Tuesday, January 24, 2012

முதுமை
காலப் பெருவெளிக்குள்
இழுத்துவரப்பட்ட
வயதுகளின் சாயல்கள்
நரைத்த முடி
சுறுங்கிய தோல்
தளர்ந்த நடையென
ஓரிடத்தில் அமர்ந்த
யோசிப்பில் தொடங்கிய
இளமைகால சிந்தனைகளின்
சீர்தூக்கல்கள்
நியாய அநியாய
மனோ பாவங்களின்
வெளிப்பட்ட வேதனையும்
இன்பங்களுமாய்
போகும் பொழுதுகளில்
நகரும் வாழ்வாய்
முதுமை.

.ஒரு சொல் முடிந்த அத்தியாயம்


சமீபத்தில் எங்கள்பகுதிகளில் அதிகம் பேசப்பட்ட செய்தி தமிழக முதல்வரின் தோழியின் விரட்டியடிப்பு தான்.எங்கள் பகுதிகளில் உள்ள அ.தி.மு.க வின் உடன் பிறப்புகள் அகம் மகிழ்ந்து கிடப்பது தான் உண்மை.

ஒழிந்தது சனியன்….

பார்க்கதான் பட்டை போட்ட நல்லவர் திவாகரன் மிக மோசமான ….பொறுக்கி  அ.தி.மு.வி னாராலே பேசப்படும் அவலம்.

இவ்வளவு  அவமானங்களையும் பொறுத்து கொண்டதன் பின்னனி தமிழக முதல்வரின் உயிர்தோழி  , தோழியின் உறவினர்கள் அரசில் எதையும் சாதிக்கவல்லவர்களாய்  இவர்கள் இருந்தது தான்.

இவர்களின்  விரட்டலில் யாரும் கவலைப்பட்டவர்கள் என்பது கிடையாது.

இவர்கள் செய்தது நம்பிக்கை துரோகம் இவர்களை விட்டு வைக்ககூடாது என்பதே இப்பகுதி மக்களின் ஆவலாய் உள்ளது.

இன்னமும் சூடு குறையாமல் அவர்களைப்பற்றிய செய்திகள் வாசிக்கப்படுகின்றன.


இருக்கும் இடம் அறிந்து தன் எல்லைகளை  அறியாததால் வந்த வினை  அதிகார மையத்தின் ஒரே சொல்  இவர்களை புரட்டிப்போடும் வல்லமை கொண்டதாகிவிட்டது.

பலமணிகள் காத்து கிடக்க தரிசனம் தருவார்கள் .
ஆனால் இன்றைய  நிலைமை தன் இடம் தெரிந்தால்  தனக்கு ஆபத்து. 

பாவம் இவர்கள்…..

Monday, January 02, 2012

வருட தொடக்கமும் வாழ்வும்


இருள்விலகாத பனி  சில நூறுகாக்கைகளி்ன் பறத்தலில் தொடங்கிய காலை யை   ரசித்தப்படி தொடங்கிய புத்தாண்டு.

சபதங்கள் போட்டு குறிக்கோள்கள் வைத்து இலக்கை   அடைய
முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் எங்காயாவது இறைவனை தரிசிக்கும் நடைமுறை என்னவோ சிலவருடங்களுக்கு முன்னால் தவிர்க்கப்படாத ஒன்று.சிலவருடங்களாய் முக்கியம் பெறாதபுதுவருட தொடக்கம். நாளெல்லாம் திருநாளே சிந்தனையாய் கழியும் நாட்கள்.

குடும்ப நிர்வாகம் காசுக்கான அலைதலில் கரையும்வாழ்வில் செக்குமாட்டு சிந்தனை களை  தவிர்க்க முடியாத நேரங்களில்நொந்தவாழ்வாய்  எண்ணங்களின் பின்னடைவு.

தனி ஆளாய் இயற்கையை   ரசிக்கையில்நமக்கு மட்டும் ஏன் இப்படி ? வினாவினை தவிர்க்க முடியாத மனது.நிறையவே அறிய ஆவலாய்.....

LinkWithin

Related Posts with Thumbnails