்விட்டது.

வாழ்வே சுமையாகி ஆகிப்போனதால் வந்தவினை.

சுயமே சொர்க்கமாகிப் போக    நாம் என்பதே  தேடக்கூடிய   ஒன்றாகி விட கட்டுகள் அவிழ்த்த ஓர் தனி மனித சுதந்திரம் எப்பொழுது...????

LinkWithin

Related Posts with Thumbnails